Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பச்சை வாழைப்பழத்தைக் கண்டு பறந்தோடும் வயிற்றுப்புண்!

Posted: 25 Nov 2014 04:58 AM PST

banana

bananaகுடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். * குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு. * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். * உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். * வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். * ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. * இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும். தினமும் உறங்க செல்லும் முன் ஒரு பச்சை வாழைப்பழத்தை மறக்காமல் சாப்பிடுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வரும் முன் காக்கும் தடுப்பு மருந்து வந்த பின் தீர்க்கும் அருமருந்து!

Posted: 25 Nov 2014 04:38 AM PST

Andrographis Paniculata

Andrographis Paniculataவெயிலில் வெந்து நொந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டென்று வானிலை மாறுவது எத்தனை இதம் என்று சொல்லத் தேவையில்லை. 'பனிவிழும் மலர்வனம்' என்று பாடுவதற்கோ, 'அடடா மழைடா...' என்று ஆடுவதற்கோ இதுவே சரியான நேரம். ஆனால், இந்த ரம்மியமான காலத்தில்தான் ஜலதோஷம், காய்ச்சல், தலைவலி என்று பல அழையாத விருந்தாளி களையும் சமாளிக்க வேண்டி யிருக்கிறது. ''மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த பருவ காலத்தில் நோய் வரும் முன்னர் காக்கும் தடுப்பு மருந்தாகவும் வந்த பின்னர் நோயைத் தீர்க்கும் அருமருந்தாகவும் இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு'' என்கிறார் சித்த மருத்துவரான அபிராமி. ஆமாம்... சமீபகாலமாக அடிக்கடி கேள்விப்படும் அதே நிலவேம்பு தான்! ''நிலவேம்பு என்பது 2 அடி வரை வளரும் ஒரு செடி வகை. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரும். தாவரவியலில் Andrographis Paniculata என்று இந்தச் செடியை அழைக்கிறார்கள். நாம் அடிக்கடி கேள்விப்படுகிற நிலவேம்பு கஷாயம் இந்த செடியிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள். இந்த கஷாயத்தைதான் நிலவேம்பு குடிநீர் என்று சொல்கிறோம். கடந்த சில வருடங்களாக விதவிதமான காய்ச்சல்கள் நம் ஊரில் வந்துகொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். டெங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று புதிய புதிய காய்ச்சல்கள் வரும்போது வழக்கமான மருத்துவ முறைகளால் சமாளிக்க முடியாத சூழ்நிலையை நிலவேம்பு சாதித்திருக்கிறது...''. நிலவேம்பு பிரபலமானது எப்படி? ''திடீரென பன்றிக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்த போது நவீன மருத்துவம் இருந்தும் என்ன செய்வது என தெரியாமல் அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது. ஒரு பக்கம் அதை பற்றிய பயம், மறுபக்கம் அது என்ன காய்ச்சல் என்று தெரியாத நிலை, போதுமான பரிசோதனை நிலையங்கள் இல்லாமல் மாதிரிகளை எடுத்துக் கொண்டு அலைக்கழிந்த இக்கட்டான நேரத்தில் நிலவேம்பு பெரிய உதவி செய்தது. மற்ற மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தபோதும், தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் நிலவேம்பு குடிநீர் கொடுத்த பாதுகாப்புதான் என்று உறுதியாக சொல்லலாம். டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதித்த இக்கட்டான சூழல்களில் நிலவேம்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் அரசாங்கமே அதை விளம்பரப்படுத்தி, மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீருக்காக தனிப்பிரிவே தொடங்கியது...'' எங்கு கிடைக்கும்? ''எல்லா சித்த மருந்துக்கடைகளிலும் 9 கூட்டு மருந்துகளுடன் கலக்கப்பட்ட நிலவேம்பு கலவை கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு, தமிழ்நாடு அரசின் டாம்ப்கால், சென்னை அடையாறு பகுதியில் செயல்படும் சித்த மருத்துவர்களின் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் கிடைக்கும். காதிபவன், சித்த மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் போன்றவற்றிலும் நிலவேம்பு கிடைக்கிறது.'' நிலவேம்பு குடிநீரை எப்படி செய்ய வேண்டும்? ''கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். இந்த தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிய பிறகு, வடிகட்டி சாப்பிடலாம். காய்ச்சல் இருப்பவர்கள் காலை, இரவு என இரண்டு வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும். நிலவேம்பு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதால், காய்ச்சல் இல்லாதவர்களும் தடுப்பு மருந்தாக இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். நிலவேம்பின் கசப்பைப் போக்க கொஞ்சம் சர்க்கரை, வெல்லம், தேன் என ஏதாவது ஒன்றை கலந்து காய்ச்சி தேநீர் போலவும் பயன்படுத்தலாம். தேன் ஒரு சிறந்த மருந்து என்பதால் தேனுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்னும் நல்லது. நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டுக் கொள்ளலாம்...'' என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளன? ''எந்த விஷக்காய்ச்சலாக (Viral Fever) இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரஸையும் முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய் விடும். காய்ச்சல் வந்தவுடன் பலரும் ஆங்கில மருத்துவத்தையே தேடுவார்கள். உங்கள் திருப்திக்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது நிலவேம்பு குடி நீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. அதனால், 5 நாட்களில் ஆங்கில மருத்துவம் குணப்படுத்துகிறது என்றால், நிலவேம்பு குடிநீர் சில நாட்களில் குணப்படுத்த உங்களுக்கு உதவி செய்யும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும். சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு உணர்த்தியிருக்கிறதா? ''நம் வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவச் செலவுக்கே சரியாகிவிடுகிற இன்றைய சூழலில், மிகக்குறைந்த செலவில் குணப்படுத்தும் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நிலவேம்பு நமக்கு உணர்த்தியிருக்கிறது. இது சித்த மருத்துவம் என்கிற கடலில் ஒரு துளிதான். இன்னும் எத்தனையோ விஷயங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கின்றன. மக்களிடம் இப்போது இயற்கை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நெல்லிக்காய் கலந்த தைலம், மருதாணி கலந்த எண்ணெய், பழங்கள் கலந்த ஃபேஷியல் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு எபோலா வருவதில்லை என்பதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். பனி, மழைக்கு பயந்து வீட்டிலேயே நம்மால் உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால், இந்த பருவத்திலும் எங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நலக் குறைவு இல்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க நிலவேம்பு நமக்கு உதவி செய்யும்!''

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™