Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 01:46 PM PST

உர தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு தனியாக மருத்துவக் கவுன்சில் அமைக்க வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 01:46 PM PST

பாரம்பரிய மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு தனி மருத்துவக் கவுன்சில் அமைத்து, அரசு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அக்குபஞ்சர் மற்றும் மாற்றுமுறை மருத்துவர்கள் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நவம்பர் 18 மின் தடை

Posted: 16 Nov 2014 01:45 PM PST

காங்கயம் கோட்டம், ஊதியூர், ராசாத்தா வலசு, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் க.தண்டபாணி தெரிவித்துள்ளார்.

வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 16 Nov 2014 01:45 PM PST

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதாக 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடி போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு

Posted: 16 Nov 2014 01:45 PM PST

வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டிய பலரைப் பிடித்து போலீஸார் அபராதம் விதித்தனர்.

வெள்ளக்கோவிலில் நாட்டுச் சோளம் சாகுபடி அதிகாரிப்பு

Posted: 16 Nov 2014 01:45 PM PST

வெள்ளக்கோவில் பகுதியில் நாட்டுச் சோளம் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்

Posted: 16 Nov 2014 01:44 PM PST

உடுமலை, மடத்துக்குளம் வட்டார சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிலம் கையகப்படுத்துவதில் புதிய அணுகுமுறை...

Posted: 16 Nov 2014 01:44 PM PST

தொழிற்சாலை, நிலக்கரி சுரங்கம், எரிவாயு குழாய்த் திட்டங்களுக்கு தேவையான நிலத்தினை கையகப்படுத்துவதில் கடுமையான பிரச்னைகள் எழுந்துள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், பல தொழில் திட்டங்கள் தாமதப்பட்டுள்ளன. சில திட்டங்கள் கைவிடப்பட்டும் உள்ளன.

கூட்டுறவுத்துறையை மேம்பட செய்தவர் ஜெயலலிதா

Posted: 16 Nov 2014 01:44 PM PST

கூட்டுறவுத் துறையை மேம்படச் செய்தவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

திருப்பூரில் வங்கதேச குடும்பத்தினர் கைது

Posted: 16 Nov 2014 01:43 PM PST

உரிய ஆவணங்கள் ஏதுமின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அனுமதியற்ற சீட்டு நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்

Posted: 16 Nov 2014 01:43 PM PST

பதிவு செய்யாத சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள், பலகார சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் பண்டிகைக் கால சீட்டுக்கள் நடத்துவோரிடம் பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் அறிவுறுத்தியுள்ளார்.

ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பிரசாரம்

Posted: 16 Nov 2014 01:43 PM PST

ஜி.கே.வாசன் தலைமையில் திருச்சியில் நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து திருப்பூரில் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டினர் .

அவிநாசி பழனியப்பா பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டி

Posted: 16 Nov 2014 01:42 PM PST

மாநில அளவிலான யோகா போட்டி அவிநாசி பழனியப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

புத்தகங்கள் மனித நேயத்தை வளர்க்கின்றன'

Posted: 16 Nov 2014 01:42 PM PST

புத்தகங்கள் மனித நேயத்தை வளர்க்கின்றன என உடுமலை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் பேசினார்.

விதிவிலக்குகளே மேல்!

Posted: 16 Nov 2014 01:42 PM PST

சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநில முதல்வர், மதுவிலக்கைத் தமது மாநிலத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்.

கொடுமுடி: தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை

Posted: 16 Nov 2014 01:42 PM PST

கொடுமுடி அருகே முன்விரோதம் காரணமாக மரம் ஏறும் தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 16 Nov 2014 01:41 PM PST

பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிமாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது .

திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க முப்பெரும் விழா

Posted: 16 Nov 2014 01:41 PM PST

திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில், துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை, குழந்தைகளுக்கு கல்வி உதவி, மாடித் தோட்டம் வளர்க்கும் திட்ட துவக்கம் ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு

Posted: 16 Nov 2014 01:40 PM PST

கோவை

Posted: 16 Nov 2014 01:39 PM PST

பெங்களூரு

Posted: 16 Nov 2014 01:39 PM PST

மதுரை

Posted: 16 Nov 2014 01:39 PM PST

மீண்டும் சந்திப்போம்!

Posted: 16 Nov 2014 01:39 PM PST

ஓரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் படித்த பள்ளியை எப்போதாவது சென்று பார்த்தது உண்டா? நீங்கள் இந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேற உங்களுக்கு அடிப்படையாக இருந்தது நீங்கள் படித்த பள்ளிதானே.

திருநெல்வேலி

Posted: 16 Nov 2014 01:39 PM PST

வாழவைக்கும் காதலுக்கு ஜே...

Posted: 16 Nov 2014 01:33 PM PST

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, அன்பே சிவம், அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவிலார், காதல் செய்வீர் உலகோரே என்றெல்லாம் முன்னோர்களும், ஆன்மிகவாதிகளும், காதலையும் அன்பையும் ஒருசேர புனிதமாகவே கருதினர். இன்றைய சமுதாயத்தில் காதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இனக்கவர்ச்சியில் ஏற்படுவது என்றே விளம்பரபடுத்தப்படுகிறது.

நூலகத்துக்கு விருது

Posted: 16 Nov 2014 01:25 PM PST

கரூர் மாவட்ட மைய நூலகத்திற்கு மாநில அளவிலான சிறந்த நூலக ஆர்வலர் விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி வெள்ளிக்கிழமை வழங்கினார்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Posted: 16 Nov 2014 01:25 PM PST

கரூரில் இன்சூரன்ஸ் முகவர் வீட்டில் 9 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காற்று தூய்மையடைய மரங்களை வளர்த்தல் அவசியம்

Posted: 16 Nov 2014 01:25 PM PST

எதிர்காலத் தலைமுறையினரின் இதமான மூச்சுக்காற்றுக்கு மரம் வளர்ப்பது மிகவும் அவசியம் என்றார் என்றார் கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க. காளிதாசன்.

கபடி வீரருக்கு அமைச்சர் வாழ்த்து

Posted: 16 Nov 2014 01:25 PM PST

தென்கொரியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கபடியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் எஸ். ராஜகுரு ஞாயிற்றுக்கிழமை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள்

Posted: 16 Nov 2014 01:25 PM PST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை வழங்கினார்.

படித்துறை காசி விஸ்வநாதர் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு

Posted: 16 Nov 2014 01:25 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலிலதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, மயிலாடுதுறையில் உள்ள விசாலாட்சி உடனுறை படித்துறை காசி விஸ்வநாதர் கோயிலில் அதிமுகவினர் சனிக்கிழமை மகா நட்சத்திர சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

மரவாக்காடு அரசுப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்கம்

Posted: 16 Nov 2014 01:25 PM PST

மன்னார்குடி அருகேயுள்ள மரவாக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா, தூய்மை பள்ளி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

"இளைஞர் காங்கிரஸ் வலுவாக உள்ளது

Posted: 16 Nov 2014 01:24 PM PST

தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் வலுவாக உள்ளது என்றார் அதன் அகில இந்திய பொதுச் செயலர் ரவீந்திரதாஸ்.

பழைய விவரங்களின் அடிப்படையில் குளங்களைக் கண்டறிந்து தூர்வார வேண்டும்

Posted: 16 Nov 2014 01:24 PM PST

பழைய அரசுப் பதிவேடுகளில் உள்ள விவரங்களை தொகுத்து குளங்களைக் கண்டறிந்து, தூர்வாரி பராமரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

குடந்தை மகாமக விழா திட்டங்களுக்கான இடங்கள் ஆய்வு

Posted: 16 Nov 2014 01:24 PM PST

கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக திருவிழாவை முன்னிட்டு, திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ள இடங்களை பொதுப்பணித் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ். அசோகன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

திமுக தெருமுனை பிரசார கூட்டம்

Posted: 16 Nov 2014 01:24 PM PST

திமுக தலைவர் கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அதிமுக சார்பில் துண்டறிக்கை வழங்கப்பட்டதைக் கணடித்து, கும்பகோணம் நகர திமுக சார்பில் காந்தி பூங்கா, மகாமக குளம் ஆகிய பகுதிகளில் தெருமுனை பிரசார கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையில்லாச் சூழல் உருவாக்கப்படுமா?

