Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரூ.24.7 லட்சம் நலத்திட்ட உதவி

Posted: 12 Nov 2014 01:58 PM PST

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த 32 பயனாளிகளுக்கு ரூ.24.75 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவர் டி.பி.ஆர்.செல்வம் புதன்கிழமை வழங்கினார்.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

Posted: 12 Nov 2014 01:58 PM PST

புதுச்சேரி ஜிப்மர் மண்டல புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தின முகாம் புதன்கிழமை சந்தைபுதுக்குப்பத்தில் நடைபெற்றது.

மணக்குள விநாயகர் கல்லூரியில் மயக்கவியல் நிபுணர்கள் மாநாடு

Posted: 12 Nov 2014 01:58 PM PST

புதுவை மாநில மயக்கவியல் நிபுணர்களின் 5-வது மாநில மாநாடு மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2014 01:57 PM PST

கோயில் இடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என அறிவித்ததாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏவைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் புதன்கிழமை காலாப்பட்டில் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு

Posted: 12 Nov 2014 01:57 PM PST

வங்கி ஊழியர்கள் புதன்கிழமை மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் புதுச்சேரியில் ரூ.250 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பேரவையை முற்றுகையிட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Posted: 12 Nov 2014 01:57 PM PST

கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், கல்லூரியில் காலியாக உள்ள 5 இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை போராட்டம் மேற்கொண்டனர்.

இளம்பெண் தற்கொலை

Posted: 12 Nov 2014 01:56 PM PST

திருபுவனை அருகே இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

Posted: 12 Nov 2014 01:56 PM PST

மனைவி கண்டித்ததால் கிருமாம்பாக்கம் அருகே இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேரடி கேஸ் மானியத் திட்டம்: குறைபாடுகளை களைய திமுக வலியுறுத்தல்

Posted: 12 Nov 2014 01:56 PM PST

நேரடி கேஸ் மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.

நேரடி கேஸ் மானியத் திட்டம்: குறைபாடுகளை களைய திமுக வலியுறுத்தல்

Posted: 12 Nov 2014 01:56 PM PST

நேரடி கேஸ் மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது.

ஈரோடு வங்கிகளில் ரூ.800 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு

Posted: 12 Nov 2014 01:55 PM PST

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ரூ.800 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

மாநில மகளிர் விளையாட்டு போட்டி:ஈரோடு மாவட்டத்தில் 30 பேர் தகுதி

Posted: 12 Nov 2014 01:55 PM PST

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் இருந்து 30 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பாரம்பரிய சொற்களை தமிழ் இழந்து வருகிறது தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் வேதனை

Posted: 12 Nov 2014 01:54 PM PST

தமிழ் மொழி, பாரம்பரிய சொற்களை தொடர்ந்து இழந்து வருகிறது என்று தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (நிர்வாகம்) கோ.செழியன் வேதனை தெரிவித்தார்.

ஏளூரில் தர்காவில் நவ.15-ல் சந்தனக்கூடு உருஸ் விழா

Posted: 12 Nov 2014 01:54 PM PST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமலைக்கவுண்டம்பாளையம் ஏளூரில் உள்ள ஷெரீப் தர்காவில் சந்தனக்கூடு உருஸ் விழா நவ.15-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

மதுவிலக்கு ஏடிஎஸ்பியாக ராஜா பொறுப்பேற்பு

Posted: 12 Nov 2014 01:54 PM PST

ஈரோடு மாவட்ட மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏ.டி.எஸ்.பி.) சி.ராஜா புதன்கிழமை பொறுப்பேற்றார்.

இடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை

Posted: 12 Nov 2014 01:53 PM PST

இடதுசாரி கட்சிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை, இணைந்து கூட்டியக்கம் நடத்துவது தான் இன்றைய தேவை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

கல்லூரிப் பேருந்து மரத்தில் மோதி 32 மாணவ, மாணவிகள் காயம்

Posted: 12 Nov 2014 01:53 PM PST

விழுப்புரம் அருகே, தனியார் கல்லூரிப் பேருந்து புதன்கிழமை மரத்தில் மோதியதில் 32 மாணவர்கள் உள்பட 33 பேர் காயமடைந்தனர்.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 12 Nov 2014 01:52 PM PST

கரூர் மாவட்டம், கடவூர் அருகே இருசக்கர வாகனம் புளிய மரத்தில் மோதியதில் இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.

தமிழக காங்கிரஸுக்கு நல்ல தலைமை கிடைத்துள்ளது

Posted: 12 Nov 2014 01:52 PM PST

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறப்பாக செயல்படக்கூடிய நல்ல தலைவர் கிடைத்துள்ளார் என்றார் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ். ஜோதிமணி.

காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்ட கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted: 12 Nov 2014 01:51 PM PST

காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று முதல்வர்

வலுவான நிலையில் அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ்

Posted: 12 Nov 2014 01:51 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது என அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2014 01:51 PM PST

கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் சிஐடியுவிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் புதன்கிழமை சிஐடியு

தொழிலாளி வீட்டில்செல்போன் திருடிய கூர்க்கா கைது

Posted: 12 Nov 2014 01:51 PM PST

கரூர் அருகே தொழிலாளி வீட்டில் செல்போன் திருடிய கூர்க்காவை போலீஸார் கைது செய்தனர்.

அங்கன்வாடி பணிகளுக்கு நவ. 17-ல் நேர்முகத்தேர்வு

Posted: 12 Nov 2014 01:51 PM PST

கரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 17-ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

புதிய அணைகள்: கர்நாடகத்தைக் கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Posted: 12 Nov 2014 01:50 PM PST

காவிரியில் இரு புதிய அணைகள் கட்ட கர்நாடகம் முடிவு செய்துள்ளதைக் கண்டித்து, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

முதல்வர் கோப்பை பூப்பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு

Posted: 12 Nov 2014 01:50 PM PST

கரூரில் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள முதல்வர் கோப்பைக்கான பூப்பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் இளங்கோவன் சந்திப்பு

Posted: 12 Nov 2014 01:50 PM PST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Nov 2014 01:50 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ்

மனுநீதி நிறைவு நாள் முகாம்: ரூ. 20.98 லட்சம் நலத்திட்ட உதவிகள்

Posted: 12 Nov 2014 01:49 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி கிளியப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 69 நபர்களுக்கு ரூ. 20.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூரில்அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டம்

Posted: 12 Nov 2014 01:48 PM PST

 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் தலைமையில் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குன்னம் அருகே சாலைகளை சீரமைக்கக் கோரி 15 லாரிகள் சிறைபிடிப்பு

Posted: 12 Nov 2014 01:48 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் 15 லாரிகளை புதன்கிழமை சிறைபிடித்தனர்.

அரியலூரில் மாவட்ட அறிவியல் கண்காட்சி

Posted: 12 Nov 2014 01:48 PM PST

அரியலூரில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை தொடக்கிவைத்துப் பார்வையிட்டார்.

விதை கிராம திட்ட பயிற்சி முகாம்

Posted: 12 Nov 2014 01:47 PM PST

கந்தர்வகோட்டை அருகே குன்றாண்டார்கோவில் வேளாண்மைத்துறை சார்பில், விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்ற வேண்டும்

Posted: 12 Nov 2014 01:47 PM PST

மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி.

நவ. 14-ல் வம்பன் வேளாண் நிலையத்தில் கொத்தமல்லி, வெங்காயம் சாகுபடி பயிற்சி

Posted: 12 Nov 2014 01:47 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 14-ம் தேதி கொத்தமல்லி, வெங்காயம் சாகுபடி குறித்த ஒருநாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு நவ. 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Nov 2014 01:46 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 461 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்

மெய்கண்ணுடையாள் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி

Posted: 12 Nov 2014 01:46 PM PST

புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களைச் சேர்ந்த விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மவுன்ட் சீயோன் பள்ளியில் உணவுத் திருவிழா

Posted: 12 Nov 2014 01:46 PM PST

புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் உதவும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் செவ்வாய்க்கிழமை உணவுத் திருவிழா நடைபெற்றது.

திருவையாறு அருகே மக்கள் நேர்காணல் முகாம்

Posted: 12 Nov 2014 01:45 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள செம்மங்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

"வாசன் பிரிவால் ஒரளவு பாதிப்பு

Posted: 12 Nov 2014 01:45 PM PST

வாசன் தரப்பினர் பிரிந்து சென்றதால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார் ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர்

கபிரியேல் பெண்கள் பள்ளி சாதனை

Posted: 12 Nov 2014 01:45 PM PST

தஞ்சாவூரில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் பசுபதிகோவில் புனித கபிரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

சர்க்கரை ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Posted: 12 Nov 2014 01:45 PM PST

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகேயுள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஊழியர்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர்.

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 12 Nov 2014 01:44 PM PST

பட்டுக்கோட்டையில் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சங்கமத் திருவிழா : திருச்சி பள்ளிக்கு கோப்பை

Posted: 12 Nov 2014 01:44 PM PST

தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இசை, நாட்டிய சங்கமத் திருவிழாவில் வெற்றி பெற்ற திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

திருவையாறில் ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனை

Posted: 12 Nov 2014 01:44 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரு கிராம் தங்கத்துக்காக பள்ளி மாணவர் கொலை

Posted: 12 Nov 2014 01:44 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் கடந்த 8-ம் தேதி பொன்வண்டு பிடிக்கச் சென்ற பள்ளி மாணவரை ஒரு கிராம் தங்கத்துக்காக கடத்திச் சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தை பார்வையிட நீதிபதிக்கு அனுமதி மறுப்பு

Posted: 12 Nov 2014 01:42 PM PST

பாபர் மசூதி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிடுவதற்கு ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

சீன ஊடுருவல் தீவிரமான பிரச்னை அல்ல: பாரிக்கர்

Posted: 12 Nov 2014 01:42 PM PST

அருணாசலப் பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவுவது தீவிரமான பிரச்னை அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

ஒபாமாவுடன் மோடி சந்திப்பு

Posted: 12 Nov 2014 01:40 PM PST

மியான்மரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார்.

தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்ட சுனந்தாவின் மடிக் கணினி, 3 கைப்பேசிகள்

Posted: 12 Nov 2014 01:39 PM PST

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் இருந்த மடிக் கணினி, 3 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொலை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தல்

Posted: 12 Nov 2014 01:37 PM PST

பட்டுக்கோட்டையில் கொலை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2014 01:36 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அனைவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றநவ. 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு

Posted: 12 Nov 2014 01:36 PM PST

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நவ. 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல்

Posted: 12 Nov 2014 01:36 PM PST

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துமனை மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகையில் மழை

Posted: 12 Nov 2014 01:36 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருக்குவளையில் 34.6 மி.மீ. மழை பெய்துள்ளது.

உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகை பெற காலக்கெடு நிர்ணயம்

Posted: 12 Nov 2014 01:35 PM PST

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெறப்படும் உதவித்தொகைகளுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாமக மாநில பொதுச் செயலர் தேர்வு

Posted: 12 Nov 2014 01:35 PM PST

பாமக மாநிலப் பொதுச் செயலாளராக மயிலாடுதுறையைச் சேர்ந்த எஸ்.ஏ. அய்யப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ. அய்யப்பன். கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக தேர்வு

குடும்ப நல அறுவைச் சிகிச்சையால் பெண் சாவு: சத்தீஸ்கரில் மேலும் ஒரு சம்பவம்

Posted: 12 Nov 2014 01:34 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில், அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு குடும்ப நல முகாமில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். அந்த முகாமில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

Posted: 12 Nov 2014 01:34 PM PST

மதுரை

Posted: 12 Nov 2014 01:34 PM PST

தேயிலைத் தோட்ட பணியாளர்கள் வேலைநிறுத்தம்

Posted: 12 Nov 2014 01:34 PM PST

மேற்கு வங்கத்தில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களுக்கு ஆதரவாக சிலிகுரியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அசோக் பட்டாச்சார்யா, இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம்

Posted: 12 Nov 2014 01:34 PM PST

கொல்கத்தாவில் இன்று 16 இடதுசாரிக் கட்சிகள் மாநாடு

Posted: 12 Nov 2014 01:33 PM PST

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மதவாதத்துக்கு எதிரான மாநாடு வியாழக்கிழமை (நவம்பர் 13) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 16 இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்கின்றன.

பெங்களூரு

Posted: 12 Nov 2014 01:33 PM PST

வேலூர்

Posted: 12 Nov 2014 01:33 PM PST

திருநெல்வேலி

Posted: 12 Nov 2014 01:33 PM PST

கோவை

Posted: 12 Nov 2014 01:33 PM PST

ஜி.கே. வாசன் அணிக்குச் சென்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கம்

Posted: 12 Nov 2014 01:30 PM PST

வாசன் அணிக்குச் சென்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவரும் கட்சித் தலைமையின் உத்தரவுப்படி நீக்கப்பட்டிருப்பதாக, சேலம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.விஜயவர்மன் தெரிவித்தார்.

மது போதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

Posted: 12 Nov 2014 01:29 PM PST

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கை மனுவை பரிந்துரையாகக் கருதலாம் என மத்திய. மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 8 கோடி காசோலைகள் தேக்கம்

Posted: 12 Nov 2014 01:28 PM PST

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடு முழுவதும் 8 கோடி அளவில் காசோலைகள் தேக்கம் அடைந்தன.

அனைத்துத் தரப்பினர் ஆதரவும் எங்களுக்கே: ஜி.கே.வாசன்

Posted: 12 Nov 2014 01:26 PM PST

எங்களுக்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் உள்ளதால், லட்சியத்தில் வெற்றி பெறுவோம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

காவிரியில் புதிய அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது: வைகோ

Posted: 12 Nov 2014 01:26 PM PST

காவிரியில் புதிதாக அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவில் ஜனவரியில் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Posted: 12 Nov 2014 01:25 PM PST

மலேசியாவில் 9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி தொடங்குகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2014 01:19 PM PST

தொழிலாளர்களின் நலவாரிய பயன்களை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கத்தினர் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடியில் சூதாட்டம்:4 பேர் கைது

Posted: 12 Nov 2014 01:19 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மீன்சுருட்டி டாஸ்மாக் கடையில் திருட்டு

Posted: 12 Nov 2014 01:19 PM PST

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி டாஸ்மாக் கடையில் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான மதுபானம் மற்றும் ரொக்கம் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப் போயின.

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: அரியலூரில் கடையடைப்பு

Posted: 12 Nov 2014 01:19 PM PST

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து அரியலூரில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஊர்வலம் சென்ற 150 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேமிப்பு கணக்கில் ரூ. 54,200 முறைகேடு:கிராம அஞ்சல் அலுவலர் மீது வழக்கு

Posted: 12 Nov 2014 01:19 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள வானதிரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மோகன் (27). இவர், கொல்லாபுரம் கிராம கிளை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராக உள்ளார்.

குளித்தலை: பெண் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Posted: 12 Nov 2014 01:19 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலையில் தங்க நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.

போலி வாக்களர்களை நீக்கக் கோரி கோட்டாட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ மனு

Posted: 12 Nov 2014 01:19 PM PST

குளித்தலை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 10,000 போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என குளித்தலை கோட்டாட்சியர் சித்திரை ராஜுவிடம், குளித்தலை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் இரா. மாணிக்கம் புதன்கிழமை மனு அளித்தார்.

கரூர் மாவட்டத்தில் ரூ. 50 கோடி வர்த்தகம் பாதிப்பு

Posted: 12 Nov 2014 01:09 PM PST

கரூர் மாவட்டத்தில் வங்கிகள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, புதன்கிழமை ரூ. 50 கோடி வர்த்தகம் முடங்கியது.

காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 12 Nov 2014 01:09 PM PST

பொன்னமராவதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் டி. புஷ்பராஜ் தலைமை வகித்தார். திருமயம்

குடும்பப் பிரச்னை:பெண் தற்கொலை

Posted: 12 Nov 2014 01:09 PM PST

புதுக்கோட்டையில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தலையை துண்டித்து முதியவரை கொலை செய்த இளைஞர் கைது

Posted: 12 Nov 2014 01:09 PM PST

புதுக்கோட்டையில் தலையை துண்டித்து முதியவரை கொலை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோட்டையில்கஞ்சா விற்ற பெண் கைது

Posted: 12 Nov 2014 01:09 PM PST

புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீஸார் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுகையில் இன்றுமுத்திரைக் கட்டண வசூல் முகாம்

Posted: 12 Nov 2014 01:09 PM PST

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை (நவ. 13) முத்திரைக் கட்டணம் வசூலிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Nov 2014 01:09 PM PST

முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டையில் மின்கம்பிகள் உரசி தீப்பிடித்தது

Posted: 12 Nov 2014 01:09 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் புதன்கிழமை மின்கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகினர்.

"பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தினால் பருத்தியில் கூடுதல் வருவாய் பெறலாம்'

Posted: 12 Nov 2014 01:09 PM PST

பருத்தியில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தினால் கூடுதல் வருவாய் பெறலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வே. அழகிரிசாமி.

"பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்தினால் பருத்தியில் கூடுதல் வருவாய் பெறலாம்'

Posted: 12 Nov 2014 01:09 PM PST

பருத்தியில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தினால் கூடுதல் வருவாய் பெறலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வே. அழகிரிசாமி.

சேமிப்பு கணக்கில் ரூ. 54,200 முறைகேடு:கிராம அஞ்சல் அலுவலர் மீது வழக்கு

Posted: 12 Nov 2014 01:09 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள வானதிரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மோகன் (27). இவர், கொல்லாபுரம் கிராம கிளை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராக உள்ளார்.

மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்ற வேண்டும்

Posted: 12 Nov 2014 01:09 PM PST

மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர்கள் உணர்வுப்பூர்வமாக பணியாற்ற வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி.

ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது: அரசிதழில் அறிவிக்கை வெளியீடு

Posted: 12 Nov 2014 12:52 PM PST

ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது தொடர்பான அறிவிக்கை, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கனிமவள முறைகேடு: ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல்

Posted: 12 Nov 2014 12:51 PM PST

தமிழகத்தில் உள்ள அனைத்து கனிம வள முறைகேடுகள் குறித்தும் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி: மதுரை மாமன்றத்தில் பிரார்த்தனை: திமுக உறுப்பினர்களும் பங்கேற்பு

Posted: 12 Nov 2014 12:51 PM PST

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக இறைவனை வேண்டி மேற்கொள்ளப்பட்ட பிரார்த்தனையில் அக்கட்சியின் மாமன்ற உறுப்பினர்களுடன் திமுக உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு

Posted: 12 Nov 2014 12:51 PM PST

இந்திய திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது: அரசிதழில் அறிவிக்கை வெளியீடு

Posted: 12 Nov 2014 12:50 PM PST

ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது தொடர்பான அறிவிக்கை, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த நாளில் அன்று 13.11.1990; பிரதமர் சந்திரசேகர் பதில்; போஃபர்ஸ் விசாரணை போலீசாரின் பணி; பிரதமர் பணி அல்ல

Posted: 12 Nov 2014 12:32 PM PST

இந்த நாளில் அன்று 13.11.1990; பிரதமர் சந்திரசேகர் பதில்; போஃபர்ஸ் விசாரணை போலீசாரின் பணி; பிரதமர் பணி அல்ல

ஏரிகளைக் காப்போம்

Posted: 12 Nov 2014 12:29 PM PST

தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 921 மி.மீ. இதில் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) மூலம் 441 மி.மீ. (48%) கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை (ஜூன் - செப்டம்பர்) 321 மி.மீ. (35%) அளிக்கிறது.

மாற்றம் செய்யும் கிருமிகள்!

Posted: 12 Nov 2014 12:28 PM PST

பாரதிக்கு நவீன உயிரியலில் பரிச்சயம் இருந்திருந்தால் அவர் "எங்கெங்கு காணினும் கிருமியடா!' என்று பாடியிருப்பார். கிருமிகள் இல்லாத இடமேயில்லை. எங்கும் எதிலும் அவை நீக்கமற நிறைந்துள்ளன. உண்மையில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றிவிட்ட மூத்த குடி கிருமிதான்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™