Tamil News | Online Tamil News |
- மகாராஷ்டிரா சட்டசபை ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு வெற்றி: சிவசேனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளி
- தமிழகத்தில் முடங்கிய வர்த்தகம் : வங்கி ஊழியர், அதிகாரிகள் ஸ்டிரைக்
- இன்சூரன்ஸ் மசோதா இழுபறியில் இருக்கிறது: குளிர்கால கூட்டத்தொடரிலாவது நிறைவேறுமா?
- வரிச்சலுகை நாடுகளுடன் ஒப்பந்தம் இல்லை:கறுப்பு பணத்தை மீட்பதில் சிக்கல்
- சிவசேனா உறவை முறித்தால் மத்திய அரசுக்கு சிக்கல்: சட்ட திருத்தங்கள் நிறைவேறுவது தடைபடும்
- கர்நாடக அரசு அணைகள் கட்டும் பிரச்னை: சட்டசபையை கூட்ட வேண்டும்: கருணாநிதி
- இந்தியாவில் அனைவருக்கும் வீடு: மலேசிய பிரதமர் உதவிட மோடி கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக் ஷே சம்மதம்
- வகுப்பறையில் வெறிச்செயல்: மாணவன் அடித்துக் கொலை: நோட்டை கிழித்ததுமல்லாமல் உயிரையும் பறித்தான் சக மாணவன்
- இயற்றுவதில் காட்டிய வேகம் அமல்படுத்துவதில் இல்லை : ஓட்டளிப்பதை கட்டாயமாக்க தயங்கும் குஜராத் அரசு
- விலை மாதுவானாலும் விருப்பத்தை மீறி கற்பழிப்பது குற்றமே: டில்லி கோர்ட் அதிரடி
- துரு பிடித்த கத்தி: சத்தீஸ்கர் கு.க., சிகிச்சையில் 'பகீர்'
| மகாராஷ்டிரா சட்டசபை ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு வெற்றி: சிவசேனா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளி Posted: மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில், பா.ஜ., அரசு, நேற்று கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றது. இதன் மூலம், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அரசு, ஆட்சியில் தொடர்கிறது. ஆனால், குரல் ஓட்டு மூலம் தீர்மானம் வெற்றி பெற்றதாக, சபாநாயகர் அறிவித்ததை, சிவசேனா, காங்., போன்ற கட்சிகள் ஏற்கவில்லை. டிவிஷன் ஓட்டு கோரிய அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை; அக்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ், 44, கடந்த மாதம் 31ல், மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றார். நவ., 12ல், நம்பிக்கை ஓட்டு கோருவதாக, அப்போது அறிவித்தார். அவர் தலைமையிலான அரசில், ... |
| தமிழகத்தில் முடங்கிய வர்த்தகம் : வங்கி ஊழியர், அதிகாரிகள் ஸ்டிரைக் Posted: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதனால், நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில், 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியது. பாதிக்கப்பட்ட வர்த்தகம் சீரடைய, இன்னும், இரு நாள்கள் ஆகும் என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வங்கி ஊழியர்களுக்கான, ஊதிய ஒப்பந்தம், 2012 நவம்பர் மாதத்துடன் முடிந்தது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற, வங்கிகள் சங்கத்துடன், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, தொடர் பேச்சு நடத்தியது.ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, 25 ... |
| இன்சூரன்ஸ் மசோதா இழுபறியில் இருக்கிறது: குளிர்கால கூட்டத்தொடரிலாவது நிறைவேறுமா? Posted: பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இன்சூரன்ஸ் மசோதாவை, வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதில், எதிர்பாராத முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதனால், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுவதில், காலதாமதம் ஆகுமோ என்ற சந்தேகம் எழுந்தள்ளது.கடும் முயற்சி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற, கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், கடும் முயற்சி செய்தது. அப்போதும் வழக்கம்போல எதிர்ப்பு கிளம்பியது. இறுதியில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, ராஜ்யசபாவின் தேர்வுக்குழுவுக்கு, இந்த மசோதா, ... |
| வரிச்சலுகை நாடுகளுடன் ஒப்பந்தம் இல்லை:கறுப்பு பணத்தை மீட்பதில் சிக்கல் Posted: புதுடில்லி : வரிச்சலுகை தரும் நாடுகள் மற்றும் இந்தியா இடையே, குற்றம் புரிந்தவர்களை கையாள்வது தொடர்பான, ஒப்பந்தங்கள் இல்லாததால், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள, கறுப்பு பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சிறப்பு புலனாய்வு குழுவிடம், மத்திய அரசு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை, மத்திய அரசு நியமித்துள்ளது.இந்தக் குழுவில், மத்திய நேர்முக வரிகள் ... |
| சிவசேனா உறவை முறித்தால் மத்திய அரசுக்கு சிக்கல்: சட்ட திருத்தங்கள் நிறைவேறுவது தடைபடும் Posted: புதுடில்லி : 'சிவசேனா உடனான கூட்டணி தேவையே இல்லை' என, பாரதிய ஜனதா முடிவு செய்தால், பார்லிமென்டில் சட்டங்களையும், அரசியல் சட்ட திருத்தங்களையும் நிறைவேற்றுவதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பிரச்னைகளை சந்திக்கலாம் என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சியாக சிவசேனா:மகாராஷ்டிராவில், சிவசேனா - பா.ஜ., இடையே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து விட்டது. எதிர்க்கட்சியாக அமர சிவசேனா முடிவு செய்து விட்டது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பாக, ... |
| கர்நாடக அரசு அணைகள் கட்டும் பிரச்னை: சட்டசபையை கூட்ட வேண்டும்: கருணாநிதி Posted: சென்னை : 'காவிரி ஆற்றில், கர்நாடக அரசு அணைகளை கட்டுவதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்ற, உடனடியாக, தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், புதிதாக இரண்டு அணைகள் கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 48 டி.எம்.சி., நீரை தேக்க முடியும் என, கர்நாடக அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த முக்கிய பிரச்னை குறித்து, தமிழக அரசு, அனைத்து கட்சிகளின் கூட்டத்தை, உடனடியாக கூட்ட வேண்டும். ... |
| இந்தியாவில் அனைவருக்கும் வீடு: மலேசிய பிரதமர் உதவிட மோடி கோரிக்கை Posted: நைபைதா: ''இந்தியாவில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மலேசியா உதவ வேண்டும்,'' என, பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் நஜீப் தன் ரசாக்கிடம் வலியுறுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி, 10 நாள் அரசுமுறைப் பயணமாக, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.முதல் கட்டமாக, மியான்மர் சென்ற பிரதமர், அந்நாட்டு அதிபர் யூ தென் செயினை சந்தித்து, இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.ஆசியான் - பசிபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் வந்துள்ள ... |
| தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக் ஷே சம்மதம் Posted: புதுடில்லி : இலங்கையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கும் மன்னிப்பு வழங்கவும், எந்தவிதமான நிபந்தனையும் இன்றி, இரண்டு மூன்று நாட்களுக்குள், அவர்களை விடுவிக்கவும், அதிபர் ராஜபக் ஷே சம்மதம் தெரிவித்து உள்ளார்.இலங்கை எம்.பி.,யும், அந்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான, பிரபா கணேசன் கூறியதாவது:போதைப்பொருள் கடத்தல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும் மன்னிக்க, அதிபர் ராஜபக் ஷே தயாராக உள்ளார். அத்துடன், அவர்களை எந்த விதமான நிபந்தனையும் இன்றி விடுவிக்கவும் முடிவு செய்துள்ளார். ... |
| Posted: நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையில், ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் பள்ளி துவங்கிய சில மணி நேரத்தில் நடந்த இந்த சம்பவம், ஆசிரியர்களையும், பெற்றோரையும் நிலைகுலையச் செய்து உள்ளது.விளாம்பட்டியில், கள்ளர் பள்ளி, 1972ல் துவங்கப்பட்டது. 1994ல் மேல்நிலைப் பள்ளியானது. ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 445 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட, 20 பேர் பள்ளியில் பணிபுரிய வேண்டும்; 12 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.இடைவேளை நேரத்தில்: நேற்று காலை, ... |
| இயற்றுவதில் காட்டிய வேகம் அமல்படுத்துவதில் இல்லை : ஓட்டளிப்பதை கட்டாயமாக்க தயங்கும் குஜராத் அரசு Posted: காந்திநகர் : குஜராத் மாநிலத்தில், முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு வாக்காளர்கள், உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் வகையில், 'குஜராத் உள்ளாட்சி அதிகார சட்ட திருத்த மசோதா - 2009' நிறைவேற்றப்பட்டு உள்ளது.சுதந்திரத்தை பறிக்கிறது : அதேநேரத்தில், 'இந்தச் சட்டத்திருத்த மசோதா, பொதுமக்களின் சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது' என, காங்., உட்பட, பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் நிபுணர்களும், இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். குஜராத் மாநிலத்தில், அடுத்த ஆண்டு ... |
| விலை மாதுவானாலும் விருப்பத்தை மீறி கற்பழிப்பது குற்றமே: டில்லி கோர்ட் அதிரடி Posted: புதுடில்லி : 'ஒரு பெண் விலை மாதராக இருந்தாலும், அவரின் விருப்பத்தை மீறி, பாலியல் பலாத்காரம் செய்ய, யாருக்கும் உரிமை வழங்கப்படவில்லை' என, தெரிவித்துள்ள டில்லி நீதிமன்றம், விபசார பெண்ணை, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த, நான்கு பேருக்கு, தலா, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.ருவாண்டா நாட்டிலிருந்து அகதியாக வந்த பெண் ஒருவர், டில்லியில் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும், அப்பெண்ணின் விருப்பத்தை மீறி, அவரை நான்கு பேர் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்; 2012 டிசம்பரில், இந்த சம்பவம் நிகழ்ந்தது.இதுதொடர்பான வழக்கை ... |
| துரு பிடித்த கத்தி: சத்தீஸ்கர் கு.க., சிகிச்சையில் 'பகீர்' Posted: பிலாஸ்பூர்:சத்தீஸ்கரில், தவறான குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையால், 11 பெண்கள் பலியான மருத்துவமனையில், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்; பாதிக்கப்பட்ட பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இதில், சரியாக கிருமி நீக்கம் செய்யப்படாத கருவிகளை பயன்படுத்தி, ஆபரேஷன் செய்தது தான் பெண்கள் பலிக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் அருகே உள்ள பென்டாரி என்ற கிராமத்தில், கடந்த 8ம் தேதி, மாநில அரசின் சார்பில், இலவச குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 13,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |