Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் கடும் குளிரிலும் தொடர் மின்தடை: மத்திய அரசுக்கு கடிதம் எழுத அதிகாரிகள் முடிவு

Posted:

தமிழகத்தில், கடும் குளிரிலும் மின்தடை செய்யப்படுவது, பொது மக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசுக்கு கடிதம் எழுத, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர். குடியிருப்புகளுக்கு...:தமிழகத்தில், 2008ல், மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சமாளிக்க, குடியிருப்புகளுக்கு, இரண்டு மணி நேரம்; தொழிற்சாலைக்கு, 40 சதவீதம், மின்தடை அமல்படுத்தப்பட்டது. வல்லுார், வடசென்னை மற்றும் மேட்டூர் விரிவாக்க புதிய அனல்மின் நிலையங்கள் மூலம், கடந்த ஆண்டு முதல், கூடுதலாக, 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. ...

கிரானைட் முறைகேடு ஆய்வு: தாமதம் ஏன்

Posted:

மதுரை:சட்டவிரோத கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு அரசு தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்காததால், பணிகள் துவங்குவது தாமதமாகிறது.ஐகோர்ட் உத்தரவுப்படி, சகாயத்திற்கு உதவ 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவில், நாமக்கல் மாவட்ட கனிமவள மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் முருகானந்தம், சென்னை டாமின் உதவி இயக்குனர் சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட உதவி புவியியலர் பெருமாள்ராஜா, புதுக்கோட்டை உதவி புவியியலர் ரமேஷ் ஆகிய 4 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் முருகானந்தம், ரமேஷ் மீது சில புகார் இருப்பதால், ...

இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு: தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு முடிவு

Posted:

நய் பை டாவ்:'தமிழக மீனவர்கள், ஐந்து பேருக்கு இலங்கை கோர்ட், சிறை தண்டனை விதித்துஉள்ளதை எதிர்த்து, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து, மீனவர்களை மீட்டு கொண்டு வருவோம்' என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், செய்யது அக்பருதீன் நேற்று கூறினார்.போதைப் பொருள் கடத்திய வழக்கில், தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கை கோர்ட், தூக்கு தண்டனை விதித்து, சமீபத்தில் உத்தரவிட்டது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் குடும்பத்தினர், தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், 'தமிழக ...

பினாமி அ.தி.மு.க., அரசு: கருணாநிதி புது விளக்கம்

Posted:

சென்னை:அ.தி.மு.க., அரசு, பினாமி அரசாக எப்படி செயல்படுகிறது என்பது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி புது விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்த அவரது அறிக்கை:தற்போதுள்ள அ.தி.மு.க., அரசு, பினாமி அ.தி.மு.க., அரசு என, தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். பினாமி என்றால், உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார். உண்மையான உரிமை, வேறொருவரிடம் இருக்கும்.தமிழகத்தில், தற்போதுள்ள முதல்வர் அப்படித்தானே இருக்கிறார். நிர்வாகத்திற்கு தலைமையேற்று நடத்த வேண்டியவர், தலைமை செயலர். தற்போது, அவர் பெயருக்கு தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம், முன்னாள் தலைமை செயலராக இருந்து, தற்போது ஆலோசகராக ...

மந்திரிகளுக்கு லீவா? மோடி கிடுக்கிப்பிடி

Posted:

புதுடில்லி: 'மத்திய அமைச்சர்கள் எல்லாம், விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொது விடுமுறை நாட்களிலும் பணியாற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.புதிய அமைச்சர்கள் பதவியேற்ற மறுநாளான நேற்று முன்தினம், அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை, பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். இந்தக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆனந்த் கீதே தவிர, மற்றவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது, அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவு விவரம் ...

ரயில்வேயிலிருந்து சட்டத்திற்கு சதானந்தா மாற்றம் ஏன்?மத்திய அரசு வட்டாரங்கள் பரபரப்பு தகவல்

Posted:

புதுடில்லி : ரயில்வே அமைச்சராக பதவி வகித்த சதானந்த கவுடா, சமீபத்திய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, சட்ட அமைச்சராக மாற்றப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மே, 26ம் தேதி பதவியேற்றது. அப்போது, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, சதானந்த கவுடா, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த அமைச்சக பொறுப்பை ஏற்று, ஆறு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், சமீபத்தில், அவர், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் .அவர் கவனித்து வந்த ரயில்வே அமைச்சக ...

காங்., மூத்த தலைவர் அபிஷேக் சிங்விக்கு வருமான வரித்துறை ரூ.57 கோடி அபராதம்

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, அபிஷேக் மனு சிங்வி, வருமான வரி தொடர்பான சிக்கலில் மாட்டி உள்ளார். 'பொருட்கள் வாங்கியது தொடர்பான சில வவுச்சர்களை, கரையான்கள் தின்று விட்டன' என, சிங்வி தெரிவித்த தகவலை ஏற்க மறுத்த வருமான வரி தகராறுகள் தீர்வு ஆணையம், அவருக்கு, 57 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சிங்வி, வருமான வரித்துறையிடம், மூன்று ஆண்டுகளுக்கு தாக்கல் செய்த வருமான கணக்கில், பல குறைபாடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.அதனால், வருமான வரி தகராறுகள் தீர்வு ஆணையத்திடம் ...

3 ஆண்டுகளில் பிடிபட்ட போலி ரேஷன் கார்டுகள் 3.28 லட்சம் : அதிகாரிகள் சோதனையில் சிக்கியதால் ரத்தானது

Posted:

சென்னை : தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது பிடிபட்ட, 3.28 லட்சம் போலி ரேஷன் கார்டுகள், ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரிசி, 1.86 கோடி; சர்க்கரை, 10.62 லட்சம்; காவலர், 65 ஆயிரம்; 'என்' கார்டு (எந்த பொருளும் வாங்க விரும்பாதவர்), 63 ஆயிரம் என, மொத்தம், 1.98 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.ரேஷன் கடைகளில், அரிசி இலவசம்; சர்க்கரை, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.தமிழக அரசு, பொதுமக்களுக்கு, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, ஆடு, மாடு, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை, இலவசமாக ...

தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் "மேக்கேதாட்'குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம்: அமைச்சர் உறுதி

Posted:

பெங்களூரு:""தமிழகம் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும், கர்நாடகா அரசு, "மேக்கேதாட்' குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீரும்,'' என்று கர்நாடா மாநில நீர்ப்பாசன துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.பெங்களூருவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:காவிரி நீர்ப்பாசன பகுதி எல்லையில், "மேக்கேதாட்' குடிநீர் திட்டத்துக்கு, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த எதிர்ப்புக்கு பணியாமல், "மேக்கேதாட்' குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, கர்நாடகா அரசு, தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, இதற்கான, திட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. "நமது நிலம், நமது ...

அலிகார் முஸ்லிம் பல்கலையில் மாணவியருக்கு வினோத கட்டுப்பாடு

Posted:

அலிகார் : உ.பி., மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூலகத்திற்கு செல்ல, அதே பல்கலையில் படிக்கும் மாணவியருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.'நூலகத்திற்கு மாணவியர் சென்றால், மாணவர்களுக்கும், மாணவியருக்கும் காதல் ஏற்பட்டு விடும்; அதைத் தடுக்கவே அனுமதி மறுக்கப்படுகிறது' என, துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிரமாண்ட நூலகம் : சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உத்தர பிரதேசத்தில், பிரபலமான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு, லட்சக்கணக்கான புத்தகங்கள் மற்றும் இணையதள வசதியுடன், ...

டாக்டர்கள் வேலைநிறுத்தம் நியாயமா?: சுப்ரீம் கோர்ட் புத்திமதி

Posted:

புதுடில்லி: டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது என அறிவிக்க முடியாது, எனினும். அவர்கள் மக்களுக்கு உயிரை காக்கும் சேவை செய்பவர்கள் என டாக்டர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்து டாக்டர்களுக்கு புத்திமதி புகட்டியுள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். பல நாட்கள் போராட்டம் நீடித்ததால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™