Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இவங்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்… இப்படியொரு மீன் வேட்டையா?

Posted: 26 Nov 2014 04:30 AM PST

Fishermen empty nets of sardines on Durban's Addington beach

Fishermen empty nets of sardines on Durban's Addington beach

This posting includes an audio/video/photo media file: Download Now

கொரியாவிற்கு ஒரு ஜாலி ட்ரிப்!… உருளைக்கிழங்கு சாப்பிட மட்டும் தாங்க!

Posted: 26 Nov 2014 04:27 AM PST

How to fry Twist Potato with Sausage

How to fry Twist Potato with Sausage

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

Posted: 26 Nov 2014 02:57 AM PST

boiled_egg

boiled_eggநாம் உண்ணும் முட்டையில் ஏராளமான சத்துகள் மற்றும் கொலஸ்ட்ரால் அடங்கியுள்ளது. அதே சமயம் முட்டை சாப்பிடுவது குறித்த பல சந்தேகங்கள் நமக்கு இருக்கிறது. அது பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமானதாகும். சத்துகள் நிறைந்தது முட்டையில் அயோடின், ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், ஏ, பி2 மற்றும் டி வைட்டமின்கள், கோலின் மற்றும் புரதங்கள் ஆகியவை உள்ளன. மேலும், ஒரு நாளுக்கு நமக்குத் தேவைப்படும் கொலஸ்ட்ராலில் பாதி அளவு முட்டையிலேயே கிடைக்கிறது. வாரத்திற்கு ஆறு முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்று ஒரு கருத்து நிலவியது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, எத்தனை முட்டைகள் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று தெரியவந்துள்ளது. பல முக்கிய ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அத்தியாவசியமானது கொலஸ்ட்ரால் மட்டுமே. ஒரே கவலை என்னவென்றால், முட்டையில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதன் மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும். உடல் எடை குறைவதில் முட்டையின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முட்டையில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதாகவும், அதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு தவறான நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் நம் உடலில் கல்லீரல் உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான பொருளே கொலஸ்ட்ரால் தான்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Ubuntu இயங்குதளத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்!

Posted: 26 Nov 2014 02:51 AM PST

Ubuntu

UbuntuMeizu நிறுவனம் அண்மையில் MX4 மற்றும் MX4 Pro எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளினை அறிமுகம் செய்திருந்தது. இவை இரண்டும் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இக்கைப்பேசிகளை Ubuntu இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக மீண்டும் 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவ் இயங்குதளம் தொடுதிரை தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளதுடன் முன்னர் வெளியாகிய கைப்பேசியின் சிறப்பம்சங்களை ஒத்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூசிலாந்து அணியில் இணையும் வெட்டோரி! ஆட்டங்காணுமா பாகிஸ்தான்

Posted: 26 Nov 2014 02:44 AM PST

Vettori

Vettoriபாகிஸ்தான்– நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் முன்னாள் அணித்தலைவரும், சுழற்பந்து வீரருமான வெட்டோரி இடம் பெற்றுள்ளார். 35 வயதான அவரது தெரிவு ஆச்சரியமான ஒன்றாகும். ஏனென்றால் அவர் டெஸ்டில் விளையாடி 2½ ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீரர்கள் இல்லை என்பதால் வெட்டோரி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 112 டெஸ்டில் விளையாடி 360 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அபுதாபியில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 248 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைக்கேல் கிளார்க் விளையாடுவாரா மாட்டாரா? குழப்பத்தில் அவுஸ்திரேலியா!

Posted: 26 Nov 2014 02:40 AM PST

Micheal

Michealஅவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 4ம் திகதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் உடல் தகுதியை பொறுத்தே ஆடும் லெவனில் இடம் பெறுவார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் மைக்கேல் கிளார்க் 28ம் திகதி தொடங்கும் 2 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடி உடல் தகுதியை நிரூபிப்பாரா என்பதில் சந்தேகம் உள்ளது. மைக்கேல் கிளார்க்கின் உடல் தகுதி விடயத்தில் தெரிவாளர்களும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் குழப்பத்தில் உள்ளது. மைக்கேல் கிளார்க் முதல் டெஸ்டில் விளையாடுவது குறித்த தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சுதர்லேண்ட் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்டில் மைக்கேல் கிளார்க் ஆடமாட்டார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், மைக்கேல் கிளார்க் முதல் டெஸ்டில் களம் காண்பது சந்தேகம் தான்.

This posting includes an audio/video/photo media file: Download Now

குட்டித் தீவுகள் விவகாரம்: சீனாவுடன் முட்டி மோதும் அமெரிக்கா!

Posted: 26 Nov 2014 02:36 AM PST

Theevu

Theevuதென் சீனக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த தீவுத் தொகுதியில் வியட்நாம், மலேசியா, புரூனே, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சீனாவும், அங்குள்ள ஸ்பிரேட்லி தீவுக்கு அருகே செயற்கை தீவு ஒன்றை உருவாக்கி வருகிறது இந்நிலையில், சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மற்றும் பிற நாடுகள் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறும்போது, தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகள், அங்கு நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விடும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹுவா சுனியிங் கூறுகையில், அந்த தீவில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் நலனுக்காகவே கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொறுப்பற்ற விமர்சனங்களை வெளிசக்திகள் கூற உரிமையில்லை என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்மாண்ட கட்டித்தின் உச்சியில் நின்று “செல்பி” எடுத்த நபர்!

Posted: 26 Nov 2014 02:31 AM PST

Selfie

Selfieபிரித்தானியாவை சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர், உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் உச்சியில் நின்று செல்பி எடுத்து அசத்தியுள்ளார். செல்பி மோகம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியல் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த ஜெரால்ட் டோனவன் (Gerald Donovan Age-47) என்ற புகைப்படக்காரருக்கு மிக உயரத்தில் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE)உள்ள 2 ஆயிரத்து 723 அடி உயரமுள்ள புர்ஜ் கலிபாவுக்கு சென்ற அவர், அதன் உச்சியில் ஏறி செல்ஃபி எடுத்துள்ளார். இதில் துபாயின் உயரமான கட்டிடங்கள் பல தெரியும் வகையில், அவர் செல்பி எடுத்துள்ளார். மேலும் இதுதான் உலகின் உயரமான இடத்தில் எடுக்கப்பட்ட முதல் செல்பி என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரணிலும் மைத்திரியும் இரண்டாம் முறை சந்தித்தனர்!

Posted: 26 Nov 2014 02:01 AM PST

srikoththa_maithiri

srikoththa_maithiriஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் நிலை தொடர்பில் இன்று காலை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரண்டாவது தடவையாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஸ்ரீகொத்தாவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இரண்டு பேரும் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட எதிர்க்கட்சியினருக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் 28ஆம் திகதியன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அரசியல் கட்சிகள் உட்பட்ட சுமார் 3 பொது அமைப்புக்கள் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னரே பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்களின் ஆடை கடைகளில் ஒன்றான Smart Set மூடப்படுகின்றது!

Posted: 26 Nov 2014 01:55 AM PST

smart-set

smart-setஉருவக கனடிய சில்லறை விற்பனையாளர்களான Reitmans உச்சபட்ச போட்டி தன்மையை சமாளிக்கும் பொருட்டு அதன் Smart Set- ஐ மூட தீர்மானித்துள்ளது. கனடாவின் ஒரு மிகப்பெரியதும் நிலைநாட்டப்பட்டதுமான பெண்களிற்கான ஆடைகள் நிறுவனம் தனது பெரிய Smart Set கடைகளை மூடுகின்றது. கனடா பூராகவும் 31 கடைகளை மூட தீர்மானித்துள்ளதாக செவ்வாய்கிழமை அதன் சொந்த காரரான Reitmans தெரிவித்துள்ளார். அடுத்து வரும் 12-18மாதங்களில் இவற்றை மூட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடியின் அழைப்பால் நடுங்கிய மகிந்த!

Posted: 26 Nov 2014 01:43 AM PST

Modi mahinda

Modi mahindaமரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை விடுதலை செய்யவும் என்ற பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்பால் பயந்துபோன மகிந்த இந்திய மீனவர்களை விடுதலை செய்யும் போது ஏன் சிறையில் வாடும் எமது நாட்டு சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார் . கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பங்குபற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 25 வருடங்களுக்கு மேல் எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாது வீணாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யமுடியாது. அத்தோடு சிறு,சிறு குற்றங்களுக்காவும் பல வருடங்கள் சிறையில் வாடும் இவ்வாறானவர்களை விடுதலை செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லொறி அரசி தேவைப்படுவதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கூறுகின்றர். இன்னும் சில நாட்களில் யாழ் சிறையில் உள்ளவர்கள் கூரை மீதேறி போராட்டம் நடாத்தும் நிலை உருவாகும். இன்று நீதித்துறை நீதி அமைச்சின் கீழ் இல்லை அதையும் நிறைவேற்று அதிகாரமே ஆட்டுவிக்கின்றது என கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தலைவர் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள்!

Posted: 26 Nov 2014 01:33 AM PST

prabhakaran

prabhakaranதமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம். தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™