Tamil Star |
- மாலைதீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில் தஞ்சம்!!
- கைது செய்யப்பட்டவருக்கும் எமக்கும் தொடர்பில்லை: த.தே.கூட்டமைப்பு!
- ஓட்டல் அறிமுகப்படுத்திய புதிய டெக்னாலஜி: கதவை திறக்க சாவி தேவையில்லை, செல்போன் போதும்!
- நோயை கட்டுப்படுத்த $30.5 மில்லியன் நிதியுதவி வழங்கிய கனடா: அமைச்சர் ரோனா ஆம்ரோஸ் தகவல்!
- புறநகர் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களிற்கு பரந்த வரி நிவாரணங்களை காட்டி ஆதரவு தேடும் ஹாப்பர்!
- முருங்கை ஆரோக்கியப் பெட்டகம்!
- உலகத்தில் காணப்படும் மிகவும் ஆச்சரியமாக மனிதர்கள்…. சுவாரஷ்ய தொகுப்பு!
- ஒருவேளை பூசணிக்காய் மிஞ்சிப்போனால் இப்படித்தான் செய்வார்களோ?
- 3000mAh பேட்டரி கொண்ட லாவா ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
- வருண் ஆரோன் 152 கி.மீ வேகத்தில் பந்து வீசியதால் காயம்!
- 169 ரன் வித்தியாசத்தில் போட்டு தாக்கியது இந்தியா!
| மாலைதீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில் தஞ்சம்!! Posted: 03 Nov 2014 10:49 PM PST
மாலைதீவின் முக்கிய குற்றவாளி ஒருவர் இலங்கையில் வசிப்பதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாலைதீவில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஒருவர் தப்பிச்சென்று இலங்கையில் வசிப்பதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அப்துல்லா லத்பி என்ற அவரை கைது செய்யமுடியும் என்று மாலைதீவின் உள்துறை அமைச்சர் உமர் நசீர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயன்று 19 மாலைதீவியர்களின் உயிர் பலிக்கு காரணமாக இருந்தவர்களின் பின்னணியில் லத்பி இயங்கி வந்தார். இந்தநிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் இலங்கைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தவேளையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2012ஆம் ஆண்டு மொஹமட் நசீத் ஜனாதிபதியாக இருந்தவேளையில் இடம்பெற்றது. உள்துறை அமைச்சரின் தகவல்படி 66 வயதான லத்பி இலங்கையிலேயே வசித்து வருகிறார் . இந்தநிலையில் லத்பியின் தலைக்கு மாலைதீவு போலிஸ் 75ஆயிரம் மாலைதீவு நாணயமான ரூபியாவை தருவதாக அறிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கைது செய்யப்பட்டவருக்கும் எமக்கும் தொடர்பில்லை: த.தே.கூட்டமைப்பு! Posted: 03 Nov 2014 10:41 PM PST
இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் வெற்று விண்ணப்பபடிவங்களை விநியோகித்த போது, கைது செய்யப்பட்டவருக்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சில ஊடகங்கள் இந்த விடயத்தில் கூட்டமைப்பின் மீது குற்றங்களை சுமத்தியுள்ளன. கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவருக்கு ஆழ்வார்பிள்ளை விஜயகுமார் என்பவரே வெற்று விண்ணப்ப படிவங்களை வழங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த விஜயகுமார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லை என்று கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் விசாரணைக்காக சாட்சியங்களை பெறுவதற்கு தாம் உதவியளிக்கவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட அனைவரும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் உரிய முறையில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓட்டல் அறிமுகப்படுத்திய புதிய டெக்னாலஜி: கதவை திறக்க சாவி தேவையில்லை, செல்போன் போதும்! Posted: 03 Nov 2014 10:22 PM PST
அமெரிக்காவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்று புதிய டெக்னாலஜியில் ஆப்ஸ் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போனின் மூலமே நமது அறையின் கதவை திறக்கலாம்,மூடலாம். என்ற இந்த வசதியை ஆரம்பித்துள்ளது அமெரிக்காவில் உள்ள Marriott International என்ற ஓட்டல் உலகம் முழுவதும் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்த ஓட்டலில் தற்போது புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஓட்டலில் ரூம் புக் செய்பவர்களுக்கு அவர்களுடைய மொபைல் போனில் புளூடூத் மூலம் ஒரு ஆப்ஸை கொடுத்துவிடுவார்கள். அந்த ஆப்ஸில் அவர்களுடைய அறை எண் மற்றும் அனைத்து விவரங்களும் இருக்கும். ரூம் புக் செய்தவர் தங்களுடைய அறையின் முன் நின்று, செல்போனை கதவருகே காண்பித்தாலே போது, ரூம் கதவு திறந்துவிடும், அதேபோல் கதவை மூடவும் செய்யலாம். இந்த புதிய டெக்னாலஜி மூலம் திருட்டு நடப்பதை 100% தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தவசதி இந்த வருட இறுதிக்கும் உலகமெங்கும் உள்ள 4000 Marriott International ஓட்டல்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோயை கட்டுப்படுத்த $30.5 மில்லியன் நிதியுதவி வழங்கிய கனடா: அமைச்சர் ரோனா ஆம்ரோஸ் தகவல்! Posted: 03 Nov 2014 10:17 PM PST
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் எபொலா வைரைஸ் நோயை கட்டுப்படுத்தவும், எபோலா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், World Health Organization என்ற அமைப்பு நிதிதிரட்டி வருகிறது. இந்த அமைப்புக்கு கனடா $30.5 மில்லியன் தொகையை நேற்று கையளித்துள்ளது. இந்த தகவலை கனடாவின் சுகாதார அமைச்சர் ரோனா ஆம்ரோஸ் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கனடிய மக்களுக்கு எபோலா வைரஸ் குறித்து விழிப்புணர்வும், அந்த வைரஸ் தாக்காமல் இருக்க செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்க அரசு விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். ஏற்கனவே கனடா மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு எபோலாவை கட்டுப்படுத்த $2.5 மில்லியன் மதிப்புள்ள உபகரணங்களை அனுப்பியுள்ளதாகவும் ரோனா ஆம்ரோஸ் குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புறநகர் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களிற்கு பரந்த வரி நிவாரணங்களை காட்டி ஆதரவு தேடும் ஹாப்பர்! Posted: 03 Nov 2014 10:09 PM PST
ஒட்டாவா- 2015ல் நடைபெற உள்ள கூட்டாட்சி தேர்தலிற்கான வாக்காளர் தகவல் அட்டைகளை கனடியர்கள் பெறுவதற்கு 3-மாதங்களிற்கு முன்னர் அவர்கள் தங்களது தபால் பெட்டிகளில் வேறு எதையாவது காண்பார்கள் என தெரியவந்துள்ளது. அது என்ன வென்றால் கன்சவேட்டிவ் அரசாங்கத்திடமிருந்து ஒரு காசோலை ஆகும். 6-வயது முதல் 17-வயது வரையிலான சிறுவர்களை கொண்டுள்ள குடும்பத்தினருக்கு 60 டொலர்கள் வரி ஆதாயம் வழங்கப்பட உள்ளது. 2006 தேர்தல் வெற்றிக்கு கன்சவேட்டிவ்விற்கு இம்முறை உதவியதென்பதை அறிந்து கொள்வது சுலபம். ஓவ்வொருவரது பொக்கெட்டுக்குள்ளும் பணத்தை வைப்பது 2015 ஒக்டோபர் 19-ல் இடம்பெற உள்ள தேர்தலிலும் அவர்களை அதிகாரத்தில் தக்க வைக்கும் என்ற அவர்களது நம்பிக்கை. 2011 தேர்தலின் போது கன்சவேட்டிவ் அளித்த வாக்குறதியான 18-வயதிற்- குட்டபட்ட பிள்ளைகள் உள்ள குடும்பத்தினரின் வருமான- பிளப்பு திட்டத்திற்கும் அரசாங்கம் அழுத்தம் கொடுக்குமென பிரதம மந்திரி Stephen Harper தெரிவித்துள்ளார். வசந்த காலத்தில் கனடியர்கள் தங்கள் வரிகளை தாக்கல் செய்தவுடன் இந்த உள்ளார்ந்த சேமிப்பு நடைமுறைப்படுத்தப் படுமெனவும் கூறப்பட்டுள்ளது. "family tax cut" என அழைக்கப் படும் முறை ஒரு தகுதியுள்ள வரிசெலுத்துபவர் வருமானத்தின் 50,000 டொலர்கள் வரையிலான தொகையை அவரது அல்லது அவளது துணைவருக்கு வரி காரணத்திற்காக மாற்றும் போது மீள-தரப்படாத வரி கிரெடிட் ஆக வருடமொன்றிற்கு 2,000 டொலர்கள் வரை பெற முடியும். உறுதியான மாதாந்த குழந்தை பராமரிப்பு ஆதாயம் யூலை மாதத்திலிருந்து வரத்தொடங்கும் எனவும் கூறப்படுகின்றது. 