Tamil Star |
- செக் குடியரசு ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல்
- ஐநா சபையில் இரு முறை பேசி அசத்தியுள்ள பார்வையற்ற தமிழ் சிறுமி…
- மடப்புர காளியம்மன் உண்டியலில் ஜெயலலிதாவின் ஜாதகம்!
- ஆபாச காட்சி: அரசியல் புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன்…பீதியை கிளப்பும் சரிதா நாயர்
- உறையும் உயிர்கள்: பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள்
- இராணுவ வீரர்களின் தலைத் துண்டிப்பை அரங்கேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்
- சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும்
- இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும்: ஐ.ஈ.பி. எச்சரிக்கை
| செக் குடியரசு ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் Posted: 18 Nov 2014 01:52 AM PST
ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாகவே அவர் மீதான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. செக் குடியரசில் கம்பியூனிஸ்ட் ஆட்சி நிறைவுக்கு வந்தததை நினைவு கூறும் விதமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி மீதும் முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐநா சபையில் இரு முறை பேசி அசத்தியுள்ள பார்வையற்ற தமிழ் சிறுமி… Posted: 18 Nov 2014 01:50 AM PST
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார். சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி. சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர். சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார் பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது. இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன். குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை. ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார். அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார். இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார். இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார். இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன. ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்'ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்' என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன். இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மடப்புர காளியம்மன் உண்டியலில் ஜெயலலிதாவின் ஜாதகம்! Posted: 18 Nov 2014 01:47 AM PST
மானாமதுரையை அடுத்து திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் பௌர்ணமி நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கோரி ரூபாய் நோட்டுக்கள், தங்கம், வெள்ளி, தங்கநாணயம் என ஏராளமானவற்றை காணிக்கையாக வழங்குவார்கள். ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கம். இம்மாத உண்டியல் சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி துணை ஆணையர் ரோசாலின் சமதா முன்னிலையில் திறக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, கோயில் ஊழியர்கள், பள்ளி மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கை பணம் ரூபாய் 7லட்சத்து 14ஆயிரத்து 415 ரொக்கமும், 89.200 கிராம் தங்கமும், 106.600 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணி அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம், உறுப்பினர்கள் சுதா, சுரேஷ், கல்யாணசுந்தரம், செல்லம் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தை அதிமுக தொண்டர் ஒருவர் உண்டியலில் போட்டிருக்கிறார். வழக்குகளில் இருந்து அவர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்ற கோரிக்கை சீட்டும் அதனுடன் எழுதி போட்டுள்ளார். உண்டியல் எண்ணும் ஊழியர்கள் ஜாதகத்தையும், கோரிக்கை மனுவையும் அதிகாரிகளிடம ஒப்படைத்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆபாச காட்சி: அரசியல் புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன்…பீதியை கிளப்பும் சரிதா நாயர் Posted: 18 Nov 2014 01:46 AM PST
கேரள மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி சரிதா நாயர் ஆகிய இருவரும் சேர்ந்து கோவை வடவள்ளியில் ஐ.சி.எம்.எஸ். என்ற நிறுவனத்தை தொடங்கி, மானிய விலையில் காற்றாலை அமைத்து தருவதாக அறிவித்தனர். அதை நம்பி ஊட்டியை சேர்ந்த ஜோத்சனா கிளியோசந்த் ரூ.6½ லட்சமும், வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.26 லட்சமும் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு காற்றாலை அமைத்து கொடுக்கப்படவில்லை. இது குறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் மற்றும் அந்த அலுவலகத்தின் மேலாளர் ரவி ஆகியோரை கைது செய்தனர். இந்த மோசடி தொடர்பான வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சரிதா நாயரின் ஆபாச படங்களும் இணையத்தில் உலாவ ஆரம்பித்தன. இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமூக வலைத்தளங்களில் எனது ஆபாச படத்தை வெளியிட்டு உள்ளனர். இதற்கு கேரள மாநில கூடுதல் பொலிஸ் டி.ஜி.பி. பத்மகுமார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள்தான் முக்கிய காரணம் ஆகும். எனவே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அத்துடன் கேரள முதல்-அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை விரைவில் சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன். மேலும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்வேன். ஆபாச படங்களை வெளியிட்டதில் ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் பின்னணியில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் யார்? எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர்களின் பெயர்களையும் என்னால் வெளியிட முடியும். ஆனால் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அவர்களின் பெயரை வெளியிட்டால், சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே வழக்கு முடிந்த பின்னர் அந்த அரசியல் தலைவர்களின் பெயர்களை கண்டிப்பாக வெளியிடுவேன் என்று கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உறையும் உயிர்கள்: பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள் Posted: 18 Nov 2014 01:44 AM PST
உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் உள்ளனர். இதனால் இங்கு வாழும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுங்குளிரில் சிக்கி கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கையாக இந்தாண்டு கிழக்கு உக்ரைனில் கடும் குளிர் வீசி வரும் பகுதியான டோனெட்ஸில் (Tonetsil)வாழ்ந்து வரும் பலர், தங்களது குடியிருப்புகளை நிலத்திற்கு அடியில் மாற்றிக் கொண்டுள்ளனர். தற்போது இங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, தூங்குவதுடன், தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே வருகின்றனர். இதற்கிடையே குளிருக்கு மட்டுமின்றி கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இதுபோல வீடுகளை இந்த மக்கள் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவ வீரர்களின் தலைத் துண்டிப்பை அரங்கேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் Posted: 18 Nov 2014 01:43 AM PST
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பிணைக்கைதி பீட்டர் எட்வர்டு காஸ்சிக் என்பவரை தலைத் துண்டித்து கொன்ற அதே காணொளியில், சிரியாவை சேர்ந்த 18 இராணுவ வீரர்களின் தலைகளை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். இந்த காணொளியில் இராணுவ வீரர்கள் மண்டியிட்டு இருப்பது போலவும், அவர்களின் தலைகளை கத்தியால் தீவிரவாதிகள் கொய்வது போலவுமான கொடூர காட்சிகள் இடம் பெற்றுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சந்திரிகாவுக்கு சாதகம் பொருந்தாவிடில் சகோதரி சுனேத்திராவுக்குப் பொருந்தும் Posted: 18 Nov 2014 01:38 AM PST
மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பதை அறியும் பொருட்டு மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவுக்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள பதிலில் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடலாம் என்று அறிவித்துள்ளது. மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் அந்தத் தகைமை ஏற்புடையதாகி விடும். எனினும், உயர் நீதிமன்றம் அனுப்பிய கருத்துரையில் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு இந்தத் தகைமை பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இத்தகையதொரு குறிப்புரை உயர் நீதிமன்றத்தின் முன்மொழிவில் இடம்பெற்றிருக்குமாயின் சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரை அவருக்கு ஈடான ஒரு வேட்பாளர் என்றால் சந்திரிகாவாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில், இவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற பிள்ளைகள். குந்தியின் வயிற்றில் பிறந்த கர்ணனே பாண்டவர்களுக்கு பலமான எதிரியாகவிருந்தான். எனவே, மகிந்த ராஜபக்வை எதிர் கொள்ளக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது சந்திரிகாவாக மட்டுமே இருக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறலாம். எனினும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை வெளிவராத நிலையில், ஆளுந்தரப்புக் கூட தவறான தகவல்களை வெளியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க போட்டியிடாமல் செய்வதற்கான சில ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கலாம். எனவே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா? என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய வேண்டும். அவ்வாறானதொரு ஆராய்வில் உயர் நீதிமன்றின் முன்மொழிவு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகித்தறிய முடியும். சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியாது என்று நீதிமன்றத்தின் பரிந்துரையிருக்குமாயின் "...நெஞ்சத்துக் கோடாமை..." எவ்வாறு உள்ளதென்பதை உணரமுடியும். எதுவாயினும் எதிர்க்கட்சிகள் தேடுகின்ற ஒரு நல்ல பொது வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவாக மட்டுமே இருக்க முடியும். சந்திரிகாவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கான சகல வழிவகைகளையும் மேற்கொள்வது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கடமையாகும். சந்திரிகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவது முடியாத காரியம் என்றால் அவரது சகோதரி சுனேத்திராவை பொது வேட்பாளராக நிறுத்துவது உசிதமானது. ஒரு சகோதரிக்கு பொருந்தவில்லை எனில் அடுத்த சகோதரிக்கு பொருத்தம் பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை. சந்திரிகாவிற்குப் பொருந்தாவிடில் சுனேத்திராவுக்கு சாதகம் நிச்சயம் பொருந்தும். பொருத்தம் ஒரே வீட்டில் இருக்கும் போது, வேறு ஒருவரை தேடித்திரிவது அர்த்தமற்றது. ஆகையால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒன்றில் சந்திரிகா அல்லது அவரது சகோதரி சுனேத்திரா. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும்: ஐ.ஈ.பி. எச்சரிக்கை Posted: 18 Nov 2014 01:35 AM PST
இந்த வருடத்துக்கான உலக சமாதானச் சுட்டி அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இவ்வாறு எச்சரிக்கையினை விடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகத்தின் இந்த அறிக்கையை நோபல் பரிசு பெற்றவர்கள், சர்வதேச தலைவர்கள் உட்பட பலர் அங்கீகரித்துள்ளனர். அந்த அறிக்கையில், இலங்கை உட்பட பல நாடுகளில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இலங்கை உட்பட 13 நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பயங்கரவாத நடவடிக்கைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அங்கோலா, பங்களாதேஷ், புருண்டி, ஈரான், மத்திய ஆபிரிக்க குடியரசு, பித்ஜண், டிதியோப்பியா, இஸ்ரேல், ஈரான், மாலி,மெக்சிகோ, மீயன்மார், இலங்கை ஆகிய 13 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அரசியல், வன்முறை உட்பட பல சுட்டிகளை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 166 நாடுகளில் 2010 முதல் 13 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட போக்குகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. 2013 இல் பயங்கரவாதத்தால் இடம்பெற்ற 80 வீதமான மரணங்கள் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சிரியா, ஈரான், நைஜீரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இந்த 5 நாடுகளுக்கு அப்பாலும் பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |















