Tamil Star |
- திருடர்களுக்கு விரித்த வலையில் சிக்கி உயிரிழக்கும் அப்பாவிகள்!!
- ஆமை மின்னல் வேகத்தில் பறக்குமா?… ஷாக் ஆகாமல் பாருங்க!
- தூக்கத்திலும் எவ்வளவு அசால்ட்டா வேலை நடக்குதுனு பாருங்க!
- Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் வீழ்ச்சி!
- வருண் ஆரோன் அபாரம்: அவுஸ்திரேலியாவை கலங்கடித்த இந்தியா
- உலகக்கிண்ணப் போட்டியில் மோசடிகளை தவிர்க்க தீவிர நடவடிக்கை
- உலகின் பிரம்மாண்ட செல்பி: 1,151 பேர் பங்கேற்பு!
- செவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடு? பீதியை கிளப்பும் காணொளி
- தங்க நகைகளுடன் இலங்கையர் சென்னை விமான நிலையத்தில் கைது
- மகிந்த – மைத்திரி கடும் போட்டி! தேர்தல் களத்தில் பீஷ்மர்கள் பலர்
- மாவீரர் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!
- பெரும்பாகம் பூராகவும் வீசும் பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிப்பு, வீதியெங்கும் குப்பை சிதறல்கள்!
- கமலை தொடர்ந்து சூர்யா செய்த தானம்!
- கடினம் விஜய்யுடன் பழகுவது ! ஷங்கர்
- இந்த உணவுகளை சாப்பிடுங்க! வயிற்று பிரச்னைக்கு குட்பை சொல்லுங்க
- வெறும் 58 நொடிகள் பார்த்தால் போதும்…. அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!
- இருதலை பாம்பு உணவு உட்கொள்ளும் மிக அரிய காட்சி!
- புரட்டியெடுக்க காத்திருக்கும் அவுஸ்திரேலியா: சவாலை சந்திக்க தயாராகும் கோஹ்லி
- புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி!
- உயர் வினைத்திறன் கொண்ட Huawei Ascend P7 கைப்பேசி
| திருடர்களுக்கு விரித்த வலையில் சிக்கி உயிரிழக்கும் அப்பாவிகள்!! Posted: 24 Nov 2014 11:49 PM PST |
| ஆமை மின்னல் வேகத்தில் பறக்குமா?… ஷாக் ஆகாமல் பாருங்க! Posted: 24 Nov 2014 11:44 PM PST |
| தூக்கத்திலும் எவ்வளவு அசால்ட்டா வேலை நடக்குதுனு பாருங்க! Posted: 24 Nov 2014 11:42 PM PST |
| Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையில் வீழ்ச்சி! Posted: 24 Nov 2014 11:27 PM PST
சம்சுங் நிறுவனம் தனது S தொடர் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து குறுகிய காலத்தில் கைப்பேசி உலகில் சிறந்த இடத்தைப் பிடித்திருந்தது. எனினும் கடந்த ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசியானது Galaxy S4 கைப்பேசி விற்பனையிலும் பார்க்க மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்நிறுவனத்தினால் எதிர்பார்க்கப்பட்ட அளவிலும் பார்க்க 40 சதவீதம் குறைவாகும். அதாவது முதன் மூன்று மாதங்களிலும் 12 மில்லியன் கைப்பேசிகள் விற்பனையாகியுள்ளன. ஆனால் Galaxy S4 கைப்பேசியானது அறிமுகம் செய்யப்பட்ட 3 மாதகாலத்திற்குள் 16 மில்லியன் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வருண் ஆரோன் அபாரம்: அவுஸ்திரேலியாவை கலங்கடித்த இந்தியா Posted: 24 Nov 2014 11:22 PM PST
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரமாக விளையாடியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்குபெறும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4ம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி அவுஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணியுடன் இந்திய அணி மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்கியது. அவுஸ்திரேலிய லெவன் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. 52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் அவுஸ்திரேலயா லெவன் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசி அவுஸ்திரேலிய லெவனுக்கு தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க வீரர் ஷார்ட் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். அணித்தலைவர் டர்பனர் 29 ஓட்டங்களிலும், ஸ்டீவென்ஸ் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் வருண் ஆரோன் பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்மித் 40 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, நீல்சன் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டினர். இதனால் கிரிக்கெட் அவுஸ்திரேலியா லெவன் அணி 71.5 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர்களில் வருண் ஆரோன் வேகமாக வீசினார், பந்துகள் எகிறின. இதனால் 3 முன்கள வீரர்களின் விக்கெட்டுகளை அவர் சாய்த்தார். புவனேஷ் குமார், முகமது ஷமி மற்றும் கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார். முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு அருமையான முதல் தினமாக அமைந்தது. 5 பிடியெடுப்பு, ஒரு ஸ்டம்பிங் என்று 6 பேரை வீழ்த்துவதில் பங்களிப்பு செய்துள்ளார். பின்னர் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் முடிவதற்கு முன்பாக 16 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் 32 ஓட்டங்களுடனும், புஜாரா 13 ஓட்டங்களுடனும் ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்தனர், இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் எடுத்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகக்கிண்ணப் போட்டியில் மோசடிகளை தவிர்க்க தீவிர நடவடிக்கை Posted: 24 Nov 2014 11:19 PM PST
அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக்கிண்ண போட்டியில் ஊழலுக்கு சிறு துளி கூட இடம் கொடுக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று கருத்து வெளியிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் இந்த தகவலை வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில், நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் அடுத்தாண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன்போது அந்நாடுகளின் பொலிஸ் ஏஜென்சிகளின் உதவியை நாட இருக்கிறோம். உலகக்கிண்ண போட்டியின் போது மேட்ச் பிக்சிங் நடவடிக்கையில் ஈடுபடும் யாரும் தப்ப முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பந்து வீச்சில் விதிமுறையை மீறுபவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகின் பிரம்மாண்ட செல்பி: 1,151 பேர் பங்கேற்பு! Posted: 24 Nov 2014 11:06 PM PST
1,151 பேர் இணைந்து உலகின் மிகப்பெரிய செல்பி எடுத்து சாதனை படைத்துள்ளனர். உலகம் முழுவதும் செல்பி மோகம் அதிகமாகக் காணப்படுகிறது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொண்டது போக, தற்போது கும்பலாக சேர்ந்து குரூப்பி என்ற பெயரிலும் மக்கள் புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வங்கதேச தலைநகர் டாக்காவில்(Dhaka) 1,151 பேர் சேர்ந்து செல்பி ஒன்றை எடுத்துள்ளனர். இதற்கு முன்னர் செல்பியில் இத்தனை பேர் பங்கேற்றது இல்லை என்பதால், இது உலக சாதனையாகக் கருதப்படுகிறது. மேலும் மைக்ரோசாப்டின் நோக்கியா லூமியா 730 என்ற ஸ்மார்ட் போனை விளம்பரப்படுத்த, இந்த செல்பி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| செவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடு? பீதியை கிளப்பும் காணொளி Posted: 24 Nov 2014 11:03 PM PST
செவ்வாயில் மனித மண்டை ஓடு இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் தரைப்பரப்பில் மனித மண்டை ஓடு இருப்பதாக யூடியூப் தளத்தில் வெளியான வீடியோ அதிவேகமாக பரவிவருகிறது. அதில் சில மாற்றங்களைச் செய்து மண்டை ஓடு போல சித்தரித்து விட்டதால், குறித்த வீடியோ பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் வரும் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, அங்கு வேற்றுகிரக வாசிகள் இருந்திருக்கலாம் என சிலர் கதைக்கட்டுகின்றனர். மேலும் இந்த மண்டை ஓடு இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளதாக சிலர் தெரிவித்ததை நாசா கடுமையாக மறுத்துள்ளது. இதுகுறித்து நாசா கூறுகையில், இந்த வீடியோவில் இருப்பது செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைதான் என்றும் இவ்வகை வதந்திகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தங்க நகைகளுடன் இலங்கையர் சென்னை விமான நிலையத்தில் கைது Posted: 24 Nov 2014 10:57 PM PST
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கொழும்பில் இருந்து ஒரு விமானம் சென்றது. இதில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த அகமது அனுப் (வயது 23) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றிருந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் வெள்ளி முலாம் பூசப்பட்ட நகைகள் இருந்தன. இவை கவரிங் நகைகள் என்றும் சென்னையில் விற்க கொண்டு வருவதாக கூறினார். ஆனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அந்த நகைகளை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது தங்க நகைகள் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர் மொத்தம் 60 பவுன் தங்க நகைகள் கடத்தி வந்துள்ளார். இவற்றின் மதிப்பு இந்திய ரூ.14 லட்சத்து 50 ஆயிரம். இது தொடர்பாக இலங்கை வாலிபர் அகமது அனுப்பை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகிந்த – மைத்திரி கடும் போட்டி! தேர்தல் களத்தில் பீஷ்மர்கள் பலர் Posted: 24 Nov 2014 10:51 PM PST
மகாபாரதப் போரில் பாண்டவர்களை வெல்லச் செய்வதற்காக பார்த்தசாரதியாகிய கிருஷ்ண பரமாத்மா பட்ட கஷ்டங்களும் செய்த சூழ்ச்சிகளும் கொஞ்சமல்ல. அவதார புருராகிய கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஏன் இத்துணை கஷ்டம் என்று யாரேனும் கேட்டால், கிருஷ்ணனுக்கு ஈடான பலமும் சக்தியும் ஞானமும் கொண்டவர்கள் துவாபர யுகத்தில் இருந்தது தான் காரணம் எனலாம். போரை நடத்தியாக வேண்டும் என்பது கிருஷ்ணனின் முடிவு அல்ல. அது இறைவனாகிய பரம்பொருள் விதித்த நியதி. இந் நியதியை மீறி போரைத் தடுக்க வேண்டுமென கிருஷ்ணன் நினைத்தால் கூட, போரை நிறுத்த முடியாது. ஏனெனில் போரை நடத்தும் பணியை கிருஷ்ணன் செய்தானேயன்றி, போரை அவன் நடத்தவில்லை. பாரதப் போர் நடந்தாக வேண்டும் என்பது பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரம் போற்றும் சாட்சாத் பரமேஸ்வரனுடைய முடிவு. எனவே சிவப்பரம்பொருளின் முடிவை நிறைவேற்ற வந்தவரே கிருஷ்ண பரமாத்மா. அதன் காரணமாகவே தன் சகோதரி சுபத்திரையின் புதல்வன் அபிமன்யுவின் உயிரைக் கூட கிருஷ்ணனால் பாதுகாக்க முடியவில்லை. இதிலிருந்து போரை நடத்தும் சக்தி வேறு எங்கோ உள்ளது என்பது தெளிவாகிறது. இது ஒருபுறமிருக்க இலங்கையிலும் ஜனாதிபதித் தேர்தல் பாரதப் போர் போல நடக்கப் போகிறது. மகிந்த ராஜபக்வை எதிர்த்து அவரோடு கூட இருந்த மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதன் காரணமாக தேர்தல் களம் விறுவிறுப்பாகவிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. குத்து வெட்டுக்கள், பணப்பரிமாற்றங்கள், தில்லு முல்லுக்கள், அடிதடிகள், ஆர்ப்பாட்டங்கள் எனப் பலதும் நடந்தாகும். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக எதிர்க்கட்சிகள் கடுமையாகப் பாடுபடும். இதில் மைத்திரியின் தேரோட்டும் சந்திரிகா குமரதுங்க ஒரு பார்த்த சாரதியாக இருப்பார் என்று முன்னரே இவ்விடத்தில் கூறியிருந்தோம். இதை நாம் கூறும்போது, சந்திரிகா பார்த்தசாரதி என்றால் ஏற்கெனவே நீங்கள் குறிப்பிட்ட பரம்பொருள் யார் என்ற கேள்வி எழும். பரம்பொருள் இல்லாமலா மைத்திரிபால சிறிசேன மகிந்தவை எதிர்த்து வெளிக்கிட்டார். ஆகவே அவசரப்பட்டு பரம்பொருள் யார் என்று தேடுவது அவசியமற்றது. இப்போது போரில் என்னென்ன தந்திரோபாயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது பற்றியே நாம் ஆராய வேண்டும். அந்த ஆய்வுக்காக பாரதப் போரில் வெல்ல பார்த்த சாரதி செய்த தந்திரோபாயங்களை ஒரு கணம் மீளவும் சிந்திப்பது பொருத்துடையது. கெளரவர் பக்கம் இருக்கக்கூடிய விதுரன் வில் வித்தையில் மகாவிற்பனன். வில்லுக்கு விதுரன் என்றே கூறப்பட்டு வந்தது. வில்வித்தையில் விற்பனன் ஆகிய விதுரன் கெளரவர் பக்கத்தில் நின்று போர் புரிவானாயின் அருச்சுனன் உயிர் துறப்பது உறுதி. ஆகையால் கெளரவர் சபையில் வைத்து விதுரன் தன் வில்லை உடைக்குமாறு கண்ணன் சூழ்ச்சி செய்தான். இதனால் கெளரவர் சேனை மிகப்பெரும் பலத்தை இழந்தது. இப்போது பீஷ்மர் போர்க்களத்தில் நிற்கிறார். உடம்பால் துரியோதனுக்காகப் போரிட்டாலும் பீஷ்மரின் மனம் பாண்டவரின் வெற்றிக்காகப் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தது. பீஷ்மரின் இந்த பிரார்த்தனையே பாண்டவரின் வெற்றிக்கு மூல காரணம் எனலாம். அப்படியானால் நம்நாட்டில் நடக்கப் போகும் தேர்தல் களத்தில் யார் பீஷ்மர் என்று கேட்டால் பலரைக் காட்ட முடியும். கட்சி ஒன்றாகவும் ஆதரவு இன்னொன்றுக்காகவும் இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருப்பதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பீஷ்மர் களுக்குப் பஞ்சமேயில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாவீரர் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்! Posted: 24 Nov 2014 09:59 PM PST
தமிழீழ தேசியத்தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க நவம்பர் 27ஆம் நாள் 1982ஆம் ஆண்டு மாலை 6.05 மணிக்கு முதற்களப்பலியாகிய மாவீரனே லெப். சங்கர் என்றழைக்கப்படும் சத்தியநாதன். இந்நாளே தேச விடுதலைக்காக மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் என்று உறுதிப்பாடாயிற்று. இவ் எழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனப்படுத்தபட்டுயள்ளது. வருடம் தோறும் இப் புனித நாளினை தமிழினம் உணர்வு புர்வமாகக் கொண்டாடுகிறது. நினைவு கூருகிறது. மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சிநாளாகத் உலகத்தமிழினத்தால் கொண்டாடட்படுகிறது. எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சியானது நம்பர் 25 ல் தொடங்கி மாவீரர் நாளான நவம்பர் 27-ல் முடிவடைகின்றது. தமிழ் தேசியத்தலைவர் 1989ம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை முதன்முறையாக அறிவித்தார். அந்தவகையில் இந்தாண்டு 26வது தொடர் ஆண்டாக மாவீரர் நினைவு கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தவகையில் ஏனைய நாடுகளில் அந்நாடுகளில் தமது வீரர்;களுக்கான நினைவு நாளை கடைப்பிடிக்கப் படுவதற்கும் தமிழீழ மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும்வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகளிலெல்லாம் விடுதலைக்குப்பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமகாலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதிலை. ஆனால் விடுதலை போட்டம் வீறோடு நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் சம காலத்திலேயே தமிழ் மக்கள் தம் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்துவருகின்றனர். அதேபோன்று உலகில் எங்குமே தமிழீழம் மாவீரர் நாள் நினைவு போல மாவீரர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் அவர்களின் பெற்Nறூரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறில்லை. அத்தகைய ஒரு தனித்துமான தமிழ் வீரமறவர் வழிபாட்டை முழுமையாக வடிவமைத்து தமிழ் மக்கள் முன்னெடுக்கும் வகையில் அளித்த பெருமை தமிழ் தேசித்தலைமையையே சாரும். தமிழர் நிகழ்வுகளின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறை பொதுச்சுடர் தேசியக் கொடியேற்றல்ஈகைச்சுடர்மலர்வணக்கம்அகவணக்கம்உறுதியுரைநினைவுரை அனைத்து விடயங்களிலும் சிவப்பு, மஞ்சள் துணிகளைப் பாவித்தல் வேண்டும். வெள்ளையைத் தவிர்த்தல் நன்று. கறுப்பு கரும்புலிகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் பாவித்தல் நன்று. தவிர்க்க வேண்டிய வார்த்தைகள் – அஞ்சலி, மொளன வணக்கம் அல்லது அஞ்சலி, மலரஞ்சலி, மங்கள் விளக்கு, அஞ்சலியுரை, அஞ்சலிக்கூட்டம், ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் என குறித்துக் கூறுதல் பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தைகள் – வீரவணக்கம், அகவணக்கம், மலர்வணக்கம், ஈகைச்சுடர், பொதுச்சுடர், வீரவணக்கஉரை, வீரச்சாவு, வீரவணக்கக்கூட்டம் எக்காரணம் கொண்டும் தேசிக் கொடியைக் கம்பத்துடன் மடித்துக்கட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும் தேசியக் கொடியை மடித்து ஒரு தட்டத்தில் பீடத்திற்கு அருகில் ஒரு இருக்கையில் வைக்க வேண்டும். வெளிநாடுகளில் முதலில் தமிழர் வாழும் நாட்டிற்கு மதிப்பளித்து அக்கொடியே முதலில் ஏற்றப்படவேண்டும். பின்னர் தமிழீழ தேசிக்கொடி ஏற்றப்பட வேண்டும். அதேபோன்று இறுதியில் கொடியிறக்கத்தின் போது தமிழீழ தேசிக் கொடி முதலில் இறக்கப்பட்டு அதன் பின்னர் இறுதியாத தமிழர் வாழும் தேசத்தின் கொடி இறக்கப்படவேண்டும். மாவீரர் நாளன்று கைக்கொள்ளப்படும் நடைமுறை நினைவொலி எழுப்புதல் (தாயக நேரம் மாலை 6.05 மணி) (இது ஐரோப்பாவில் பிற்பகல் 1.05 மணிக்கும், பிரித்தானியாவில் மதியம் 12.05 மணிக்கும்;, கனடாவில் காலை 7.05 மணிக்கும் அமையும்) 6.05 மணிக்கு அனைத்து வணக்க இடங்களிலும் மணி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும். அகவணக்கம் (தாயக நேரம் மாலை 6.06 மணி) மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும். ஈகைச் சுடரேற்றல் (தாயக நேரம் மாலை 6.07) அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படல் வேண்டும். விடுதலை அமைப்பின் முதன்மையானவர் மத்திய சுடரை ஏற்ற மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப்பாதைக்கு உறுதியையும், உணர்வையும் கொடுத்து நிற்கின்றது. இங்கு கவனிக்கத்தக்க விடயம் சிறீலங்கா பிற்காலத்தில் அரை மணித்தியால நேர மாற்றம் ஒன்றை செய்யது. அதனை தமிழர் தேசம் கடைப்பிடிக்கவில்லை. அவ்வாறான ஒழுங்குமுறையே தற்போதும் எம்மால் தொடர்ந்தும் கைக்கொள்ளப்படுகின்றது. தமிழர் தேசிய விடுமுறை நாளாகிய இந்நாளில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் பணிவிடுப்பெடுத்து ஐரோப்பாவில் பிற்பகல் 12.30 மணிக்கும், பிரித்தானியாவில் முற்பகல் 11.30 மணிக்கும், கனடாவில் காலை 6.30 மணிக்கும் ஆரம்பமாகும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒரே இடத்தில் பல்லாயிரத்தில் தமிழர் ஒற்றுமையை வெளிப்படுத்திவாறு கலந்து தமிழர் உரிமைக்காக தொடர்ந்தும் உரத்துக்குரல் எழுப்பி நிற்கின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெரும்பாகம் பூராகவும் வீசும் பலத்த காற்றினால் மின்சாரம் துண்டிப்பு, வீதியெங்கும் குப்பை சிதறல்கள்! Posted: 24 Nov 2014 09:50 PM PST
கனடா- ரொறொன்ரோவில் ஊளையிடும் காற்று உச்ச வரம்பை எட்டியுள்ளதோடு மழை சூரியவெளிச்சம் போன்ற காலநிலைகளுடன் இன்றய நாள் ஒரு புதிய வெப்பநிலையையும் பதித்துள்ளது. இதுமட்டுமன்றி காற்றின் வேகத்தால் பல இடங்களில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் வீதிகள் எங்கும் குப்பை கூளங்கள் சிதறுண்டு காணப்படுவதுடன் கனடா சுற்று சூழல் பிரிவினரால் வின்சரிலிருந்து கிங்ஸ்ரன் வரையிலான பகுதிகளிற்கு காற்று எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மணித்தியாலத்திற்கு ஒன்ராறியோவின் தென்பகுதியின் பெரும்பாலான இடங்களில் 60-70கிலோ மீற்றர்கள் வேகத்திலும் சில இடங்களில் 90-100 கிலோ மீற்றர் வேகத்திலும் கூட வீசலாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. காற்றின் வேகம் மரங்களை முறிக்க கூடியதாகவும், மின்சாரத்துண்டிப்பை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வாகனமோட்டுதல் இக்காற்றினால் கடினமான நிலைமையை ஏற்படுத்தலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. திங்கள்கிழமை மாலை அளவில் நகரின் மேற்கு பகுதிகளின் பல இடங்களில் மின்சார செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக ரொறொன்ரோ ஹைட்ரோ அறிவித்துள்ளது. மாலை 5.30-மணியளவில் 36,000 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். காற்று வேகத்தினால் சிதறிப்பறக்கும் குப்பைகளால் நெடுஞ்சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக பல அறிவித்தல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் காணப்படுவதாக தீயணைப்பு பிரிவினர் அழைப்புகளை பெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. புதிய வெப்பநிலை பதிவோடு பலத்த காற்றும் சேர்ந்த காலநிலை காணப்படுகின்றது. திங்கள்கிழமை நகரின் வெப்பநிலை 18C. . இது 1946-ல் காணப்பட்ட இன்றய நாளின் 15C சாதனையை வென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும் மற்றொரு திருப்பமாக மாகாணத்தின் வெப்பநிலை ஒரே இரவில் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கமலை தொடர்ந்து சூர்யா செய்த தானம்! Posted: 24 Nov 2014 02:16 AM PST
இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். அப்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்ட நிலையில், மண்ணுக்கு போகும் உடல் மனிதனுக்கு உதவுட்டும் என்று அவர் கூற, ரசிகர்கள் பலரும் இதற்கு முன் வந்தனர். தற்போது நடிகர் சூர்யாவும் தானாக முன் வந்து தன் உடலை தானம் செய்துள்ளார். ஏற்கனவே பிரசன்னா, சினேகாவும் தங்கள் உடலை தானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடினம் விஜய்யுடன் பழகுவது ! ஷங்கர் Posted: 24 Nov 2014 02:08 AM PST
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிட இருக்கும் படம் கப்பல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஷங்கர் ' நான் நண்பன் படம் ஆரம்பிப்பதற்கு 2 நாள் முன் விஜய்யை பார்த்தேன், அவரிடம் பேச்சு கொடுக்க சென்ற போது, விலகி விலகி சென்றார். ஆனால், சுவாரசியமாக பேச ஆரம்பித்தவுடன் தான் அவர் என்னிடம் பேச தொடங்கினார். தற்போது நாங்கள் காலேஜ் ப்ரண்ட்ஸ் போல் ஆகிவிட்டோம். அவரிடம் பழகுவது கடினம், பழகிவிட்டால் அண்ணா என்று அன்போடு அழைப்பார்' என்று கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த உணவுகளை சாப்பிடுங்க! வயிற்று பிரச்னைக்கு குட்பை சொல்லுங்க Posted: 24 Nov 2014 01:34 AM PST
உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று வயிறு, இதில் ஏதேனும் பிரச்னை என்றால் பெரும் பாடுதான். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு நம் வயிற்றை பாதுகாக்காவிட்டால், அது பிற்காலத்தில் நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்புண்டு. மேலும் உணவு கட்டுபாட்டின்றி எல்லையற்று துரித உணவுகளை உட்கொள்வதும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்ககூடும். இப்போது வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும் சில சத்தான உணவுகளை பார்ப்போம். நம் வயிற்றில் உள்ள பல கோடிக்கணக்கான பக்டீரியாக்கள் தான் நாம் சாப்பிடும் உணவைச் சரியான முறையில் செரிக்க வைக்கின்றன. தயிரில் சத்துள்ள பக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதால், இது வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றுக்குள் செல்லும் பல செரிக்காத உணவு வகைகளை, வாழைப்பழம் நன்றாகச் செரிக்கச் செய்வதால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சீக்கரமாக உணவு ஜீரணமடைய உதவுவதில் வாழைப்பழம் பெரும் பங்கு வகிக்கின்றது. நீரில் எளிதில் கரையக்கூடிய அமிலங்கள் எலுமிச்சையில் இருப்பதால், அது வயிற்றுக்கும் செரிமானத்துக்கும் மிகவும் உதவுகிறது. இஞ்சியை அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல வயிற்று உபாதைகளை நீக்குவதில் இஞ்சியை ஒரு சிறந்த மருந்து என்றே கூறலாம். பெரும்பாலும் அனைத்து வகையான கீரை வகைகளுமே வயிற்றுக்கு நல்லது. தினமும் ஒரு வகைக் கீரையைச் உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சனையே வராது. கோதுமை வகை தானியங்களில் நார்ச்சத்து, மாங்கனீஸ், செலினியம் ஆகியவை உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும், இவற்றில் உள்ள சத்துக்கள் செரிமானத்திற்கு நல்லவை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெறும் 58 நொடிகள் பார்த்தால் போதும்…. அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரிப்பீங்க! Posted: 24 Nov 2014 01:26 AM PST |
| இருதலை பாம்பு உணவு உட்கொள்ளும் மிக அரிய காட்சி! Posted: 24 Nov 2014 12:06 AM PST |
| புரட்டியெடுக்க காத்திருக்கும் அவுஸ்திரேலியா: சவாலை சந்திக்க தயாராகும் கோஹ்லி Posted: 23 Nov 2014 11:59 PM PST
அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் சவால்களை சந்திக்க தயாராக இருப்பதாக இந்திய அணித்தலைவராக களமிறங்கவிருக்கும் விராட் கோஹ்லி கூறியுள்ளார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4ம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான அவுஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் டோனி விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோஹ்லி அணித்தலைவராக செயல்பட உள்ளார். இதன் மூலம் கோஹ்லி இந்தியாவின் 32வது டெஸ்ட் அணித்தலைவர் என்ற சிறப்பை பெறுவார். அவுஸ்திரேலியாவில் இந்திய அணித்தலைவராக களமிறங்கும் கோஹ்லியை அவுஸ்திரேலிய ரசிகர்கள் குறிவைக்க தொடங்கிவிட்டனர். அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும், 'பிரிஸ்பேனில் கூடும் ரசிகர்களும் ரவுடிகள், கோஹ்லி அவர்களின் வசை மொழிகளுக்கு உள்ளாக நேரிடும். நிச்சயம் அவருக்கு கடும் நெருக்கடி இருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று அடிலெய்டில் நிருபர்களை சந்தித்த விராட் கோஹ்லி இது பற்றி கூறுகையில், பீட்டர் சிடிலுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் கடும் சவால் அளிக்க கூடிய ஒரு பந்து வீச்சாளர். போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் (அவுஸ்திரேலியர்கள்) வம்பு இழுக்க தொடங்கியிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அவுஸ்திரேலிய வீரர்களுக்கு எங்களால் நல்ல போட்டி கொடுக்க முடியும். அணித்தலைவராக இருப்பதையும், அணியை வழிநடத்துவதையும் எப்போதும் நான் நேசிக்கிறேன். அணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். அணி வீரர்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கும் பொழுது, விரும்புகிற மாதிரியான திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இறுதியில் நல்ல முடிவே கிடைக்கும். அதைத் தான் நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 23 Nov 2014 11:56 PM PST
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, லா லிகா லீக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஸ்பெயினின் லா லிகா லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் செவில் அணியைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் பார்சிலோனா வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் லா லிகா வரலாற்றில் அதிக கோலடித்தவர் (253 கோல்கள்) என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி. தனது 289வது ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ஸ்பெயினின் டெல்மோ சாரா 251 கோல்களை (278 ஆட்டம்) அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உயர் வினைத்திறன் கொண்ட Huawei Ascend P7 கைப்பேசி Posted: 23 Nov 2014 11:51 PM PST
Huawei நிறுவனம் உயர் வினைத்திறன் கொண்ட Ascend P7 ஸ்மார்ட் கைப்பேசியினை இந்த வருட முற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது முதன் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. FlipKart மற்றும் Amazon India போன்ற ஒன்லைன் தளங்களிலிருந்து 27,999 ரூபா இந்திய பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும். 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியானது 1.8GHz வேகத்தில் செயல்படும் Quad-Core Cortex-A9 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, பிரதான நினைவகமாக 16GB கொள்ளளவு என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, என்பனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





















