Tamil News | Online Tamil News |
- பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் 39 மசோதாக்கள் நிறைவேற்ற அரசு மும்முரம்: ஒரே அணியாக அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டம்
- அருண் ஜெட்லிக்கு அரசு பங்களா: சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல்
- ரூ.5 கோடியில் வெள்ளி ரதம் காணிக்கை: ராணுவ ஆய்வு மையம் மீது புகார்
- வட கிழக்கு பருவமழை 68 செ.மீ., தாண்டியது: 89 அணைகள் 90 சதவீத அளவுக்கு நிரம்பின
- சரத் பவாரின் பூச்சாண்டி அறிக்கைகள்: சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ., முடிவு
- 'தை தை' என ஆட்டம் போடாதீங்க: துரைசாமிக்கு கருணாநிதி வேண்டுகோள்
- சாம்பல் விற்பனையில் கொள்ளையோ கொள்ளை கண்டும் காணாமல் அதிகாரிகள்
- சென்னை குடிநீர் ஏரிகள் நீர்மட்டம் கவலைக்கிடம்: பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்
- காஷ்மீர் தேர்தல்: பிரசார பீரங்கிகளாக மாறிய சமூக வலைதளங்கள்
- ஸ்டேஷன்களை தத்தெடுத்து தூய்மைப்படுத்த ரயில்வே அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு
- வாரிய தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் காங்., தலைகள்: டில்லியை முற்றுகையிட்டு கெஞ்சல்
- சத்ய சாய் பாபாவின் 89வது பிறந்தநாள் கோலாகலம்; ரூ.80 கோடி குடிநீர்த் திட்டம் கிராம மக்களுக்கு அர்ப்பணிப்பு
| Posted: புதுடில்லி:இன்று துவங்கவுள்ள பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், இன்சூரன்ஸ் உட்பட, 39 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக இணைந்து, ராஜ்யசபாவில் நெருக்கடி தர திட்டமிட்டுள்ளன.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கி, அடுத்த மாதம், 23ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தொடர், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என, கருதப்படுகிறது.இன்சூரன்ஸ், சரக்கு மற்றும் சேவை வரி, லோக்பால் சட்ட ... |
| அருண் ஜெட்லிக்கு அரசு பங்களா: சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல் Posted: புதுடில்லி: அருண் ஜெட்லிக்கு, இரண்டு அரசு பங்களாக்கள் ஒதுக்கியுள்ளதாக, மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம், சுப்ரீம் கோர்ட்டில், தவறான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.அந்த பிரமாண பத்திரத்தில், அசோகா சாலையில், பா.ஜ., தலைமை அலுவலகம் அருகே ஒன்றும், கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில், மற்றொரு பங்களாவும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், அசோகா சாலையில் உள்ள பங்களாவை, அருண் ஜெட்லி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, பா.ஜ., கட்சியின் அலுவலக பயன்பாட்டிற்கு அளித்து விட்டார்.இந்நிலையில், அந்த பங்களாவின் ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு, கடந்த ... |
| ரூ.5 கோடியில் வெள்ளி ரதம் காணிக்கை: ராணுவ ஆய்வு மையம் மீது புகார் Posted: புதுடில்லி:ராணுவத்திற்கான அதிநவீன ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் வடிவமைக்க வேண்டிய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம், தனது நேரத்தையும் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும், மதம் சார்ந்த ஒரு விஷயத்திற்கு செலவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.ராணுவ ஆய்வு மையம், 5 கோடி ரூபாய் செலவில், வெள்ளி ரதம் ஒன்றை புனேயில் உள்ள ஆலந்தி கோவிலுக்கு காணிக்கையாக தந்துள்ளது.கடந்த ஆண்டு, புனே-பண்டரிபுரம் இடையே நடைபெற்ற பாரம்பரிய 21 நாள் ஆன்மிக யாத்திரையின்போது, காளை மாடு ஒன்று இறந்தது. அதற்குப் பிறகு, புனேயில் உள்ள, ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு ... |
| வட கிழக்கு பருவமழை 68 செ.மீ., தாண்டியது: 89 அணைகள் 90 சதவீத அளவுக்கு நிரம்பின Posted: தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வட கிழக்கு பருவமழையின் தாக்கம், இரண்டு மடங்காக அதிகரித்ததால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் உள்ள, 89 அணைகள், தங்களின் முழு கொள்ளளவில், 90 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளன.தமிழகத்தில், கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்ததால், கடுமையான வறட்சி நிலவியது. அதனால், சென்னை தவிர, பிற மாவட்டங்களை, தமிழக அரசு, வறட்சி மாவட்டங்களாக அறிவித்தது.சரிவு:கடந்த, 2013ல், வட கிழக்கு பருவமழை காலத்தில், 44 செ.மீ.,க்கு பதில், 29 செ.மீ., பெய்தது. இயல்பான மழை அளவில், 33 சதவீதம் வரை சரிவு ... |
| சரத் பவாரின் பூச்சாண்டி அறிக்கைகள்: சிவசேனாவுடன் கைகோர்க்க பா.ஜ., முடிவு Posted: மும்பை:மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, சிவசேனாவை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முயற்சிகளை, பா.ஜ., மேலிடம் துவங்கியுள்ளது.மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பா.ஜ., அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது.ஆனாலும், 'எப்போது வேண்டுமானாலும், பா.ஜ., அரசை கவிழ்ப்போம்' என, சரத் பவார் அடிக்கடி பூச்சாண்டி காட்டி வருகிறார். இதனால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியை தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் பா.ஜ., மேலிடம் இறங்கியுள்ளது.சமீபத்தில், டில்லி சென்ற, ... |
| 'தை தை' என ஆட்டம் போடாதீங்க: துரைசாமிக்கு கருணாநிதி வேண்டுகோள் Posted: சென்னை:'மேயர் சைதை துரைசாமி, 'தை, தை' என ஆட்டம் போடாமல், விளக்கம் அளிக்க முன் வர வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறிஉள்ளார்.இதுதொடர்பான, அவரது அறிக்கை:சென்னை மாநகராட்சி மேயர் துரைசாமி மீது பல்வேறு புகார்கள் சென்றதால், அ.தி.மு.க., நிகழ்ச்சிகளில், அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போஸ்டர்கள் மற்றும் நோட்டீஸ்களில், அவரது பெயரை போடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்து விட்டதாகவும் செய்தி பரவியது.இதையடுத்து, 'நீங்கள் ராஜினாமா செய்து விட்டீர்களா' என, நிருபர்கள் கேட்ட போது, 'செத்தவனிடமே செத்து விட்டீர்களா என கேட்கிறீர்களே' என, ... |
| சாம்பல் விற்பனையில் கொள்ளையோ கொள்ளை கண்டும் காணாமல் அதிகாரிகள் Posted: மின் வாரிய அனல் மின் நிலையங்களில், சாம்பல் விற்பனையில், பலே கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, எண்ணுார், தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னையில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின் உற்பத்தித்திறன், 4,770 மெகாவாட். இந்த மின் உற்பத்திக்கு, நான்கு அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து, ஒவ்வொரு நாளும், 75 ஆயிரம் டன், நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.மின் உற்பத்திக்கு, நிலக்கரியை பயன்படுத்திய பின், அதிலிருந்து கிடைக்கும் சாம்பலானது, சிமென்ட் மற்றும் செங்கல் தயாரிப்பு ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ... |
| சென்னை குடிநீர் ஏரிகள் நீர்மட்டம் கவலைக்கிடம்: பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் Posted: நீர்வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அடைப்புகளையும் நீக்க பொதுப்பணித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கவலைக்கிடமாக மாறி உள்ளது.சென்னை நகரின் குடிநீர் தேவையை, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் தீர்த்து வைக்கின்றன. அதனால், இந்த ஏரிகளின் பராமரிப்புக்கு, ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.மீட்கும் பணிகள் :கடந்தாண்டு, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, 130 கோடி ரூபாய் ... |
| காஷ்மீர் தேர்தல்: பிரசார பீரங்கிகளாக மாறிய சமூக வலைதளங்கள் Posted: ஸ்ரீநகர்:காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு, அரசியல் கட்சிகள் 'ட்விட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களை தீவிரமாக பயன்படுத்த வங்கி உள்ளன.காஷ்மீரில், 87 சட்டமன்ற தொகுதிகளுக்கு, நவ., 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.தோஷா மைதானம்:தேர்தல் அறிவிப்பு வெளியான உடன், அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு, சமூக வலைத் தளங்களை சூடு பறக்கும் பிரசார மேடையாக மாற்றி வருகின்றனர்.கடந்த 2012ம் ஆண்டு, 'ட்விட்டர்'-ல் அதிகாரபூர்வமாக இணைந்த தேசிய மாநாட்டு கட்சி, தற்போது மூவாயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை ... |
| ஸ்டேஷன்களை தத்தெடுத்து தூய்மைப்படுத்த ரயில்வே அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு Posted: புதுடில்லி: ''ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரி கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தலா ஒரு ரயில்வே ஸ்டேஷன்களை தத்தெடுத்து, தூய்மை படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள பொது இடங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்காக, 'தூய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்து உள்ளார். இதன்படி, மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுஇடங்களை தூய்மை படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், ரயில்வே அமைச்சராக ... |
| வாரிய தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் காங்., தலைகள்: டில்லியை முற்றுகையிட்டு கெஞ்சல் Posted: பெங்களூரு: மாதம், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், அரசு பங்களா அல்லது வாடகை வீடு, ஒரு கார், பயணப்படி என, பல சலுகைகள் கிடைப்பதால், கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர் பதவிக்காக, பெங்களூரு காங்கிரசில் ஏகப்பட்ட பேர் மல்லுக்கட்டுகின்றனர்.கர்நாடகா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்ப்பரேஷன்கள் மற்றும் வாரியங்களின் பொறுப்புக்கு நியமிக்கப்படுவோர் பதவிக்காலம், 18 மாதங்கள். கர்நாடகத்தில், காங்., ஆட்சி அமைத்து, ஒன்றரை ஆண்டுகளாகியும், இன்னும் கார்ப்பரேஷன், வாரியங்களின் தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்கள் நியமிக்கப்படவில்லை.இப்பதவிகளுக்கு தங்களின் ஆதரவாளர்களை ... |
| Posted: புட்டபர்த்தி: பகவான் சத்ய சாய் பாபாவின் 89வது பிறந்த நாள் விழா, இன்று ( 23ம் தேதி) புட்டபர்த்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய் பாபா மகா சமாதி முன்பாக இன்று காலை ஏராளமான பக்தர்கள் கூடினர். சத்ய சாய் பள்ளி மாணவர்களின் வழிபாடு, அனந்தப்பூர் மற்றும் பிரசாந்தி நிலையம் பாண்டு வாத்திய முழக்கங்களுடன் விழா துவங்கியது. இசை வழிபாட்டின் நிறைவில் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலைப் பாடினர். நிறைவாக கர்நாடக இசை பாடல்களும் பக்தி பாடல்களும் பாடப்பட்டன. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று, ஸ்ரீ சத்ய சாய் சேவா ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 24,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |