Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

Posted: 11 Nov 2014 11:57 PM PST

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பா.ஜ.க. ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் குரல் வாக்கெடுப்பில் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஹரிபாவ் பக்டே அறிவித்தார். முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்க போவதாக சிவசேனா இன்று காலை அறிவித்தது. அதன்படி

காங்கிரஸ் கட்சி நடத்தும் நேரு பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜிக்கு அழைப்பு

Posted: 11 Nov 2014 11:06 PM PST

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் வரும் நவம்பர் 17-ந் தேதி நடைபெறும் இம்மாநாட்டில் மம்தா கலந்து கொள்வார் என தெரிகிறது. மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடும் மோதல் நீடித்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

காஷ்மீர்–ஜார்கண்ட் தேர்தல்: பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது-கருத்துக்கணிப்பில் தகவல்

Posted: 11 Nov 2014 10:03 PM PST

ஜம்மு–காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து இந்தியா டி.வி. சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானதில் பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களுக்கான ஓய்வூதியம் ரூ.35 ஆயிரம் ஆக உயர்வு

Posted: 11 Nov 2014 09:59 PM PST

பாராளுமன்றத்திலும், மேல்–சபையிலும் எம்.பி.க்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. தற்போது ஓய்வு பெற்ற எம்.பி.க்கள் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.

உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு கணவர் இருக்கும்போதே விதவை நாடகமாடிய கவுன்சிலர்

Posted: 11 Nov 2014 09:58 PM PST

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 35–வது வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் புத்தூர் நாகராஜம்மா (வயது 36). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான அவர், அரசு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு

காவிரி ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு முடிவு: விவசாயிகள் பாதிக்கும் அபாயம்

Posted: 11 Nov 2014 09:39 PM PST

தமிழகத்தின் வாழ்வாதார உரிமையான காவிரி தண்ணீரை விடுவதில் கர்நாடக அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்காமல் உள்ளது. மழை காலங்களில் வரும் பெரும் வெள்ளம் காரணமாக, வேறுவழியில்லாமல் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால்

ஜி.கே.வாசன் கட்சிக்கு மீண்டும் த.மா.கா. பெயர்: தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை

Posted: 11 Nov 2014 09:31 PM PST

1996–ல் ஜி.கே. மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரசை அவரது மறைவுக்குப் பிறகு ஜி.கே.வாசன் மீண்டும் தமிழக காங்கிரசுடன் இணைத்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் விலகினார். வருகிற 28–ந்தேதி அவரது புதிய கட்சி பெயர் திருச்சியில் அறிவிக்கப்படும்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது

Posted: 11 Nov 2014 09:29 PM PST

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 19–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு

கொழிஞ்சாம்பாறை அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் பலி

Posted: 11 Nov 2014 09:26 PM PST

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி மேல்முடி பானக்காட்டில் வசிப்பவர் அப்துல்லா. இவரது மகன் சகத் (வயது 19). அதே பகுதியை சேர்ந்த முகமதுவின் மகன் பாசில் (19) மற்றும் அஜ்மல் (15). சகத்தும், பாசிலும் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். அஜ்மல் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜன்தன் திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கிய முதல் மாநிலம் கேரளா: கே.எம்.மாணி

Posted: 11 Nov 2014 09:01 PM PST

பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர தினத்தன்று நிகழ்த்திய உரையில் அரசின் மானியங்கள் மக்களுக்கு அவர்களின் வங்கி கணக்கு மூலம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஜன்தன் திட்டம் எனப்படும் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

பத்மநாபசுவாமி கோவில் விவகாரம்: மன்னர் குடும்ப கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Posted: 11 Nov 2014 09:00 PM PST

திருவனந்தபுரத்தில் பிரசித்திப்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, வைடூரிய, தங்க ஆபரணங்கள் உள்பட பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியம் ரூ.20 நிறுத்தி வைப்பு: விலையில் மாற்றம் இல்லை

Posted: 11 Nov 2014 08:41 PM PST

கியாஸ் சிலிண்டர்களுக்கான ரூ.20 மானியத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. என்றாலும் விலையில் மாற்றம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு, எண்ணை நிறுவனங்கள் சப்ளை செய்யும் பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.

திருவனந்தபுரம் அருகே 2 மகன்களுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

Posted: 11 Nov 2014 08:36 PM PST

திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளநாடு கலத்துறை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரை முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். முதல் மனைவி மூலம் விஜின் (வயது 17) என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் ஷீஜா என்ற பெண்ணை விஜயகுமார் 2–வதாக திருமணம் செய்து கொண்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிப்போம்: சிவசேனா அறிவிப்பு

Posted: 11 Nov 2014 08:33 PM PST

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பா.ஜ.க. ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாக்களிக்க சிவசேனா அதிரடி முடிவெடுத்துள்ளது. தாங்கள் எதிர்க்கட்சியாக அமரப்போவதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ராம்தாஸ் கதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது;

சத்திஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை: பலியான பெண்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Posted: 11 Nov 2014 07:54 PM PST

சத்திஸ்கர் மாநில அரசு நடத்திய சிறப்பு கருத்தடை முகாமில் கலந்து கொண்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதில் பலியான பெண்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் "குடும்ப கட்டுப்பாடு" சிறப்பு முகாமில் ஏராளமான பெண்கள் கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்கின்றனர். இந்த

2ஜி வழக்கில் மேலும் 5 பேரிடம் விசாரிக்க அனுமதி கோரிய சிபிஐ மனு மீது 18-ந் தேதி உத்தரவு

Posted: 11 Nov 2014 07:23 PM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை கூறியதைத் தொடர்ந்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில்

அலிகார் பல்கலை. நூலகத்தில் மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு விளக்கம் கேட்கிறது

Posted: 11 Nov 2014 07:19 PM PST

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் நகரில் புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள முக்கிய நூலகத்தை பயன்படுத்திக்கொள்வதற்கு இளநிலை மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

குஜராத் சட்டசபையில் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் இடைநீக்கம்

Posted: 11 Nov 2014 07:03 PM PST

குஜராத் சட்டசபை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகவ்ஜி பட்டேல் அவை நடவடிக்கைகளில் குறுக்கிட்டு பருத்திக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை மிகவும் குறைவாக இருப்பதாகவும் இதுபற்றி விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர் கொடுத்த கேள்வியை

பாராளுமன்றத்தில் துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு வீரர்

Posted: 11 Nov 2014 06:56 PM PST

உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் படை போலீஸ்காரர் ஒருவர், தனது பணி முடிந்ததால், துப்பாக்கியை ஆயுத காப்பகத்தில் ஒப்படைக்க சென்றார்.

காங்கிரஸ் கட்சி நடத்தும் சர்வதேச மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு இல்லை

Posted: 11 Nov 2014 06:51 PM PST

முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் புகழை ஒதுக்குவதால் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி அவர்கள் பெயரில் நடத்தும் சர்வதேச கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் இந்த கருத்தரங்கு டெல்லி விஞ்ஞான பவனில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 52


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™