Posted: 16 Nov 2014 01:23 PM PST

அரசாணைப்படி வங்கிகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தங்களுக்கு தடையில்லாச் சூழல் உருவாக்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மாற்றுத்திறனாளிகளிடையே எழுந்துள்ளது.

திருச்செங்கோடு அருகே வெள்ளிக் காசுகள் புதையல்

Posted: 16 Nov 2014 01:22 PM PST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வெள்ளிக் காசு புதையல் ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது.

சென்னையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் பலி

Posted: 16 Nov 2014 01:20 PM PST

சென்னை பாரிமுனையில் பலசரக்குக் கிடங்கின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்வு: மறுபரிசீலனை செய்ய "அய்மா' வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 01:14 PM PST

தொழிற்சாலைகளுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ("அய்மா') வலியுறுத்தியது.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்

Posted: 16 Nov 2014 01:14 PM PST

சென்னையில் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டரை மாதக் குழந்தை திடீரென உயிரிழந்தது. தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசமும், தெய்வமும் பிணைக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா: பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி

Posted: 16 Nov 2014 01:13 PM PST

தேசமும், தெய்வமும் பிணைக்கப்பட்ட ஒரே நாடு இந்தியா என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி பேசினார்.

விராலிமலையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

Posted: 16 Nov 2014 01:11 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம், சமையல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அமராவதி ஆற்றில் முட்புதர் அகற்றும் பணி

Posted: 16 Nov 2014 01:11 PM PST

கரூரில் அமராவதி ஆற்றில் முட்புதர்களை அகற்றும் பணி நடைபெறுவதை போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

நவம்பர் 18 மின் தடை

Posted: 16 Nov 2014 01:11 PM PST

கரூர் மின்பகிர்மான வட்டம் குளித்தலை கோட்டத்துக்குள்பட்ட அய்யர்மலை, சிந்தாமணிப்பட்டி, தோகைமலை, வல்லம் மற்றும் நச்சலூர் ஆகிய 5 துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 18) மின் விநியோகம் இருக்காது.

அணை கட்டுவதைத் தடுக்காவிடில் போராட்டம் : வைகோ

Posted: 16 Nov 2014 01:11 PM PST

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்காவிட்டால் இளைஞர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார் வைகோ.

நீடாமங்கலத்தில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 01:11 PM PST

நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வாசன் ஆதரவாளர் ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Nov 2014 01:11 PM PST

திருவாரூரில் சனிக்கிழமை ஜி.கே. வாசனின் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் குடவாசல் தினகரன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், நவ. 28-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் பெயர் அறிவிப்பு பொதுக்கூட்டத்துக்கு

நவம்பர் 18 மின் தடை

Posted: 16 Nov 2014 01:11 PM PST

துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 18) தஞ்சாவூர் நகரின் பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிமள ரெங்கநாதர்கோயில் தேரோட்டம்

Posted: 16 Nov 2014 01:11 PM PST

மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில் துலாப் பெருந் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

படிப்பறிவு இல்லாமல் 28 கோடிப் பேர்: ஆளுநர் கவலை

Posted: 16 Nov 2014 01:06 PM PST

இந்தியாவில் 28 கோடிக்கும் அதிகமானோர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கூறினார்.

அமைச்சர்களை தூங்க விடாத மோடி: வெங்கய்ய நாயுடு

Posted: 16 Nov 2014 12:58 PM PST

"பிரதமர் நரேந்திர மோடி தானும் தூங்க மாட்டார்; தனது அமைச்சர்களையும் தூங்க விட மாட்டார்'; சாமானிய மக்களுக்காக அவ்வாறு உழைப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இல்லாவிட்டாலும் லோக்பால் நியமனங்கள் செல்லும்: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி

Posted: 16 Nov 2014 12:58 PM PST

"மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத காரணத்தினால், லோக்பால், மத்திய தகவல் ஆணையம் ஆகியவற்றுக்கான நியமனங்கள் செல்லாததாகிவிடாது' என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார்.

திரிணமூல் - பாஜக மோதலில் ஒருவர் சாவு

Posted: 16 Nov 2014 12:58 PM PST

மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே பாரூய் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

370ஆவது பிரிவு விவகாரம்: ஜம்மு-காஷ்மீர் மக்கள் விருப்பப்படி செயல்படுவோம்: பாஜக

Posted: 16 Nov 2014 12:57 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு விவகாரத்தில், அந்த மாநில மக்கள் விருப்பப்படி செயல்படுவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

மேற்கத்திய பண்பாட்டை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்: கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா

Posted: 16 Nov 2014 12:57 PM PST

மேற்கத்திய பண்பாட்டை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டார்.

போராட்டத்தை ஒடுக்க உளவுத் துறைக்கு ரூ.270 கோடி: நவாஸ் மீது இம்ரான் புகார்

Posted: 16 Nov 2014 12:57 PM PST

தனது அரசுக்கு எதிராக இஸ்லாமாபாதில் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு, உளவுத்துறைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ரூ.270 கோடி கொடுத்திருப்பதாக தேரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் புகார் தெரிவித்தார்.

அமைச்சர்களை தூங்க விடாத மோடி: வெங்கய்ய நாயுடு

Posted: 16 Nov 2014 12:41 PM PST

"பிரதமர் நரேந்திர மோடி தானும் தூங்க மாட்டார்; தனது அமைச்சர்களையும் தூங்க விட மாட்டார்'; சாமானிய மக்களுக்காக அவ்வாறு உழைப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று மத்திய ஊரக வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

Posted: 16 Nov 2014 12:32 PM PST

கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நாளில் அன்று 17.11.1992; பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் ஆணை; மண்டல் வழக்கில் முக்கிய தீர்ப்பு

Posted: 16 Nov 2014 12:23 PM PST

பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட் ஆணை; மண்டல் வழக்கில் முக்கிய தீர்ப்பு

முன்னெச்சரிக்கை தேவை

Posted: 16 Nov 2014 12:19 PM PST

குடிநீர் பிரச்னை, விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதெல்லாம் இன்று சர்வசாதாரண விஷயமாகிவிட்டது.

மறைக்க வேண்டிய மர்மம் என்ன?

Posted: 16 Nov 2014 12:19 PM PST

கருப்புப் பணத்தின் அளவைப் பற்றிக் குறிப்பிடும்போது, "மிக மிக அதிகமான' என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாகும்.

பயன்படுத்திக் கொள்வோம்!

Posted: 16 Nov 2014 12:18 PM PST

உணவுப் பாதுகாப்பு கருதி, வணிக இயைபு ஒப்பந்தத்தில் (டி.எப்.ஏ.) கையெழுத்திட மறுத்த இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தோள் கொடுத்திருப்பதும், இந்தியாவின் "பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை' நிபந்தனையில் விலக்கு அளிக்கலாம் என்கிற உலக வர்த்தக நிறுவன ஷரத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது என்ற முடிவும், இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் மாநாடு இன்று தொடங்குகிறது

Posted: 16 Nov 2014 12:12 PM PST

காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள் விழா மாநாடு புது தில்லியில் திங்கள்கிழமை (நவ.17) தொடங்குகிறது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே 2 அணைகள் கட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு

Posted: 16 Nov 2014 12:11 PM PST

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு இரு அணைகள் கட்ட முடிவு செய்திருப்பதைக் கண்டித்து, வரும் 29ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் 500 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

வேளாண் விளைபொருள் சந்தைக் குழு சட்டத்தை அமல்படுத்தக் கூடாது: சீதாராம் யெச்சூரி

Posted: 16 Nov 2014 12:09 PM PST

கர்நாடகத்தில் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் நல மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

Posted: 16 Nov 2014 12:08 PM PST

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் நல மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் நல மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

Posted: 16 Nov 2014 12:07 PM PST

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் நல மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

முல்லைப் பெரியாறு - காவிரி பிரச்னை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்

Posted: 16 Nov 2014 12:06 PM PST

முல்லைப் பெரியாறு - காவிரி பிரச்னையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, புதிய கட்சி தொடங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி நிறுத்தம்: மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெர்மனி பிரதமர்

Posted: 16 Nov 2014 12:02 PM PST

மத்திய அரசின் கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழி பயிற்றுவிப்பது நிறுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக டி.மீனாகுமாரி நியமனம்

Posted: 16 Nov 2014 12:00 PM PST

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.மீனாகுமாரியை நியமித்து, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவிட்டார். இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான தமிழக அரசிதழில் கூறியிருப்பது:

தேசிய நீர்வழிப் பாதையில் வெள்ளோட்டம் விட ஒடிஸா முடிவு

Posted: 16 Nov 2014 11:53 AM PST

தேசிய நீர்வழிப் பாதை-5இல் இன்னும் 3 மாதங்களுக்குள் வெள்ளோட்டம் விட ஒடிஸா அரசும், இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையமும் முடிவு செய்துள்ளன.

தேசிய மாநாட்டுக் கட்சியில் இருந்து மூத்த தலைவர் ராஜிநாமா

Posted: 16 Nov 2014 11:53 AM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான மெஹபூப் பேக், கட்சியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினார்.

திரிணமூல் - பாஜக மோதலில் ஒருவர் சாவு

Posted: 16 Nov 2014 11:52 AM PST

மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே பாரூய் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

அப்சல் குரு தண்டனை விவரங்களை வெளியிடும் விவகாரம்: நீதிமன்றத்தை அணுக சிறை நிர்வாகம் முடிவு

Posted: 16 Nov 2014 11:52 AM PST

பயங்கரவாதி அப்சல் குருவின் தூக்குத் தண்டனை விவரங்களை வெளியிடும்படி மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுக திஹார் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

விவசாயத்துக்கென தனி பட்ஜெட்: பாஜக எம்.பி. கோரிக்கை

Posted: 16 Nov 2014 11:51 AM PST

விவசாயத் துறைக்கென பிரத்யேகமாக ஆண்டுதோறும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

"உச்ச நீதிமன்றக் கிளைகள் அமைப்பு: தகவலை வெளியிடத் தேவையில்லை'

Posted: 16 Nov 2014 11:50 AM PST

"தில்லிக்கு வெளியே உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை அமைப்பது குறித்த தகவல்களை வெளியிடுவது பிராந்திய உணர்வுகளைத் தூண்டிவிடும். எனவே, அவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிடத் தேவையில்லை' என்று மத்திய தகவல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

அனைவரது சம்மதத்துடன் அயோத்தியில் ராமர் கோயில்: மத்திய அமைச்சர் சாத்வி

Posted: 16 Nov 2014 11:47 AM PST

அனைத்து சமூகத்தினரின் சம்மதத்துடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் பெண் கமாண்டோக்கள்

Posted: 16 Nov 2014 11:46 AM PST

நாட்டிலேயே முதல் முறையாக, நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்) பெண்கள் சிறப்புப் படையினர் வனப் பகுதிக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனதா தளக் கட்சிகளிடையே ஒற்றுமை: மார்க்சிஸ்ட் வரவேற்பு

Posted: 16 Nov 2014 11:46 AM PST

ஜனதா தளக் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நடைபெற்று வரும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வரவேற்றுள்ளார்.

மிக உயரமான கிருஷ்ணர் கோயில்: பிரணாப் அடிக்கல் நாட்டினார்

Posted: 16 Nov 2014 11:45 AM PST

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில் உத்தரப் பிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை நாட்டினார்.

ஜனதா தளக் கட்சிகளிடையே ஒற்றுமை: மார்க்சிஸ்ட் வரவேற்பு

Posted: 16 Nov 2014 11:43 AM PST

ஜனதா தளக் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நடைபெற்று வரும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வரவேற்றுள்ளார்.

கருத்தடை சிகிச்சை விவகாரம்: சத்தீஸ்கர் முதல்வர் பதவி விலக மாவோயிஸ்டுகள் வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 11:42 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை அறுவை சிகிச்சையால் 13 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ரமண் சிங், சுகாதார அமைச்சர் அமர் அகர்வால் ஆகியோர் பதவி விலக வேண்டும் என மாறு மாவோயிஸ்டுகள் வலியுறுத்தினர்.

ஆந்திர கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின்

Posted: 16 Nov 2014 11:42 AM PST

"மதுவுக்கு அடிமையாகாதீர்; ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடன் கொண்டாடுங்கள்' என்று பிரபல கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் அறிவுறுத்தினார்.

மேற்கத்திய நடைமுறைகளை எதிர்ப்பதால் நாட்டுக்குப் பாதிப்பு: கரண் சிங்

Posted: 16 Nov 2014 11:40 AM PST

மேற்கத்திய நடைமுறைகளைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் அணுகுமுறையானது நம் நாட்டைப் பாதித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண் சிங் தெரிவித்தார்.

மேற்கத்திய பண்பாட்டை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்

Posted: 16 Nov 2014 11:38 AM PST

மேற்கத்திய பண்பாட்டை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 11:37 AM PST

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று சீனாவிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

நதிகள் இணைப்பு விரைவில் தொடங்கப்படும்: மத்திய அரசு

Posted: 16 Nov 2014 11:36 AM PST

மாநிலங்களுக்குள் ஓடும் நதிகளை இணைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நீர்வளத் துறை, நதி மேலாண்மை, கங்கை நதியை சுத்தப்படுத்துதல் துறை இணையமைச்சர் சான்வர் லால் ஜாட் தெரிவித்தார்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு

Posted: 16 Nov 2014 11:33 AM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள உரம் இருப்பு குறித்து கூடுதல் பதிவாளர் ஆர். பிருந்தா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

லாரி மீது வேன் மோதல்: ஐயப்ப பக்தர்கள் 18 பேர் காயம்

Posted: 16 Nov 2014 11:33 AM PST

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டிரெய்லர் லாரி மீது வேன் மோதியதில், வேன் ஓட்டுநர் உள்பட ஐயப்ப பக்தர்கள் 18 பேர் காயமடைந்தனர்.

"18 வயதுக்குள்பட்ட மகளிரை பணியமர்த்த தடை தேவை

Posted: 16 Nov 2014 11:33 AM PST

தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகள் மற்றும் பனியன் தொழில் சாலைகளில் 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளை பணியில் அமர்த்துவதை தடை செய்ய வேண்டும் என மண்டல அளவிலான

அறிவியல் கண்காட்சி : பள்ளிகளுக்கு பரிசளிப்பு

Posted: 16 Nov 2014 11:32 AM PST

பெரம்பலூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

விஸ்வகர்ம சமுதாயத்தை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

Posted: 16 Nov 2014 11:32 AM PST

விஸ்வகர்ம சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் இன பட்டியலில் (எம்.பி.சி) சேர்க்க வேண்டும் என மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி

Posted: 16 Nov 2014 11:32 AM PST

தா. பழூரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சமூக தணிக்கைப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளிலுள்ள ஊராட்சி வார்டு

88 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 42.83 லட்சம் நிதி

Posted: 16 Nov 2014 11:31 AM PST

அரியலூரில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்ட முகமையின் கீழ் 88 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 42 லட்சத்து 83 ஆயிரத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

அதிமுகவினர் வெள்ளித்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு

Posted: 16 Nov 2014 11:31 AM PST

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலர் மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் சனிக்கிழமை வெள்ளித்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மாநில அறிவியல் கண்காட்சி: 10 படைப்புகள் தேர்வு

Posted: 16 Nov 2014 11:31 AM PST

புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 10 படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

"அதிமுக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது'

Posted: 16 Nov 2014 11:31 AM PST

தமிழகத்தில் தொடரும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிமுக அரசு தவறிவிட்டது என்றார் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு.

மகளிர் விவசாய கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு ரூ. 4.61 லட்சம் கடனுதவி

Posted: 16 Nov 2014 11:30 AM PST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய கூட்டு பொறுப்புக்குழுக்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 4.61 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கிராமங்களில் சோலார் மின்விளக்குகளை பராமரிக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

Posted: 16 Nov 2014 11:30 AM PST

கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின்விளக்குகளை சரியான முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™