Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தைவான் பிரதமர் ராஜிநாமா: உள்ளாட்சித் தேர்தல் தோல்வி எதிரொலி

Posted: 29 Nov 2014 01:51 PM PST

தைவான் நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று அந்த நாட்டுப் பிரதமர் ஜியாங் யீ ஹூவா தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீன், ஆட்டிறைச்சி விற்பனை அதிகரிப்பு

Posted: 29 Nov 2014 01:47 PM PST

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோயால் வாத்துகள் இறந்ததைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் வாத்து, கோழி இறைச்சி விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது. அதேநேரத்தில் மீன், ஆட்டிறைச்சி விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சிசு இறப்பு விகிதம் குறைவு: சுகாதாரத் துறை அமைச்சர்

Posted: 29 Nov 2014 01:46 PM PST

சிசு இறப்பு விகிதத்தை இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதியாகத்தான் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் எஸ்.விஜயபாஸ்கர் கூறினார்.

புலால் உண்ணுகிற பழக்கம் தமிழனுடையது அல்ல: அவ்வை நடராஜன்

Posted: 29 Nov 2014 01:40 PM PST

புலால் உண்ணுகிற பழக்கம் தமிழனுடையது அல்ல. காலத்தின் மாற்றம், அறிவு வளர்ச்சியே இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் கூறினார்.

வட கடலோர தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்

Posted: 29 Nov 2014 01:37 PM PST

வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜயேந்திரருக்கு சதாபிஷேக விழா தொடக்கம்

Posted: 29 Nov 2014 01:36 PM PST

தஞ்சாவூரில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு சதாபிஷேக விழா சனிக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம்

Posted: 29 Nov 2014 01:27 PM PST

பெங்களூரு

Posted: 29 Nov 2014 01:27 PM PST

மதுரை

Posted: 29 Nov 2014 01:27 PM PST

திருநெல்வேலி

Posted: 29 Nov 2014 01:26 PM PST

திருப்பூர்

Posted: 29 Nov 2014 01:26 PM PST

கோவை

Posted: 29 Nov 2014 01:26 PM PST

பள்ளி மாணவர் கொலை வழக்கு: கொலையாளி கோவையில் சிக்கினார்

Posted: 29 Nov 2014 01:17 PM PST

அருப்புக்கோட்டை அருகே பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து பாஸ்கரன் என்ற மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அப்பள்ளி முன்னாள் மாணவர் மாரீஸ்வரன், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மதுவிலக்கு குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன

Posted: 29 Nov 2014 01:16 PM PST

தமிழகத்தில் கடந்த 11 மாதங்களில் ரூ. 13.18 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராயம், திருட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) காந்திராஜன் தெரிவித்தார்.

நெல்லையில் சிஐடியு நிர்வாகி கொலை: சடலத்தை வாங்க மறுத்து 3 மணி நேரம் மறியல்

Posted: 29 Nov 2014 01:15 PM PST

திருநெல்வேலி அருகே சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லையில் சிஐடியு நிர்வாகி கொலை: சடலத்தை வாங்க மறுத்து 3 மணி நேரம் மறியல்

Posted: 29 Nov 2014 01:12 PM PST

திருநெல்வேலி அருகே சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட இணைச் செயலர் படுகொலை செய்யப்பட்டார்.

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் திட்டை சாலை: வாகன ஓட்டிகள் அவதி

Posted: 29 Nov 2014 01:12 PM PST

சீர்காழி அருகே திட்டை செல்லும் சாலை 3 ஆண்டுகளாக சீரமைக்கபடாமல், குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த வார கலாரசிகன்

Posted: 29 Nov 2014 01:12 PM PST

இது எப்படி சாத்தியமாயிற்று என்கிற மலைப்பிலிருந்து கடந்த மூன்று நாள்களாக நான் மீளவில்லை. யூ டிவி தனஞ்செயனின் "பிரைட் ஆப் தமிழ் சினிமா 1931-2013' என்கிற ஆங்கிலப் புத்தகம்தான் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி அளிப்பு

Posted: 29 Nov 2014 01:12 PM PST

திருவாரூர் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தில் 500 பேருக்கு ரூ. 2.44 கோடியில் 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

"அரசு திட்டங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்'

Posted: 29 Nov 2014 01:11 PM PST

அரசு செயல்படுத்தும் திட்டங்களை விவசாயிகளுக்கு முழுமையாக தெரியப்படுத்த வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிவன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

Posted: 29 Nov 2014 01:11 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகத்துக்கு புகார் அளிக்க வந்த பெண் விஷம் குடித்தார்

Posted: 29 Nov 2014 01:11 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சனிக்கிழமை மாலை புகார் அளிக்க வந்த பெண் விஷம் குடித்ததையடுத்து மயக்கமடைந்தார்.

செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டம்

Posted: 29 Nov 2014 01:11 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொல் புதிது - 36

Posted: 29 Nov 2014 01:11 PM PST

கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிடைக்கிறதா? சிறப்பு கிடைக்கிறது என்றால், கற்றவர்கள் செய்வது என்ன?

"பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை தர வேண்டும்'

Posted: 29 Nov 2014 01:11 PM PST

தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதி அமர சிறப்பு இருக்கை ஏற்பாட்டை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்றார் பாரதியஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

Posted: 29 Nov 2014 01:11 PM PST

வேதாரண்யம், வேட்டைகாரனிருப்பு பகுதியிலிருந்து வெளியிடங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வேட்டைக்காரனிருப்பு போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

13.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது

Posted: 29 Nov 2014 01:11 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த பதிமூன்றரை கிலோ கஞ்சாவை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

Posted: 29 Nov 2014 01:11 PM PST

பெரம்பலூர் மாவட்ட அளவிலான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு, சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ்கள்

லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 29 Nov 2014 01:11 PM PST

 திருவாரூர் அருகே லாரி மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றதற்குப் பாராட்டு

Posted: 29 Nov 2014 01:11 PM PST

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

அமராவதி ஆற்றில் முட்புதர் அகற்றும் பணி

Posted: 29 Nov 2014 01:10 PM PST

கரூர் அமராவதி ஆற்றில் நடைபெறும் முட்புதர் அகற்றும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கரூர் எம்பி. மு. தம்பிதுரை ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர்.

நாகையில் மாவட்ட அறிவியல் மாநாடு

Posted: 29 Nov 2014 12:32 PM PST

நாகப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான 22-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

Posted: 29 Nov 2014 12:31 PM PST

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளின் சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேரழந்தூரில் மனுநீதி முகாம்

Posted: 29 Nov 2014 12:31 PM PST

தேரழந்தூர் வருவாய் கிராமத்தில் வாராந்திர மனுநீதி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 29 Nov 2014 12:31 PM PST

குத்தாலம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

நொய்யலில் கண் தான விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 29 Nov 2014 12:31 PM PST

நொய்யலில் சனிக்கிழமை நடைபெற்ற கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். நொய்யல் லயன்ஸ் சங்கம் சார்பிóல் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் சி. சண்முகம் தலைமை

மயிர்குறை கருவி

Posted: 29 Nov 2014 12:30 PM PST

சங்க காலத்தில் பல தொழில்கள் சிறப்புப் பெற்றிருந்துள்ளன. இத்தகைய தொழில் சார்ந்த பொருள்களுக்கு நல்ல மதிப்பும் தேவையும் இருந்துள்ளன. இப்பொருள்கள் சார்ந்து உள்நாட்டு வெளிநாட்டு வாணிபமும் நடைபெற்றுள்ளன.

காலிப்பணியிடங்களை நிரப்ப பேரூராட்சி ஊழியர்கள் வலியுறுத்தல்

Posted: 29 Nov 2014 12:30 PM PST

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூரில் சனிக்கிழமை அச்சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் உமாராணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார். மாநில பொதுச் செயலர் கனகராஜ் வேலை அறிக்கை வாசித்தார்.

அரசு மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் ஆய்வு

Posted: 29 Nov 2014 12:30 PM PST

கரூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

விவசாய தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 29 Nov 2014 12:30 PM PST

நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்குவதாகக் கூறி கரூர் அருகே தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர்.

நாகனூரில் சிறப்பு மருத்துவ முகாமில் ஆட்சியர் ஆய்வு

Posted: 29 Nov 2014 12:29 PM PST

தோகைமலை அருகே மர்மக் காய்ச்சலுக்கு இரு மாணவிகள் இறந்த சம்பவத்தை முன்னிட்டு அங்கு பொது சுகாதாரத் துறை சார்பில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

தேசிய ரோப் ஸ்கிப்பிங்: கேஎஸ்வி பள்ளி சிறப்பிடம்

Posted: 29 Nov 2014 12:29 PM PST

தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில் கரூர் துளசிக்கொம்பு கே.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். விஷ்ணு தங்கம் வென்றார்.

பெருமாள் கோயிலில் அதிமுக சிறப்பு வழிபாடு

Posted: 29 Nov 2014 12:29 PM PST

வெள்ளியணை கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சனிக்கிழமை அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சொல்லறிவோம் : புத்தகம்

Posted: 29 Nov 2014 12:29 PM PST

இன்றைய நவீன யுகச் சொல், அறிவியல் காலச்சொல் "புத்தகம்' என்ற சொல். இச்சொல் இன்றைய புதுக் கண்டுபிடிப்புப் புத்தாக்கச் சொல்லாகும்.

தலைமைஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி முகாம்

Posted: 29 Nov 2014 12:29 PM PST

கரூரில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

அறிவியல் மாநாட்டுக்கு 14 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு

Posted: 29 Nov 2014 12:28 PM PST

கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 11 பள்ளிகளின் 14 ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குளித்தலை திமுக நகரச் செயலர் தேர்வு

Posted: 29 Nov 2014 12:28 PM PST

குளித்தலை திமுக நகர செயலராக முன்னாள் எம்எல்ஏ இரா. மாணிக்கம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 29 Nov 2014 12:28 PM PST

தான் பிறந்த குடியின் பெருமையை மனத்தில் கொண்டிருத்தல் வேண்டும்; தன்னைக் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தியிருத்தல் வேண்டும்; மற்றவர் கருதிப் பாராட்டும்படி தொண்டாற்றுதல் வேண்டும்; "இவர் இறந்தொழிய மாட்டாரா' என்று மற்றவரால் எண்ணப்படாது வாழ்தல் வேண்டும்; கற்றறிந்த சான்றோரால் "இவர் ஆண்டுபல வாழ்க' என வாழ்த்தும்படியாக வாழ்தல் வேண்டும்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted: 29 Nov 2014 12:27 PM PST

தொடரும் கடல் சீற்றத்தால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

யூரியா தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

Posted: 29 Nov 2014 12:27 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தட்டுப்பாடின்றி யூரியா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

"அங்கன்வாடி மையங்களில் 24,390 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்'

Posted: 29 Nov 2014 12:27 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் 24,390 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெண் தற்கொலை

Posted: 29 Nov 2014 12:26 PM PST

குன்னம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் டிச. 5-ல் மகாதீபம்

Posted: 29 Nov 2014 12:26 PM PST

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், 32-வது ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிச. 5-ல் நடைபெறுகிறது.

ஹாக்கி: மான்ட்போர்ட் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

Posted: 29 Nov 2014 12:26 PM PST

மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஹாக்கியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

சாலை விபத்தில் தம்பதி காயம்

Posted: 29 Nov 2014 12:25 PM PST

அரியலூர் அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தம்பதி காயமடைந்தனர்.

கம்பனில் முரண்

Posted: 29 Nov 2014 12:25 PM PST

கம்பர் கையாண்ட அணிகள் பல; உத்திகள் பல. முரண் தொடை என்ற ல்ஹழ்ஹக்ஹஸ்ரீற்ண்ர்ய் ஐக் கம்பர் பல பாடல்களில் கையாண்டுள்ளார்.

அரியலூர் அருகே வறுமை ஒழிப்புச் சங்க பணத்தை மோசடி செய்த பெண் மீது வழக்கு

Posted: 29 Nov 2014 12:25 PM PST

அரியலூர் அருகே கிராம வறுமை ஒழிப்புச் சங்கப் பணத்தை மோசடி செய்ததாக பெண் செயலர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Posted: 29 Nov 2014 12:25 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஜயங்கொண்டத்தில் 300 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா

Posted: 29 Nov 2014 12:25 PM PST

ஜயங்கொண்டத்தில் 300 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

மாநில அளவிலான யோகா போட்டி

Posted: 29 Nov 2014 12:24 PM PST

புதுக்கோட்டையில் மாவட்ட யோகா சங்கம், ரோட்டரி சங்கம், ஆத்மா யோகா மையம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவிலான யோகாசன போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன+.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted: 29 Nov 2014 12:24 PM PST

தொடரும் கடல் சீற்றத்தால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

ஆதீண்டு குற்றி: முத்திரைப் பதிவுகள் -17

Posted: 29 Nov 2014 12:24 PM PST

அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் போற்றி வாழ்ந்தனர் நம் முன்னோர். தொல் பழங்காலத்தில் ஆடுகளும், மாடுகளும்தான் பெருஞ்செல்வமாகத் திகழ்ந்தன.

நடத்துநரை தாக்கிய இருவர் கைது

Posted: 29 Nov 2014 12:24 PM PST

ஆலங்குடி அருகே தனியார் பேருந்து நடத்துநரை தாக்கிய இருவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

திருமயத்தில் "பெல்' ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 29 Nov 2014 12:24 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள பாரத மின்மிகு நிறுவன (பெல்) ஐஎன்டியுசி - தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை உண்ணாவிரதப் போ

கோரிக்கை நிறைவேறாவிட்டால் கூட்டுப் போராட்டம்

Posted: 29 Nov 2014 12:23 PM PST

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் விரைவில் கூட்டுப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கு. முருகன்.

முதல் பெண் ஆதீன அதிஷ்டானத்தில் குருபூஜை

Posted: 29 Nov 2014 12:23 PM PST

சமய, சமூகப்பணிகளை ஆற்றி நாட்டின் முதல் பெண் ஆதீனமாகத் திகழ்ந்த புதுக்கோட்டை சாயிமாதா சிவபிருந்தாதேவி ஆதீனத்தின் அதிஷ்டானத்தில் 16 -ஆம் ஆண்டு குருபூஜை விழா, அன்னதான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல் பங்க் அமைக்க இடம் ஆய்வு

Posted: 29 Nov 2014 12:23 PM PST

புதுக்கோட்டையில் கூட்டுறவுத் துறை மூலம் பெட்ரோல்,டீசல் விற்பனை மையம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்

ஊதியப் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு : காவலர் சஸ்பெண்ட்

Posted: 29 Nov 2014 12:23 PM PST

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊதியப்பட்டியல் தயாரித்ததில் முறைகேடு செய்ததாக காவலர் ஒருவர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விவசாயத் தொழிலாளர் சங்க கருத்தரங்கம்

Posted: 29 Nov 2014 12:22 PM PST

கந்தர்வகோட்டையில் தமிழக ஜனநாயக விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 29 Nov 2014 12:22 PM PST

குத்தாலம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

"நடுத்தர வயதினருக்கே இருதய நோய் பாதிப்பு'

Posted: 29 Nov 2014 12:21 PM PST

இருதய நோயால் வயதானவர்களைவிட நடுத்தர வயதினர்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட மாவட்ட அலுவலர் வீ.சி. சுபாஷ்காந்தி.

செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டம்

Posted: 29 Nov 2014 12:21 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பொதுமக்கள் சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் மழையால்கோயில் கோபுர பொம்மை விழுந்தது

Posted: 29 Nov 2014 12:20 PM PST

கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், நாதன்கோவில் ஜெகந்நாதப் பெருமாள் கோயில் கோபுரத்தில் உள்ள யாழி பொம்மை பெயர்ந்து விழுந்தது

அய்யம்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 29 Nov 2014 12:20 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவர் பிறந்த நாள் விழா: மத்திய அரசுக்கு நன்றி

Posted: 29 Nov 2014 12:20 PM PST

திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்படும் என அறிவித்த மத்திய அரசுக்கு தமிழ்த்தாய் அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

Posted: 29 Nov 2014 12:20 PM PST

தஞ்சாவூரில் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கராத்தே போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

"இன்று ஒரே நாளில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி'

Posted: 29 Nov 2014 12:19 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தொடங்கி வைக்க உள்ளார்.

பட்டுக்கோட்டையில் 44 மி.மீ. மழை

Posted: 29 Nov 2014 12:19 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 44 மி.மீ. மழை பெய்தது.

நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் தொடர் மழை

Posted: 29 Nov 2014 12:19 PM PST

தொடர் மழையால் நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் மக்கள் சனிக்கிழமை அவதிக்குள்ளாகினர்.

அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

Posted: 29 Nov 2014 12:18 PM PST

நாகை மாவட்டம், பொறையாறு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 6 பேரை கைது செய்த போலீஸார், 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

திருநள்ளாறு நளன் குளத்துக்கு கூடுதல் தண்ணீர் வசதி

Posted: 29 Nov 2014 12:18 PM PST

திருநள்ளாறு நளன் குளத்துக்கு தண்ணீர் விடுவதற்கு ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்குழாய் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Nov 2014 12:17 PM PST

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி அளிப்பு

Posted: 29 Nov 2014 12:17 PM PST

திருவாரூர் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தில் 500 பேருக்கு ரூ. 2.44 கோடியில் 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 29 Nov 2014 12:17 PM PST

திருவாரூர் அருகே லாரி மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆசிரியர் பல்கலைக்கழக தேர்வு:மயிலாடுதுறை மாணவி சிறப்பிடம்

Posted: 29 Nov 2014 12:17 PM PST

ஆசிரியர் பல்கலைக்கழகத் தேர்வில் மயிலாடுதுறை மாணவி அ. அனிதா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

தஞ்சை

Posted: 29 Nov 2014 12:16 PM PST

புதுக்கோட்டை

Posted: 29 Nov 2014 12:16 PM PST

இலவச மருத்துவ முகாம்

Posted: 29 Nov 2014 12:16 PM PST

ஆண்டிபட்டி அருகே ரெங்கநாதபுரத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருமண வீட்டில் திருநங்கைகள் மோதல்:ஒருவர் பலத்தகாயம்; 4 பேர் கைது

Posted: 29 Nov 2014 12:16 PM PST

தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் சோனா கார்டன் பகுதியில் திருமண நிகழ்ச்சியில் இரண்டு திருநங்கைகள் கும்பலினர் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை விதிகளைக் கடைப்பிடித்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து பாராட்டு

Posted: 29 Nov 2014 12:16 PM PST

தேசியத் தலைநகர் வலயம், நோய்டாவில் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்த வாகன ஓட்டுநர்களுக்கு போலீஸார் சிகப்பு ரோஜா பூ கொடுத்து பாராட்டினர். அதே சமயம், ஹெல்மட் அணியாமல் சென்றவர்களுக்கு இலவச ஹெல்மட் கொடுத்து வாகன ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பினர்.

பணியிடமாறுதல் வேண்டி லஞ்சம் கொடுத்த வழக்கு: ஐ.ஆர்.எஸ். அதிகாரி உள்பட மூவர் விடுதலை

Posted: 29 Nov 2014 12:16 PM PST

பணியிடமாறுதல் செய்வதற்காக லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தொடர்ந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் தொடர்புடைய ஐ.ஆர்.எஸ். அதிகாரி உள்பட மூவரை விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிநெறி விளக்கம்

Posted: 29 Nov 2014 12:06 PM PST

தம்மால் செய்து முடிப்பதற்கு இயலாத செயல்களை "யாம் செய்வோம்' என்று சிலர் சொல்லளவில் கூறுவர்.

ஆம் ஆத்மியில் கிராமப்புற பிரிவு தொடக்கம்

Posted: 29 Nov 2014 12:02 PM PST

ஆம் ஆத்மி கட்சியில் கிராமப்புறப் பிரிவு சனிக்கிழமை தொடங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தொடங்கி வைத்தார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் பாஜக தீவிரம்

Posted: 29 Nov 2014 12:02 PM PST

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 29 Nov 2014 12:02 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியின் 13 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

விவசாய களத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 29 Nov 2014 12:02 PM PST

போடி அருகே விவசாயிகள் பயன்படுத்தும் களத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

Posted: 29 Nov 2014 12:02 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதேச காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆக்கப்பூர்வமாக நடைபெற வேண்டும்: தமிழிசை

Posted: 29 Nov 2014 11:46 AM PST

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆக்கப்பூர்வமான கூட்டமாக நடைபெற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் நமது நட்பு நாடல்ல: வி.கே.சிங்

Posted: 29 Nov 2014 11:43 AM PST

பாகிஸ்தான் நமது அண்டை நாடு தானே தவிர, நமது நட்பு நாடல்ல என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். இந்தியா அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொள்ள விரும்பினாலும் உரிய பாதுகாப்பை பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

Posted: 29 Nov 2014 11:41 AM PST

உலகளவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகமாகக் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கி வரும் வேளையில், கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்; அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து தரப்பினருக்கும் கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™