6-வயதிற்குட்பட்ட சிறுவர்களிற்கான கொடுப்பனவு தொகை மாதமொன்றிற்கு 100டொலர்களில் இருந்து 160டொலர்களாக உயர்கின்றது. 2015-லிருந்து 6-வயது தொடக்கம் 17-வயதுடையவர்களிற்கென ஒரு புதிய மாதாந்த பெனிவிற்றை அரசாங்கம் சேர்த்துள்ளது. ஒருவருக்கு 60-டொலர்கள் வீதம் வழங்கப்படும். இவற்றிற்காக 2014-15ற்கு 3.1பில்லியன் டொலர்களும், 2015-16ற்கு 4.5பில்லியன் டொலர்களும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தை உயர்த்துவதற்கு கனடா ஒரு சிறந்த நாடு என்பதை உறுதிப்படுத்துவதே தங்கள் நோக்கமென Vaughan, Ont-வில் இடம்பெற்ற ஒரு பிரச்சார-பாணி நிகழ்வில் ஹாப்பர் கூறினார். குழந்தை பராமரிப்பு செலவு தள்ளுபடிக்காக 1,000டொலர்களை சேர்த்துள்ளது. பாடசாலை செல்லும் அல்லது வேலைக்கு செல்லும் வரி செலுத்துபவர்களின் உரிமைகோருதலுக்காக இத்தொகை பயன்படும் எனவும் அறியப்படுகின்றது. இதற்கு அண்ணளவாக 2014-15ல் 15மில்லியன் டொலர்களும் 2015-16ற்கு 65மில்லியன் டொலர்களும் செலவாகும் என கருதப்படுகின்றது. என்டிபி தலைவர் ரிம் முல்கெயர் வருமான-பிளவு திட்டத்தை குறை கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 03 Nov 2014 01:18 AM PST
எந்த முனைப்பும் கவனிப்பும் தேவையின்றி வீட்டு வாசல்களில் துளிர்த்துக் கிளம்பும் முருங்கையின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கும் தெரியாது. ''ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது. முருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன'' என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். முருங்கையில் மறைந்துள்ள மகத்தான குணங்களைப் பற்றிப் பேசுகிறார் அவர். ''முருங்கையின் உள்ளே உள்ள விதைகள் மற்றும் முருங்கை இலைகள் ஆகியவற்றில் கரோடின், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூப் ஆஸ்துமா, மார்புச் சளி மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. முருங்கை இலைச் சாறு பருக்களை அகற்றி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. முருங்கை இலைச் சாறு எலும்புகளை வலுவாக்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் உதவுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. இலை, பூ மற்றும் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப், எல்லா வகையான தொற்று நோய், குறிப்பாக தோல், தொண்டை பிரச்னைகள் ஆகியவற்றை சரி செய்கிறது. பச்சையான முருங்கைக்காய் இரும்புச் சத்து, வைட்டமின், கால்சியம் ஆகிய சத்துகளைக் கொண்டது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் முருங்கை சாப்பிட்டால் நமது எலும்புகள் வலிமை பெறும் என்பது நிரூபணமாகி உள்ளது. இதன் டானிக்கை தொடர்ந்து கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் ஆகிய சத்துகள் கிடைக்கின்றன. மேலும் கர்ப்பப்பையின் மெத்தனத்தை சரி செய்கிறது. பிரசவத்தை எளிதாக்கி, பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகளையும் சரி செய்கிறது. முருங்கைக் கீரை பொரியல் தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவுகிறது. இந்தப் பொரியல் தயாரிக்க முதலில் முருங்கை இலைகளை தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த இலைகளை நெய் சேர்த்து உண்ண வேண்டும். முருங்கைக்காய் அஜீரணக் கோளாறுகளுக்கு மருந்தாக உதவுகிறது. இலையின் சாறு 1 டீஸ்பூனுடன் தேன் கலந்து இத்துடன் 1 டம்ளர் இளநீர் சேர்த்து 2 அல்லது 3 முறை ஆயுர்வேத மருந்தாக அருந்த காலரா, பேதி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றை சரி செய்யும். இது எலும்புகளை வலுவாக்குவதுடன் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும். முருங்கைப் பொடி ஆண்மைக் குறைபாட்டை சரி செய்கிறது. செக்ஸ் உறவில் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. எப்படி வாங்க வேண்டும்? முருங்கைக்காய் சிறியதாக இருக்க வேண்டும். ஏனெனில் உள்ளே விதைகள் இருப்பதால் முருங்கை சிறிய அளவில் இருத்தல் வேண்டும். மிகவும் முதிர்ந்த காய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். முருங்கைக்காய் நல்ல பச்சை நிறத்துடனும் மேல் காணப்படும் தோல் மிருதுவாகவும் இருக்க வேண்டும். முருங்கைக்காய் முற்றிய நிலையில் இருந்தால் லேசாக சீவி விட்டோ அல்லது கீறி விட்டோ சமைக்கலாம். முருங்கைக்காய்களை வாடாமலும் உலர்ந்த நிலையிலும் வைப்பதற்கு பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஆனாலும், ஃப்ரெஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியமானது. எச்சரிக்கை முருங்கைக்காயில் உடம்புக்குத் தேவையான அத்தனை நல்ல சத்துகளும் உள்ளன. இருப்பினும் வேர் பகுதியிலிருந்து பெறப்படும் தூள்களை மருத்துவரை ஆலோசிக்காமல் உண்ணக்கூடாது. ஏனெனில் இதில் விஷத்தன்மை உள்ள வேதியியல் மருந்துகள் காணப்படுகின்றன. இவை பக்கவாதத்தை உண்டு பண்ணலாம். என்ன இருக்கிறது? (100 கிராமில்) முருங்கைக்காய் இலை ஆற்றல் 26 கி.கலோரி 92கி.கலோரி கார்போஹைட்ரேட் 3.7 கிராம் 13.4 கிராம் கொழுப்பு 0.1 கிராம் 1.7 கிராம் நார்ச்சத்து 0.48 கிராம் 0.9 கிராம் புரோட்டீன் 2.5 கிராம் 6.7 கிராம் நீர்ச்சத்து 86.9% 75.0% வைட்டமின் ஏ 0.11 மி.கி. 6.8 மி.கி. வைட்டமின் பி 423 மி.கி. 423 மி.கி. வைட்டமின் பி1 (தையமின்) 0.05 மி.கி. 0.21 மி.கி. வைட்டமின் பி2 (ரிபோஃப்ளேவின்) 0.07 மி.கி. 0.05 மி.கி. கால்சியம் 30 மி.கி. 440 மி.கி. தாமிரம் 5.3 மி.கி. 7 மி.கி. மெக்னீசியம் 24 மி.கி. 24 மி.கி. பாஸ்பரஸ் 259 மி.கி. 259 மி.கி. பொட்டாசியம் 110 மி.கி. 70 மி.கி. இரும்புச் சத்து 5.3 மி.கி. 7 மி.கி. ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் சொன்ன முருங்கை ரெசிபிகளை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் ஹேமலதா. முருங்கைக் கீரை ரசம் என்னென்ன தேவை? முருங்கைக் கீரை - ஒன்றரை கப், கறிவேப்பிலை - சிறிது, துவரம் பருப்பு - கால் கப், புளி - 1 டேபிள் ஸ்பூன், தக்காளி - 1 (விழுதாக்கவும்), ரசப் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, ஃப்ரெஷ்ஷாக பொடித்த மிளகு - கால் டீஸ்பூன். தாளிக்க... எண்ணெய் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிது, கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த சிவப்பு மிளகாய் - 1, கொத்தமல்லி - தேவைக்கு. எப்படிச் செய்வது? புளியை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். துவரம் பருப்பையும் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இதற்கிடையில் முருங்கை இலைகளை 4-5 முறை தண்ணீரில் சுத்தப்படுத்தவும். ஒரு கடாயில் 1 கப் தண்ணீர், முருங்கை இலைகள், கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். இலைகள் வெந்தவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். புளிக் கரைசலை சேர்த்துக் கொதிக்க விடவும். இதனுடன் ரசப் பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். இதில் வெந்த துவரம் பருப்பு தண்ணீர், வெந்த பருப்பு, மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். தயாரித்து வைத்துள்ள ரசத்தில் இதனை சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்துப் பரிமாறவும். மற்றொரு முறை: பருப்பு சேர்க்காமல் வெறும் புளியை வைத்து இந்த ரசத்தை செய்யலாம். ஒரு டீஸ்பூன் பூண்டும் சேர்த்து செய்வதால் சுவை கூடும். முருங்கைப் பட்டாணி உருளை மசாலா என்னென்ன தேவை? முருங்கைக்காய் - 1, உருளைக்கிழங்கு - 2, தோலுரித்த பட்டாணி - அரை கப், எண்ணெய் - 5 டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியது - 2, பச்சை மிளகாய் நறுக்கியது - 3, தக்காளி நறுக்கியது - 2, மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, புதினா அல்லது கொத்தமல்லி - சிறிது. எப்படிச் செய்வது? கடாயில் எண்ணெயை வைத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடத்துக்கு தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும். இத்துடன் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்துக் கொதிக்க விடவும். இதன் மேலே புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து அலங்கரிக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறலாம். பாரம்பரிய ரெசிபி முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு என்னென்ன தேவை? சிறு துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், வெந்த பருப்பு (துவரம் பருப்பு (அ) பயத்தம் பருப்பு) - 1 கப், புளி - ஒரு எலுமிச்சை அளவு, உப்பு - தேவைக்கு. வறுத்து அரைக்க... துருவிய தேங்காய் - அரை கப், பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மிளகு - 1/2 டேபிள்ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன். இவற்றை ஒவ்வொன்றாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். தாளிக்க... கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை - தேவைக்கு. எப்படிச் செய்வது? நறுக்கிய முருங்கைக்காயை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க விடவும். பாதி வெந்தவுடன் புளியை கரைத்து வடிகட்டி இதில் ஊற்றவும். பின் அரைத்த விழுது, வெந்த பருப்பு முதலியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியில் நெய்யில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துப் பரிமாறவும். இத்துடன் வெந்த மொச்சைக்கொட்டை சேர்த்தும் பரிமாறினால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகத்தில் காணப்படும் மிகவும் ஆச்சரியமாக மனிதர்கள்…. சுவாரஷ்ய தொகுப்பு! Posted: 03 Nov 2014 01:07 AM PST |
| ஒருவேளை பூசணிக்காய் மிஞ்சிப்போனால் இப்படித்தான் செய்வார்களோ? Posted: 03 Nov 2014 01:03 AM PST |
| 3000mAh பேட்டரி கொண்ட லாவா ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போன் அறிமுகம்! Posted: 03 Nov 2014 12:58 AM PST
லாவா நிறுவனம் ஐரிஸ் பியூயல் வரம்பில் புதிய ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போனை ரூ.7,799 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணத்தில் இந்திய சந்தையில் வெள்ளிக்கிழமை தொடங்கி இருக்கும். இருப்பினும், நிறுவனத்தின் வெளியீடு பற்றி தெளிவான தகவல் ஏதும் இல்லை. குறிப்பாக, Xiaomi ன் Redmi 1S (2000mAh), மோட்டோ இ (1980mAh) மற்றும் Zenfone 5 A501CG (2110mAh) போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை விட பெரியதாக ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போன் 3000mAh பேட்டரி உள்ளது. லாவா ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்கும் ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) சாதனம் ஆகும். இது 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே வருகிறது. ஸ்மார்ட்போனில் கீறல் எதிர்ப்பு கொண்ட அசஹி டிராகன் ட்ராகன் கிளாஸ் கொண்டுள்ளது. இதில் ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. மேலும், டூயல் LED ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஐரிஸ் எரிபொருள் 50 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 144.8x72.9x9.5mm அளவிடும் மற்றும் 160 கிராம் எடையுடையது. லாவா ஐரிஸ் பியூயல் 50 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 160 கிராம் எடை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வருண் ஆரோன் 152 கி.மீ வேகத்தில் பந்து வீசியதால் காயம்! Posted: 02 Nov 2014 11:40 PM PST
இந்திய அதி வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் காயமடைந்துள்ளது இந்திய தேர்வு குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக்கில் நடந்தது. இந்திய அணியில் முகமது ஷமி இல்லாத நிலையில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் களம் கண்டனர். உமேஷ் யாதவ், வருண் முதல் ஜோடியாக பந்து வீச்சை தொடங்கினர். இருவரது பந்து வீச்சிலும் அனல் பறந்தது. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் 140 கிலோ மீட்டரை தொடாது என்ற அலட்சியத்துடன் ஆட வந்த இலங்கை வீரர்களுக்கு, இவ்விருவரின் பந்து வீச்சை எதிர்கொள்வதே பெரும் சிரமமாக மாறிப்போனது. ஏனெனில் இருவருமே 145 கிலோமீட்டருக்கும் மேல் வேகத்தில் பந்து வீசினர். வருண் ஆரோன் தனது முதல் ஓவரின் கடைசி பந்தை 152.5 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். தில்ஷன் அடிக்க முற்பட்டும் பேட்டில் பந்து படாமல் விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சமீபத்தில் வீசிய அதிவேக பந்து வீச்சு இதுவாகும். உலக கோப்பை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் வேகப்பந்து வீச்சுதான் எடுபடும் என்பதால் இவ்விருவரின் வேகத்தை பார்த்து பிசிசிஐ அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால் ஆரோண் தனது நான்காவது ஓவரின் முதல் பந்தை வீசியபோது வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறி மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். மீதமிருந்த ஐந்து பந்தையும் கேப்டன் கோஹ்லிதான் வீசினார். ஏற்கனவே முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி காயம் காரணமாக ஆட்டத்தில் பங்கேற்காத சூழ்நிலையில், அதிவேக பந்து வீச்சாளர் ஆரோணும் காயமடைந்துள்ளது தேர்வாளர்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 169 ரன் வித்தியாசத்தில் போட்டு தாக்கியது இந்தியா! Posted: 02 Nov 2014 11:35 PM PST
இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 169 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கட்டாக்கில் நேற்று நடந்த இப்போட்டியில், இந்திய தொடக்க வீரர்கள் ரகானே, தவான் இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 35 ஓவரில் 231 ரன் எடுத்தது. தவான் 113 ரன் (107 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்), ரகானே 111 ரன் (108 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ரெய்னா 52, கோஹ்லி 22, ராயுடு 27 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்தது. இலங்கை 39.2 ஓவரில் 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜெயவர்தனே அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். இஷாந்த் 4, உமேஷ், அக்ஷர் தலா 2, அஷ்வின், ரெய்னா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 1&0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அகமதாபாத்தில் 6ம் தேதி நடக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















