Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலங்கைச் சிறையிலுள்ள தமிழர்களை விடுதலை செய்யக் கோரி தீர்மானம்
- லோக்பால் சட்டத் திருத்தம்: ஆம் ஆத்மி எதிர்ப்பு
- குஜராத் கலவரம்: போதுமான ஆதாரம் இல்லாததால் மோடியை விசாரிக்கவில்லை: நீதிபதி நானாவதி
- 50 பேர் ரத்த தானம்
- "அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை
- தொழிலாளிக்கு தள்ளு வண்டி: எம்.எல்.ஏ. வழங்கினார்
- அன்னை தெரசா கல்லூரியில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு
- வ.உ.சி. நினைவு தினம்
- வேளாண் துறையினர் 22-ல் தூய்மைப் பணி
- பெங்களூரு
- ஈரோடு
- கோவை
- நடிகர் சங்கத்தைவிட்டு நீக்கினால் கவலையில்லை: விஷால்
- இனிப்பு வழங்கி உறவினர்கள் கொண்டாட்டம்
- மீனவர்கள் விடுதலை: தலைவர்கள் வரவேற்பு
- முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்னைகளில் அதிமுக அரசு முறையாகச் செயல்படுகிறது: வைகோ
- ஆய்வாளரைக் கத்தியால் குத்தி போலீஸ் வாகனம் கடத்தல்
- தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: பாஜக
- தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மரணம்: தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை: கருணாநிதி
- ராமச்சந்திராவில் தழும்பில்லாத தைராய்டு அறுவைச் சிகிச்சை
- ஊஞ்சலூரில் விரைவு ரயில்கள் தாற்காலிக நிறுத்தம்
- சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு முடிவு வெளியீடு
- இன்று பாமக செயற்குழுக் கூட்டம்
- சேலம் மருத்துவரின் சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
- காளையார்கோவில் கோபுரத்தில் தீ: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- முல்லைப் பெரியாறு அணையில் அத்துமீறல்: பொறியாளர் சங்கம் கண்டனம்
- சிவன் கோயிலில் ஆன்மிக இசையுரை
- ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டம்
- இந்த நாளில் அன்று 20.11.1993; பவார் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி
- ஆண்ட்ராய்டும் விண்டோஸூம்
- அணை நிரம்பியது; பொய்மை தோற்றது!
- தெரிந்தால்தான் என்ன?
- மோடியின் அடுத்த இலக்கு இலங்கை! கச்சத்தீவு மீட்கப்படுமா?
- மாவட்ட மைய நூலகத்தில் பட்டிமன்றம்
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க நிர்வாகிகள் தேர்வு
- பள்ளியில் கழிப்பறை தினத்தையொட்டி விழிப்புணர்வு
- 81 ஐடிஐ மாணவர்கள் ரத்த தானம்
- இறைச்சிக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் உரிமம் ரத்து
- அறிவியல் கண்காட்சி: காந்தி நகர் பள்ளி சிறப்பிடம்
- திமுக மாணவரணி சார்பில் துண்டுப் பிரசுரம்
- புதுக்கோட்டை
- 2ஜி: கூடுதல் சாட்சியங்களை விசாரிக்க தில்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி
- மத்தியில் பாஜக ஆட்சியால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
- முக்கியத் துறைகளின் திட்டங்களை மதிப்பிட புரிந்துணர்வு ஒப்பந்தம்
- வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை
- "லிங்கா' கதை விவகாரம்: எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சதி: ரஜினிகாந்த்
- நடிகர் விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை
- ஐஐடி முன்னாள் மாணவிக்கு ஜெர்மனியின் "பசுமை புத்திசாலி' விருது
- ஃபிஜிக்கு ரூ.495 கோடி கடனுதவி: மோடி
- சென்னை உரத் தொழிற்சாலையை இயக்க நடவடிக்கை: இல.கணேசனிடம் மத்திய அமைச்சர் அனந்த்குமார் உறுதி
- நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் விரைவில் திருத்தம்
- புறக்கணிக்கப்படும் ஊர்ப்புற நூலகங்கள்
- திண்டுக்கல் மைய நூலகத்தில் மாதாந்திரக் கூட்டம்
- வ.உ.சி. நினைவு தினம்
- விவசாயிக்கு மது கொடுத்து ரூ 1.85 லட்சம் திருடிய டாக்ஸி டிரைவர் கைது
- ஆண்டிபட்டியில் கார் மோதி ஒருவர் சாவு
- கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
- லாரி மோதி பெண் சாவு
- "எபோலா: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்'
- ஸ்ரீவிலி.யில் வழக்குரைஞர்கள் தொடர் உண்ணாவிரதம்
- "தாமிரவருணி குடிநீர்த் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்'
- மனித நேயம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்
- வாகன விபத்தில் சிறுவன் சாவு
- சிவகாசியில் 5.4 மி.மீ. மழை
- அஸ்ஸாம், அருணாசலுக்கு பிரணாப் 2 நாள் பயணம்
- திருமணம் செய்வதாகக் கூறி பெண் மானபங்கம்:காதலன் கைது
- சிவகாசியில் இரு குழந்தைகளுடன் தாய் மாயம்
- மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
- ராமேசுவரம் புனித தீர்த்தங்களை பாதுகாக்க கோரிக்கை
- ராமேசுவரம் கடலில் மூழ்கி மீனவர் சாவு
- கீழக்கரை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் ஒருவர் கைது
- மது குடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்
- டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
- காவிரியில் தடுப்பணைகள்: தமிழக அரசு வழக்கு தொடுத்தாலும் சந்திக்கத் தயார் - சித்தராமையா
- நவ.22-இல் நுகர்வோர் குறை தீர் கூட்டம்
- மானாமதுரையில் இளங்கோவனுக்கு வரவேற்பு
- தமிழக, கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு
- அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளுவதால் விவசாயம் பாதிப்பதாக புகார்
- தடுப்புச் சுவரில் பேருந்து மோதிய விபத்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்
- தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை
- பழனியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
- கால்நடை சிகிச்சை முகாம்
- செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
- தலைமைக் காவலரை தாக்கியவர் கைது
- நெடுஞ்சாலைத் துறை பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- ராஜபாளையம் பகுதி குளங்களுக்கு நீர் வரத்து குறைவு
- கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- கட்டட மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவர் சாவு
- இந்தியச் சிறுவனை ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்
- ஸ்ரீவிலி. நகருக்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும்:இந்திய கம்யூ. மாநாட்டில் தீர்மானம்
- 8 அடி ஆழ குழியில் விழுந்த பசு மீட்பு
- நிலக்கரிச் சுரங்க ஏலம்: பிப்ரவரியில் தொடங்குகிறது
- தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும்
- திருவாடானையில் இடிந்து விழும் நிலையில் அரசுக் குடியிருப்பு
- ஆசிரியர் நியமிக்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
- புத்தக வாசிப்பு விழிப்புணர்வுப் பேரணி: எஸ்.பி. துவக்கி வைத்தார்
- மின் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
- பரமக்குடி உணவகங்களில் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தொடர் வகுப்புகள்
- பெரியகுளத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
| இலங்கைச் சிறையிலுள்ள தமிழர்களை விடுதலை செய்யக் கோரி தீர்மானம் Posted: 19 Nov 2014 01:50 PM PST இலங்கைச் சிறையில் அரசியல் காரணங்களைக் கூறி, அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யக் கோரி அந்நாட்டின் வடக்கு மாகாண கவுன்சில் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| லோக்பால் சட்டத் திருத்தம்: ஆம் ஆத்மி எதிர்ப்பு Posted: 19 Nov 2014 01:49 PM PST லோக்பால் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| குஜராத் கலவரம்: போதுமான ஆதாரம் இல்லாததால் மோடியை விசாரிக்கவில்லை: நீதிபதி நானாவதி Posted: 19 Nov 2014 01:49 PM PST "குஜராத் கலவரம் தொடர்பாக, நரேந்திர மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவரை விசாரிக்கவில்லை' என்று நீதிபதி நானாவதி தெரிவித்தார். |
| Posted: 19 Nov 2014 01:46 PM PST புதுவையில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கழகத்தினர் புதன்கிழமை ரத்த தானம் வழங்கினர். |
| "அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை Posted: 19 Nov 2014 01:46 PM PST புதுவையில் உள்ள அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. |
| தொழிலாளிக்கு தள்ளு வண்டி: எம்.எல்.ஏ. வழங்கினார் Posted: 19 Nov 2014 01:46 PM PST புதுவையில் வேலையின்றி தவித்த தொழிலாளிக்கு அதிமுக எம்.எல்.ஏ. தள்ளு வண்டி வழங்கினார். புதுவை நெல்லித்தோப்பு பிள்ளைத்தோட்டம் ராஜய்யர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். கூலி |
| அன்னை தெரசா கல்லூரியில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு Posted: 19 Nov 2014 01:46 PM PST புதுவை கோரிமேடு அன்னை தெரசா செவிலியர் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக் கல்லூரியில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வுக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 19 Nov 2014 01:45 PM PST கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி, புதுவையில் புதிய நீதிக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| வேளாண் துறையினர் 22-ல் தூய்மைப் பணி Posted: 19 Nov 2014 01:45 PM PST புதுவையில் வேளாண்துறை சார்பில் சனிக்கிழமை (நவ.22) தூய்மைத் திட்டப் பணி மேற்கொள்கின்றனர். புதுவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி விழிப்புணர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், புதுவை வேளாண்துறையினர் தூய்மைப் பணியை நவம்பர் 22ஆம் தேதி காலை 7.30 |
| Posted: 19 Nov 2014 01:44 PM PST |
| Posted: 19 Nov 2014 01:44 PM PST |
| Posted: 19 Nov 2014 01:44 PM PST |
| நடிகர் சங்கத்தைவிட்டு நீக்கினால் கவலையில்லை: விஷால் Posted: 19 Nov 2014 01:36 PM PST நடிகர் சங்கத்தை விட்டு நீக்கினால் எனக்கு கவலையில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். |
| இனிப்பு வழங்கி உறவினர்கள் கொண்டாட்டம் Posted: 19 Nov 2014 01:33 PM PST மரண தண்டனை விதிக்கப்பட்ட, 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, அவர்களுடைய உறவினர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். |
| மீனவர்கள் விடுதலை: தலைவர்கள் வரவேற்பு Posted: 19 Nov 2014 01:31 PM PST இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். |
| முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்னைகளில் அதிமுக அரசு முறையாகச் செயல்படுகிறது: வைகோ Posted: 19 Nov 2014 01:30 PM PST முல்லைப் பெரியாறு அணை, காவிரி நதி நீர்ப் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அதிமுக அரசு முறையாகச் செயல்பட்டு வருகிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். |
| ஆய்வாளரைக் கத்தியால் குத்தி போலீஸ் வாகனம் கடத்தல் Posted: 19 Nov 2014 01:29 PM PST வேலூர் மாவட்டம், சென்னசமுத்திரம் சுங்கச் சாவடிப் பகுதியில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளரைக் கத்தியால் குத்தி போலீஸ் ஜீப்பைக் கடத்திச் சென்றதாக இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: பாஜக Posted: 19 Nov 2014 01:29 PM PST தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார். |
| Posted: 19 Nov 2014 01:27 PM PST தருமபுரி மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். |
| ராமச்சந்திராவில் தழும்பில்லாத தைராய்டு அறுவைச் சிகிச்சை Posted: 19 Nov 2014 01:25 PM PST இந்தியாவிலேயே முதல்முறையாக தழும்பில்லாத தைராய்டு அறுவைச் சிகிச்சை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. |
| ஊஞ்சலூரில் விரைவு ரயில்கள் தாற்காலிக நிறுத்தம் Posted: 19 Nov 2014 12:32 PM PST ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரில் சேஷாத்ரி சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை திருவிழா நடைபெறவுள்ளதால் ஜனவரி 1 முதல் 15 வரை முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாற்காலிகமாக ஒரு நிமிஷம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு முடிவு வெளியீடு Posted: 19 Nov 2014 12:31 PM PST சட்டக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. |
| இன்று பாமக செயற்குழுக் கூட்டம் Posted: 19 Nov 2014 12:30 PM PST சென்னையில் வியாழக்கிழமை (நவ.20) பாமகவின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. |
| சேலம் மருத்துவரின் சொத்துகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு Posted: 19 Nov 2014 12:30 PM PST சிறுநீரக மருத்துவருக்குச் சொந்தமான இரண்டு அசையாச் சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. |
| காளையார்கோவில் கோபுரத்தில் தீ: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 19 Nov 2014 12:29 PM PST காளையார்கோவில் கோயில் கோபுரத்தில் தீப்பற்றியது தொடர்பாக பதிலளிக்குமாறு, இந்து சமய அறநிலையத்துறைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
| முல்லைப் பெரியாறு அணையில் அத்துமீறல்: பொறியாளர் சங்கம் கண்டனம் Posted: 19 Nov 2014 12:28 PM PST முல்லைப் பெரியாறு அணையில் கேரள எம்.எல்.ஏ. அத்துமீறி நடந்து கொண்டதற்கு, தமிழ்நாடு பொதுப் பணித் துறை பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| Posted: 19 Nov 2014 12:26 PM PST கீழ்பென்னாத்தூர் சிவன் கோயிலின் மண்டலாபிஷேக விழாவையொட்டி, ஆன்மிக இசையுரை புதன்கிழமை நடைபெற்றது. |
| ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டம் Posted: 19 Nov 2014 12:26 PM PST செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஊராட்சி மன்றத் தலைவர்கள் புகார் தெரிவித்தனர். |
| இந்த நாளில் அன்று 20.11.1993; பவார் மீதான தேர்தல் வழக்கு தள்ளுபடி Posted: 19 Nov 2014 12:25 PM PST புதுதில்லி, நவ.19-மகாராஷ்டிரா முதலமைச்சர் சரத்பவார் மீதான தேர்தல் ஊழல் புகாரை உச்ச நீதிமன்றம் வெள்ளியன்று செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. |
| Posted: 19 Nov 2014 12:22 PM PST தற்போது கணினி உலகம், செல்போன்களிலேயே வந்துவிட்டது. தனக்குப் பிடித்தமான பாடல்களைப் பதிவு செய்து கேட்டு மகிழ்வதுடன், விடியோ மற்றும் வலைதளத்தைக் காண்பது, வலைதளம் மூலம் உரையாடல்களைப் பகிர்ந்துகொள்வது, விளையாட்டு உள்ளிட்ட தேவைக்கேற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் முன்பு கணினியில் மட்டுமே சாத்தியம். |
| அணை நிரம்பியது; பொய்மை தோற்றது! Posted: 19 Nov 2014 12:22 PM PST பெரியாறு அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மிகப் பழைமையான இந்த அணை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம். அவ்வாறு நேர்ந்தால் கேரளத்தில் உள்ள ஐந்து மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் பல இலட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்' என 1963-ஆம் ஆண்டில் மலையாள வாரஇதழ் ஒன்று முற்றிலும் பொய்யான செய்தியைப் பரப்பியது. |
| Posted: 19 Nov 2014 12:20 PM PST குதிரைப் பந்தயம் போல ஏழை எளிய மக்களின் பணத்தை அபகரிக்கும் சூதாட்டமல்ல ஐ.பி.எல். போட்டிகள் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்வதற்கில்லை. |
| மோடியின் அடுத்த இலக்கு இலங்கை! கச்சத்தீவு மீட்கப்படுமா? Posted: 19 Nov 2014 12:15 PM PST இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். |
| மாவட்ட மைய நூலகத்தில் பட்டிமன்றம் Posted: 19 Nov 2014 12:14 PM PST திரை இசைப்பாடல்களால் தமிழுக்கு வளர்பிறையா, தேய்பிறையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 19 Nov 2014 12:14 PM PST போளூர் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது. |
| பள்ளியில் கழிப்பறை தினத்தையொட்டி விழிப்புணர்வு Posted: 19 Nov 2014 12:09 PM PST கழிப்பறை தினத்தையொட்டி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. |
| Posted: 19 Nov 2014 12:09 PM PST செய்யாறில் நடைபெற்ற ரத்த தான முகாமில், ஐடிஐ மாணவர்கள் 81 பேர் புதன்கிழமை ரத்த தானம் செய்தனர். |
| இறைச்சிக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் உரிமம் ரத்து Posted: 19 Nov 2014 12:09 PM PST செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வார்டுகளில் உள்ள ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிக் கடை கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் கடை உரிமம் ரத்து செய்யப்படுமென பேரூராட்சி நிர்வாகம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| அறிவியல் கண்காட்சி: காந்தி நகர் பள்ளி சிறப்பிடம் Posted: 19 Nov 2014 12:08 PM PST திருவண்ணாமலை மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்தது. |
| திமுக மாணவரணி சார்பில் துண்டுப் பிரசுரம் Posted: 19 Nov 2014 12:08 PM PST வந்தவாசி நகர திமுக மாணவரணி சார்பில் துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| Posted: 19 Nov 2014 12:07 PM PST |
| 2ஜி: கூடுதல் சாட்சியங்களை விசாரிக்க தில்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி Posted: 19 Nov 2014 12:07 PM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட 5 பேரை கூடுதல் சாட்சிகளாக சேர்த்துக் கொள்ள சிபிஐக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. |
| மத்தியில் பாஜக ஆட்சியால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை Posted: 19 Nov 2014 12:06 PM PST மத்தியில் பாஜக ஆட்சியால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற மாநகர், மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: |
| முக்கியத் துறைகளின் திட்டங்களை மதிப்பிட புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 19 Nov 2014 12:05 PM PST பள்ளிக் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மதிப்பீடு செய்ய அமெரிக்காவில் உள்ள ஜமீல்-வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வகத்துடன் தமிழக அரசு புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. |
| வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழை Posted: 19 Nov 2014 11:46 AM PST வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தமிழகத்தில் வியாழக்கிழமை (நவமபர் 20) முதல் மீண்டும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| "லிங்கா' கதை விவகாரம்: எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சதி: ரஜினிகாந்த் Posted: 19 Nov 2014 11:42 AM PST ""லிங்கா' திரைப்படத்துக்கு கதையைத் திருடியதாகக் கூறி எனது பெயர்- புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். |
| நடிகர் விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை Posted: 19 Nov 2014 11:40 AM PST நடிகர் சங்கம் மீது தொடர்ந்து அவதூறு கிளப்பி வந்தால் சங்கத்திலிருந்து விஷால் நீக்கப்படுவார் என எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர். சரத்குமார். |
| ஐஐடி முன்னாள் மாணவிக்கு ஜெர்மனியின் "பசுமை புத்திசாலி' விருது Posted: 19 Nov 2014 11:39 AM PST சென்னை ஐஐடியில் படித்த ஃபெமீனா பண்டார வளப்பில்லை என்ற முன்னாள் மாணவிக்கு "பசுமை புத்திசாலி' விருது வழங்கி ஜெர்மனி கௌரவித்துள்ளது. |
| ஃபிஜிக்கு ரூ.495 கோடி கடனுதவி: மோடி Posted: 19 Nov 2014 11:38 AM PST ஃபிஜியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுக்கு ரூ.495 கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், ஃபிஜி உள்பட 14 பசிஃபிக் கடல் தீவு நாட்டுப் பிரஜைகளுக்கும் உடனடி விசா வசதியையும் அவர் அறிவித்தார். |
| சென்னை உரத் தொழிற்சாலையை இயக்க நடவடிக்கை: இல.கணேசனிடம் மத்திய அமைச்சர் அனந்த்குமார் உறுதி Posted: 19 Nov 2014 11:24 AM PST சென்னை உரத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனிடம் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அனந்த்குமார் உறுதியளித்தார். |
| நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் விரைவில் திருத்தம் Posted: 19 Nov 2014 11:23 AM PST நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார். |
| புறக்கணிக்கப்படும் ஊர்ப்புற நூலகங்கள் Posted: 19 Nov 2014 11:21 AM PST ஊர்ப்புற நூலகங்களில், ஒவ்வொரு ஆண்டும் போதிய நிதி வசதி இல்லாமல், நூலக வார விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| திண்டுக்கல் மைய நூலகத்தில் மாதாந்திரக் கூட்டம் Posted: 19 Nov 2014 11:21 AM PST திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்ட மாதாந்திரக் கூட்டம், நடைபெற்றது. கூட்டத்தில், வாசகர் வட்டத் தலைவர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். |
| Posted: 19 Nov 2014 11:20 AM PST வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| விவசாயிக்கு மது கொடுத்து ரூ 1.85 லட்சம் திருடிய டாக்ஸி டிரைவர் கைது Posted: 19 Nov 2014 11:20 AM PST கொடைக்கானலில் விவசாயிக்கு மது வாங்கிக் கொடுத்து ரூ. 1 லட்சத்து 85 ஆயிரத்தை திருடிய டாக்ஸி ஓட்டுநரை, போலீஸார் கைது செய்தனர். |
| ஆண்டிபட்டியில் கார் மோதி ஒருவர் சாவு Posted: 19 Nov 2014 11:20 AM PST ஆண்டிபட்டியில் சைக்கிளில் சென்றவர் மீது கார் மோதியதில், அவர் உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு Posted: 19 Nov 2014 11:19 AM PST சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டி அருகே, கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக, புதன்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சடலம் மீட்கப்பட்டது. |
| Posted: 19 Nov 2014 11:19 AM PST தேனியில், புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது லாரி மோதியதில், அவர் உயிரிழந்தார். |
| "எபோலா: பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்' Posted: 19 Nov 2014 11:19 AM PST இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், ""நிலைமை கட்டுக்குள் இருக்கிறது; நாட்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை'' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். |
| ஸ்ரீவிலி.யில் வழக்குரைஞர்கள் தொடர் உண்ணாவிரதம் Posted: 19 Nov 2014 11:19 AM PST ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதத்தை புதன்கிழமை தொடங்கினர். |
| "தாமிரவருணி குடிநீர்த் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்' Posted: 19 Nov 2014 11:19 AM PST தாமிரவருணி குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று ராஜபாளையம் நகர்குழு மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மனித நேயம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும் Posted: 19 Nov 2014 11:18 AM PST மனித நேயம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீ. ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். |
| Posted: 19 Nov 2014 11:18 AM PST விருதுநகர் அருகே நின்றிருந்த சரக்கு லாரி பின்புறம் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தான். |
| Posted: 19 Nov 2014 11:18 AM PST சிவகாசியில் செவ்வாய்க்கிழமை 5.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அதே நாளில் சாத்தூரில் 4 மி.மீ., |
| அஸ்ஸாம், அருணாசலுக்கு பிரணாப் 2 நாள் பயணம் Posted: 19 Nov 2014 11:18 AM PST அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை (நவ.20), வெள்ளிக்கிழமை (நவ.21) ஆகிய இரு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| திருமணம் செய்வதாகக் கூறி பெண் மானபங்கம்:காதலன் கைது Posted: 19 Nov 2014 11:18 AM PST விருதுநகர் அருகே, திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்த காதலனை போலீஸார் கைது செய்தனர். |
| சிவகாசியில் இரு குழந்தைகளுடன் தாய் மாயம் Posted: 19 Nov 2014 11:17 AM PST சிவகாசியில் இரு குழந்தைகளுடன் தாயை காணவில்லை என போலீஸில் புதன்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. |
| மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 19 Nov 2014 11:17 AM PST விருதுநகர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| ராமேசுவரம் புனித தீர்த்தங்களை பாதுகாக்க கோரிக்கை Posted: 19 Nov 2014 11:17 AM PST ராமேசுவரத்தில் கழிவு நீர் கலப்பதால், அழிந்து வரும் புனிதத் தீர்த்தங்களை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ராமேசுவரம் கடலில் மூழ்கி மீனவர் சாவு Posted: 19 Nov 2014 11:16 AM PST ராமேசுவரத்தில் புதன்கிழமை கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஏற்பட்ட பழுதை நீக்க முயன்ற, மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். |
| கீழக்கரை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் ஒருவர் கைது Posted: 19 Nov 2014 11:16 AM PST கீழக்கரை அருகே கோரைகூட்டம் பகுதியில் நடந்த ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில், தேடபட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். |
| மது குடிப்பதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் Posted: 19 Nov 2014 11:16 AM PST கடலாடி அருகே உள்ள சிறுகுடியைச் சேர்ந்தவர் செல்லமுத்து(29). இவர் மது அருந்தி கொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த தர்மர்(35) தட்டிக்கேட்டாராம். இதில் ஏற்பட்ட தகராறில், செல்லமுத்து இரும்பு |
| டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் Posted: 19 Nov 2014 11:16 AM PST பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் முழு சுகாதார தமிழகம், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் உலக கழிப்பறை தினம் புதன்கிழமை நடைபெற்றது. |
| காவிரியில் தடுப்பணைகள்: தமிழக அரசு வழக்கு தொடுத்தாலும் சந்திக்கத் தயார் - சித்தராமையா Posted: 19 Nov 2014 11:15 AM PST "குடிநீர்த் தேவைக்காக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக அரசு வழக்குத் தொடுத்தாலும், அதை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக உள்ளது' என்று மாநில முதல்வர் சித்தராமையா கூறினார். |
| நவ.22-இல் நுகர்வோர் குறை தீர் கூட்டம் Posted: 19 Nov 2014 11:14 AM PST தேவகோட்டை வட்டத்தில் அனைத்து எரிவாயு நுகர்வோர் குறைகளை களைவது தொடர்பாக, நுகர்வோர் குறை தீர் கூட்டம் சனிக்கிழமை (நவ.22) நடைபெறவுள்ளது. |
| மானாமதுரையில் இளங்கோவனுக்கு வரவேற்பு Posted: 19 Nov 2014 11:14 AM PST மானாமதுரை வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அக்கட்சியினர் வரவேற்பளித்தனர். |
| தமிழக, கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு Posted: 19 Nov 2014 11:14 AM PST தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பில் உள்ள கர்னல் பென்னி குவிக் நினைவு மண்டபத்துக்கு, புதன்கிழமை மதிமுக பொதுச் செயலர் வைகோ வருகை தந்ததை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையில் இரு மாநில |
| அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளுவதால் விவசாயம் பாதிப்பதாக புகார் Posted: 19 Nov 2014 11:13 AM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள வீலிநாயக்கன்பட்டி கடவாய்குறிச்சி மலை அருகே சித்திரகரட்டு கண்மாயில், தினமும் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளில் 50 லோடு வரை மண் |
| தடுப்புச் சுவரில் பேருந்து மோதிய விபத்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம் Posted: 19 Nov 2014 11:13 AM PST திண்டுக்கல்லில் புதன்கிழமை அதிகாலை சாலையின் தடுப்புச் சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நடத்துனர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். |
| தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை Posted: 19 Nov 2014 11:13 AM PST மதுரை நகைக் கடை ஊழியர்களிடம் 2 கிலோ தங்க நகைகள் பறித்துச் சென்ற 4 பேர் குறித்து, தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| பழனியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 19 Nov 2014 11:12 AM PST பழனியில் பால்விலை உயர்வு, விலைவாசி விலை உயர்வைக் கண்டித்து தே முதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 19 Nov 2014 11:12 AM PST 61ஆவது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| செவ்வந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி Posted: 19 Nov 2014 11:12 AM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதி தோட்டங்களில் சீசனை முன்னிட்டு, செவ்வந்தி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன |
| தலைமைக் காவலரை தாக்கியவர் கைது Posted: 19 Nov 2014 11:11 AM PST சாத்தூர் அருகே தலைமைக் காவலரை தாக்கியதாக ஒருவரை இருக்கன்குடி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| நெடுஞ்சாலைத் துறை பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 19 Nov 2014 11:11 AM PST விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை புதன்கிழமை அதிகாரிகளுடன் சென்று ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| ராஜபாளையம் பகுதி குளங்களுக்கு நீர் வரத்து குறைவு Posted: 19 Nov 2014 11:11 AM PST ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாததால் பெரும்பாலான கண்மாய்களில் நீர்வரத்து குறைந்தது. கிணறுகளிலும் நீர் ஊற்று இல்லாததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். |
| கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு Posted: 19 Nov 2014 11:11 AM PST சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடு போய் விட்டதாக புதன்கிழமை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| கட்டட மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 19 Nov 2014 11:11 AM PST சிவகாசியில் செவ்வாய்க்கிழமை கட்டட மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார். மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் அலெக்ஸ் பாண்டி (42). இவர் சிவகாசி- விஸ்வநத்தம் |
| இந்தியச் சிறுவனை ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம் Posted: 19 Nov 2014 11:10 AM PST இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் வழி தவறி சென்ற சிறுவனை, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது. |
| ஸ்ரீவிலி. நகருக்கு தினமும் குடிநீர் வழங்க வேண்டும்:இந்திய கம்யூ. மாநாட்டில் தீர்மானம் Posted: 19 Nov 2014 11:10 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, பேயனாற்று குடிநீர் திட்டத்தை சீர் செய்து, தாமிரபரணி குடிநீர் திட்டத்தோடு இணைத்து நகர் மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| 8 அடி ஆழ குழியில் விழுந்த பசு மீட்பு Posted: 19 Nov 2014 11:10 AM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மின் வாரியத்தினர் தோண்டிய குழியில் புதன்கிழமை விழுந்த பசுவை தீயணைப்புப் படையினர் மீட்டனர். |
| நிலக்கரிச் சுரங்க ஏலம்: பிப்ரவரியில் தொடங்குகிறது Posted: 19 Nov 2014 11:10 AM PST முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் Posted: 19 Nov 2014 11:10 AM PST மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுத்ததுபோல், தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராமநாதபுரத்தில் புதன்கிழமை பேசினார். |
| திருவாடானையில் இடிந்து விழும் நிலையில் அரசுக் குடியிருப்பு Posted: 19 Nov 2014 11:09 AM PST திருவாடானை பாரதி நகரில் இடியும் நிலையில் உள்ள அரசுப் பணியாளர்கள் குடியிருப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஆசிரியர் நியமிக்கக்கோரி பெண்கள் சாலை மறியல் Posted: 19 Nov 2014 11:09 AM PST பரமக்குடி பொன்னையாபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களை நியமனம் செய்யக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| புத்தக வாசிப்பு விழிப்புணர்வுப் பேரணி: எஸ்.பி. துவக்கி வைத்தார் Posted: 19 Nov 2014 11:09 AM PST ராமநாதபுரத்தில் நபீசா அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வுப் பேரணியை எஸ்.பி.மயில்வாகனன் கொடியசைத்து துவக்கி வைத்தார். |
| மின் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 19 Nov 2014 11:09 AM PST ராமேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் மின் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| பரமக்குடி உணவகங்களில் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை Posted: 19 Nov 2014 11:08 AM PST பரமக்குடி நகரில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் உள்பட பலதரப்பட்ட மக்கள் வந்து செல்லும் இங்குள்ள உணவகங்களில் உணவு |
| அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தொடர் வகுப்புகள் Posted: 19 Nov 2014 11:08 AM PST காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்விக்கான தொடர் வகுப்புகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. |
| பெரியகுளத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 19 Nov 2014 11:08 AM PST கேரள மாநில எம்.எல்.ஏ.வை கண்டித்து, பெரியகுளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், புதன்கிழமை நீதிமன்ற வளாகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |