மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 44 மாடியில் கட்டப்படும் ஆந்திர புதிய தலைமைச்செயலகத்திற்கு ஜூன் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டுவிழா
- ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10–ம் வகுப்பு மாணவர்கள்
- நிலக்கரித்துறை மந்திரியாக பதவி வகித்த மன்மோகன் சிங்கை ஏன் விசாரிக்கவில்லை: சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
- முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவின் மறு சீராய்வு மனு 2–ந்தேதி விசாரணை
- தமிழகத்தின் கோரிக்கை ஏற்பு: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மத்தியப்படை ஏற்கிறது
- ஆந்திராவில் புயல் தாக்கியதில் ரூ.21 ஆயிரம் கோடி சேதம்: மத்திய அரசுக்கு அறிக்கை
- உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்
- 20 ஆயிரம் வாத்துக்கள் சாவு: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுகிறது
- சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை
- செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை
- கருப்பு பணத்தை மீட்க மேலும் வழிகளை காணவேண்டும்: வருவாய்த்துறைக்கு மோடி உத்தரவு
- சார்க் மாநாட்டுக்காக மோடி இன்று நேபாளம் பயணம்
- காஷ்மீர்-ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று தேர்தல்
- அ.தி.மு.க.வுக்கு எதிராக தாக்கல் செய்த டிராபிக் ராமசாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- சிம்லா அருகே பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி
- ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்-மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் மோதல்
- எனக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?: பிரதமர் மோடியின் மனைவி கேள்வி
- டிரைவர் இல்லாமல் 1 கி.மீ. தூரத்துக்கு தானாக சென்ற சரக்கு ரெயில்: 4 பேர் சஸ்பெண்ட்
| 44 மாடியில் கட்டப்படும் ஆந்திர புதிய தலைமைச்செயலகத்திற்கு ஜூன் மாதத்திற்குள் அடிக்கல் நாட்டுவிழா Posted: 24 Nov 2014 11:03 PM PST ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா அருகே அமைக்கப்படும் என்று முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார். புதிய தலைநகர் சிங்கப்பூர், ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் நவநாகரீகமாக அழகுற அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்காக அந்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய சந்திரபாபு நாயுடு ஏற்கனவே மலேசியா சென்றார். தற்போது ஜப்பான் சென்று உள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் 2–ந்தேதிக்குள் புதிய தலைநகருக்கான |
| ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10–ம் வகுப்பு மாணவர்கள் Posted: 24 Nov 2014 10:40 PM PST ஐதராபாத்தில் உள்ள 'பி.ஏ.வி.' மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4–ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் கழிவறைக்குள் புகுந்த 10–ம் வகுப்பு மாணவர்கள் சிறுமிகளை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதனை மற்ற மாணவர்களுக்கு அனுப்பி ரசித்து வந்தனர். மேலும் அந்த சிறுமிகளிடம் ஆபாச படத்தை காட்டி கட்டிப்பிடிக்கும் படியும், |
| Posted: 24 Nov 2014 10:39 PM PST நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தொடர்ந்த வழக்கில், மன்மோகன் சிங் பெயரை குறிப்பிடாமல் அத்துறை மந்திரியாக இருந்த முன்னான் பிரதமரை ஏன் விசாரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் கேள்வியெழுப்பியது. |
| காஷ்மீர், ஜார்க்கண்ட்டில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 24 Nov 2014 10:31 PM PST காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. அதில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 87 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. அதுபோல ஜார்க்கண்ட்டில் மொத்தம் உள்ள |
| திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி Posted: 24 Nov 2014 10:31 PM PST திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரமோற்சவம் நடந்து வருகிறது. 6–ம் நாளான நேற்று காலை சர்வ பூமபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். மாலையில் தங்க ரதத்தில் தாயார் பவனி வந்தார். தேரை இழுத்துச் செல்வதில் பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி |
| முல்லை பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவின் மறு சீராய்வு மனு 2–ந்தேதி விசாரணை Posted: 24 Nov 2014 10:21 PM PST முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் இடுக்கி மாவட்ட மக்கள் பீதியில் இருப்பதாகவும், அணையின் மதகுகள் பலவீனமாக இருப்பதாகவும் வதந்தி கிளப்பியது. எனவே அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி தமிழக அரசுக்கு கேரள |
| தமிழகத்தின் கோரிக்கை ஏற்பு: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மத்தியப்படை ஏற்கிறது Posted: 24 Nov 2014 09:52 PM PST முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், கேளர அரசு முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு பல வழிகளில் இடையூறு செய்தது. |
| ஆந்திராவில் புயல் தாக்கியதில் ரூ.21 ஆயிரம் கோடி சேதம்: மத்திய அரசுக்கு அறிக்கை Posted: 24 Nov 2014 09:51 PM PST ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'ஹூட் ஹூட்' புயல் தாக்கியது. புயலின் கோர தாண்டவத்தில் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் போன்றவை அடியோடு சாய்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை 'ஹூட் ஹூட்' புயல் புரட்டி போட்டது. |
| உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல் Posted: 24 Nov 2014 09:25 PM PST உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் குதாகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மகள் 15 வயது சிறுமி. 5–ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு அதே ஊரில் உள்ள தாத்தா – பாட்டி பொறுப்பில் இருந்து வந்தார். |
| 20 ஆயிரம் வாத்துக்கள் சாவு: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுகிறது Posted: 24 Nov 2014 08:55 PM PST கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி, புறக்காடு ஆகிய பகுதிகளில் வாத்துக்கள் மர்மமான முறையில் இறந்தன. கடந்த 1 வாரத்தில் மட்டும் இந்த பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்து போனதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று இறந்து போன வாத்துக்களின் ரத்த மாதிரிகளை |
| சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்: 5 நாட்களில் ரூ.2 கோடிக்கு அரவணை Posted: 24 Nov 2014 08:53 PM PST பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 16–ந்தேதி மாலை பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5–வது நாளான நேற்று சபரிமலையில் பக் |
| செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை Posted: 24 Nov 2014 08:10 PM PST 'நானே ராஜா நானே மந்திரி', 'ராஜ மரியாதை' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து தெலுங்கு படங்களை தயாரித்து வந்தார். |
| கருப்பு பணத்தை மீட்க மேலும் வழிகளை காணவேண்டும்: வருவாய்த்துறைக்கு மோடி உத்தரவு Posted: 24 Nov 2014 07:43 PM PST இந்தியர்கள் சுவிட்சர்லாந்து உள்பட பல வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் தங்கள் கருப்பு பணத்தை வைத்துள்ளனர். இந்த கருப்பு பணத்தை மீட்போம் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. |
| சார்க் மாநாட்டுக்காக மோடி இன்று நேபாளம் பயணம் Posted: 24 Nov 2014 07:40 PM PST இந்தியா உள்ளிட்ட 8 தெற்கு ஆசிய நாடுகள் இணைந்த அமைப்பு 'சார்க்'. இதன் உச்சி மாநாடு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். |
| காஷ்மீர்-ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று தேர்தல் Posted: 24 Nov 2014 02:59 PM PST காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்கட்ட தேர்தல் நடப்பதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல பல இடங்களில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று முதல்கட்ட தேர்தல் |
| அ.தி.மு.க.வுக்கு எதிராக தாக்கல் செய்த டிராபிக் ராமசாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Posted: 24 Nov 2014 12:26 PM PST அ.தி.மு.க.வுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- |
| சிம்லா அருகே பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி Posted: 24 Nov 2014 10:08 AM PST இமாச்சல பிரதேசத்தில் இன்று மலைப் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். நங்கேரியில் இருந்து சிம்லா நோக்கிச் சென்ற அந்த கார், லாலன் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்துவிட்டனர். |
| ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்-மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் மோதல் Posted: 24 Nov 2014 09:13 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்களிடையே இன்று திடீர் மோதல் ஏற்பட்டது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், தோடா தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி பிரமுகர் ஒருவர், தனது பகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக |
| எனக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?: பிரதமர் மோடியின் மனைவி கேள்வி Posted: 24 Nov 2014 08:16 AM PST பிரதமர் நரேந்திர மோடியின் மனைவியாக தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? எனபது தொடர்பாக மேஹ்சானா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூலம் அறிந்து தனக்கு தெரியப்படுத்தும்படி மோடியின் மனைவி ஜசோதா பென் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்துள்ளார். குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள உஞ்சா நகரத்தில் தனது சகோதரருடன் ஜசோதா பென் வசித்து வருகிறார். |
| டிரைவர் இல்லாமல் 1 கி.மீ. தூரத்துக்கு தானாக சென்ற சரக்கு ரெயில்: 4 பேர் சஸ்பெண்ட் Posted: 24 Nov 2014 07:28 AM PST ராஜஸ்தான் மாநிலத்தில் டிரைவர் இல்லாத சரக்கு ரெயில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பங்க்ரி ரெயில் நிலையத்தில் நேற்று நின்றிருந்தபோது, தண்டவாளத்தின் மீது ஒரு ரெயில் தானாகவே சென்றதையடுத்து, அந்த ரெயிலின் டிரைவர், நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 4 பேர் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |