Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 22.11.1994;ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற ஜோதிபாசு அழைப்பு

Posted: 21 Nov 2014 12:19 PM PST

மதீரா, நவ.21- "இ. காங்கிரஸ் தனது பிற்போக்குக் கொள்கைகளைக் கைவிடாது. எனவே காங்கிரஸ் அரசைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு ஆந்திர மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விளையாட்டு வானில் விடிவெள்ளி

Posted: 21 Nov 2014 12:16 PM PST

உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறிய நாடுகள் எல்லாம் பதக்கப் பட்டியலில் முன்னணியில் நிற்கும்போது, செறிவான மனிதவளமும், இளைஞர் சக்தியும் மிக்க நமது இந்தியா மட்டும் பின்தங்கியே இருக்கிறது.

சீனாவிடம் எச்சரிக்கை வேண்டும்!

Posted: 21 Nov 2014 12:15 PM PST

ரோம் நகரம் பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்பது வரலாறு. வரலாறு திரும்பும் என்பார்கள்.

தொடக்கம்தான், முடிவல்ல...

Posted: 21 Nov 2014 12:13 PM PST

அரசியல் கலவாமல் எழுகின்ற மனிதாபிமானக் குரலும், மத்திய, மாநில அரசுகளின் ஆத்மார்த்தமான முயற்சிகளும் உறுதியான பலனைத் தரும் என்பதன் அடையாளம்தான் தற்போது இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வாருங்கள்

Posted: 21 Nov 2014 12:07 PM PST

சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென அமெரிக்காவின் தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹலே தலைமையிலான குழுவுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

த.மா.கா. பெயரில் புதிய கட்சி விண்ணப்பம்: தேர்தல் ஆணையத்தில் வாசன் ஆதரவாளர்கள் தாக்கல்

Posted: 21 Nov 2014 12:05 PM PST

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்கவுள்ள கட்சிக்கு, "தமிழ் மாநில காங்கிரஸ்' (த.மா.கா.) பெயரிலேயே அனுமதி வழங்குமாறு, அவரது ஆதரவாளர்கள் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

குடியரசு தின சிறப்பு விருந்தினர் ஒபாமா

Posted: 21 Nov 2014 12:04 PM PST

இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்கிறார்.

69% இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: விசாரணை டிசம்பர் 1-க்கு ஒத்திவைப்பு

Posted: 21 Nov 2014 12:03 PM PST

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழக மாணவர்கள் சாஹித்யா, கணபதி நாராயணன் ஆகிய இருவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் 10 நாள்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, இரு மாணவர்களின் மனு மீதான விசாரணையை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தமிழ் வளர்ச்சிக்கு உதவ பெய்ஜிங் பல்கலை. குழுத் தலைவரிடம் தருண் விஜய் வேண்டுகோள்

Posted: 21 Nov 2014 12:02 PM PST

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து தமிழ் மொழித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று சீனாவில் உள்ள பெய்ஜிங் (பீகிங்) பல்கலைக்கழகக் குழுத் தலைவர் ஜூ ஷான்லுவிடம் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.

அதானி குழுமத்துக்கு கைமாறு செய்கிறது மோடி அரசு: சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு

Posted: 21 Nov 2014 12:00 PM PST

பாரத ஸ்டேட் வங்கி ரூ.6,200 கோடி கடன் வழங்குவதன் மூலம், அதானி குழுமத்துக்கு நரேந்திர மோடி அரசு கைமாறு செய்வதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம்சாட்டினார்.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: சேலம், தருமபுரி மாவட்ட ஆட்சியர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Posted: 21 Nov 2014 11:59 AM PST

தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த இரண்டு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஆகியோருக்கு தில்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மக்களவையில் கார்கேவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை

Posted: 21 Nov 2014 11:35 AM PST

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி புத்தகக் கண்காட்சி நிறைவு விழா

Posted: 21 Nov 2014 11:35 AM PST

சாகித்திய அகாதெமியின் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நிறைவு விழா நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை

Posted: 21 Nov 2014 11:35 AM PST

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து, குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 120.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை

மிசோரத்தில் நிலநடுக்கம்

Posted: 21 Nov 2014 11:33 AM PST

மிசோரம் மாநிலத்தில் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.

குடிமையியல் பணித் தேர்வுக்கு வயது வரம்பை குறைப்பதா?

Posted: 21 Nov 2014 11:32 AM PST

குடிமையியல் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பை அடுத்த ஆண்டு முதல் குறைக்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வலிமையைக் காட்ட தயாராக வேண்டும்: பிரணாப்

Posted: 21 Nov 2014 11:31 AM PST

தேவைப்படும் போது, இந்தியாவின் வலிமையை எதிரிகளுக்கு காட்டத் தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சீட்டு நிதி மோசடி: ஒடிஸா ஜன மோர்ச்சா எம்.பி.யிடம் சிபிஐ விசாரணை

Posted: 21 Nov 2014 11:31 AM PST

ஒடிஸா சீட்டு நிதி மோசடி தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும், ஒடிஸா ஜன மோர்ச்சா தலைவருமான பியாரிமோகன் மொஹபத்ராவிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கருப்புப் பணத்தால் உலக அமைதி சீர்குலையும்: மோடி

Posted: 21 Nov 2014 11:30 AM PST

கருப்புப் பணத்தால் உலக அமைதி சீர்குலையும் என்று எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தீமையை எதிர்த்து கூட்டாகப் போராட வேண்டிய கடமை ஜனநாயக நாடுகளுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

ஹைதராபாத் விமான நிலைய பெயர் மாற்றத்தை ஆட்சேபித்து தெலங்கானா பேரவை தீர்மானம்

Posted: 21 Nov 2014 11:27 AM PST

தெலங்கானா அரசைக் கலந்தாலோசிக்காமல், ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்துக்கு என்.டி.ராமாராவின் பெயரைச் சூட்டுவதற்கு அதிருப்தி தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரியில் தடுப்பணைகள் அவசியம்: மத்திய அமைச்சர் அனந்த்குமார்

Posted: 21 Nov 2014 11:26 AM PST

"குடிநீர்த் தேவைக்காக காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்டுவது அவசியம். குடிநீர்த் திட்டத்துக்காக தடுப்பணைகள் கட்டும் கர்நாடகத்தின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிப்பது சரியல்ல' என்று மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் அனந்த்குமார் கூறினார்.

லடாக்கிற்கு யூனியன் பிரதேச அந்தஸ்து: ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 21 Nov 2014 11:24 AM PST

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸூடன் மென்மையான போக்கைக் கையாளுகிறதா சிவசேனை?

Posted: 21 Nov 2014 11:23 AM PST

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு ஆதர்ஷ் ஊழல் வழக்கில் விரைவில் நிவாரணம் கிடைக்காது என்பது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் 61 இந்திய மீனவர்கள் கைது

Posted: 21 Nov 2014 11:23 AM PST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 61 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களது 11 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

வசதி படைத்தவர்களுக்கு எரிவாயு மானியத்தை ரத்து செய்ய பரிசீலனை: அருண் ஜேட்லி

Posted: 21 Nov 2014 11:22 AM PST

வசதி படைத்தவர்களுக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி: மேலும் ஒரு திரிணமூல் எம்.பி. கைது

Posted: 21 Nov 2014 11:21 AM PST

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட, திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சிருஞ்ஜய் போஸை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

எம்.எஸ். தீர், ஹரீஷ் கண்ணா பாஜகவில் இணைந்தனர்

Posted: 21 Nov 2014 11:13 AM PST

தில்லியில் "ஆம் ஆத்மி' கட்சி ஆட்சியில் இருந்த போது சட்டப்பேரவைத் தலைவராக இருந்த எம்.எஸ். தீர், திமர்பூர் எம்எல்ஏ ஹரிஷ் கண்ணா ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர்.

கருப்புப் பணத்தால் உலக அமைதி சீர்குலையும்

Posted: 21 Nov 2014 11:13 AM PST

கருப்புப் பணத்தால் உலக அமைதி சீர்குலையும் என்று எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் தீமையை எதிர்த்து கூட்டாகப் போராட வேண்டிய கடமை ஜனநாயக நாடுகளுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் கைவினைப் பொருள் அரங்கு!

Posted: 21 Nov 2014 11:13 AM PST

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் தேசிய கைவினைப் பொருள்கள் அரங்கு பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

"முதியோர் நலன்களைப் பாதுகாப்போம்

Posted: 21 Nov 2014 11:12 AM PST

முதியோர் நலன்களைப் பாதுகாக்கும் கடமை சமூகத்துக்கு உள்ளது என்று தில்லி அரசின் சமூக நலத் துறை செயலாளர் சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநில இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

Posted: 21 Nov 2014 11:12 AM PST

தலைநகரில் கடந்த 48 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவமாக, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

"குதிரை தோன்றிய இடம் இந்திய துணைக் கண்டம்'

Posted: 21 Nov 2014 11:09 AM PST

குதிரையும் காண்டாமிருகமும் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றின என்று அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

கயத்தாறில் விழிப்புணர்வுப் பேரணி, புத்தகக் கண்காட்சி

Posted: 21 Nov 2014 11:09 AM PST

கயத்தாறு அரசு கிளை நூலகம் சார்பில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் புத்தகக் கண்காட்சி கயத்தாறு கிளை நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகை திருட்டு வழக்கு: இளைஞர் கைது

Posted: 21 Nov 2014 11:08 AM PST

கோவில்பட்டியையடுத்த முடுக்கலான்குளத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்க நகை மற்றும் செல்போன்களை திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பேட்டரி திருட்டு: ஒருவர் கைது

Posted: 21 Nov 2014 11:08 AM PST

கோவில்பட்டி பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் பேட்டரியை திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு

Posted: 21 Nov 2014 11:07 AM PST

சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து ஊராட்சி ஒன்றிய தாற்காலிக பணியாளர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்: 8 பயங்கரவாதிகள் சாவு

Posted: 21 Nov 2014 11:07 AM PST

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பழங்குடியினப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட உள்ளாட்சிப் பணியாளர்கள்

Posted: 21 Nov 2014 11:07 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 21 Nov 2014 11:07 AM PST

ஸ்ரீவைகுண்டம் ராஜபதி கோயிலில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நைஜீரியா: பயங்கரவாதிகளால் 45 பேர் சுட்டுக் கொலை

Posted: 21 Nov 2014 11:07 AM PST

நைஜீரியாவின் கிராமம் ஒன்றில் போகோ ஹராம் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இளைஞரை மிரட்டி நகை, பணம் பறிப்பு: இருவர் கைது

Posted: 21 Nov 2014 11:07 AM PST

ஓட்டப்பிடாரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்றிருந்த இளைஞரை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்ததாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அகில இந்திய டென்னிஸ் போட்டி: அரசு ஊழியர்களுக்கு அழைப்பு

Posted: 21 Nov 2014 11:07 AM PST

போபாலில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான டென்னிஸ் போட்டியில் பங்கேற்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போராட்ட நினைவு நாள்: அமெரிக்க துணை அதிபர் உக்ரைன் பயணம்

Posted: 21 Nov 2014 11:06 AM PST

உக்ரைனில், ரஷிய ஆதரவு அரசுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியதன் முதலாம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படும் நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் அந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்.

மீனவர்கள் கடலுக் தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை

Posted: 21 Nov 2014 11:06 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மழை கொட்டித் தீர்த்தது. வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

2014-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் "மங்கள்யான்': "டைம்' இதழ் புகழாரம்

Posted: 21 Nov 2014 11:06 AM PST

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "டைம்' இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் மிகச் சிறந்த 25 கண்டுபிடிப்புகளின் பட்டியலில் இந்தியாவின் "மங்கள்யான்' இடம்பெற்றுள்ளது.

காயல்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

Posted: 21 Nov 2014 11:05 AM PST

காயல்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு

Posted: 21 Nov 2014 11:04 AM PST

செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் சவூதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணிபுரிய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஸூக்கு எதிராக "உண்மையான' கூட்டணி தேவை

Posted: 21 Nov 2014 11:04 AM PST

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை வீழ்த்த, அவர்களுக்கு எதிராக "உண்மையான' கூட்டணி அமைய வேண்டும் என சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் வியாழக்கிழமை கூறியுள்ளார்.

திருப்பத்தூர் ஒன்றியக்குழு கூட்டம்: உறுப்பினர்கள் புறக்கணிப்பு

Posted: 21 Nov 2014 11:03 AM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டத்தினை பல்வேறு புகார்கள் கூறி உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு செய்தனர்.

சிவகங்கையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 21 Nov 2014 11:03 AM PST

தமிழ்நாடு தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை, நகர் போக்குவரத்து காவல்துறை ஆகியவை சார்பில் சிவகங்கை மதுரைமுக்குப் பகுதியில் வியாழக்கிழமை சாலைப்

மாவட்டச் செயலரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற திமுகவினர்

Posted: 21 Nov 2014 11:03 AM PST

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனின் உருவ பொம்மையை திமுகவினர் எரிக்க முயன்றனர்.

திருப்பத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலர் தேர்வு

Posted: 21 Nov 2014 11:03 AM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்பம் மகாலில் நடைபெற்றது.

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ஆந்திரத்தைச் சேர்ந்தவரிடம் ரூ.4லட்சம் மோசடி

Posted: 21 Nov 2014 11:02 AM PST

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரிடம் லண்டனுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.4லட்சம் மோசடி செய்ததாக, ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையைச் சேர்ந்த வரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நவ.25 ராமநாதபுரத்தில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு

Posted: 21 Nov 2014 11:02 AM PST

ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இம்மாதம் 25 ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக எஸ்.பி.மயில்வாகனன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நவ.26 மந்திவலசையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்

Posted: 21 Nov 2014 11:02 AM PST

பரமக்குடி அருகே உள்ள மந்திவலசை கிராமத்தில் நவம்பர் 26-ம் தேதி மக்கள் தொடர்புத் திட்ட முகாம் உதவி ஆட்சியர் சு.சமீரன் தலைமையில் நடைபெற உள்ளது.

வெளிநாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது: மீனவர் பேரவை

Posted: 21 Nov 2014 11:01 AM PST

ஆழ்கடல் மீன்பிடிப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் மீன் பிடிக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக மீனவர் தினம் தொடர்பான கூட்டத்தில் மீனவர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நவ.25 ராமநாதபுரத்தில்மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 21 Nov 2014 11:01 AM PST

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் கு.யோகானந்தன் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர், நடத்துநர் பணிக்காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

Posted: 21 Nov 2014 11:01 AM PST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் காரைக்குடி கிளைக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 4 பேருக்கு டிச.5 வரை காவல் நீட்டிப்பு

Posted: 21 Nov 2014 11:00 AM PST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலிருக்கும் தமிழக மீனவர்கள் 24 பேருக்கும் டிசம்பர் 5 வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து மீனவர்களை போலீஸார் மீண்டும் சிறையில்

பரமக்குடி வைகை ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Posted: 21 Nov 2014 11:00 AM PST

பரமக்குடி எமனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வைகை ஆற்றுப் பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவம்பர் 22 மின் தடை

Posted: 21 Nov 2014 11:00 AM PST

ராமநாதபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை (நவ.22) காலை 9 மணி முதல் மதியம் 5.30 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமுமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 21 Nov 2014 10:59 AM PST

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாகம்பிரியாள் கோயில் உண்டியலில் ரூ.15 லட்சம் காணிக்கை

Posted: 21 Nov 2014 10:59 AM PST

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில் தங்கம், வெள்ளி, ரொக்கம் உள்பட ரூ.15 லட்சம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்து மோதி மின் கம்பங்கள் சாய்ந்தன

Posted: 21 Nov 2014 10:59 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின்நிலையம் அருகே ஆந்திர மாநில பக்தர்கள் வந்த பேருந்து மோதி மின்கம்பங்கள் சாய்ந்தன.

அதிபர் தேர்தல்: ராஜபட்சவை எதிர்த்து போட்டியிட அமைச்சர் திடீர் முடிவு

Posted: 21 Nov 2014 10:59 AM PST

இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா, ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக எதிர்க் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

கிழவனேரியில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 21 Nov 2014 10:58 AM PST

முதுகுளத்தூர் அருகே பிரபக்களூர் குரூப், காக்கூர் பிர்காவைச் சேர்ந்த கிழவனேரியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் சாதனை

Posted: 21 Nov 2014 10:58 AM PST

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தனித்திறன் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி கல்விக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டி கெüரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீபுஷ்பவனேசுவரர் கோயிலில் பிரதோஷ விழா

Posted: 21 Nov 2014 10:58 AM PST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேசுவரர் சமேத செüந்தரநாயகியம்மன் கோயிலில் கார்த்திகை மாத முதல் பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் திமுக நகர நிர்வாகிகள் தேர்வு

Posted: 21 Nov 2014 10:57 AM PST

சிவகங்கையில் திமுக நகர நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையாளராக தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி பொன் சீனிவாசன்,

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் காரைக்குடியில் அதிமுக கொண்டாட்டம்

Posted: 21 Nov 2014 10:57 AM PST

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை வெள்ளிக்கிழமை எட்டியதைக் கொண்டாடும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுகவினர் அண்ணா சிலை அருகே வெடி, வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

மானாமதுரை பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவ திட்டம்

Posted: 21 Nov 2014 10:57 AM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்தில் பயணிகளின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நிறுவுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இத் தகவலை மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் அமானுல்லா தெரிவித்தார்.

நவ. 25 காரைக்குடியில்மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 21 Nov 2014 10:57 AM PST

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சிவகங்கை மின் பகிர்மான வட்டம் சார்பில் காரைக்குடி கோட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 25) மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

அமெரிக்க குடியேற்றச் சட்டத்தில் திருத்தம்: ஒபாமா அறிவிப்பு; இந்தியர் பயனடைவர்

Posted: 21 Nov 2014 10:57 AM PST

அமெரிக்க குடியேற்றச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை அதிபர் பராக் ஒபாமா வியாழக்கிழமை அறிவித்தார்.

மாரந்தை கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 21 Nov 2014 10:57 AM PST

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் பிர்க்கா மாரந்தை கிராம கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் கிராமமக்கள் மனு அளித்தனர். சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன்

கலை இலக்கியப் போட்டி: பிரான்மலை பள்ளி தகுதி

Posted: 21 Nov 2014 10:56 AM PST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை வள்ளல்பாரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலை இலக்கிய போட்டியில் வருவாய் மாவட்ட அளவில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

2015 - 2016 நிதியாண்டில் ரூ. 4,535 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு

Posted: 21 Nov 2014 10:56 AM PST

சிவகங்கை மாவட்டத்தில் 2015 - 2016 நிதியாண்டில் வங்கிகள் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத் தொழில்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 535 கோடி அளவிற்கு முன்னுரிமைக்கடன் வழங்கத்

முழு கொள்ளளவில் தொடர்ந்து மஞ்சளாறு அணை

Posted: 21 Nov 2014 10:55 AM PST

மஞ்சளாறு அணையில் கடந்த 36 நாள்களாக அணையின் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதித் திட்ட அறிமுகக் கூட்டம்

Posted: 21 Nov 2014 10:55 AM PST

பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்ட அறிமுகக் கூட்டம் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

ஆண்டிபட்டி அருகே சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?

Posted: 21 Nov 2014 10:54 AM PST

ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில், திம்மரசநாயக்கனூர் அருகே சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி அருகே "அம்மா' திட்ட முகாம்

Posted: 21 Nov 2014 10:54 AM PST

போடி குரங்கனி மலை கிராமத்தில் நடைபெற்ற 2ஆம் கட்ட அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இணைய தளம் மூலம் வேலை வாய்ப்பை பதிய வசதி

Posted: 21 Nov 2014 10:54 AM PST

தேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுகள் இணைய தளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பதிவுதாரர்கள் அலுவலகத்துக்கு செல்லத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணல் பறிமுதல்

Posted: 21 Nov 2014 10:54 AM PST

மலை கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மிளகாய்ப் பொடி தூவி மூதாட்டியிடம் 12 சவரன் சங்கிலி பறிப்பு

Posted: 21 Nov 2014 10:54 AM PST

கம்பத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 12 சவரன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை வடக்கு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

நத்தத்தில் தேசிய நூலக வார விழா

Posted: 21 Nov 2014 10:53 AM PST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கிளை நூலகத்தில் 47ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மக்களவை உறுப்பினர் ஆய்வு

Posted: 21 Nov 2014 10:53 AM PST

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் செய்துதரவேண்டிய வசதிகள் குறித்து தொழில்வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் தென்காசி மக்களவை உறுப்பினர் வசந்திமுருகேசன் ஆலோசனை நடத்தி, ரயில் நிலையத்தையும் பார்வையிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடிய மூவர் கைது

Posted: 21 Nov 2014 10:53 AM PST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மான் வேட்டையாடியதாக மூவரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பசுமைப்படை ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி

Posted: 21 Nov 2014 10:52 AM PST

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் பசுமைப்படை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி நடைபெற்றது.

குடிமைப்பணி முதல் நிலை பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு

Posted: 21 Nov 2014 10:52 AM PST

சென்னையில் உள்ள தமிழக அரசின் குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்நிலை பயிற்சிக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு வருகிற 23-ஆம் தேதி நடை

பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி: 267 புள்ளிகள் உயர்வு

Posted: 21 Nov 2014 10:52 AM PST

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் பெரும் எழுச்சி காணப்பட்டு 267 புள்ளிகள் உயர்வு பெற்றது.

கோயிலில் மணி திருடிய இருவர் கைது

Posted: 21 Nov 2014 10:52 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலில் வெண்கல மணிகளைத் திருடிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தீக்காயமடைந்த பெண் சாவு

Posted: 21 Nov 2014 10:52 AM PST

சிவகாசி அருகே சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

திருச்சியில் நாளை முன்னாள் படைவீரர் திரள் அணி முகாம்

Posted: 21 Nov 2014 10:51 AM PST

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் திரள் அணி முகாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக தகுதித் தேர்வில் 78 பேர் தேர்ச்சி

Posted: 21 Nov 2014 10:51 AM PST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பல்கலைக்கழகப் பதிவாளர் எம். ரவிச்சந்திரன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

மின் துறையில் நிலவும் சவாலான சூழல்கள் விரைவில் முடிவுக்கு வரும் மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே

Posted: 21 Nov 2014 10:51 AM PST

மின் துறையில் நிலவும் சவால் நிறைந்த சூழல்கள் விரைவில் முடிவுக்கு வரும், தொழில் துறைக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்றார் மத்திய கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சர் ஆனந்த் கீதே.

மாதக் கணக்கில் துக்கம் அனுசரிக்க வேண்டியதில்லை, மறந்துவிடுங்கள் :ஈவிகேஎஸ். இளங்கோவன்

Posted: 21 Nov 2014 10:51 AM PST

மாதக் கணக்கில் துக்கம் அனுசரிக்க வேண்டியதில்லை, மறந்துவிடுங்கள் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

எம்பி ப. குமார் தத்தெடுத்த ஊராட்சி தாயனூரில் குஜராத் மாதிரி கிராம பிரதிநிதி ஆய்வு

Posted: 21 Nov 2014 10:51 AM PST

திருச்சி மக்களவை உறுப்பினர் ப. குமார் தத்தெடுத்துள்ள தாயனூர் ஊராட்சியில் குஜராத்தில் மாதிரி கிராமப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தைச் சேர்ந்த விஜய் திவாரி வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிஎஸ்என்எல் கேபிள் இணைப்புகள் சிதைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 21 Nov 2014 10:51 AM PST

திருச்சி கொள்ளிடம் பாலப்பணிகளின்போது பிஎஸ்என்எல் கேபிள் இணைப்புகள் சிதைக்கப்பட்டதைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிளவக்கல் அணையை பாசனத்துக்கு திறக்க வலியுறுத்தி போராட்டம்

Posted: 21 Nov 2014 10:51 AM PST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பிளவக்கல் அணையை பாசனத்திற்கு திறந்து விட வலியுறுத்தி வத்திராயிருப்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 21 Nov 2014 10:51 AM PST

கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் கல்வியியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

கொட்டாரம் அக்ரோ ஃபுட்ஸ்: கேழ்வரகு உணவு வகைகள் அறிமுகம்

Posted: 21 Nov 2014 10:51 AM PST

"கொட்டாரம் அக்ரோ ஃபுட்ஸ்' நிறுவனத்தின் சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த கேழ்வரகு மூலம் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் "சோல்ஃபுல்' என்ற பெயரில் சென்னையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™