Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பயங்கரவாதத்தை சமாளிக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்

Posted:

காத்மாண்டு: ''தெற்காசிய நாடுகள் அனைத்துக்கும் பயங்கரவாதம் தான், மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த உறுதியான நடவடிக்கைளை எடுக்க, உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்,'' என, சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான, 'சார்க்' நாடுகளின் உச்சி மாநாடு, நேற்று காத்மாண்டுவில் துவங்கியது. 'சார்க்' நாடுகளின் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முதல் முறையாக ...

பண முதலைகள் மீது ரிசர்வ் வங்கி கவர்னர் கோபம்: கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடிக்கும் கண்டனம்

Posted:

ஆனந்த்: ''நாட்டின் பெரிய தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும், முதலாளிகளும், வங்கிகளில் இருந்து கடனாக பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தாததால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில், 1.61 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து, நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பிலிருந்து, பல்கலைக்கழகம் வரை நல்ல கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்க முடியும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர், ரகுராம் ராஜன் கூறினார்.கவலைப்படுவதில்லை: குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற இடத்தில் நேற்று ...

டிச., 31க்குள் சொத்து விவரம் அவசியம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

Posted:

புதுடில்லி: 'மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் சொத்து கணக்கை, டிசம்பர் 31ம் தேதிக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்ட, லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தின் படி, நாட்டின் ஒவ்வொரு அரசு ஊழியரும், ஆகஸ்ட் 1ம் தேதி வரையுள்ள தங்கள் சொத்து கணக்கை, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த காலக்கெடு, டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, லோக்சபாவில் நேற்று தெரிவித்த, மத்திய, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் பென்ஷன் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறினார். மத்திய அரசின், ஏ, ...

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted:

புதுடில்லி : குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப்படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகக் கூறியது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் லலித் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:பிரசவத்திற்கு முன் குழந்தையின் பாலினத்தை அறிவதை ...

டிச., 1 முதல் சகாயம் விசாரணை?

Posted:

மதுரை: மதுரை மாவட்ட கனிமவள கொள்ளை குறித்து டிச., முதல் தேதியிலிருந்து சகாயம் விசாரணை மேற்கொள்கிறார். அவருக்கு உதவ மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.மதுரை மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் முறைகேடு நடந்ததாக, அப்போதைய கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை அளித்தார். இதன் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரிக்க சகாயத்தை நியமித்து சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. அவர் இரு நாட்களில் மதுரை வந்து விசாரணை மேற்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகின. ஐகோர்ட் உத்தரவு நகல் மற்றும் அதுகுறித்து ஆவணங்கள் கிடைக்க பெற்ற பிறகே ...

தமிழக அரசின் கடன் எவ்வளவு?

Posted:

மதுரை: தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற கடன் தொகை விபரம் தெரியவந்துள்ளது. தமிழகஅரசு 2013 ஏப்ரல் முதல் 2014 செப்டம்பர் வரை பெற்ற கடன்கள் குறித்து, தகவல் உரிமைச்சட்டம் மூலமாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு நிதித்துறை பொதுத்தகவல் அதிகாரி ராஜா தெரிவித்த தகவல்கள்; மத்திய அரசு மூலமாக உலகவங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடமிருந்து தமிழகஅரசு ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரை பெற்ற கடன் ரூ.இரண்டாயிரத்து 11 கோடியே 33 லட்சத்து 84 ரூபாய். இவற்றிடம் இருந்து 2014 ஏப்ரல் முதல் 2014 செப்டம்பர் வரை பெற்ற கடன் ரூ.825 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரம். நபார்டு வங்கி ...

கருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும்: முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு

Posted:

சென்னை: 'சட்டசபைக்கு வந்து பேசக்கூடிய தைரியம், கருணாநிதிக்கு உள்ளது என்றால், அவர் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும், சட்டசபை கூட்டத் தொடருக்கு வந்து, தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: சட்டசபையை கூட்டாதது, தமக்கு வருத்தம் அளிப்பதாக, கருணாநிதி கூறியதற்கு, கடந்த 22ம் தேதி, விரிவான அறிக்கை வெளியிட்டேன். ஆனால், கருணாநிதி கேள்வி - பதில் அறிக்கையில், நான் பிதற்றியிருப்பதாக, தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு, சட்டசபையை கூட்ட, நான் பதற்றப்படுவதாக தெரிவித்திருந்தார். எதிர்கட்சித் தலைவர் என்ற ...

எல்லாம் எனக்கு தெரியும் என்று சொன்னது கிடையாது: கருணாநிதி

Posted:

சென்னை: 'எல்லாம் எனக்கு தெரியும் என்று, நான் எப்போதும் சொன்னதும் கிடையாது; நினைத்ததும் கிடையாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையில் தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர் அளவு தொடர்பாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழகத்தை சேர்ந்த மூத்த இன்ஜினியர்கள் எதிர்பார்க்கின்றனர் என, கூறியிருந்தேன். கேவியட் மனு என்பது, என் சொந்த யோசனை என்று கூட நான் சொல்லவில்லை. அப்படி இருக்கும் போது, தனக்கு எல்லாம் தெரிந்ததை போலவும், எனக்கு எதுவும் தெரியாததை போலவும், தன் ...

எம்.பி.,க்கள் சொத்து கணக்கை காட்ட 48 மணி நேரம் கெடு: பார்லி., இணையதளத்தில் வெளியிட பிரதமர் திடீர் உத்தரவு

Posted:

புதுடில்லி:'இதுவரை, சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத, பா.ஜ., - எம்.பி.,க்கள், 48 மணி நேரத்தில், சொத்து விவரங்களை, பார்லி., இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்' என, பிரதமர் மோடி, நேற்று காலை, அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 நாட்களுக்குள், எம்.பி.,க்கள் தங்கள் சொத்து கணக்கை, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை நன்கு தெரிந்த பிறகும், நடப்பு, 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, 543 எம்.பி.,க்களில், 400க்கும் மேற்பட்டவர்கள், இன்னமும் தங்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்காமல் உள்ளதாக, கடந்த செப்., 26ல் வெளியான தகவல் ...

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்? ஜெயலலிதாவுக்கு மோடி பதிலடி

Posted:

மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு, காமராஜர் பெயரை சூட்டுவதற்கான தீவிரத்தில், பிரதமர் மோடி இருப்பதாக செய்தி பரவ, அதற்கு வலுசேர்ப்பது போல, நாடார் மற்றும் அதற்கு இணையாக கருதப்படும் ஜாதி சங்கங்கள், அதை விரைந்து செய்ய வலியுறுத்துகின்றன.தமிழக காங்., தலைவராக இருந்த காமராஜர், தமிழக முதல்வராகவும் இருந்தார். இவர் ஆட்சி காலத்தைத் தான், தமிழகத்தின் பொற்காலம் என, காங்., தலைவர்கள் சொல்லி வருகின்றனர். தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை, முதன் முதலில் துவங்கி, அதை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், பள்ளிக்கு செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததாக, புள்ளி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™