Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


26–ந்தேதி முல்லை பெரியாறு பிரச்சினை பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம்: உம்மன்சாண்டி அறிவிப்பு

Posted: 18 Nov 2014 10:57 PM PST

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரளா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்தும், வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததாலும், தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கி வருகிறது.

கேரளாவில் சரணாலயத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

Posted: 18 Nov 2014 10:31 PM PST

சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி அய்யப்பனை தரிசித்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்டம் காடுகள் வழியாக சரணம்கோஷம் முழங்க செல்வதால் வனவிலங்குகள் தங்கள் இடங்களை மாற்றும் சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக யானைகள் தங்கள் இருப்பிடத்தை மாற்ற தொடங்கி உள்ளன

அரியானா சாமியாரின் அடாவடி எதிரொலி: ஆசிரமத்துக்கு குடிநீர், மின்சாரம் துண்டிப்பு

Posted: 18 Nov 2014 10:13 PM PST

அரியானா மாநிலத்தில் ராம்பால் என்று ஒரு பிரபல சாமியார் உள்ளார். அவர் ஹிசார் மாவட்டம் பர்வாலாவில் மிகப்பிர மாண்டமான ஆசிரமம் வைத்துள்ளார். அங்கு அவர் தன் நூற்றுக்கணக்கான சீடர்களுடன் வசித்து வருகிறார்.

டெல்லி தேர்தலை சந்திக்க பா.ஜ.க.வில் 132 பேர் குழு: அமித்ஷா புதிய வியூகம்

Posted: 18 Nov 2014 09:21 PM PST

70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த கெஜ்ரிவால் 49 நாட்களில் பதவி விலகினார். இதனால் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சபரிமலை சன்னிதானத்தை தூய்மையாக வைக்க புதிய திட்டம் அறிமுகம்

Posted: 18 Nov 2014 09:16 PM PST

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16–ந் தேதி திறக்கப்பட்டு உள்ளதால் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

சாரதா சிட்பண்ட் மோசடி: மேற்குவங்காள மந்திரி– எம்.பி. விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. அதிரடி உத்தரவு

Posted: 18 Nov 2014 09:04 PM PST

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாரதா சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்து இருந்த பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சாரதா சிட்பண்ட்

ஐதராபாத்தில் அரபிந்தோ பார்மா இயக்குனர் மீது துப்பாக்கி சூடு

Posted: 18 Nov 2014 08:46 PM PST

அரபிந்தோ பார்மா இயக்குனரும், துணை தலைவருமான கே. நித்யானந்த ரெட்டி தனது காருக்குள் ஏறி அமர்ந்த போது அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டார். ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இன்று காலை 7.00 மணியளவில் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு ரெட்டி தனது காரில்

இந்திரா காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் பிரணாப்-மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை

Posted: 18 Nov 2014 07:47 PM PST

இரும்பு பெண்மணி என்று வர்ணிக்கப்படும் முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று தலைநகர் டெல்லி, ஷக்தி தல்லில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல்: ராஜ்நாத்சிங் இன்று தேர்தல் பிரசாரம் தொடக்கம்

Posted: 18 Nov 2014 06:48 PM PST

காஷ்மீர் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தல், மொத்தம் 5 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 25-ந் தேதி அன்றும் தொடர்ந்து டிசம்பர் 2, 9, 14, 20-ந் தேதிகளிலும் தேர்தல் நடக்கிறது.

கர்நாடக அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தாக்கல்

Posted: 18 Nov 2014 06:08 PM PST

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு தீர்மானித்து உள்ளது. குடிநீர் மற்றும் நீர்மின் திட்டத்துக்கு இந்த அணைகள் கட்டப்பட இருப்பதாக கர்நாடகா கூறுகிறது. காவிரியில் புதிதாக அணைகள் கட்டப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

மராட்டியம் திடீர் தேர்தலை சந்திக்க நேரிடும்: சரத்பவார் பேச்சுக்கு சிவசேனா கண்டனம்

Posted: 18 Nov 2014 03:55 PM PST

மராட்டியம் திடீர் தேர்தலை சந்திக்க நேரிடும் என்று சரத்பவார் கூறியதற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் எம்.பி. கூறுகையில், ''சமீபத்தில் சரத்பவார் வெளியிட்ட அறிக்கையை அவர் மீண்டும் படித்து பார்க்க வேண்டும். பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்தபோது, மராட்டியத்தில் நிலையான ஆட்சி அமைவதற்கு, தான் உறுதி அளிப்பதாக சரத்பவார் தெரிவித்தார். மராட்டியத்தில் மறுதேர்தல்

நேரு பிறந்தநாள் மாநாடு முடிவடைந்தது: மன்மோகன்சிங், ராகுல் காந்தி நிறைவுரை

Posted: 18 Nov 2014 12:57 PM PST

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் கட்சி, டெல்லியில் 2 நாள் சர்வதேச மாநாடு நடத்தியது. நேற்று முன்தினம் இம்மாநாடு தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

ராஜ்நாத் சிங்குடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: பர்த்வான் குண்டுவெடிப்பு பற்றி ஆலோசனை

Posted: 18 Nov 2014 11:12 AM PST

உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நேற்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பர்த்வான் குண்டு வெடிப்பு மற்றும் மாநிலம் சம்பந்தப்பட்ட பிற பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். 30 நிமிடம் நீண்ட இந்த சந்திப்பில், மேற்கு வங்க சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி உள்துறை மந்திரியிடம் ஆலோசித்ததாக அங்கு உள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் ராஜ்நாத் சிங் அக்டோபர் 2-ல் நடந்த

திடீர் தேர்தலை சந்திக்க தயராக இருக்க வேண்டும் என சரத்பவார் பேச்சு: பா.ஜனதா பதிலடி

Posted: 18 Nov 2014 10:01 AM PST

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் சமீபத்தில் புனேயில் நிருபர்களிடம் பேசியபோது, மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்க தேசியவாத காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில், இன்று அலிபாக்கில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய சரத்பவார், மராட்டியத்தில் மீண்டும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

உயிர்க்கொல்லி எபோலா டெல்லியை எட்டியது: லைபீரியாவில் இருந்து வந்த இந்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை

Posted: 18 Nov 2014 08:54 AM PST

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபீரியா, சியாராலோன், நைஜீரியா, மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. இதுவரை இந்த நோய்க்கு சுமார் 5 ஆயிரத்து 160 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

Posted: 18 Nov 2014 08:29 AM PST

காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளையொட்டிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்

டெல்லி போலீஸ் நிலையங்கள், ஆஸ்பத்திரிகளில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் திடீர் சோதனை

Posted: 18 Nov 2014 08:19 AM PST

நாட்டின் தலைநகரான டெல்லியில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு மற்றும் சுகாதார நிலைமையை நேரில் மதிப்பீடு செய்யும் முயற்சியாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள போலீஸ் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் கட்டணக் கழிப்பிடங்களில் இன்று திடீர் சோதனை நடத்தினார்.

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த யானைக்குட்டி சிகிச்சை பலனின்றி பலி

Posted: 18 Nov 2014 07:47 AM PST

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டத்துக்குட்பட்ட ஷியாம்பூர் வனச்சரகப் பகுதியில் சமீபத்தில் மயங்கிக் கிடந்த குட்டி யானையை கண்ட வனத்துறை அதிகாரிகள், அதனை மீட்டு சிடியாப்பூர் காப்பகத்தில் சேர்த்தனர்.

பர்த்வான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீடிப்பு

Posted: 18 Nov 2014 07:45 AM PST

மேற்கு வங்காள மாநிலம், பர்த்வான் மாவட்டம் கராகார்க் நகரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 2-ம்தேதி குண்டு வெடித்தது. இதில் இருவர் பலியாகினர். பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வங்காளதேசத்தைச் சேர்ந்த

மேற்கு வங்காளத்தில் கட்டப்பட்டுவரும் வீட்டில் காயங்களுடன் இளம்பெண்ணின் பிணம்: கற்பழித்துக் கொலையா?

Posted: 18 Nov 2014 07:25 AM PST

மேற்கு வங்காளம் மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு வீட்டில் இருந்து சுமார் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் பிணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இம்மாவட்டத்துக்குட்பட்ட பிராட்டி அருகேயுள்ள சுபாஷ் சாரணி பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் கீழ்தளத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™