Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஓய்வெடுக்கும் பொதுப்பணி துறை ஒப்பந்ததாரர்கள்: மழையில் மீண்டும் மிதக்குமா சென்னை?

Posted:

பொதுப்பணி துறையால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஓய்வெடுப்பதால், சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் மீண்டும் மழையில் மிதக்கும் அபாயம் உருவாகியுள்ளது.பொதுப்பணி துறையின் அங்க மான, நீர்வள ஆதார துறையில், ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கீழ்பாலாறு உள்ளிட்ட வடிநில கோட்டங்கள் உள்ளன.

ரூ. 3.62 கோடி ஒதுக்கீடு: சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், உள்ளிட்ட பல நீர்வழித்தடங்கள், இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.ஆனால், இவற்றில், முறையாக பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. ஆண்டுதோறும், ...

பதவி பறிபோய் பல நாளாகியும் வீட்டை காலி செய்யாத மாஜிக்கள்

Posted:

மும்பை : மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்த, முந்தைய, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின், 41 அமைச்சர்களில், 22 பேர், இன்னும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் உள்ளனர்.கடந்த மாதம் 15ல், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதோல்வி அடைந்து, ஆட்சியை பறிகொடுத்தது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற, பா.ஜ., சில நாட்களுக்கு முன் ஆட்சி அமைத்துள்ளது.சொந்தமாக பல வீடுகள் மற்றும் பங்களாக்களை கொண்டுள்ள, முன்னாள் அமைச்சர்களான நாராயண் ரானே, அஜித் பவார், சாகன் பூஜ்பால், ஜெயந்த் பாட்டீல் போன்ற, 22 பேர், தங்கள் அரசு இல்லங்களை ...

இந்திய எதிர்ப்பை மீறி சீன நீர்மூழ்கிகளுக்கு இலங்கை அனுமதி

Posted:

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை, இலங்கை அரசு, தன் துறைமுகங்களுக்குள் அனுமதித்து வருகிறது. கடந்த செப்டம்பரில், சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய இலங்கை, இப்போது மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

வல்லரசு நாடு:ஆசியா பகுதியில் வல்லரசு நாடாக விளங்கும் சீனா, இந்தியாவுடனான எல்லை பிரச்னையில் அவ்வப்போது உரசல் போக்கை கொண்டுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள், கடந்த செப்டம்பரில், ஈரான் நாடு அமைந்துள்ள பாரசீக வளைகுடா பகுதிக்கு பயணம் மேற்கொண்டன. அணுசக்தியால் இயங்கும் ...

வாசனிடம் விஜயகாந்த் போனில் பேசியது என்ன?

Posted:

'தொண்டர்கள் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும்' என, வாசனுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆலோசனை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மூப்பனாரை தன் அரசியல் ஆசான் என, கூறி வருகிறார். மூப்பனார் நினைவு நாளில், அவரது நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.இத்துடன் மூப்பனாரின் மகன் வாசனுடன், நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் நேரத்தில், கூட்டணி அமைப்பது தொடர்பாக, விஜயகாந்தை, வாசன் இருமுறை சந்தித்து பேசினார்.ஆனால், சில காரணங்களால், ...

வரும் 14ம் தேதி மீண்டும் உதயமாகிறது த.மா.கா., வாசன் தரப்பினர் தீவிர ஏற்பாடு

Posted:

வரும், 14ம் தேதி மீண்டும் உதயமாகிறது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. கொடி, பேனர்கள் மற்றும் கட்சியின் துவக்க விழா தொடர்பான ஏற்பாடுகளில், வாசன் வட்டாரங்கள் தீவிரமாக உள்ளன.

கடும் அதிருப்தி:தமிழக காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில், காமராஜர் மற்றும் மூப்பனார் படங்கள் இடம் பெறுவது தொடர்பாக, டில்லி மேலிடம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன் மற்றும் வாசனின் ஆதரவு மாவட்ட தலைவர்கள், 30 பேர், மாநில நிர்வாகிகள், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி ...

விபசார தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: 'விபசாரத் தொழிலை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரித்து விடலாம்' என, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், லலிதா குமாரமங்கலம், சமீபத்தில் கருத்து தெரிவித்த நிலையில், மகளிர் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெண்கள் பாதிப்பு:விபசாரத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம்; அது, தண்டனைக்குரிய குற்றம். இதனால், அந்த தொழிலில் மறைமுகமாக ஈடுபடுவோர், போலீஸ் மற்றும் பிற துறையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்; இதனால், அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, விபசாரத்தை ...

ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சி.பி.ஐ., விசாரணை? விதிமுறைகளை மீறி சுரங்க நிறுவனங்களுக்கு அனுமதி:

Posted:

புதுடில்லி : சுரங்க நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அனுமதிஅளித்தது தொடர்பான வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ஜெயந்தி நடராஜனிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யானைகள் சரணாலயம்:சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாக, பி.டி.ஐ., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:முந்தைய காங்., ஆட்சி காலத்தில், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், சரந்தா வனப் பகுதியில் உள்ள,512 ஹெக்டேர் நிலம், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிட்., ...

கறுப்பு பண விவகாரத்தில் பிரதமர் மோடி சூளுரை: ஏழைகள் பணத்தை மீட்பேன் என உறுதி

Posted:

புதுடில்லி : 'வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வரும் வரை, நான் ஓயப்போவதில்லை. ஏழைகளுக்கு சேர வேண்டிய ஒரு நயா பைசாவையும் வெளிநாட்டில் விட்டு வைக்க மாட்டேன்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கறுப்பு பணத்தை பதுக்கியிருக்கும் நாடுகளிடம், இந்தியா இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் செய்துள்ளதால், பணத்தை பதுக்கியிருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாத நிலை உள்ளது என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் கூறிய போது, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி எழுந்தது.

உப்பு, காரம் சரியாக இருக்குமா? வாசன் முடிவால் தமிழக அரசியலில் புது சூழல்

Posted:

இன்றைய நிலையில், தமிழக அரசியல் சூழல், ஒரு திருமண வீட்டின் சமையற்கட்டில், கதம்பக் கூட்டிற்காக வெட்டிக் கொட்டப்பட்ட காய்கறி குவியலை போல் காட்சி அளிக்கிறது. தனித்தனி பாத்திரங்களில் இருந்த காய்கறிகளை போல், அவரவர் பாட்டை பார்த்துக் கொண்டு போன கட்சிகள் அனைத்தும், வாசனின் அதிரடி முடிவால், ஒன்றுடன் ஒன்று கலந்து, திசை தெரியாமல் கவனம் சிதறி, கதம்பக் கூட்டிற்கு தயாராகும் காய்கறிகளை போல், குழப்பமாக காட்சி அளிக்கின்றன.இதிலிருந்து, அரசியல் கதம்பக் கூட்டு உருவாகுமா; அந்த கூட்டில் உப்பு, காரம் எல்லாம் சரியாக இருக்குமா என்பது, அரசியல் ஆர்வலர்களின் மனதை ...

சோனியா மருமகனுக்கு வக்காலத்து வாங்கும் காங்.,

Posted:

புதுடில்லி: மீடியாக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சோனியா மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வத்ராவுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. அரியானாவில் நிலங்களை வாங்கியதில் மோசடி செய்ததாக காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணைநடத்தப்படும் என வலியுறுத்தி வந்த பா.ஜ., அங்கு ஆட்சியமைத்ததும், இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. இந்நிலையில், டில்லியில் நடந்த பத்திரிகையாளர்களை ராபர்ட் வத்ரா சந்தித்த போது, இது குறித்து அவரிடம் ...

நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெல்லுமா பா.ஜ.,:சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கும் சிவசேனா

Posted:

மும்பை:மகாராஷ்டிராவில், புதிதாக பொறுப்பேற்றுள்ள, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ., அரசு, வரும் 12ல், நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்க உள்ளது. பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் சிவசேனா, துணை முதல்வர் பதவியை பெறும் வகையில் காய் நகர்த்தி வருகிறது. இதனால், மாநிலத்தில், தேர்தலுக்குப் பிறகும் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.கடந்த 25 ஆண்டுகளாக, பா.ஜ., கூட்டணியில் இருந்த சிவசேனா, தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்தலுக்கு முன் கூட்டணியை முறித்துக் கொண்டது.எனினும், சரத் பவார் தலைமையிலான ...

ஆந்திரா கிராமத்தை தத்து எடுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

Posted:

ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தை, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தத்து எடுத்து, வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், சில நாட்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமரின், 'துாய்மை இந்தியா' திட்ட வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில், குக்கிராமம் ஒன்றை தத்து எடுத்து, அக்கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பிய சச்சின், தன் எண்ணத்தை, பிரதமர் மோடியிடம் தெரிவித்தார். அதன்படி, ஆந்திராவில், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™