மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மும்பையில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் 59 சதவிகிதம் உயர்வு: கற்பழிப்பு சம்பவங்கள் 47 சதவிகிதம் அதிகரிப்பு
- குடியரசு தின விழாவுக்கு வரும் ஒபாமா, 2 நாட்கள் இந்தியாவில் தங்கி இருப்பார்
- கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு
- சர்ச்சைக்குரிய உயர் கல்வி மசோதா வாபஸ்
- காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு உட்பட்டே புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக மந்திரி பேட்டி
- பாராளுமன்றத்தில் கருப்பு பணம் பற்றி இன்று விவாதம்?
- டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு முதல் பஸ் சேவை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
- சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ 14 இடங்களில் ஆக்சிஜன் நிலையங்கள்
- இந்திய நட்பின் அடையாளமாக நேபாளத்துக்கு நவீனரக ஹெலிகாப்டரை பரிசளித்தார், மோடி
- 121 வயதிலும் ஓட்டுப் போட்ட காஷ்மீர் மூதாட்டி
- காஷ்மீர்-ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம்
- சுற்றுலா பயணிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல இந்தியா-நேபாளம் அனுமதி
- மாநிலங்களவை தேர்தல்: 2 மத்திய மந்திரிகள் அரியானாவில் வேட்பு மனு தாக்கல்
- நேபாளத்திற்கு போதி மரக்கன்றை பரிசளித்த மோடி
- உலகிலேயே இரண்டாவது நீளமான சென்னை-டெல்லி புல்லட் ரெயில்: சீனாவில் இந்திய அதிகாரிகள் ஆய்வு
- காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன் தலைமறைவு
- சிந்துரத்னா கப்பல் விபத்து: 7 கடற்படை அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்ப்பு
- ம.பி.யில் பிளாக் மார்க்கெட்டில் விற்க சிலிண்டர்களை பதுக்கிய தலைமை ஆசிரியர் கைது
- ராகுலை கோமாளி என்று விமர்சித்ததால் நீக்கப்பட்ட முஸ்தபாவை மீண்டும் சேர்த்துக் கொண்டதாக காங். அறிவிப்பு
- மார்க்கண்டேய கட்ஜுவை அடுத்து பிரஸ் கவுன்சிலின் தலைவராகிறார், சி.கே.பிரசாத்
| Posted: 25 Nov 2014 09:53 PM PST மும்பையில் பெண்களுக்கு எதிரான குற்றம் 59 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை உள்ள ஒரு வருட காலத்தில் நடைபெற்ற குற்றங்களை கணக்கிட்டதில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. |
| குடியரசு தின விழாவுக்கு வரும் ஒபாமா, 2 நாட்கள் இந்தியாவில் தங்கி இருப்பார் Posted: 25 Nov 2014 09:51 PM PST இந்தியாவின் 63–வது குடியரசு தினம் வரும் ஜனவரி மாதம் 26–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற பிறகு நடத்தப்படும் முதல் குடியரசு தின விழா என்பதால் இதை மிகவும் கோலாகலமாக நடத்த திட்ட மிட்டுள்ளனர். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்களில் யாராவது ஒருவரை அழைப்பது மரபாக இருந்து வருகிறது. அதன்படி |
| கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு Posted: 25 Nov 2014 08:41 PM PST கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது. |
| சர்ச்சைக்குரிய உயர் கல்வி மசோதா வாபஸ் Posted: 25 Nov 2014 07:30 PM PST கடந்த 2011-ம் ஆண்டு டெல்லி மேல்-சபையில், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில் சிபல் தாக்கல் செய்தார். உயர் கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகளான யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ. போன்றவற்றை கலைத்து விட்டு, |
| காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு உட்பட்டே புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக மந்திரி பேட்டி Posted: 25 Nov 2014 06:44 PM PST காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திட்ட அறிக்கையை தயார் செய்ய உலக அளவிலான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கு வருகிற டிசம்பர் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு |
| பாராளுமன்றத்தில் கருப்பு பணம் பற்றி இன்று விவாதம்? Posted: 25 Nov 2014 12:51 PM PST பாராளுமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டன. ஆனாலும் நேற்று இந்த விவகாரம் விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கருப்பு பண விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் இரு சபைகளிலுமோ அல்லது ஏதாவது ஒரு சபையிலோ இன்று விவாதம் |
| டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு முதல் பஸ் சேவை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார் Posted: 25 Nov 2014 08:34 AM PST இந்தியாவில் இருந்து அண்டை நாடான நேபாளத்துக்கு செல்ல விரும்புபவர்கள் இதற்கு முன்னர் விமானங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த பழைய நிலையை மாற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய பஸ் சேவையை மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார். |
| சபரிமலையில் பக்தர்களுக்கு உதவ 14 இடங்களில் ஆக்சிஜன் நிலையங்கள் Posted: 25 Nov 2014 08:28 AM PST சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்த வகையில், கடினமான மலைப்பாதையில் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் 14 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| இந்திய நட்பின் அடையாளமாக நேபாளத்துக்கு நவீனரக ஹெலிகாப்டரை பரிசளித்தார், மோடி Posted: 25 Nov 2014 07:59 AM PST நேபாளத்தில் வரும் 26,27 தேதிகளில் நடைபெறும் 18-வது சார்க் மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி காத்மாண்டு வந்து சேர்ந்தார். அந்நாட்டுடன் இந்தியாவுக்குள்ள நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் |
| 121 வயதிலும் ஓட்டுப் போட்ட காஷ்மீர் மூதாட்டி Posted: 25 Nov 2014 07:59 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு இன்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் வாக்களித்த 121 வயது மூதாட்டி, நமது ஜனநாயக கடமையை இளைய தலைமுறையினருக்கு வலியுறுத்தும் வழிகாட்டியாக அமைந்துள்ளார். |
| காஷ்மீர்-ஜார்க்கண்ட் முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் Posted: 25 Nov 2014 07:28 AM PST ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபைக்கான பொதுத் தேர்தலின் முதல்கட்டமாக இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் முறையே 71.28 மற்றும் 61.92 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சுற்றுலா பயணிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல இந்தியா-நேபாளம் அனுமதி Posted: 25 Nov 2014 07:26 AM PST இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கும், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கும் பொதுமக்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நீக்கப்பட்டுள்ளது. |
| மாநிலங்களவை தேர்தல்: 2 மத்திய மந்திரிகள் அரியானாவில் வேட்பு மனு தாக்கல் Posted: 25 Nov 2014 07:07 AM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை கடந்த மாதம் 27-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் பிரேந்தர் சிங் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மந்திரியாகும் ஒருவர் 6 மாதத்திற்குள் மக்களவை எம்.பி. தொகுதியில் |
| நேபாளத்திற்கு போதி மரக்கன்றை பரிசளித்த மோடி Posted: 25 Nov 2014 06:54 AM PST நேபாளத்துடன் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் பிரதமர் மோடி இன்று புனித போதி மரக்கன்றை அந்நாட்டிற்கு பரிசாக வழங்கினார். சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, காத்மாண்டுவில் பீர் மருத்துவமனையின் காய சிகிச்சைப் |
| உலகிலேயே இரண்டாவது நீளமான சென்னை-டெல்லி புல்லட் ரெயில்: சீனாவில் இந்திய அதிகாரிகள் ஆய்வு Posted: 25 Nov 2014 06:35 AM PST சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே இரண்டாயிரத்து 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதி நவீன புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த புல்லட் |
| காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன் தலைமறைவு Posted: 25 Nov 2014 05:50 AM PST உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த சிவால்காஸ் பகுதியில் வசிப்பவர், அஷ்ரப். இவரது தங்கையான ரினா கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். தனது தங்கை ரினாவை கடத்திச் சென்றுவிட்டதாக யூனுஸ் |
| சிந்துரத்னா கப்பல் விபத்து: 7 கடற்படை அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்ப்பு Posted: 25 Nov 2014 05:24 AM PST சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து வழக்கில் 7 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் |
| ம.பி.யில் பிளாக் மார்க்கெட்டில் விற்க சிலிண்டர்களை பதுக்கிய தலைமை ஆசிரியர் கைது Posted: 25 Nov 2014 05:17 AM PST மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ள மார்க்கெட்டில் கியாஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சிலிண்டர்களுடன் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் இருந்து 13 காலி சிலிண்டர் உள்பட 58 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் திருட்டு போயின. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் |
| Posted: 25 Nov 2014 05:15 AM PST கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள காங்கிரஸ் தலைமையகமான இந்திர பவனில் கடந்த மே மாதம் நடைபெற்றது. |
| மார்க்கண்டேய கட்ஜுவை அடுத்து பிரஸ் கவுன்சிலின் தலைவராகிறார், சி.கே.பிரசாத் Posted: 25 Nov 2014 05:10 AM PST இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக தற்போது பொறுப்பு வகித்துவரும் மார்க்கண்டேய கட்ஜுவின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுகின்றது. இதனையடுத்து, அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம்? என்பது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |