Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஈராக்கில் ISIS பீரங்கிப்படை கனடிய போர்விமானத்தால் தாக்கப்பட்டுள்ளது.

Posted: 11 Nov 2014 11:05 PM PST

image

imageகனடா-நாடு முழுவதும் கனடியர்கள் கூடி நினைவு நாளை நினைவு கூர்ந்த இன்றய நாளில் ஒரு கனடிய ஆயதப்படை ஜெட் ஈராக்கின் வடபகுதியில் ISIS-பீரங்கி படையை இலக்கு வைத்து தாக்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பு துறை இதனை அறிவித்துள்ளது.

நினைவுகூரும் நாளாகிய இன்று எங்கள் நாட்டிற்காக படைவீரர்கள் மற்றும் சேவை உறுப்பினர்கள் வழங்கிய சேவைகள் மற்றும் தியாகம் அவர்களது தைரியமான அர்ப்பணிப்புக்கள் போன்றனவற்றை நாங்கள் நினைவு கூருகின்றோம் என பாதுகாப்பு அமைச்சரான றொப் நிக்கல்சன் தெரிவித்தார்.

ISIS-ற்கு எதிரான சர்வதேச போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சீருடை அணிந்த கிட்டத்தட்ட 600-ஆண் மற்றும் பெண் வீரர்களின் மகத்தான சேவையை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நினைவு தின சடங்கின் போது மயங்கி விழுந்த 15-பாடசாலை மாணவர்கள்.

Posted: 11 Nov 2014 11:03 PM PST

toronto_general_hospital.jpg.size.xxlarge.letterbox

toronto_general_hospital.jpg.size.xxlarge.letterboxகனடா- ஒன்ராறியோ பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நினைவு நாள் நிகழ்வில் மாணவர்கள் பங்குபற்றிக் கொண்டிருந்த சமயம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயங்கத்தொடங்கியதால் தடங்கல் ஏற்பட்டது. சடங்கு ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு மாணவர் விழ இரண்டாவது விழ எல்லாமாக 15-மாணவர்கள் மயங்கியோ அல்லது தாங்களாகவே இருந்துள்ளார்கள் என Lambton Kent Composite School பாடசாலை அதிபர் ஸ்கொட் மக்கெல்வி தெரிவித்துள்ளார். அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவ்விடத்திலேயே பாதிக்கப்பட்ட பெரும்பாலான மாணவர்களிற்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. மாணவர்கள் சிறிய மருத்துவ இடர்பாட்டிற்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டது. மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

Android 5.0 இயங்குதளத்தினைக் கொண்ட Moto X ஸ்மார்ட் கைப்பேசி

Posted: 11 Nov 2014 10:57 PM PST

moto_x_001

moto_x_001கூகுள் நிறுவனம் Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android Lollipop இனை அறிமுகம் செய்துள்ள நிலையில் பல சாதனங்களில் இவ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது Moto X ஸ்மார்ட் கைப்பேசியும் Android Lollipop இயங்குதளத்தினைக் கொண்டதாக அறிமுகமாகவுள்ளது. இக்கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.5GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad Core Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 2GB of RAM மற்றும் 16GB, 32GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்ட பதிப்பாக வெளிவரவுள்ளது. மேலும் இக்கைப்பேசியில் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

Posted: 11 Nov 2014 10:56 PM PST

carbon_nanotubes_001

carbon_nanotubes_001நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என அழைக்கப்படுகின்றது.

நுணுக்குக்காட்டி, இரண்டு மின் வாய்கள், என்பவற்றினையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது குண்டுகளை அடையாளம் கண்டதும் உண்டாகும் மின்னியல் மாற்றத்தினை பயன்படுத்துவோருக்கு அறிவிக்கின்றது.

இச்சாதனம் எதிர்வரும் காலங்களில் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு முறைமைகளில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷேவாக், கம்பீரின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?

Posted: 11 Nov 2014 10:54 PM PST

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36 வயதான ஜாகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்படவில்லை. உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயாராவதற்கு இந்த அவுஸ்திரேலிய தொடர் தான் அச்சாரமாகும். மோசமான ஆட்டங்களால் கழற்றி விடப்பட்ட இவர்களது இடத்தை இப்போது இளம் வீரர்கள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகக் கிண்ண கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவர் நீக்கம்

Posted: 11 Nov 2014 10:50 PM PST

ICC-Cricket-World-Cup-2015-ticket-price

ICC-Cricket-World-Cup-2015-ticket-price2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவர் நடைமுறையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போட்டித்தொடரில் இரண்டு அணிகளும் சமமான ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்று போட்டியை நிறைவு செய்யுமாயின் கிண்ணத்தினை இரு அணிகளுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒருநாள் அந்ததஸ்து பெற்ற 14 அணிகள் 2 குழுக்களாக பிரிந்து போட்டியிடவுள்ளன. இதனடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் பிரவேசிக்கும் இரு அணிகளும் சம ஓட்ட எண்ணிக்கையினை பெறுமாயின் வழங்கப்படும் சுப்பர் ஓவர் நடைமுறை, இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வழங்கப்படமாட்டாது என ஐசிசி அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடிகர் ரஜினிக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது; மத்திய அரசு அறிவிப்பு

Posted: 11 Nov 2014 10:46 PM PST

1993152390rajini1

1993152390rajini1இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது. வரும் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோவாவில் நடக்கும் 45-வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்குவது பற்றி அறிந்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் விடுத்துள்ள அறிவிப்பில், ''இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி, கோவாவில் வரும் 20ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது நவம்பர் 20-ம் தேதி தொடக்க விழாவின் போது நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படும். மேலும், தொடக்க விழாவில் நடிகர் அமிதாப்பசன் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகப்பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த 2000-ம் ஆண்டு மத்திய அரசு ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. மேலும் அவருக்கு தமிழக அரசும் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

2ஜி வழக்கில் கூடுதல் சாட்சியம்: ராசா, கனிமொழி எதிர்ப்பினால் சிபிஐ மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

Posted: 11 Nov 2014 10:44 PM PST

1082963541kanimozhi-raja

1082963541kanimozhi-raja2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில், புதிதாக 5 பேரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட மனு மீதான உத்தரவை சி.பி.ஐ. நீதிமன்றம் 18-ம் தேதி ஒத்திவைத்துள்ளது. கடந்த, 2008-ல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக 2009-ல் ஒரு தொண்டு நிறுவனம் புகார் அளித்தது. இதன்படி துவங்கிய விசாரணையில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, 'இந்த முறைகேடுகளால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது' என்று அறிக்கை வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வந்த வழக்கு விசாரணை 2011ல் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு, நீதிபதி ஓ.பி.ஷைனி, நவம்பர் 2011-ல் 17 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கத் துவங்கினார். இதுவரை நடந்துள்ள விசாரணையில் 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 35 ஆயிரம் பக்கங்களுக்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், உதவி இயக்குனர் சத்யேந்திர சிங், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் நவில் கபூர், மற்றும் வங்கி அதிகாரி டி.மணி உட்பட மேலும் சிலரின் வாக்குமூலங்களைப் பெற சம்மன் அளிக்க நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்திருந்தது. இதையடுத்து, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவாகி அவற்றின் மீது இறுதி வாதங்கள் தொடங்கப்படவுள்ளன. இந்த நிலையில், மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோரை சாட்சிகளாக விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்டு தாக்கல் செய்துள்ள மனு உள்நோக்கம் கொண்டது. இந்த இரு அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க ஆட்சேபம் இல்லை. ஆனால், அவர்களை சாட்சிகளாக நீதிமன்றம் கருதுவதை ஏற்க முடியாது' என வாதிட்டார். மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் "மிகவும் தாமதமாக இந்த மனுக்களை சிபிஐ தாக்கல் செய்துள்ளதில் இருந்தே அதில் உள்நோக்கம் இருப்பது தெளிவாகிறது. இதுவரை நடந்து முடிந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது. இந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகளை ஆஜர்படுத்தி, அவர்களை குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிரான சாட்சியங்களாக நிறுத்த சிபிஐ முயற்சிப்பதை ஏற்க முடியாது. சிபிஐ மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார். இதேபோல, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாஹித் பால்வா, அவரது சகோதரர் ஆசிஃப் பால்வா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால், "இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த வழக்கில் இது போன்ற மனுவை இவ்வளவு தாமதமாகத் தாக்கல் செய்தது ஏன்? என்பதை இதுவரை சிபிஐ விளக்கவில்லை. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து வாதிட்ட சிபிஐ சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர், "குற்றவியில் நடைமுறைச் சட்ட விதிகளின்படி, ஒரு வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்ட பிறகும்கூட அவசியம் ஏற்பட்டால் கூடுதல் சாட்சிகளைச் சேர்க்க விசாரணை அமைப்புக்கு உரிமை உண்டு' என்று குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி சைனி, "சிபிஐ மனு மீதான உத்தரவு நவம்பர் 18-ம் தேதி பிறப்பிக்கப்படும்' என்று குறிப்பிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கருத்தடை சத்திர சிகிச்சை: 11 பெண்கள் பலி 62 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted: 11 Nov 2014 10:42 PM PST

105643307satiskar

105643307satiskarசத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அரசு ஏற்பாடு செய்திருந்த குடும்ப நல முகாமில், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 11 பெண்கள் உயிரிழந்தனர். 62 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, பிலாஸ்பூர் சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கோமல் பர்தேசி தகவல் தருகையில்,

பிலாஸ்பூர் மாவட்டம், பெந்தாரி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் கடந்த சனிக்கிழமை குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முகாமில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 83 பெண்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன்பிறகு, அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு சனிக்கிழமை இரவு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த சில மணி நேரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதால், அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் திங்கள்கிழமை 2 பேரும், செவ்வாய்க்கிழமை 9 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் 32 வயதுக்கு உள்பட்டவர்கள். மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சையின் போது அதிக ரத்த இழப்பு அல்லது நச்சுத் தொற்று காரணமாக, பெண்கள் இறந்திருக்கலாம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என சுகாதாரத் துறை இணை இயக்குநர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், நேற்று மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரமும் ரூபாவும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மருத்துவ அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதை மறுக்க முடியாது. அதற்கான முகாந்திரம் உள்ளதால், அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர், சுகாதாரத் துறை அதிகாரி உள்பட 4 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை இயக்குநர் கமல்பிரீத் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முகாமின் மேற்பார்வையாளராக இருந்த குப்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முகாமில் வழங்கப்பட்ட மருந்துகளின் தரம், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட விதம் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். இதற்காக, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் ரமண் சிங்.

இதனிடையே, மியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரமண் சிங்கிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது, பிலாஸ்பூர் சம்பவத்தில் 11 பெண்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த மோடி, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரமண் சிங்கிடம் வலியுறுத்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

300 பேரின் உயிரை பறித்த கப்பல் விபத்து: கப்டனுக்கு சிறை!

Posted: 11 Nov 2014 10:40 PM PST

s_korea_ship_001

s_korea_ship_001தென்கொரியாவில் கப்பல் கவிழ்ந்து 300 பேர் பலியான வழக்கில் கப்பல் கப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் தலைநகர் சியோல் அருகில் உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 15ம் திகதி, ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 475 பேருடன் கப்பல் ஒன்று சென்றது.

பள்ளி விடுமுறையைக் கொண்டாட சென்ற 340 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் புறப்பட்டு சென்ற இந்த கப்பல், நடுக்கடலில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி மூழ்கியது.

தென்கொரியாவை மிகவும் பாதித்த இந்த விபத்தில் 300 பேர் பலியான நிலையில், 172 பேர் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து கப்பலின் கப்டன் லீ ஜூன் சியோக் மற்றும் அவரது மூன்று உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு, கொலை, பிற குற்றங்கள் சாட்டப்பட்டு தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தென் கொரியாவின் குவங்ஜு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பயணிகளை விட்டுவிட்டு சென்றதற்கு கப்டன் மன்னிப்பு கேட்டதோடு, தனது நடவடிக்கையால் பல இறப்புகள் ஏற்படும் என்று தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கின் நீதிமன்ற தீர்ப்பில், கப்டன் லீ ஜூன் சியோக்கிற்கு 36 ஆண்டுகளும், கப்பலின் தலைமை பொறியாளருக்கு 30 ஆண்டுகளும், படகில் இருந்த ஊழியர்கள் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்: வெடிக்கும் சர்ச்சை

Posted: 11 Nov 2014 10:38 PM PST

jesus

jesusஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர் எனக் கூறி எழுதப்பட்டுள்ள புத்தகத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் "The Lost Gospel".

இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த புத்தகம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டீஷ் நூலகம் கூறுகையில், அந்த புத்தகத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறியுள்ளார்.

"வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது" என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும்.

ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக 'தி லாஸ்ட் கோஸ்பல்' புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர்.

எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

புஸல்லாவையில் ஆள் கடத்தல்! பொலிஸார் தேடுதல் மற்றும் விசாரணைகள் ஆரம்பம்!

Posted: 11 Nov 2014 10:37 PM PST

pazza-002

pazza-002புஸல்லாவ நகரத்தில் பகல் வேளையில், ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு அருகில் பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவரை, கார் ஒன்றில் வந்த ஒருவர் தாக்கி காரினுள் போட்டுக் கொண்டு நுவரெலியாவை நோக்கி சென்ற சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் இருவர் இரு முறைப்பாடுகளை 119 க்கு கொடுத்துள்ளனர். அதன்படி ஸ்தலத்திற்கு விரைந்த புஸல்லாவ பொலிஸார் தேடுதல் நடவடிக்கைளில் ஈடுப்பட்டனர். அதன்படி நுவரெலியா நோக்கிச் செல்லும் பிரதான பாதை உட்பட கிளை பாதைகளான பெரட்டாசி தோட்டப் பாதை, மாவெல நாவலபிட்டி பாதை, கொத்மலை பாதை போன்ற பாதைகளில் பொலிஸார் விரைந்தனர். அத்துடன் அந்தந்த பிரதேசங்களில் காணப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு அரண்களுக்கும் அறிவிக்கபட்டது. ஆனால் சந்தேகத்திற்கு இடமான எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை தற்போது புஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் அவர்கள் புஸல்லாவ நகர வர்தகர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம் ஒன்றினையும் புஸல்லாவ புனித திருத்துவ கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், இன்று நாட்டில் பல்வேறுபட்ட கொள்ளை, கொலை சம்பவங்களை நாளாந்தம் கேள்விப்பட்டு வருகின்றோம். அவ்வாறரான ஒருகொள்ளை சம்பவங்களில் ஒரு புதிய பணக் கொள்ளை புஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இரு வர்த்தக வியாபாரிகளை மையமாக வைத்து இடம்பெற்றுள்ளது. இதற்கு எனது பெயரும் பாவிக்கப்ட்டுள்ளது. இனி இவ்வாறான செயற்பாடுகளில் கவனமாக இருப்பதோடு எனது பெயரைக் கூறிக் கொண்டு எனது பொலிஸ் நிலைய அதிகாரி வந்தால் கூட என்னிடம் கேட்டுவிட்டு எதையும் செய்யவும். அதேபோல் ஏனையவிடங்களிலும் தொலைபேசி தகவல்ளை நம்பாமல் ஒரு விடயத்தை ஊர்ஜிதபடுத்திவிட்டு உங்கள் கடைமைகளை மேற்கொள்ளவும். அப்போதுதான் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் புஸல்லாவ நகரத்தில் நபர் ஒருவர் அடித்து கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்து. அதற்காக சந்தேகநபரை தேடிபிடிக்க எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்நிலையில் இனி ஏதாவது பிரச்சினைகள் வந்தால் உங்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு ஏதும் சந்தேகமானவர்கள் மற்றும் இவ்வாறான நிகழ்வுகளை கண்டால் உடனடியாக எனது தொலைபேசிக்கு அழைக்கவும் (அனைவருக்கும் தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டது) என்று கூறினார். இந்நிலையில் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பில் அவரைக் காணவில்லை அல்லது கடத்தப்பட்டார் என இதுவரைக்கும் எந்தவிதமான முறைபாடுகளும் பொலிஸாருக்கு பதிவாகவில்லை. 119 க்கு மாத்திரம் அடித்து காரில் கொண்டு போனது பற்றிய புகார் கிடைத்துள்ளது. உறவினர்களின் முறைபாடுகளோ அல்லது அவரை உறவினர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டதாக தெரியவில்லை. குறித்த காரின் இலக்கம் மாத்திரம் கிடைத்துள்ளது. (7151) மேலதிகமான ஆங்கில எழுத்துக்களோ மாகாண குறியீடுகளோ இல்லை. இந்த இலக்கம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது அந்த இலக்கத்தில் இலங்கையில் காணப்படும் அனைத்து வாகனங்களினதும் விபரங்கள் வருவதாக தெரியவருகின்றது. இருந்தும் பொலிஸார் குறித்த கடத்தலில் தொடர்புடைய காரைக் கண்டறிவதில் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சில வருடங்களில் மரணிக்கப் போகும் வலி வடக்கு மக்கள்! மௌனமாயிருக்கும் அரச அதிகாரிகள்

Posted: 11 Nov 2014 10:34 PM PST

water_oil_001

water_oil_001யாழ் மாவட்டத்தில் உடுவில், ஏழாலை மற்றும் மல்லாகம் பகுதியில் வசிக்கும் மக்களின் வீட்டுக் கிணறுகளில் எண்ணெய்த்தன்மையான பதார்த்தங்கள் பரவி வருவதாக அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவருவது நாம் அறிந்ததே. இதனால் அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற்படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் கோப்பாய் பகுதியில் சில கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள் வர ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உதுறு ஜனனி மற்றும் நொதேர்ன் பவர் பிளான்ட் எனும் மின்சாரம் உற்பத்தி செய்யும் பாரிய மின் பிறப்பாக்கிகள் தற்போதும் இயங்கி வருவதாகவும் இவற்றின் மூலம் வெளியேறும் அதிகளவிலான எண்ணெய்க் கழிவுகளே பாதுகாப்பற்ற முறையில் நிலத்தினடியில் விடப்படுவதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களிற்கு முன்னதாகவே பொதுமக்களாலும் சில சமூக அமைப்புக்களினாலும் இது தொடர்பான முறைப்பாடுகள் எழுத்து மூலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். அ. ஜெயக்குமாரன், உடுவில் பிரதேச செயலர் திரு. ச. நந்தகோபால் மற்றும் சுற்றுச் சூழல் அதிகார சபையின் வடமாகாண உதவி ஆயையாளர் திருமதி. விஜிதா சந்திரகுமார் ஆகியோரால் திட்டமிடப்பட்ட முறையில் இம்முறைப்பாடுகளும் இவை தொடர்பான செய்திகளும் இருட்டடிப்புச் செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. இவர்கள் இப்பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையற்று இருப்பதாகவும் இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை மறைப்பதில் தீவிரம் காட்டுவதாகவும் அறிய முடிகின்றது. இப்பிரதேச நீர் மாதிரிகளைப் பரிசோதனை செய்த பின்னர் கட்மியம், ஆசனிக் மற்றும் ஈயம் போன்ற உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய நச்சுப் பொருட்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக மாசுபட்ட நீரினை அருந்துவதனால் புற்றுநோய், மலட்டுத் தன்மை, பிறப்புரிமைக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல் மற்றும் மரணம் என்பன ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள். அண்மையில் இது தொடர்பான 2 வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சமீபத்திய படங்களில் திரிஷ்யம் எனக்கு பிடித்த படம்: விஜய்

Posted: 11 Nov 2014 05:40 AM PST

vijay12

vijay12நடிகர் விஜய் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

என் படங்களுக்கு சர்ச்சைகள் கிளம்பும்போதெல்லாம் அந்த படத்தில் உழைத்த மக்களை எண்ணி வருத்தப்படுவேன். எல்லாமே அனுபவம்தான். கடவுள்தான் இந்த வாழ்க்கையை கொடுத்தார். வாழ்க்கை புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. எல்லா பக்கங்களையும் சந்தோஷமாக கடக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே கூற முடியாது.

பலனை எதிர்பாராமல் கடமையை செய்கிறேன். ரசிகர்கள் எனக்கு அதிகமான அன்பை கொடுத்து இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்ததை திருப்பி கொடுப்பேன். ரசிகர்கள் வெற்றியில் என்னுடன் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் தட்டிக் கொடுத்தவர்கள். நடிகன், ரசிகன் என்பதையும் தாண்டி எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது.

ரசிகர்கள் அன்புக்கு முன்னால் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி பட்டங்கள் எல்லாம் பெரியதாக தெரிய வில்லை. சமீபத்திய படங்களில் ஜிகர்தண்டா, திரிஷ்யம் படங்கள் எனக்கு பிடித்தன.

இவ்வாறு விஜய் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அஜித் 56 படம்!

Posted: 11 Nov 2014 05:39 AM PST

thala-56-diwali-special-for-ajith-fans-cinemachips.com_

thala-56-diwali-special-for-ajith-fans-cinemachips.com_கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தற்போது 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்து 'சிறுத்தை' வீரம் படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

வீரம் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித், சிவா இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வமூகவலைத்தளங்களில் தல 56 என்று குறிப்பிட்டு தங்கள் எண்ணங்களை பகிரத்தொடங்கிவிட்டனர்.

அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இரக்க, இன்னொரு பக்கம், தல 56 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கவிருக்கிறது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களில் எதுவுமே உண்மை இல்லை என்று மறுத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அஜித், எனது இயக்கத்தில் நடிக்கவிருப்பது உண்மைதான். ஆனால் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடி யார், இசை அமைப்பாளர் யார், தயாரிப்பாளர் யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சிவா. இப்படம் பற்றி கூடுதல் தகவல் ஒன்று… ரூ.80 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய வசதியுடன் Firefox இணைய உலாவி அறிமுகம்

Posted: 11 Nov 2014 05:35 AM PST

Fire

Fireஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியின் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது. 33.1 வது பதிப்பாக வெளிவந்துள்ள இந்த உலாவியில் இணையத்தேடல்களை பாதுகாப்பானதாக மேற்கொள்ள முடிவதுடன் குக்கீஸ்களை (Cookies) ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் நீக்குவதற்கு Forget எனும் பொத்தான் தரப்பட்டுள்ளது. இதில் பயனர்களை கண்காணிக்க முடியாது இணையத் தேடல்களை வழங்கும் DuckDuckGo தேடுபொறியினூடாக (Search Engine) இணையத் தேடல்களை மேற்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

Posted: 11 Nov 2014 05:34 AM PST

gold_galaxy_alpha_001

gold_galaxy_alpha_001சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையானது 1,664.17 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.7 அங்குல அளவு, 1280 x 820 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் Eight Core Samsung Exynos Processor, பிரதானநினைவகமாக 2GB RAM என்பனவும், 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன. மேலும் இக்கைப்பேசியானது Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் கோரிக்கையை பரிசீலிக்கத் தயார்!- பசிலின் அழைப்புக்கு சம்பந்தன் பதில்!

Posted: 11 Nov 2014 03:34 AM PST

sambanthan_tna

sambanthan_tnaஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுத் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆழமாகப் பரிசீலிக்கத் தயார் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தங்களை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்துச் செயற்படவில்லை என்றும், இம்முறையாவது தங்களை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் அரசின் சிரேஷ்ட அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்‌ச கோரிக்கை விடுத்தார் என்று கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

நாங்கள் இதுவரை அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வரவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுவது தவறானது.

எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்தே வந்துள்ளோம்.

எமது மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும், மீள்குடியேற்றம் பற்றியும் தத்தமது பகுதிகளுக்கு எமது மக்கள் திரும்புவது குறித்தும் இராணுவமயப்படுத்தலைத் தவிர்ப்பது பற்றியெல்லாம் எப்போதுமே அரசுடன் பேசி ஒத்துழைத்து இணக்கத் தீர்வு காண நாம் தயாராகவே இருந்து வந்துள்ளோம்.

இவற்றுக்கு மேல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அமைதித் தீர்வு காணுதல் போன்றவை தொடர்பிலும் அரசுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை காட்டிச் செயற்பட நாம் எப்போதுமே தயாராக இருந்து வந்துள்ளோம்.

அதற்கான எமது தற்றுணிபை, பற்றுறுதியை, திடசங்கற்பத்தை நாம் வெளிப்படுத்தியே வந்தோம்.

அதற்காக இந்த அரசுடன் நீண்டகாலமாக பல சுற்றுக்கள் பேச்சுக்களையும் நடத்தினோம்.

ஆனால் அரசுதான் ஒரு தலைப்பட்சமாக அந்தப் பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டது.

எனவே இந்த அரசுடன் நாம் ஒத்துழைத்துச் செயற்படவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.

இப்போது ஜனாதிபதித் தேர்தலில் எமது ஒத்துழைப்பைக் கோருவது பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாகவே நாம் அறிகிறோம்.

உத்தியோகபூர்வமாக அத்தகைய அழைப்பு ஏதும் எமக்கு விடுக்கப்படவில்லை.

எனினும் அப்படி ஓர் அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஒரேயடியாக நிராகரித்து விடமாட்டோம்.

முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். அதன் பின்னர் இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்டால் நாம் அதனை ஆழமாக பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.

நடுநிலை மனதுடன் அத்தகைய கோரிக்கையின் சாதக பாதகங்களை ஆராய்ந்து நாம் ஒரு தீர்க்கமாக முடிவை எடுப்போம் என்றார் இரா.சம்பந்தன் எம்.பி.

தொடர்புடைய செய்தி - தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க வேண்டும்!- பசில் ராஜபக்ச அழைப்பு

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்தவிற்கு ஆதரவு! கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு

Posted: 11 Nov 2014 02:06 AM PST

M_Id_399543_Mahinda

M_Id_399543_Mahindaஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவினை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் டியூ.குணசேக்கர, நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் யோசனைக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

ஒருவர் மாத்திரம் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்காத நிலையிலும், அதற்கு ஜனாதிபதி பொறுப்புக் கூறாத நிலையிலும் ஜனாதிபதியை ஆதரிப்பது நியாயமல்ல என எதிரணியினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கட்சிக்குள் முரண்பட்டிருக்கும் இவர்கள் மாதுளுவாவ சோபித தேரரின் நிலைப்பாட்டில் நின்று அவரை ஆதரிக்கப் போவதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா- யூனியன் ஸ்ரேசன் கட்டுமான வேலை காரணமாக ஏராளமான எலிகள் வெளியேறுகின்றன. -

Posted: 11 Nov 2014 02:02 AM PST

rat

ratரொறொன்ரோ யூனியன் ஸ்ரேசனில் நடக்கும் கட்டுமான பணிகள் காரணமாக சுரங்கப்பாதை சுரங்கங்கள் மற்றும் இருண்ட மூலைகளில் பொந்துகளில் குடியிருந்த எலிகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக டவுன்ரவுன் பகுதிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் இந்த நான்கு-கால்கள் பிராணி குறித்து ஒரு கண் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். கோடை காலத்தில் வெளியிடங்களில் வாழும் எலிகள் குளிர் காலத்தில் உட்புறங்களை நாடும். வீட்டுச் சொந்தக் காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் எச்சரிக்கப் படுகின்றனர். துவாரங்கள், பழுதடைந்த கதவுகள், ஓட்டைகள் போன்றனவற்றை அடைக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எலிகள் 2-சென்ரிமீற்றர்களிலும் கூடுதலான விட்டத்தில் நுழைவுகளை தேடக் கூடியவை என கூறப்படுகின்றது. எலிகள் மஞ்சள் காமாலை, லாசா காய்ச்சல், எலிக்கடி காய்ச்சல், சல்மொநெலொசிஸ் போன்ற நோய்களை கொண்டிருக்கலாம் எனவும் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். யூனியன் ஸ்ரேசன் கட்டுமானப் பணி ஒரு மோசமான பிரச்சனையை உருவாக்குகின்றதென—எலிகள்– பூச்சி கட்டுப்பாடு நிறுவனம் தெரிவித்துள்ளது. யூனியனில் இடிக்கும் பணிகள் பெருந்தொகை எலிகளை இடம்பெயர செய்துள்ளதால் அவை ஏனைய டவுன்ரவுன் பகுதிகளை நோக்கி நகர்கின்றன எனவும் பூச்சி கட்டுப்பாட்டினர் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™