Tamil Star |
- செல்ஃபி பழக்கம் வேலைக்கு வேட்டு வைக்கும்: ஓர் ஆய்வு
- ஸ்மார்ட் கீ வந்தாச்சு
- ‘என்னை அறிந்தால்’ அப்டேட்ஸ்: ஒரே கெட்டப்பில் அஜித், விவேக்
- சத்தீஸ்கரில் 11 பெண்கள் பலியான சம்பவம்: கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது
- காஷ்மீர் போலி என்கவுன்டர் வழக்கில் 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை
- மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு
- ஜெர்மனி காற்றில் ஜி வி பிரகாஷ் இசை
- ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் அதிரடிக் கைது
- ரொறொன்ரோ வைத்தியசாலை பெருங்குடல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நேரடி-ருவிட்டரில்!!.
- ஷேவாக்கின் இரட்டை சத சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா
- விஸ்வரூபம் எடுத்த ரோகித் ஷர்மா: இலங்கையை துவம்சம் செய்த இந்தியா
- வால் நட்சத்திரத்தில் தரையிறங்கி விண்கலத்தில் சிக்கல்
- அழகிய சகோதரிகளை கைகோர்த்து வைத்த பேஸ்புக்
- இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார்!
- முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு
- செல்ஃபி மேல் மோகம்! உங்களுக்கான சூப்பர் போன்
- “WWW” இது என்னவென்று தெரியுமா?
- ஆண்கள் கண்டிப்பாக இதை சாப்பிடவும்!
- ஹோட்டல் உணவை சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை தகவல்
- இறங்கி அடிக்கப்போகிறேன்! கமல் ஓபன் டாக்
| செல்ஃபி பழக்கம் வேலைக்கு வேட்டு வைக்கும்: ஓர் ஆய்வு Posted: 13 Nov 2014 09:45 PM PST சமூக வலைதளங்களில் தொடர்ந்து செல்ஃபி படங்களை அப்டேட் செய்து வருபவராக நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயம் உங்களது மேல் அதிகாரியால், ஆளுமை மீது சந்தேகம் கொண்டவராய் பார்க்கப்படுவீர்கள் என்கிறது ஆய்வு. அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். அதன்படி, செல்ஃபி பழக்கம் இரண்டு முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதன்படி, ஒன்று நார்சிஸ (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Nov 2014 09:37 PM PST
ஸ்மார்ட் போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு. இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட் போனே பயன்படலாம். அமெரிக்காவின் ஸ்டார்வுட் ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் புளுடூத் வசதி கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட் போன் அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும்போது அறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக, ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்கு சென்று ஸ்மார்ட் போனைக் காட்டிக் கதவைத் திறக்கலாம். மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன. இந்த வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது. ஸ்மார்ட் போன்போல ஸ்மார்ட் வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர். ஹோட்டல் மட்டுமா, வீடுகளுக்கும் ஸ்மார்ட் கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ‘என்னை அறிந்தால்’ அப்டேட்ஸ்: ஒரே கெட்டப்பில் அஜித், விவேக் Posted: 13 Nov 2014 09:36 PM PST
கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் 'என்னை அறிந்தால்'. படம் குறித்த சிறு சிறு தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. தற்போது, இத்திரைப்படத்தில் அஜித் உடன் நடித்து வரும் நடிகர் விவேக், தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாகக் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில், "இது அஜித்தின் யோசனை. நாங்கள் இருவரும் ஒரே கெட்டப்பில் தோன்றுகிறோம். இதற்கு மேல் இதைப் பற்றி எதுவும் சொல்ல இயலாது" என பகிர்ந்துள்ளார். மேலும் அந்தக் கெட்டப்பில் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சத்தீஸ்கரில் 11 பெண்கள் பலியான சம்பவம்: கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கைது Posted: 13 Nov 2014 09:34 PM PST
சத்தீஸ்கர் தலைநகர் பிலாஸ்பூருக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் பெண்டாரி. இங்கு நடந்த அரசு கருத்தடை சிகிச்சை முகாமில், அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 83 பெண்களில், 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர், 49 பேர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்நிலையில், அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர் ஆர்.கே.குப்தாவை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். மருத்துவர் குப்தா தான் நிரபராதி என்றும் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிலாஸ்பூர் சுகாதார அதிகாரியையும் கைது செய்ய வேண்டும் என்றார். மேலும், அறுவை சிகிச்சை முறையாகவே நடைபெற்றதாகவும், அதற்குப் பின்னர் வழங்கப்பட்ட மருந்துகள் காலவதியாகியிருந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்.கே.குப்தா கூறினார். மருந்துகளை வழங்கும்முன்னர் முறையாக சோதனை செய்திருந்தால் இந்த துயரச் சம்பவம் நடந்திருக்காது என்றும் அவர் கூறினார். நீங்கள் ஏன் மருந்துகளை சோதிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டபோது, "மருந்துகளை பார்த்தவுடன் அவை காலவதியாகிவிட்டன என்பதை எப்படி என்னால் அறிந்துகொள்ள முடியும். அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. மருந்துகளை அனுப்பும் முன்னரே அவை பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் தவறுக்கு தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தன் மீது குற்றவியல் அலட்சியம் வழக்கு தொடரப்பட்டுள்ளதுபோல் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் இதே பிரிவில் வழக்கு தொடரப்பட வேண்டும்" என்றார். சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளை அதிக அளவில் செய்ததற்காக மாநில அரசின் பாராட்டைப் பெற்றவரே இந்த ஆர்.கே.குப்தா என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| காஷ்மீர் போலி என்கவுன்டர் வழக்கில் 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை Posted: 13 Nov 2014 09:33 PM PST
காஷ்மீரில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த மச்சில் போலி என்கவுன்டரில் மூன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 3 அப்பாவி இளைஞர்கள் ராணுவ வீரர்களால் கடந்த 2010-ஆம் வருடம் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இளைஞர்கள் மீது கறுப்பு பெயின்ட்டை ஊற்றி அவர்களது உடல்கள் மீது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வீசி, வெளிநாட்டிலிருந்து ஊடுருவ முயன்ற பங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ வீரரகள் தங்களது அறிக்கையில் தெரிவித்தனர். இதனிடையே ராஃபியாபாதில் காணாமல் போன ஷேஷாத் அகமத், ரியாஸ் அகமத், முகமத் ஷபி ஆகிய 3 இளைஞர்கள்தான் வீரகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து இறந்த இளைஞர்களின் உறவினர்களின் கோரிக்கையை அடுத்து 11 ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2010-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் நடத்திய போலி என்கவுண்டருக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. ராணுவத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது சி.ஆர்.பி.எப். மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இந்த சம்பவம் தேசிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கு மீதான இறுதி விசாரணையின் முடிவில் போலி என்கவுண்டர் செயலில் ஈடுப்பட்ட 7 ராணுவ வீரர்களூக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை வழங்கப்பட்டுள்ள 7 ராணுவ வீரர்களில் இருவர் உயர் ராணுவ அதிகாரிகள் ஆவர். மேலும், ராணுவ வீரர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு காலம் கடந்த பின்னர் வரவேற்கத்தக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "காஷ்மீரில் உள்ள யாரும் நம்ப முடியாத ஒன்று நடந்துள்ளது. இது போன்ற வழக்குகளில் மிகவும் அரிதாக நீதி கிடைக்கின்றது. மச்சில் சம்பவம் போலான போலி என்கவுண்டர் இனி நடக்கக் கூடாது. இந்த தீர்ப்பு இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருக்கட்டும்" என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 13 Nov 2014 09:29 PM PST
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் 40 வயதுடையவர் ரூபி கிராயுபெரா காசிமிரோ. இவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்கை மூலமாக பிரசவம் பார்க்கப் பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்து அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்தது. இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படிப்படியாக நாடித் துடிப்பு குறைந்து கொண்டே போனது. பின்னர் சுத்தமாக நாடித் துடிப்பு இல்லாமல் போனது. இதனால், ரூபி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் அறிவித்து விட்டனர். இதற்கிடையே ரூபியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்தனர். இந்நிலையில், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ரூபியின் உடலில் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, திடீரென அசைவு தெரிந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து ரூபியை மீண்டும் அவர்கள் உயிர் பிழைக்க வைத்தனர். இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் நடந்த மிகப்பெரிய அதிசயம் என்று மருத்துவர்கள் வியப்புடன் தெரிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெர்மனி காற்றில் ஜி வி பிரகாஷ் இசை Posted: 13 Nov 2014 09:26 PM PST
இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல, சிம்போனி இசைக்கு இசை அமைப்பாளராக ஜெர்மனி செல்ல இருக்கிறார். மேலும் சர்வதேச சந்தையில் மிக முக்கியமான நுகர் பொருளொன்றின் விளம்பரத்திற்கு இசை அமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசைத்துறையில் புகழ் பெற்றவர்களுள் ஒருவரான ஜெர்மனியின் கோன்ராத் பௌமானின் இசை மிதந்த ஜெர்மனி காற்றில் ஜி வி பிரகாஷின் இசையும் மிதக்க உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள் அதிரடிக் கைது Posted: 13 Nov 2014 09:25 PM PST
ஜேர்மனியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து சுமார் 450 பேர், சிரியாவிற்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களில் 150 பேர் நாடு திரும்பி விட்டதாகவும் உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில், மக்கள் நெரிசல் மிகுந்த வடக்கு ரினே வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தேடும் வேட்டையில் 240 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதானவர்களுக்கு சொந்தமான எண்ணற்ற கட்டிடங்களில் அதிரடி சோதனைகளையும் பொலிசார் நடத்தியதாக தெரிகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொறொன்ரோ வைத்தியசாலை பெருங்குடல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நேரடி-ருவிட்டரில்!!. Posted: 13 Nov 2014 09:23 PM PST
புற்றுநோய் அறுவைச்சிகிச்சை மருத்துவர் Dr. Shady Ashmalla நடைமுறைப்படுத்திய இச்செயற்பாடு காலை 8-மணியளவில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 2-மணித்தியாலங்கள் வரை நடந்துள்ளது. Ashamalla மற்றும் அவரது அணியினர் நடாத்திய குறைந்த பட்ச துளைத்தலுடன் நடைபெறும் பெருங்குடல் புற்றுநோய் நடைமுறையின் புதுப்பித்தல்கள், படங்கள் மற்றும் குறுகிய வீடியோக்கள் போன்றனவற்றை வெளியிட்டுள்ளனர். ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சக புற்றுநோயியல் அறுவைச்சிகிச்சை வைத்தியரான டாக்டர்.வனெஸ்ஸா பல்டெர் என்பவரும் இந்த அணியில் பங்கு கொண்டிருந்தார். ருவிட்டரில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளிற்கும் இவர் பதிலளித்தார். சணிபுறூக்கின் கணிப்பின் படி பெருங்குடல் புற்றுநோய் கனடாவில் மிகவும் பொதுவாக கண்டிறியப்பட்டுவரும் புற்றுநோய் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் குணப்படுத்தக்கூடியதாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷேவாக்கின் இரட்டை சத சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா Posted: 13 Nov 2014 09:20 PM PST
கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சச்சின், ஷேவாக் வரிசையில் இரட்டை சதம் அடித்து இருந்தார். தற்போது சர்வதேச அரங்கில் 2 முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை செய்துள்ளார். அது மட்டுமல்லாது இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 219 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷேவாக்கின் உலக சாதனையை தகர்த்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விஸ்வரூபம் எடுத்த ரோகித் ஷர்மா: இலங்கையை துவம்சம் செய்த இந்தியா Posted: 13 Nov 2014 09:18 PM PST
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ரோஹித் சர்மா களமிறங்கினர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், மேத்யூஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ராயுடு வந்த வேகத்தில் எரங்காவின் பந்து வீச்சில் வெறும் 8 ஓட்டங்களில் நடையை கட்டினார். இதனையடுத்து திணறிய இந்திய அணியை காப்பாற்ற அணித்தலைவர் கோஹ்லி, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார். தனது சிறப்பான ஆட்டத்தால் கோஹ்லி அரைசதம் கடந்தார். அவர் 66 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஓட்ட முறையில் வெளியேற்றப்பட்டார். இந்த ஜோடி அணியின் ஓட்டங்களை விறுவிறுவென உயர்த்தியது. அடுத்து வந்த ரெய்னா 11 ஓட்டங்கள் (1 சிக்சர், பவுண்டரி) குவித்து இருந்த நிலையில் ஜெயவர்த்தனேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து உத்தப்பா, ரோஹித்துடன் இணைந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா இலங்கை அணியின் பந்து வீச்சை புரட்டி எடுத்தார். அதற்கு ஏற்றவாறு இலங்கை வீரர்களும் களத்தடுப்பில் சொதப்பி தள்ளினர். விஸ்பரூவம் எடுத்த ரோஹித் அரைசதம், சதம், இரட்டை சதம் என ஓட்டங்களை குவித்து கொண்டே சென்றார். மிரட்டி எடுத்த அவர் அதிகபட்சமாக 264 ஓட்டங்கள் (33 பவுண்டரி, 9 சிக்சர்) குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் 2 முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்கள் குவித்தது. உத்தப்பா 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனையடுத்து 405 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக ஏஞ்சலா மேத்யூஸ் 75 ஓட்டங்களும், லகிறு திரிமன்னே 59 ஓட்டங்களும், டில்ஷான் 34 ஓட்டங்களும், திஸ்ர பெரேரா 29 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் இந்திய அணியின் தவால் குல்கர்னி 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஸ்டுவர்ட் பின்னி, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இன்று விஸ்வரூபம் எடுத்த ரோகித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார். இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வால் நட்சத்திரத்தில் தரையிறங்கி விண்கலத்தில் சிக்கல் Posted: 13 Nov 2014 09:16 PM PST
வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதனை படைத்த விண்கலம், அதை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது. வான் மண்டலத்தில் சூரியனை நோக்கி விநாடிக்கு 18 கி.மீ. வேகத்தில் 67பி/சுர்யுமோவ்-கெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரம் பயணம் செய்து கொண்டிருக்கிறது. வால் நட்சத்திரங்கள் மற்றும் இதர விண்மீன்களின் தோற்றம் பற்றியும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றியும் ஆராய்வதற்காக, அந்த வால் நட்சத்திரத்துக்கு விண்கலத்தை அனுப்பி வைக்க ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முடிவு செய்தது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்றைய தினம் வெற்றிகரமாக வால் நட்சத்திரத்தில் தரையிறங்கியது. ரோபோ விண்கலத்தின் மின்கலம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ரோபோ வால் நட்சத்திரத்தில் தரையிறங்கிய போதும், தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த பிரதேசத்தில் அன்றி, பிரிதொரு பிரதேசத்திலேயே தரையிறங்கியது. தரையிறங்கும் போது சுமார் ஒரு கிலோமீற்றருக்கும் மேலாக பல தடவைகள் குதித்தெழும்பியமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது, இந்த விண்வெளி ஓடம் இலக்கு வைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள மலை முகட்டின் நிழலில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இதன் மின்கலம் மீள்நிரப்பப்டுவதற்கு போதுமான சூரியஒளி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அழகிய சகோதரிகளை கைகோர்த்து வைத்த பேஸ்புக் Posted: 13 Nov 2014 09:14 PM PST
பிரித்தானியாவில் ஒரே சிரிப்பு, ஒரே கண்ணம், ஒரே அழகான முகங்கள் என இத்தனை அம்சங்களையும் ஒரே மாதிரியாகக் கொண்ட இரண்டை சகோதரிகள் பேஸ்புக்கில் உதவியோடு இணைந்துள்ளனர். இணையதளங்களால் தீமைகள் விளைவிக்கப்பட்டாலும், நன்மைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் தான் உள்ளன. ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளை இணைத்து வைத்துள்ளது பேஸ்புக். இரட்டை சகோதரிகளின் பிறப்பு, பிரிவு பற்றிய நிகழ்ச்சியில் 26 வயது சகோதரிகள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர், தனது தோழியான போர்டிர்(Bordier) என்பவருக்கு இந்த நிகழ்ச்சியின் காணொளியை அனுப்பியுள்ளார். போர்டிர், லண்டினில் ஆடை வடிவமைப்பாளருக்கு படித்து வருகிறார். இந்த காணொளியை பார்த்த இவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த காணொளியில், இவரது முகம் இருந்தது, இதனைத் தொடர்ந்து இந்த காணொளியை யார் யூடிப்பில் பதிவேற்றம் செய்த நபர் யார் என்ற தேட ஆரம்பித்தார். ஆனால், இவரது முயற்சி தோல்வியில் முடிந்து விடவே, தேடும் பணியை நிறுத்தி விட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்தவை 2012ம் ஆண்டாகும். இந்நிலையில், அதே தோழி இவருக்கு மீண்டும் ஒரு ஸ்கீரின் ஷாட் அனுப்பியுள்ளார். அதில், போர்டியரை போன்று ஒரு பெண் இருந்துள்ளார். பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, போர்டியர், புட்டர்மென் (Futterman) என்ற நபர் இவளை தென் கொரியாவில் தத்தெடுத்திருப்பதாக பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து புட்டர்மேனோடு இணைந்த போர்டியா, பின்னர் தனது சகோதரியான சமந்தா பற்றிய புகைப்படங்களை அனைத்தையும் பார்த்த பின்னர் அவள், தன்னுடன் ஒட்டிப்பிறந்த சகோதரி என்பதை தெரிந்து கொண்டாள். தற்போது, பேஸ்புக் வாயிலாக இருவரும் இணைந்துள்ளனர். இதுகுறித்து இருவரும் கூறுகையில், நாங்கள் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது, நாங்கள் இருவரும் ஒரு நாளைக்கு 10 மணி நேரமாவது சேர்ந்து தூங்க ஆசைப்படுகிறோம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய உயர்ஸ்தானிகர், சந்தித்தமையை சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளார்! Posted: 13 Nov 2014 09:12 PM PST
தாம், இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் சிங்ஹா, சம்பந்தனையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன இந்த சந்திப்பு சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த சந்திப்பை சம்பந்தன் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது வழமையான சந்திப்பு மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைப்பற்றி ஊடகங்களுக்கு தெரியப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முன்னாள் போராளி சுட்டுக் கொலை! இராணுவமே பொறுப்பு என்கிறது கூட்டமைப்பு Posted: 13 Nov 2014 09:11 PM PST
விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் த.தே.கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளருமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னாரில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் - வெள்ளாங்குளம் இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பிரதேசத்தில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்கள் என்று கூறப்படுவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எனவே, இந்தச் சம்பவத்துக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். குற்றவாளிகளை அரசு உடன் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே. இந்தக் கொடூர சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். நகுலேஸ்வரனின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கில் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வீடமைப்பு, பொறியியல் - நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியுள்ளார். அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் எனவும், நேற்றுமுன்தினம் மன்னாரில் ஒரு முன்னாள் போராளி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்றும் சபையில் ஆளுந்தரப்பினரைப் பார்த்து செல்வம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்புடைய செய்தி- காதைத் துளைத்த துப்பாக்கி ரவைகள்: ஸ்தலத்தில் குடும்பஸ்தர் பலி!This posting includes an audio/video/photo media file: Download Now |
| செல்ஃபி மேல் மோகம்! உங்களுக்கான சூப்பர் போன் Posted: 13 Nov 2014 07:01 AM PST லாவா நிறுவனம் புதிய Iris Selfie 50 என்ற பட்ஜெட் போனை அறிமுகம் செய்து வைத்துள்ளது. 5 Inch 854*480 பிஎக்ஸ், IPS- LCD Display, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் Quadcore Processor மற்றும் 1 ஜிபி ராம் உள்ளது. 8 ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியோடு 2400 mAh Battery மூலம் சக்தியூட்டப்படுகின்றது. ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன், ஆட்டோபோகஸ் மற்றும் டூயல் எல்ஈடி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| “WWW” இது என்னவென்று தெரியுமா? Posted: 13 Nov 2014 06:59 AM PST
இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் இன்டர்நெட் தான், அதுவும் சமூக வலைத்தளங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். நான் பயன்படுத்தும் உலகளாவிய வலை அதாவது World Wide Web(WWW) இணைக்கப்பட்ட நாள் இன்று. பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானியும், முன்னாள் செர்ன்(CERN) ஊழியருமான டிம் பெர்னர்ஸ் லீ மற்றும் பெல்ஜிய கணனி விஞ்ஞானி ராபர்ட் கயில்லியவ் இவர்கள் தான் இணையத்தை கண்டுபிடித்தவர்களாக கருதப்படுகிறது. 1989ம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீ உலகளாவிய வலைக்கு முதல் கட்ட திட்ட அமைப்பை எழுதினார். இது முதலில் செர்ன்(CERN) தகவல் பறிமாற்றத்திற்காக மட்டுமே எழுதப்பட்டது. ஆனால் இது உலகளவில் சென்றடைய வேண்டும் என்பதை உணர்ந்த பெர்னர்ஸ், 1990ல் ராபர்ட் உடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார். இணையம்(Internet) மற்றும் உலகளாவிய வலை(WWW) ஆகிய சொற்கள் பேச்சு வழக்கில் பெரிதும் வேறுபாடின்றி அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றல்ல. இணையம் என்பது உலகளாவிய தரவுத் தகவல்தொடர்பு முறைமையாகும். வலை என்பது இணையத்தின் வழியாகத் தொடர்புகொள்ளும் சேவைகளில் ஒன்றாகும். இது மிகை இணைப்புகள் மற்றும் URLகள் மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற வளங்களின் தொகுப்பாகும். சுருக்கமாக, வலை என்பது இணையத்தில் இயங்கும் ஒரு பயன்பாடு என்றே சொல்லலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆண்கள் கண்டிப்பாக இதை சாப்பிடவும்! Posted: 13 Nov 2014 06:56 AM PST
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டா கரோட்டின் தடுக்கிறது. கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிட்டால் பெரும்பான்மையான சத்துக்கள் விரையம் ஆகாமல் நம்மை வந்து சேரும். தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி குடல் புண்கள் வராமல் தடுக்கும். பாதிவேக வைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கேரட் அல்வா முதலில் பாலை நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும். பால் கெட்டியானதும் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, கேரட் பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கேரட்டை வேக வைக்க வேண்டும். பின்னர் இதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்தவுடன், கேரட்டை போட்டு 10-15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் சர்க்கரை சேர்த்து 15- 20 நிமிடம் வேக வைக்கவும், சர்க்கரையானது முற்றிலும் கரைந்த பின்பு அதன் மேல் முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் சுவையான கேரட் அல்வா ரெடி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹோட்டல் உணவை சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை தகவல் Posted: 13 Nov 2014 06:55 AM PST
எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி வீட்டு உணவை விட ஹோட்டல் உணவு சுவையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், ஆனால் அதன் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா? * பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் இருக்கும், இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் பல்வேறு உபாதைகள் வரக்கூடும். * மேலும் அங்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் நன்கு சுத்தம் செய்யப்பட்டதாக இருக்காது, இதனை உட்கொள்ளும் போது வயிற்றில் குறிப்பாக குடலில் பல்வேறு பிரச்னைகள் வரும். * இதேபோன்று கடைகளின் பயன்படுத்தப்படும் எண்ணெயையும் குறிப்பிடலாம், பலமுறை ஒரே எண்ணெயை பயன்படுத்தினால் அதன் எதிர்மறை விளைவுகள் அதிகம். * குறிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தல் நலம், ஏனெனில் இறைச்சிகளை நன்றாக சுத்தம் செய்தார்களா என்பது நமக்கு தெரியாது, இதனால் அதிலுள்ள கிருமிகள் முழுமையாக நீங்காமல் நம்மை பாடாய்படுத்திவிடும். * மேலும் எண்ணெய்களில் இருக்கும் ட்ரான்ஸ் பேட்டி ஃஆசிட்டுகள் நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இறங்கி அடிக்கப்போகிறேன்! கமல் ஓபன் டாக் Posted: 13 Nov 2014 06:52 AM PST
கமல் சில நாட்களுக்கு முன் வந்த தன் பிறந்தநாளை வழக்கம் போல் சமூக சேவை செய்தே கொண்டாடினார். இந்நிலையில் இவர் நடிப்பில் படங்கள் வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து பேசிய இவர் ''பாபநாசம்' படம் எதிர்பாராத வேகத்தில் முடிஞ்சிருச்சு. ஆனா, அதுக்கும் முன்னால் முதலில் 'உத்தம வில்லன்'தான் திரைக்கு வரும். 'உத்தம வில்லன்' , ஒரு நடிகனைப் பற்றிய கதை.எங்களுக்குத் தெரிஞ்ச கதை என்றதால் இறங்கி அடித்துள்ளேன், இப்படம் நிச்சயம் உங்களை கவரும்' எனக் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



































