Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


70 சதவீத கற்பழிப்பு குற்றம் காதலர்களால் நடக்கிறது: மும்பை போலீஸ் கமிஷனர் தகவல்

Posted: 26 Nov 2014 10:37 PM PST

70 சதவீத கற்பழிப்பு குற்றம் காதலர்களால் நடப்பதாக தெரியவந்துள்ளது. மும்பை போலீஸ் கமிஷனர் ரகேஷ் மரியா நிருபர்களிடம் கூறியதாவது:– மும்பையில் நடப்பு 2014–ம் ஆண்டில் இதுவரை 542 கற்பழிப்பு குற்றங்கள் பதிவாகி உள்ளது. இதில் 389 பேர் காதலன் மற்றும் ஆண் நண்பர்களால் ஏமாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்டவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்

Posted: 26 Nov 2014 10:18 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. 8–ம் திருவிழாவான நேற்று மகா

மேல்–சபை எம்.பி பதவிக்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கேட்கும் அமர்சிங்

Posted: 26 Nov 2014 10:01 PM PST

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் தொழில் அதிபரான அமர்சிங், சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங்யாதவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பொது செயலாளராக இருந்த அவர் மேல் – சபை எம்.பி. பதவி வகித்தார்.

மத்திய அரசின் தீவிரமுயற்சியால் 5 தமிழக மீனவர்கள் மீட்பு: சுஷ்மா சுவராஜ் தகவல்

Posted: 26 Nov 2014 09:53 PM PST

பாராளுமன்றத்தில் நேற்று எம்.பி.க்கள் மீனவர்கள் பிரச்சினையை கிளப்பினார்கள். இந்திய மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது பக்கத்து நாடுகளால் சிறை பிடிக்கப்படுவது பற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்கள். இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:–

காஷ்மீரில் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: 9 வீரர்கள் குற்றம் புரிந்துள்ளதாக ராணுவம் ஒப்புதல்

Posted: 26 Nov 2014 09:11 PM PST

காஷ்மீர் மாநிலம் பட்காம் அருகே உள்ள சட்டேர்காம் பகுதியில் இம்மாத துவக்கத்தில் மாருதி கார் மீது பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரு இளைஞர்கள் மரணமடைந்தனர். இச்சம்பவத்தில் இளநிலை அதிகாரி உள்ளிட்ட ஒன்பது ராணுவ வீரர்கள் குற்றம் புரிந்துள்ளதாக ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

உ.பி.யில் இரு சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

Posted: 26 Nov 2014 08:24 PM PST

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பதான் கிராமத்தில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இவ்வழக்கை அம்மாநில போலீசார் விசாரித்து வந்த நிலையில் சி.பி.ஐ.க்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

வாத்துகள் தீ வைத்து அழிப்பு: நஷ்டஈடு வழங்கப்படும் என உம்மன்சாண்டி அறிவிப்பு

Posted: 26 Nov 2014 08:19 PM PST

கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பறவை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சில வாத்துகள் திடீர், திடீரென செத்து விழுந்தன. அதிர்ச்சி அடைந்த பண்ணையாளர்கள் இறந்த வாத்துகளின் மாமிசங்களை பரிசோதனை செய்த போது அவற்றிற்கு எச்–5

கருப்பு பண மீட்பு வாக்குறுதி: நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் ஆவேசம்

Posted: 26 Nov 2014 06:38 PM PST

பாராளுமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக காங்கிரஸ் கட்சி நேற்று கையில் எடுத்தது. சபை கூடிய உடனேயே இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு தான் நோட்டீசு அளித்திருப்பது பற்றி சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நினைவூட்டினார்.

மும்பை தீவிரவாத தாக்குதல் 6-வது ஆண்டு நினைவுதினம்: நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி

Posted: 26 Nov 2014 06:23 PM PST

நாட்டின் வர்த்தக தலைநகர் என்ற பெருமைக்குரிய மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி சி.எஸ்.டி. ரெயில்நிலையம், தாஜ் ஓட்டல், நரிமன் இல்லம், காமா மருத்துவமனை உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர

நித்யானந்தாவுக்கு நடந்த ஆண்மை பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்

Posted: 26 Nov 2014 06:20 PM PST

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ் என்பவர் நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கூறினார். இதுகுறித்த வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை: கேரள அரசியல் தலைவர்கள் விரைவில் பிரதமருடன் சந்திப்பு

Posted: 26 Nov 2014 06:14 PM PST

கேரள அரசின் எதிர்ப்பை நிராகரித்து விட்டு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அங்கு 142 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை சாதனையாக தமிழகம் கொண்டாடி வருகிறது.

நோக்கியா தொழிற்சாலை பிரச்சினையில் பிரதமர் தலையிடவேண்டும்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

Posted: 26 Nov 2014 03:57 PM PST

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு தொழிலாளர்களின் நலனை காக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். நேற்று பாராளுமன்றத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் பேசுகையில் கூறியதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்கள் வெளியிடப்படும்: அருண் ஜெட்லி அறிவிப்பு

Posted: 26 Nov 2014 03:40 PM PST

ஆதாரம் திரட்டிய பின்னர் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்கள் வெளியிடப்படும் என டெல்லி மேல்-சபையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். கருப்பு பண விவகாரம் குறித்து டெல்லி மேல்-சபையிலும் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பங்கேற்று

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக நீதிபதி சி.கே.பிரசாத் நியமனம்

Posted: 26 Nov 2014 03:17 PM PST

இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அவரை துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு தேர்வு செய்து அண்மையில்

பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு

Posted: 26 Nov 2014 03:05 PM PST

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2½ வரை குறைய வாய்ப்புள்ளது. பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது.

மூன்றாண்டுகளாக மகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த எச்.ஐ.வி. நோயாளி கைது

Posted: 26 Nov 2014 02:25 PM PST

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட தந்தையை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இரு முறை திருமணமான இந்த 42 வயது நபருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரியவந்தது.

சரிதாதேவி விவகாரம்: மத்திய விளையாட்டு மந்திரியுடன் தெண்டுல்கர் ஆலோசனை

Posted: 26 Nov 2014 12:06 PM PST

தென்கொரிய ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி அந்த பதக்கத்தை ஏற்க மறுத்த சர்ச்சையால் சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

Posted: 26 Nov 2014 08:20 AM PST

சி.பி.ஐ. இயக்குனரை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் தற்போது பிரதமர், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் உள்ளனர். இதில், எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலாக தனிப்பெரும் எதிர்க்கட்சி தலைவரை சேர்க்கவும் 3 உறுப்பினர்களில் ஒருவர் இல்லையென்றாலும் கூட சி.பி.ஐ. இயக்குனரை நியமனம் செய்யும் விதத்தில் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து இந்த சட்ட மசோதாவை நேற்று பாராளுமன்றத்தில்

பஞ்சாப்பில் ரூ.15 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் பிடிபட்டது

Posted: 26 Nov 2014 07:20 AM PST

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்கு கடத்தி வரப்பட்டு, இங்குள்ள சண்டிகர் நகரில் இருந்து ராஜஸ்தானுக்கு கொண்டு செல்ல முயன்ற 21 கிலோ ஹெராயினை இன்று கைப்பற்றிய உளவுப்படை போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், பாகிஸ்தான் நாட்டின் 3 சிம் கார்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்

8 வயது சிறுவனை கடத்தி, பாலியல் தொந்தரவு செய்து கொன்றவன் கைது

Posted: 26 Nov 2014 07:06 AM PST

உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தை சேர்ந்த கொத்வாலி டெஹத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் கடந்த 22-ம் தேதி கடத்தப்பட்டான். அவனை கடத்திய மர்ம நபர், சிறுவனின் பெற்றோர் செல்போனை தொடர்பு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™