Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கோவா திரைப்பட விழா - பரிசு விபரம்!

Posted:

45வது சர்வதேச கோவா திரைப்பட விழா, கோவாவின் பனாஜியில் நவ. 20ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 30ம் தேதி வரை பத்துநாட்கள் நடைபெற இருக்கிறது. இந்தவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இருந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. அந்த பரிசுகளின் விபரம் வருமாறு...

* சிறந்த படம் - ரூ.40 லட்சம் ரொக்கம், தங்கமயில் ...

கோவா திரைப்பட விழாவில், சர்வதேச திரைப்படங்களின் நடுவராக சீமா பிஸ்வாஸ்!

Posted:

2014ம் ஆண்டு கோவா திரைப்பட விழாவில் போட்டிக்கு வந்துள்ள 15 படங்களுக்கு பல பிரிவுகளில் பரிசளிக்கப்பட உள்ளன. இவற்றை தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள சர்வதேச திரைபிரபலங்களின் விபரம் வருமாறு...

போலாந்தை சேர்ந்த பிரபல கேமராமேனும், திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான ஸ்லாவோமிர் இட்ஸியாக், ...

பாபா ஆம்தேயின் வாழ்க்கையை படமாக எடுக்கிறேன் - நானா படேகர்!

Posted:

பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர் நடிகர் நானா படேகர். இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே - தி ரியல் ஹீரோ என்ற மராத்தி படத்தில், பாபா ஆம்தேயின், மகன் டாக்டர் பிரகாஷ் ஆம்தேயாக சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றவர். இப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு எல்லோராலும் ...

கோவா திரைப்பட துவக்க விழா துளிகள்...!

Posted:

கோவா திரைப்பட விழாவின் துவக்க நாளில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் அமிதாப் பச்சன், இந்த விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் விழாவுக்கு வந்தார். விழா முடிந்த அன்றைய இரவே மும்பைக்கு திரும்பிவிட்டார். வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. முன்னதாக விழாவில் அவர் பேசியது ஹைலைட்டாக இருந்தது. குறிப்பாக இந்திய ...

ஹிமாலயா வேர் தி விண்டு டிவல்ஸ் - விமர்சனம்

Posted:

இந்தப்படத்தில் வரும் டயலாக்குகளை மொத்தம் இரண்டே பக்கங்களின் எழுதி விடலாம். அவ்வளவு குறைவு, ஆனால் அது ஒரு குறையாக தெரியவில்லை.

நேபாளத்தில் ஒரு மலைப்பாங்கான கிராமத்தில் எடுக்கப்பட்ட கதை. எந்தபக்கம் திரும்பினாலும் இமயமலை தொடரின் சிகரங்களும், தெளிந்த நீரோடைகளுமாக தெரிகின்றன. 45 வயதாகும் கிம், கொரியாவில் கோரி அணு ...

நண்பேன்டா டீசருக்கு பாராட்டு...உற்சாகத்தில் உதயநிதி!

Posted:

தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்தில் பலரும் திரைப்படத்துறையில் இருந்தாலும், அவரது மகன் மு.க.முத்து மட்டுமே நடிகராக முகம் காட்டினார். இந்த தலைமுறையில் ஹீரோவாக வெற்றிபெற்றவர் ஸ்டாலினின் மகன் உதயநிதிதான். தன்னுடைய தயாரிப்பில் சூர்ய நடித்த ஆதவன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் தலையைக்காட்டியதன் மூலம் தன் நடிப்பு ஆசையை ...

ரூ.80 கோடிக்கு லிங்காவை வாங்கிய வேந்தர்.?

Posted:

கன்னடப் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் லிங்காவுக்கு யு சர்ட்டிஃபிகேட் கிடைத்துள்ளது. யு சர்ட்டிஃபிகேட் கிடைத்தால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல கோடி வரிப்பணம் நமக்குக் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் லிங்கா படத்தை வாங்க விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் போட்டிபோடுகின்றனராம். தியேட்டர் ...

வில்லன் நடிகருடன் நெருக்கமான விஜய்

Posted:

நான் ஈ படத்தின் வெற்றி காரணமாகவே கன்னட நடிகர் சுதீப்பை விஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். சுதீப்புக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கும் விஜய் 58 படத்தின் வேலைகள் தற்போது ...

கத்ரீனாவிடம் மன்னிப்பு கேட்ட சல்மான்கான்!

Posted:

சல்மானின் மாஜி காதலி கத்ரீனா கைப். கத்ரீனா இப்போது ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் சல்மானின் தங்கை அர்பிதாவின் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கத்ரீனாவும் பங்கேற்றார். திருமண நிகழ்ச்சியின் போது கத்ரீனா கைப்பை, கத்ரீனா கபூர் என்று எல்லோரது முன்னிலையிலும் அழைத்தார் சல்மான். இது சல்மான் ...

பி.சி.சர்க்காராக நடிக்கும் அக்ஷ்ய் குமார்!

Posted:

குலாப் கேங் இயக்குநர் சவுமிக் சென், நீண்டநாட்களுக்கு முன்பாகவே பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்காரின் வாழ்க்கையை படமாக இயக்க போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் பி.சி.சர்க்காராக, அக்ஷ்ய் குமார் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சவுமிக் சென், முழு கதையையும் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு ...

மூன்றாவது முறையாக இணையும் ஆலியா-வருண் தவான் ஜோடி!

Posted:

ஸ்டூடண்ட் ஆப் தி இயர், ஹம்தி சர்மா கி துல்கனியா படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆலியா பட், வருண் தவான் ஜோடி இணைய இருக்கின்றனர். இப்படத்தை தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கின்றனர். தற்போது ஆலியா பட்டும், வருண் தவானும் நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளனர். இந்தப்படங்களை முடித்த பின்னர் இருவரும் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் ...

வளர்ப்பு தாயானார் ஸ்ரீதேவி!

Posted:

தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி, பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ''இங்கிலீஷ் விங்கிலீஷ்'' என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனையடுத்து இப்போது மீண்டும் ஒரு படத்தில் ...

“லிங்கா, என்னை அறிந்தால்” - அனுஷ்காவுக்கு ஏமாற்றமா...?

Posted:

இந்தியத் திரையுலகமே இதுவரை கண்டிருக்காத அளவிற்குத் தயாராகி வரும் இரண்டு பிரம்மாண்டமான தெலுங்குப் படங்களான "ருத்ரமா தேவி, பாகுபலி'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அந்த இரண்டு படங்களில் அவருடைய நடிப்பு, தோற்றம், அழகு, திறமை ஆகியவற்றைப் பற்றி சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்கள், நடிக, நடிகையர் வெகுவாகப் பாராட்டி ...

தொட்ட சினிமா தொடராததால் குறும்பட இயக்க சென்ற இயக்குனர்

Posted:

இணையதள ஏரியாவில் திரை விமர்சனங்களுக்கு புகழ் பெற்றவர் கேபிள் சங்கர். இவர் இயக்குனராக வேண்டும் என்பதற்காக பலரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். சில காமெடி படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். பெரிய போராட்டத்திற்கு பிறகு துவார் சந்திரசேகர் என்பவர் தயாரிப்பில் படம் தயாரிக்க வாய்ப்பு கிடைத்தது. தமன், அருந்ததி நடிக்க தொட்டால் ...

திகில் படத்தில் சுட்டகதை லட்சுமிப்ரியா!

Posted:

சுட்டகதை படத்தில் நடித்த லட்சுமிப்ரியாவிற்கு அந்தப் படம் தோல்வி அடைந்ததால் அதற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் களம் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு வீட்டிற்குள் நடக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 கேரக்டர்கள் மட்டுமே உள்ளது. வெண்ணிலா கபடி குழு ஸ்ரீனிவாசன், கோலிசோடா மதுசூதனன், ...

மொக்கராஜாவுக்கு இரண்டு ராணிகள்

Posted:

தேவகலா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம், ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா. இந்தப் படத்தில் சஞ்சீவ் முரளி என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு முதல் படத்திலிலேயே இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் மலையாள பட நாயகி ஸ்ரீரக்ஷா. இன்னொருவர் புதுமுகம் அஸ்வினி. இவர்கள் தவிர ரஞ்சித் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

"ஊரில் ...

ஆயா வடை சுட்ட கதை முக்கோண ஏமாற்று கதை

Posted:

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் புதிய படம் ஆயா வடை சுட்ட கதை. என்.பணீந்திரா இயக்குகிறார், எஸ்.பி.பாலாஜி ஒளிப்பதிவை கவனிக்கிறார், ஷமீர், சிவா இசை அமைக்கிறார்கள். அவிதேஜ், சுபுர்ணா ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். "ஆயாவிடம் திருடிய வடையை நரியிடம் பாட்டுபாடி ஏமாந்த காக்கையின் கதை. பழைய ஆயா வடை சுட்ட கதை. இந்த கதையில் ...

நாளை 8 படங்கள் ரிலீஸ்!

Posted:

ஆண்டின் இறுதி பகுதி நெருங்கி வருவதாலும், அடுத்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் வெளிவருது உறுதியாகி விட்டதாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளை (நவ 28) 8 படங்கள் வெளிவருகிறது. அவை என்னென்ன படங்கள் என்று இப்போது பார்ப்போம்...

காவியத் ...

சாகித்ய அகாடமி மேடையில் கபிலன் வைரமுத்து

Posted:

சினிமாவுக்கு ஆஸ்கர் மாதிரி இலக்கிய உலகிற்கு சாகித்ய அகாடமி விருது. ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி கவிதை திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டு கவிதை வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இது கவிஞர்களுக்கான பெரிய அங்கீகாரமாகும்.

இந்த ஆண்டு வருகிற ...

100 பேர் சேர்ந்து தயாரிக்கும் உச்சிமாகாளி!

Posted:

பலபேரை கூட்டணி சேர்த்துக் கொண்டு படம் தயாரிப்பது இப்போது (க்ரவுட் பண்ட்) பேஷனாகி வருகிறது. தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் சுமார் 60 பேர் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு முயல் என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். அதேபோன்று தற்போது டிஸ்கவரி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டி உச்சிமாகாளி என்ற படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™