Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மீண்டும் ரயில்வே பணியில் 'மெட்ரோ ரயில்' ஸ்ரீதரன்

Posted:

புதுடில்லி: 'மெட்ரோ மேன்' என, பலராலும் அழைக்கப்படும் ஸ்ரீதரன், 82, மீண்டும் இந்தியன் ரயில்வேக்கு திரும்புகிறார். அவரை ஒரு நபர் கமிட்டி ஒன்றின் தலைவராக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நியமித்துள்ளார்.டில்லியில், மெட்ரோ ரயில் பாதை அமைத்து, அங்கு அந்த ரயில் போக்குவரத்து திறம்பட செயல்பட காரணமாக இருந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு, 2001ம் ஆண்டில், பத்மஸ்ரீ விருதும், 2008ல், பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்தியன் ரயில்வேயில், 2012ல், அனில் காகோத்கர் தலைமையில், உயர்மட்ட பாதுகாப்பு குழு ஒன்று செயல்பட்ட போது, அதன் உறுப்பினராக, ஸ்ரீதரன் இருந்தார். இது தான், ரயில்வேயில் ...

சுகோய் - 30 ரக விமானங்கள் மீண்டும் பறக்கும்: தளபதி தகவல்

Posted:

புதுடில்லி: ''புனே அருகே நிகழ்ந்த விபத்து காரண மாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், ஒரு வார காலத்திற்குள் மீண்டும் செயல்படத் துவங்கும்,'' என, விமானப்படை தளபதி அரூப் ராகா தெரிவித்தார்.ரஷ்ய தயாரிப்பான, 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், விமானப்படையில் அதிக அளவில் உள்ளன. கடந்த மாதம், மகாராஷ்டிர மாநிலம், புனே அருகே, பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் - 30 ரக விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக, திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த, இரு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து, சுகோய் விமானங்களின் இன்ஜின்களை, ...

ஆறுகள் இணைப்புக்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசு

Posted:

ஆறுகள் இணைப்பு திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்க மறுத்துள்ளது. எனினும், நிதி பெறுவதற்கான முயற்சியை, பொதுப்பணித் துறையினர் மீண்டும் துவங்க உள்ளனர்.தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள ஆறுகள் இணைப்பு திட்டத்திற்கு, 6,500 கோடி ரூபாய் தேவை. மத்திய அரசிடம் நிதி பெற, 2012 முதல், தமிழக அரசு சார்பில், தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், முந்தைய காங்., கூட்டணி அரசு மட்டுமின்றி, தற்போதைய பா.ஜ., அரசும், இத்திட்டத்திற்கு நிதி வழங்க மறுத்து விட்டன. இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ், ஆறுகள் ...

ஜெ., தண்டனை விவரம் அரசிதழில் வெளியீடு : சட்டசபை செயலர் ஜமாலுதீன் திடீர் நீக்கம்?

Posted:

சென்னை : ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் தகுதி நீக்கம் குறித்த தகவல்களை, முழுமையாக, தமிழக அரசிதழில் வெளியிட்ட, சட்டசபை செயலர், ஜமாலுதீன் நேற்று திடீரென அப்பதவில் இருந்து நீக்கப்பட்டதாக, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து, தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா தலைமையில், புதிய ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, சட்டசபையின் செயலராக நியமிக்கப்பட்டவர் ஜமாலுதீன்.இவரது பதவிக்காலம், 2012 மே மாதம் முடிவடைந்தது. தொடர்ந்து, 2012 ஜூனில், அவருக்கு, ஐந்தாண்டுகள் பணி ...

சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்: முதல்வராக பங்கேற்கிறார் ஓ.பி.எஸ்.,?

Posted:

சென்னை: தமிழகத்தில், இரண்டாவது முறையாக, முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், முதன்முறையாக, அடுத்து நடைபெற உள்ள, சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வராக பங்கேற்க உள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார்.புதிய முதல்வராக, நிதி அமைச்சராக இருந்த, ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார்.இவர் முதல் முறையாக, 2001 செப்டம்பர் முதல், 2002 மார்ச் வரை, முதல்வராக இருந்தார். அப்போது, சட்டசபை கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை.ஜெயலலிதா சிறை தண்டனையிலிருந்து விடுதலையானதும், முதல்வர் பதவியை துறந்தார். மீண்டும் ...

பிரதமர் மோடிக்கு கருணாநிதி நன்றி

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை: கிரிமினல்களிடம், பரிவு காட்டக் கூடாது என, நீதித்துறைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ம.பி., உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி இக்பால் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, கிரிமினல்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில், முறையான தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை.குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றங்கள் பாதுகாக்கவில்லை எனில், அவர்கள் தனிப்பட்ட முறையில், பழிவாங்கும் செயல்களில் ஈடுபடலாம். தண்டனை ...

140 அடியைக் கடந்தது பெரியாறு நீர்மட்டம்: எச்சரிக்கை விட மறுத்தது கேரளா

Posted:

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 140 அடியைக் கடந்தது. நீர்மட்டம் 140 அடியை எட்டியும் வெள்ள அபாய எச்சரிக்கை விட கேரள அரசு மறுத்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்குப் பின் நீர்மட்டம் எப்போது 142 அடியை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் உள்ளனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கடந்த சில தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் நீர்மட்டம் நேற்று அதிகாலை 140 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று ...

சிலிண்டருக்கு பணம் இன்று முதல் வங்கியில்!

Posted:

புதுடில்லி: சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தும் திட்டம், புதுச்சேரி உட்பட, 11 மாநிலங்களில் உள்ள, 54 மாவட்டங்களில், இன்று முதல் மீண்டும் அமலாகிறது.இதனால், பயனாளிகள் சந்தை விலைக்கே, இனி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க நேரிடும். அதற்கான மானியம், அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் இடையேயான வேறுபாட்டுத் தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். முதலில் புக்கிங் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரியானதும், அடுத்த சிலிண்டருக்கான ...

கறுப்பு பணம் மீட்பு: தலைவர்களுடன் மோடி பேச்சு

Posted:

பிரிஸ்பேன்: ''கறுப்பு பணத்தை மீட்பது குறித்து, ஜி 20 நாடுகளின் தலைவர்களுடன் விவாதித்து முக்கிய முடிவெடுப்பதே தன் குறிக்கோள்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று துவங்கும் இரண்டு நாள், ஜி 20 மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக, ஆஸ்திரேலியா வந்துள்ள மோடி, ஐந்து நாட்கள், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்றும், நாளையும், ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், 17ம் தேதி, சிட்னி நகரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ஆஸ்திரேலியா வாழும் இந்தியர்கள் மற்றும் பா.ஜ., சார்பில், இந்த கூட்டத்திற்கு ...

கே.வி., பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற உத்தரவால் சர்ச்சை: 70 ஆயிரம் மாணவர் பாதிக்கப்படுவர் என கல்வியாளர்கள் புகார்

Posted:

புதுடில்லி : 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது மொழிப்பாடமாக, ஜெர்மன் மொழிக்குப் பதிலாக, சமஸ்கிருதத்தை போதிக்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனால், 70 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கே.வி.எஸ்., என, அழைக்கப்படும், கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின், ஆளுனர்கள் குழும (போர்டு ஆப் கவர்னர்ஸ்) கூட்டம், அதன் தலைவரான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கடந்த மாதம், 27ம் தேதி நடைபெற்றது. அப்போது, ...

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் மின் வாரியம் மாற்றம்? வழக்கு, மக்கள் அதிருப்தியால் அறிவிப்பு நிறுத்திவைப்பு

Posted:

மின் கட்டணம் உயர்த்தும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளதாலும், மக்களிடம், அதிருப்தி நிலவுவதாலும், மின் கட்டணம் உயர்த்தும் முடிவை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த செப்., 23ம் தேதி, மின் கட்டண உயர்வு குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, சென்னை, நெல்லை, ஈரோட்டில், மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆணைய முகவரிக்கு, கடிதம் மூலமாகவும், பலர், தங்கள் கருத்தை தெரிவித்தனர். கருத்து கேட்பு ...

மத்தியஅரசுடன் சிரஞ்சீவி போராட்டம்

Posted:

புதுடில்லி: வீடு ஒதுக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசுடன் போராட்டம் நடத்தி வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு வீடு ஒதுக்கியது. ஆட்சி மாறியதும் புதிய அமைச்சர்களுக்கு வீடு வழங்கும் விதமாக முன்னாள் அமைச்சர்கள் வீட்டை காலி..செய்து தருமாறு மத்திய அரசும் , மத்திய பொதுப்பணித்துறையும் கடிதம் எழுதி வந்தது.இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள் பலர்அரசு பங்களாக்களை காலி செய்தனர். இருப்பினும் முன்னாள் அமைச்சர்கள் வயலார் ரவி, ராஜிவ் சுக்லா, முனியப்பா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™