Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விவசாயத்தை பதம் பார்த்த 100 நாள் வேலை திட்டத்திற்கு மூடுவிழா: நிதி குறைப்பால் 2 கோடி பயனாளிகளுக்கு வேலை இல்லை

Posted:

புதுடில்லி: முந்தைய மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட விவசாய பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நிதிப் பற்றாக்குறை காரணமாக தற்போது தள்ளாட்டம் கண்டு வருகிறது. விரைவில் இந்தத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிக்குறைப்பால் இந்த ஆண்டில் 2 கோடி பயனாளிகளுக்கு வேலை வழங்கப்படவில்லை.இதுதொடர்பாக மத்திய ஊரக மேம்பாட்டு துறை அமைச்சகம் தரப்பில் வெளியாகி உள்ள தகவல்: ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்ற இந்த ஆண்டு நவ. 25ம் தேதி வரை 10.6 கோடி குடும்பத்தினர் ...

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்திற்கு புதிய வழித்தடம்: முந்தைய திட்டத்தை விட செலவு குறைவு; அதிக வசதி

Posted:

புதுடில்லி: இந்துக்களால் புனிதமாக கருதப்படும், ராம பிரானால் போடப்பட்டதாக நம்பப்படும், ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாமல், சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என, லோக்சபாவில் நேற்று அறிவித்த மத்திய அரசு, அதற்காக புதிய, மாற்று வழித்தடத்தை அறிவித்தது. இந்த பாதை, முந்தைய திட்டத்தை விட செலவு மிகவும் குறைந்ததுடன், குறைந்த காலத்தில் நிறைவேற்றப்படக் கூடியது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபாவில் நேற்று, கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:* 'ரைட்ஸ்' எனப்படும் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை ...

ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இடமாற்றம்

Posted:

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வழங்கி பரபரப்பை ஏற்படுத்திய, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜான் மைக்கேல் குன்ஹா, கர்நாடகா உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு பதிவாளராக, மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த செப்., 27ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்ட பின், சிறப்பு நீதிமன்றத்தில், எந்த வழக்குகளும் நடக்கவில்லை. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன், குன்ஹா, கர்நாடக உயர் நீதிமன்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு பதிவாளராக பணியாற்றி வந்தார். தற்போது, பெங்களூரு சிறப்பு ...

பினாமி அரசு என அழைப்பதா: கருணாநிதிக்கு முதல்வர் கண்டனம்

Posted:

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வத்தின் நேற்றைய அறிக்கை: தி.மு.க., தலைவர் கருணாநிதியும், தலைவர் பதவிக்கு, இலவு காத்த கிளியாய் காத்திருக்கும் ஸ்டாலினும், அ.தி.மு.க., அரசை, 'பினாமி அரசு' எனக் கூறி வருகின்றனர். கருணாநிதி வெளியிட்ட, கேள்வி - பதில் அறிக்கையில், அ.தி.மு.க.,வினர், தி.மு.க., அரசை, 'மைனாரிட்டி அரசு' என அழைத்ததற்கு, தற்போதுள்ள அ.தி.மு.க., அரசை, 'பினாமி அரசு' என, தி.மு.க.,வினர் அழைத்து வருகின்றனர். 'பினாமி' என்றால், உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார். உண்மையான உரிமை, வேறொருவரிடம் இருக்கும். தமிழகத்தில், தற்போதுள்ள முதல்வர் அப்படித்தானே இருக்கிறார்? அவர்தான் அப்படி என்றால், ...

கைகுலுக்கி நலம் விசாரித்த மோடி - நவாஸ்: இரு தரப்பு பிரச்னைகள் பற்றி பேசவில்லை

Posted:

காத்மாண்டு: சார்க் மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சியில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் விலகியே இருந்த, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் நேற்று கைகுலுக்கியதோடு, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.ஓய்வு இல்லம்: இந்தியா உட்பட, எட்டு நாடுகளை உறுப்பினராகக் கொண்ட, 'சார்க்' அமைப்பின், 18வது உச்சி மாநாடு, நேபாள தலைநகர் காத்மாண்டுவில், நேற்று முன்தினம் துவங்கியது. அப்போது, மாநாட்டு மேடையில், இரு இருக்கைகள் விட்டு, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அமர்ந்திருந்ததோடு, ஒருவரை ...

எல்லை பகுதிகளில் லேசர் சுவர்கள்: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பி.எஸ்.எப்., திட்டம்

Posted:

புதுடில்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க, 'லேசர்' சுவர்கள் அமைக்க, எல்லை பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு உள்ளனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள், பயங்கரவாதிகள் ஊடுருவுவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுக்க, எல்லையில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், வேலி அமைக்கப்படாத பகுதிகள் வழியாக ஊடுருவல் நிகழ்ந்து வருகிறது. அதனால், எல்லையில் வேலிகள் அமைக்கப்படாத பகுதிகளில், 'லேசர்' சுவர்கள் அமைக்க, எல்லை பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக, எல்லை ...

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சீனிவாசனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Posted:

புதுடில்லி: பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம் பெற்றவர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான, பி.சி.சி.ஐ., தேர்தலில் இருந்து விலகி இருக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று தீர்ப்பு கூறியுள்ளது. இதையடுத்து, மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராகும் சீனிவாசனின் கனவு தகர்ந்தது.கடந்த, 2013ல், ஆறாவது ஐ.பி.எல்., தொடரின்போது நடந்த, 'ஸ்பாட் பிக்சிங்' எனப்படும் ...

முதல்வருக்கு கருணாநிதி சவால்

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை: சட்டசபைக்கு வந்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறதா என கேட்கிறீர்கள். காமராஜர், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், மூப்பனார், கே.வினாயகம், பொன்னப்ப நாடார், எம்.கல்யாணசுந்தரம், பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், உமாநாத், கே.டி.கே.தங்கமணி, அனந்தநாயகி, குமரி அனந்தன், மணலி கந்தசாமி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் கோலோச்சிய சபையில் இருந்து, வாதம் செய்தவன். என் வாதத்தை கேட்டு, எம்.ஜி.ஆர்., மறுநாள் வந்து, பதில் கூறுவதாக சொன்னதை, மறந்து விட வேண்டாம். தைரியம் இருந்தால், சபையில் நான் அமருவதற்கு ஏற்ற ...

கோஷ்டி பூசலில் சிக்க வேண்டாம்: குஷ்புவை எச்சரித்த ராகுல்

Posted:

காங்கிரசில், நேற்று முன்தினம் இணைந்த நடிகை குஷ்பு, நேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை சந்தித்து பேசினார். இன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில், மாநில நிர்வாகிகளையும், தொண்டர்களையும், குஷ்பு சந்தித்து பேசுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.வாசன் காங்கிரசில் இருந்து வெளியேறியதால், தமிழக காங்கிரசுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசில் குஷ்புவை சேர்க்க இளங்கோவன் விரும்பினார். இன்று, வாசன் புதுக் கட்சி அறிவிக்கும் நாளில், டில்லியில், குஷ்பு, சோனியாவை சந்திக்க வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். ஆனால், குஷ்பு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™