Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லும் மத்திய அரசுக்கு முட்டுக்கட்டை: ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாததால் சிக்கல்

Posted:

புதுடில்லி : நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ஏராளமான புதுப்புது திட்டங்களையும், சட்டங்களையும் அறிவித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு, ராஜ்யசபாவில், பெரும்பான்மை பலம் இல்லாதது, பெரும் முட்டுக்கட்டையாக அமையும் என கூறப்படுகிறது. லோக்சபாவில் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கும், பா.ஜ., கூட்டணி, ராஜ்யசபாவில், மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல், கூட்டு பார்லி மென்ட் கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.கடந்த மே மாதம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 543 தொகுதிகளில், 282 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை, காங்கிரசிடம் ...

சகாயம் விசாரணை நடக்குமா? மீண்டும் கோர்ட் செல்ல அரசு ஆலோசனை

Posted:

கிரானைட் மற்றும் கனிம வளம் கொள்ளை குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில், 'அப்பீல்' செய்வது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிம வள முறைகேடு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமிக்க கோரி, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கையை ஏற்று, கனிம கொள்ளை குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, ...

ராகுல் அதிரடியில் வாசன் 'அப்செட்' :சிதம்பரம், தங்கபாலு, பிரபு 'ஷாக்'

Posted:

ஞானதேசிகனை பதவி விலக செய்து, காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்த, முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, அவரது ஆதரவாளரான இளங்கோவனை தலைவராக்கி, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்.செல்வாக்கு குறைந்தது:அவரது அதிரடி நடவடிக்கை, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களான சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், பிரபு, பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோரையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காங்கிரஸ் மேலிடத்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால், வாசனுக்கான செல்வாக்கு டில்லியில் குறையத் துவங்கியது; ...

சிவசேனா உடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் பா.ஜ., தவிப்பு: சூழ்நிலையை சாதகமாக்கி அதிக பேரம் பேசும் உத்தவ் தாக்கரே

Posted:

மும்பை: சிவசேனா உடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில், இரு தலைக்கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது பாரதிய ஜனதா. சிவசேனாவின் நிபந்தனைகளை ஏற்பதா அல்லது அதை எதிர்க்கட்சியாக அமரச் செய்து விட்டு, தேசியவாத காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவை ஏற்பதா என்பதில் குழப்பித் தவிக்கிறது.மகாராஷ்டிராவில், கடந்த மாதம், 15ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 288 இடங்களில், 122 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா, நேற்று முன்தினம், முதல்வர் பட்நாவிஸ் தலைமையில், அரசு அமைத்தது. ஆனால், விரைவில் இந்த பா.ஜ., அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ...

பா.ஜ., கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கனவு: விஜயகாந்த் போடும் கணக்கு என்ன

Posted:

அ.தி.மு.க., தி.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளதை மனதில் வைத்தே, பா.ஜ., கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் கனவில் விஜயகாந்த் மிதப்பதாக கூறப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, பா.ஜ., புதிய கூட்டணியை உருவாக்கியது. இதில், தே.மு.தி.க.,- பா.ம.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன.கூட்டணியில் இடம் பெற்றிருந்த, ஒவ்வொரு கட்சியும் முரண்பாடான கொள்கைகள் கொண்டவையாக இருந்தன. இருப்பினும், பா.ஜ.,வின் தீவிர முயற்சியால், இக்கூட்டணி உருவானது.அ.தி.மு.க., தி.மு.க.,வின் பலத்தையும் மீறி, தர்மபுரி, கன்னியாகுமரி ...

யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?

Posted:

மின் வாரியத்தில் உள்ள குளறுபடிகளால் ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யாமல், மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிப்பது சரிதானா என, கேள்வி எழுப்பி உள்ள ஓய்வுபெற்ற மின் வாரிய மூத்த அதிகாரிகள், மின் வாரிய செயல்பாடுகள் குறித்தும், கணக்குகள் குறித்தும் சில கேள்விகளை எழுப்பி உள்ளனர்.*மின் வாரியத்தின் 2014 - 15க்கான கட்டண உயர்வுக்கான தேவை குறித்து, 2013 நவம்பர் 30ம் தேதிக்குள், ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தகவல் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக மின் வாரியம் இந்த தேவையை, ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஒழுங்குமுறை ஆணையம், தன்னிச்சையாக கட்டண ...

காங்கிரஸ் கட்சியை உதற தயாராகும் வாசனுக்கு தூது: பா.ஜ.,வுடன் கைகோர்க்க மத்திய அமைச்சர் அழைப்பு

Posted:

காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.நெருக்கடி நிலைமை :தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, ஞானதேசிகன் விலகியதை அடுத்து, இந்த கட்சி வட்டாரத்தில் பரபரப்பு திருப்பங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் வரலாற்றில் இல்லாத ஒன்றாக, அவர் பதவி விலகிய அடுத்த நாளே, புதிய தலைவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஞானதேசிகன், வாசன் தரப்பை சேர்ந்தவர் என்பதால், இதன் மூலம், வாசனுடன் சமரசம் இல்லை என்ற முடிவுக்கு காங்கிரஸ் மேலிடம் வந்து விட்டது என்ற தோற்றம் ஏற்பட்டு ...

30 ஆண்டு வரலாற்றை புரட்டிப்போட்டது மழை: விவசாயம் செழிக்கும் என பெரும் எதிர்பார்ப்பு

Posted:

தமிழகத்தில் அமர்க்களமாக பெய்யத் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழையால், கடந்த 30 ஆண்டு கால வரலாற்றை மாற்றும் அளவுக்கு, கூடுதலான மழைப்பொழிவு, இந்தாண்டு கிடைத்துள்ளது. இதனால், 'நிலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும்' என்று, வானிலை ஆய்வாளர்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலையிலுள்ள காலநிலை ஆய்வு மையம், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது வழக்கம். தமிழகத்தில், கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள தென்மேற்குப்பருவமழை, அதிகபட்சம் 209 மி.மீ., மழை பெய்யும் என்று இம்மையம் அறிவித்தது. ...

சீன எல்லை அருகே பணி மேற்கொள்வதை தடுக்க முடியாது: அமைச்சர் கிரண் ரிஜிஜு

Posted:

புதுடில்லி:''சீனாவை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசுக்குஉரிமை உள்ளது. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜுதெரிவித்துள்ளார்.எதிர்ப்பு:அருணாச்சல பிரதேசத்தில், சீனாவை ஒட்டிய எல்லை பகுதிகளில், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினருக்காக, 54 நிலைகள் கட்ட, மத்திய அரசு முடிவு செய்தது. அத்துடன், அங்கு சாலை அமைக்கவும் தீர்மானித்தது. ஆனால், இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய அரசின் செயல், இரு நாட்டு எல்லைப் பிரச்னையை, மேலும் சிக்கலாக்கி விடும் ...

கோலியின் தூக்கு தண்டனை : ஐகோர்ட் நிறுத்தி வைப்பு

Posted:

அலகாபாத் : நொய்டாவில், சிறுமியர், இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்த கொடூரன் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, அலகாபாத் ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், தொழில் அதிபரின் வீட்டில் வேலை செய்த, சுரேந்தர் கோலி, அப்பகுதியில் இருந்த சிறுமியர், இளம்பெண்களை கற்பழித்து கொலை செய்தான். 2005ல் மாயமான சிறுமியரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், கோலியை கைது செய்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக, கோலிக்கு சி.பி.ஐ., கோர்ட் மரண ...

ராஜ்யசபா தேர்தலில் அமர் சிங்கிற்கு 'அல்வா' : அசம் கான் அதிரடிக்கு பணிந்தார் முலாயம்

Posted:

லக்னோ : ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களின் பட்டியலில், அமர் சிங்கின் பெயர் இடம் பெறவில்லை. அந்த கட்சியின் மூத்த தலைவரான அசம் கானின் கடும் எதிர்ப்பு காரணமாக, அமர் சிங்கின் பெயரை, முலாயம் சிங் யாதவ் பரிசீலிக்கவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. சமாஜ்வாதியில், சில ஆண்டுகளுக்கு முன் வரை செல்வாக்குடன் இருந்தவர், அமர் சிங். அமர் சிங்கிற்கும், சமாஜ்வாதியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசம் கானுக்கும், மோதல் ஏற்பட்டது. அமர் சிங்கின் வளர்ச்சியை, அகிலேஷும் ...

'பார் லைசென்ஸ்'களை புதுப்பிக்க ரூ.5 கோடி கேட்டாரா அமைச்சர்? : கேரளாவில் சர்ச்சை; முதல்வர் உம்மன் சாண்டி மறுப்பு

Posted:

திருவனந்தபுரம்: 'கேரளாவில், மூடப்பட்ட மதுபான பார்களை மீண்டும் திறப்பதற்கான அனுமதி வழங்க, அம்மாநில நிதி அமைச்சர் கே.எம்.மணி, 5 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார்' என, பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், 'இந்த குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது' என, முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்., கூட்டணி அரசு உள்ளது. இந்த அரசு, மாநிலத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் தவிர, இதர ...

வேலை செய்யுங்கள் அல்லது வீட்டுக்கு செல்ல தயாராகுங்கள்: கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு கடும் எச்சரிக்கை

Posted:

பெங்களூரு : கர்நாடகாவில் பெரும்பாலான அமைச்சர்கள், சரியாக பணியாற்றவில்லை என்ற புகாரை, சீரியசாக எடுத்து கொண்டுள்ள, காங்., மேலிடம், எல்லா அமைச்சர்களின், 'புராகிரஸ் கார்டுகளை' அனுப்பி வைக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட்டுள்ளது.புகார்:மேலிட உத்தரவால் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ள முதல்வர் சித்தராமையா, 'வேலை செய்யுங்கள்... அல்லது வீட்டுக்கு செல்ல தயாராகுங்கள்' என, அமைச்சர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.கர்நாடகாவில், பெரும்பாலான அமைச்சர்களின் செயல்பாட்டில், காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிருப்தி உள்ளது. ஆரம்பத்திலிருந்தே, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™