Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லை! ரஜினி பளீர் பதில்

Posted: 22 Nov 2014 03:30 AM PST

ajith_rajini_vijay001

ajith_rajini_vijay001ரஜினி நடிப்பில் இந்த வருடம் ரசிகர்களுக்கு விருந்து வைக்க லிங்கா வரவிருக்கிறது. இப்படத்தின் ஓப்பனிங் சாங்கை நடன இயக்குனர் பிருந்தா வடிவமைத்துள்ளார்.இதில் மிகவும் கடினமாக ஸ்டெப்புக்களை கொடுத்துள்ளார். இதைக் கண்ட ரஜினி '

நான் ஒன்னும் விஜய்-அஜித் இல்லம்மா, விக் வச்சதும் என் வயசு 25 கம்மி ஆயிடுச்சா?' என்று கேட்டுள்ளார்.இதை கேட்ட படக்குழுவினர் எல்லாம் சிரிக்க, பின் வழக்கம் போல் ரஜினிக்கு ஏற்றது போல் நடனத்தை மாற்றினாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினிக்கு உலக அளவில் பெருமை சேர்த்த கான்ஜுரிங் இயக்குனர்!

Posted: 22 Nov 2014 03:29 AM PST

rajinikanth012

rajinikanth012பேய், பிசாசு படங்களின் கிங் என்றால் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் இயக்கிய இன்சிடிஸ், கான்ஜுரிங் படங்கள் இன்றளவும் நம்மை பயத்தில் உறைய வைப்பவை.இவர் சமீபத்தில் தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

இதில் சிறுவர்கள் ரஜினி போடும் பாட்டிற்கு டான்ஸ் ஆடுவது போல் வருகிறது.இந்த காட்சி தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறி இதை ஷேர் செய்துள்ளார். ஹிம்ம்...சூப்பர் ஸ்டார்ன்னா சும்மாவா.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக கிண்ணத்தை இந்தியா வெல்லுமா? ஸ்டீபன் பிளமிங் கருத்து

Posted: 22 Nov 2014 03:27 AM PST

Indian-team-indian-cricket-team-21609505-500-340

Indian-team-indian-cricket-team-21609505-500-340அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனாவது கடினம் என நியூசிலாந்து அணி முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

தற்போது உலக கிண்ணத்தை வெல்ல போவது யார் என்று முன்னாள் வீரர்கள் பலர் ஆரூடம் சொல்லி வருகிறார்கள்.

உலக கிண்ண தொடருக்கு முன்பாக இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

இந்த போட்டி தொடர் இந்தியாவுக்கு உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட உதவும் என்று அணித்தலைவர் டோனி, வி.வி.எஸ்.லட்சுமணன் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் உலக கிண்ணத்தை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு குறைவு என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,

உலக கிண்ணத்தை வெல்ல நான் 4 அணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். முதலில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் போட்டி தொடர் இந்த நாடுகளில் நடக்கிறது. இது அந்த அணிகளுக்கு சாதகமானது. 3–வது அணியாக தென் ஆப்பிரிக்கா இருக்கிறது. அந்த அணி நல்ல பார்மில் இருக்கிறது.

நான்காவது இடத்துக்கு கடும் போட்டி இருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. அவுஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும்.

இந்திய வேகபந்து வீச்சு மோசம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம். வேகப்பந்து வீச்சே முக்கிய பங்கு வகிக்கும். இதனால் அதில் சிறப்பாக செயல்படுவதே வெற்றியை அடைய உதவும் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்! விராட் கோஹ்லி நம்பிக்கை

Posted: 22 Nov 2014 03:26 AM PST

india_great_007

india_great_007அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று இந்திய அணியின் பதில் தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நான்காம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் மட்டும் இந்திய அணித்தலைவர் டோனி ஆடமாட்டார். அதற்கு பதிலாக விராட் கோஹ்லி அந்த டெஸ்டில் இந்திய அணியின் தலைவராக செயல்படுவார்.

19 பேர் அடங்கிய இந்திய அணியினர் நேற்றிரவு மும்பையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். முன்னதாக இந்திய பதில் தலைவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எங்களது டெஸ்ட் அணி வீரர்களின் திறமை மீதும், மனோதிடம் மீதும் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

அங்கு நடக்கும் போட்டிகளில் ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கையாக ஆட வேண்டியது அவசியம். முதலில் நம்மால் சமாளிக்க முடியும் என்ற மனநிலை இருக்க வேண்டும். அதன் பிறகு ஆக்ரோஷ பாணியை வெளிப்படுத்தி, ஆட்டத்தை நம் வசப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான மனநிலையை உருவாக்கி கொள்வது தான் போட்டியின் பிரதான யுக்தி.

டெஸ்ட் தொடரில் களம் காணும் 11 பேர் கொண்ட அணியில் சரியான வீரர்களை அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் எப்போதும் சரியான கூட்டணியை களம் இறக்கி, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது முக்கியம்.

எல்லா நேரமும் வெற்றி மட்டுமே மனதில் இலக்காக இருக்க வேண்டும். அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிக்க எங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு நாங்கள் அவர்களை அவர்களது இடத்தில் வீழ்த்தியிருப்பதை மறந்து விடக்கூடாது. அதே போன்று ஏன் மீண்டும் அவர்களை தோற்க முடியாது? அணியில் உள்ள எல்லா வீரர்களுக்கும் ஆக்ரோஷமாக ஆடக்கூடிய பாங்கு உண்டு.

விரைவில் உலக கோப்பை போட்டி வர இருந்தாலும், முதலில் எங்களது கவனம் டெஸ்ட் தொடரில் மட்டுமே இருக்கும். அதன் பிறகு முத்தரப்பு கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகே உலக கோப்பை குறித்து சிந்திப்போம். அவுஸ்திரேலியாவில் உலக கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவ்விடத்திலேயே விளையாட வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். உலக கோப்பைக்கு முன்பாக அங்குள்ள சூழலை பழகிக் கொள்வதற்கு இந்த தொடர் உதவும்.

2011-12-ம் ஆண்டு அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோற்றாலும் தனிப்பட்ட முறையில் அந்த தொடர் எனது வாழ்க்கையில் மைல் கல்லாக (சதம், அரைசதம் உள்பட 300 ரன்கள் எடுத்தார்) அமைந்தது. அவுஸ்திரேலிய பயணத்தை முடித்து விட்டு கிளம்பிய போது நான் முற்றிலும் வித்தியாசமான மனிதராக, வித்தியாசமான வீரராக மாறியிருந்தேன்.

தற்போது முதலாவது டெஸ்டில் அணித்தலைவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கனவு நனவானது போன்று உள்ளது. டெஸ்ட் தொடரை நாங்கள் நல்ல முறையில் தொடங்குவோம் என்று நம்புகிறேன்.

எங்களது முழு கவனமும் கிரிக்கெட் மீதே இருக்கிறது. களத்திற்கு வெளியே (ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை) நடக்கும் விஷயங்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அது தொடர்பாக எதுவும் விளக்கம் தேவை என்றால், அதை அணி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். மற்ற விவகாரங்களால் கவனம் சிதறவில்லை என கோஹ்லி மேலும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஷத்தை வெளியேற்றும் வசம்பு!

Posted: 22 Nov 2014 03:24 AM PST

vasambu_002

vasambu_002வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது.

வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.

வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.

வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.

வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.

வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம் சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.

வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.

பசியைத் தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும்.

வயிறில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூச வேண்டும்.

சகலவித விஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

BlackBerry அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி

Posted: 22 Nov 2014 03:24 AM PST

blackberry_classic_001

blackberry_classic_001BlackBerry Classic எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை டிசம்பர் 17ம் திகதி BlackBerry நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

QWERTY கீபோர்ட், தொடுதிரை தொழில்நுட்பம், கீபோர்ட் ஷார்ட் கட் போன்றவற்றினைக் கொண்டுள்ள இக்கைப்பேசி தொடர்பான டெமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இக்கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் எதிர்வரும் வாரங்களில் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் விரை தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொறொன்ரோவில் எரிவாயு கசிவினானல் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவிப்பு!!

Posted: 22 Nov 2014 03:21 AM PST

gas1

gas1கனடா- ரொறொன்ரோவில் விக்ரோறியா பார்க் அவெனியு மற்றும் கிங்ஸ்ரன் வீதி பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டு கசிவு அடைக்கப்பட்ட பின்னரும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். கட்டுமானப்பணி குழுவை சேர்ந்த ஒருவர் 8-அங்குல எரிவாயு இணைப்பிடத்தை தாக்கியதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ரொறொன்ரோ ஹைட்ரோ கிட்டத்தட்ட 4,500 வாடிக்கையாளர்களின் மின்சாரத்தை தடைசெய்துள்ளனர். பிற்பகல் 5-மணியளவில் எரிவாயு கசிவு அடைக்கப்பட்ட போதிலும் மின்சாரம் எப்போது திரும்ப வழங்கப்படும் என்பது தெளிவாகவில்லை. பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக பல வீடுகள் வர்த்தக ஸ்தாபனங்கள் போன்ற இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர் என ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அருகாமையில் அமைந்துள்ள நீல் மக்நீல் உயர்தர பாடசாலையும் வெளியேற்றம் செய்யப் பட்டது. வீடுகளை விட்டு வெளியேறிய மக்களிற்கு தங்குமிட வசதிகள் செய்வதற்கு TTC பேரூந்துகள் வரவழைக்கப்பட்டன

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே குடும்பத்தில் ஐவரின் உயிரை பறித்த கொடூர விபத்தில் முடிவுற்ற டீஸ்னிக்கான “கனவுப்பயணம்”?

Posted: 22 Nov 2014 03:21 AM PST

car41-600x337

car41-600x337அமெரிக்கா-மிசேல் மற்றும் ட்றூடி ஹாட்மன் ஆகிய இருவரும் கேளிக்கை பூங்காவான டிஸ்னி வேர்ல்டிற்கு போவதற்கு 9-மாதங்களாக திட்டமிட்டனர். தங்களது 6-பிள்ளைகளுடனும் Thanksgiving Day யை அங்கு கொண்டாட விரும்பி புதன்கிழமை ஒலான்டோவில் உள்ள இவர்கள் வாகனத்தில் புறப்பட்டனர். லூசியானாவை அடைந்த போது இவர்களது 16-வயது மகன் ஓட்டுநர் ஆசனத்தில் இருந்துள்ளார். 11-மணியளவில் அன்ட்றூ ஹாட்மன் என்ற இந்த இளைஞன் வண்டியை ஓட்டச்செல்கையில் கண்ணயர்ந்து வண்டியை இடது பக்கத்திற்கு திசைதிருப்பி பின்னர் வலது பக்கத்திற்கு திருப்பியுள்ளான். வாகனம் உருண்டுள்ளது. வண்டியில் இருந்தவர்களில் இருவர் மட்டும் இருக்கை பட்டி அணிந்திருந்தனர். மற்றவர்கள் வண்டியில் இருந்து வெளித்தள்ளப் பட்டனர். பெற்றோர்கள் இருவரும் 3-பிள்ளைகளும் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். பெற்றோர்களான மைக்கேல் மற்றும் ட்றூடி ஹாட்மன் அவர்களது 15-வயது மகன் டகொரா வாட்ஸ்சன், 7-வயது அடம் ஹாட்மன் மற்றும் 4-வயது மகள் கசி ஹாட்மன் ஆகியவர்கள் மரணமடைந்தனர். இருவர் சாதாரண காயங்களுடன் தப்பி விட்டனர். வாகனத்தை ஓட்டிச்சென்ற அன்ட்றூ ஹாட்மனும் சாதாரண காயங்களுடன் தப்பி விட்டான். இவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெற்றோர்கள் இருவரும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாவர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மன நிம்மதியை கெடுக்கும் மர்ம ரீங்காரம்: புகார் அளித்த மக்கள்

Posted: 22 Nov 2014 02:59 AM PST

the_hum_003

the_hum_003பிரித்தானியா மற்றும் தென்மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே வினோத புகார் ஒன்றை அளித்து வருகின்றனர்.

பிரித்தானியா மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் வாழும் மக்களில் சிலருக்கு மர்மமான ரீங்காரம் ஒன்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக தெரிகிறது.

அனைவருக்கும் கேட்க முடியாத படி மிகவும் குறைந்த சத்தத்தில் ஒலிக்கும் இந்த ரீங்காரம், அதனை கேட்பவர்களின் மன நிலையை பாதிப்பதோடு அவர்களின் தூக்கத்தியும் நிம்மதியையும் வெகுவாக பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

1977ம் ஆண்டு பிரித்தானிய பத்திரிக்கை ஒன்றுக்கு 800க்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து இந்த ரீங்காரத்தை பற்றிய புகார் கடிதங்கள் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், இந்த இடைவிடாத ரீங்காரத்தினால் தூக்கமின்மை, தலைச்சுற்றல், சுவாசப் பிரச்சனை, தலைவலி, படபடப்பு, எரிச்சல், உடல்நிலை திணறல் மற்றும் எழுத, படிக்க இயலாமை போன்ற எண்ணற்ற சிக்கல்கள் தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல அமெரிக்காவில் டாவொஸ் ஹம் என்றழைக்கப்படும் மர்ம ரீங்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சத்தத்தின் காரணத்தை கண்டறிய வேண்டுமென்று ஒன்று கூடி மனு அளித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த மர்ம ரீங்காரத்தின் காரணத்தை கண்டறிய பல பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒன்றினைந்து பல வகையில் சோதனைகளை மேற்கொண்டனர்.

ஆனால் இதுவரை இந்த சத்தத்திற்கான முடிவான காரணங்கள் விடைகாண முடியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.

மேலும், உலக மக்கள் தொகையில் வெறும் 2 சதவிகித மக்களால் மட்டுமே இந்த ரீங்காரம் உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரான்சை தகர்ப்போம்: காணொளியில் பகிரங்கமாய் மிரட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ்

Posted: 22 Nov 2014 02:58 AM PST

france_isis_004

france_isis_004பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி ஒன்றின் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-யை ஒழித்துக்கட்ட அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால் ஆத்திரமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் தங்களை எதிர்க்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து தலைத் துண்டிப்பை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் மீது கடும் தாக்குதலை நடத்தவுள்ளதாக ஐ.எஸ்.ஐ.எஸ் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சுமார் 7 நிமிடம் ஓடக்கூடிய அந்த காணொளியில் 3 தீவிரவாதிகள் பேசியதாவது, பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்துங்கள் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் போரிடுங்கள் என அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தங்களது கடவுச்சீட்டை எரித்த தீவிரவாதிகள் முகத்தை மூடாமல் துணிச்சலுடன் இந்த காணொளியில் பேசியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தூக்கிலிருந்து தப்பிய 5 மீனவர்கள்: மோடிக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்

Posted: 22 Nov 2014 02:56 AM PST

vijay_thanks_002

vijay_thanks_002தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.

இந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.

ஐந்து மீனவர்களின் விடுதலையால் ஐந்து குடும்பங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடியுடன் வாழ ஆசைப்படும் மனைவி: அழைத்து செல்வாரா?

Posted: 22 Nov 2014 02:55 AM PST

narendramodi_wife_002

narendramodi_wife_002பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக, அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மோடிக்கும், யசோத பென்னுக்கும் 1968–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு 20 வயது கூட ஆகவில்லை. ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார்.

யசோதாபென், ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். 62 வயதான அவர், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஐஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.

அவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில், யசோதாபென்னிடம் நேற்று ஒரு தனியார் செய்தி சேனல் பேட்டி கண்டது. அப்போது அவர், 'பிரதமர் நரேந்திர மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் என்னை அழைத்து செல்ல வந்தால், அவருடன் செல்லத்தயார் என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் ஊக்குவிப்பு

Posted: 22 Nov 2014 02:53 AM PST

promotion_of_self_employed_001

promotion_of_self_employed_001தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் மாகாண சபை வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் சுயதொழில் ஊக்குவிப்புக்கான வாழ்வாதார நிதியுதவி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.தவராசா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் கலந்து கொண்டதுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.ஜெயசேரன், கணக்காய்வாளர், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நிதியுதவி கோரப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு நிதியுதவிகளும் மற்றும் தையல் இயந்திர உதவிகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பசுமைத்தேசம் விதை தானியங்கள் கிளிநொச்சி பிரமந்தானாறு மக்களின் கைகளில்

Posted: 22 Nov 2014 02:52 AM PST

pasumai_thesam_001

pasumai_thesam_001யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் எண்ணத்திற்கமைய பசுமைத்தேசம் வீட்டுக்கொரு விளைச்சல் மண்ணை நம்பும் மகத்தான முயற்சி என்ற திட்டத்தின் கீழ் சாந்தபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பிரமந்தனாறு கிராமத்திலும் நடைபெற்றது. பிரமந்தனாறு விவசாய அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா, மற்றும் தலைவர் தவபாலன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளநொச்சி மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் பிரமந்தனாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரநிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர். மழை பெய்து வருகின்ற நிலையில் வறட்சியால் அழிந்துபோன தம் வீட்டுத்தோட்டங்களை உயிர்ப்பிக்க பசுமைத்தேசம் விதை தானியங்கள் ஆதாரமாக அமையுமென மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™