மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நடிகர் பவன்கல்யாணுக்கு 7 அடி உயர சிலை: ரசிகர்கள் அமைக்கிறார்கள்
- ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பா.ஜனதாவில் சேருகிறார்
- காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 55 கோடீஸ்வர வேட்பாளர்கள்
- திருப்பதியில் தரிசனத்துக்கு காத்து இருக்கும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்
- தந்தையை இழந்த 111 பெண்கள்: வளர்ப்பு தந்தையாக நின்று திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி
- சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 14 நாட்களில் ரூ.44 கோடி வருமானம்
- அதிகாரப்பகிர்வு பேச்சுவார்த்தையில் இழுத்துவிட்டு சிவசேனாவை பா.ஜ.க. முட்டளாக்க பார்க்கிறது: கதம் குற்றச்சாட்டு
- கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பஸ்சை பிளந்துகொண்டு உள்ளே சென்றது: 2 மாணவர்கள் பலி
- பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து 40 இந்திய கைதிகள் விடுவிப்பு
- சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாடு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை பயணம்
- காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை 2-வது கட்ட வாக்குப்பதிவு
- காஷ்மீர் எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி
- ஊடுருவலை தடுக்க வங்காள தேசத்துடன் நிலமாற்ற ஒப்பந்தம்: பிரதமர் மோடி தகவல்
- பிரதமர் மோடி இன்று திரிபுரா செல்கிறார்: இடதுசாரி அரசு உற்சாக வரவேற்பு அளிக்கிறது
- சரக்கு ரெயில் சேவையில் ரூ.314 கோடி இழப்பு
- பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனிடம் புகார்
- பறவை காய்ச்சலை தொடர்ந்து குரங்கு காய்ச்சல் பாதித்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- டயரில் காற்று இல்லாததால் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட டெல்லி விமானம்: பயணிகள் தவிப்பு
- பர்த்வான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காப்பாற்ற மம்தா துடிக்கிறார்: அமித் ஷா
| நடிகர் பவன்கல்யாணுக்கு 7 அடி உயர சிலை: ரசிகர்கள் அமைக்கிறார்கள் Posted: 30 Nov 2014 11:28 PM PST முன்னாள் மத்திய மந்திரி சிரஞ்சீவி தம்பியும், நடிகருமான பவன் கல்யாண் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 'ஜனசேனா' என்ற புதிய கட்சியை தொடங்கினார். பாராளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்த அவர் தேர்தலில் போட்டியிடாமல் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் தேர்தலின் போது பாரதீய ஜனதா– தெலுங்கு தேசம் கூட்டணிக்கு |
| ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பா.ஜனதாவில் சேருகிறார் Posted: 30 Nov 2014 10:52 PM PST ஆந்திர முன்னாள் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் இருந்து விலகினார். அவருடன் மூத்த மந்திரிகள் சிலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். |
| காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 55 கோடீஸ்வர வேட்பாளர்கள் Posted: 30 Nov 2014 10:33 PM PST காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 25–ந்தேதி நடந்தது. காஷ்மீர் சட்டசபைக்கு மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 15 இடங்களுக்கும், ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 இடங்களுக்கும் அப்போது ஓட்டுப்பதிவு நடந்தது. |
| திருப்பதியில் தரிசனத்துக்கு காத்து இருக்கும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் Posted: 30 Nov 2014 10:23 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடும் குளிரிலும் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை 6 மணி வரை 42 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன் பிறகு தர்ம தரிசனத்துக்கு செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 15 கம்பார்ட்மெண்டுகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு |
| தந்தையை இழந்த 111 பெண்கள்: வளர்ப்பு தந்தையாக நின்று திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி Posted: 30 Nov 2014 09:14 PM PST குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மிகப்பெரிய தொழிலதிபரான மகேஷ் சவானி, தந்தையை இழந்த 111 பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக மாறி திருமணம் செய்து வைத்துள்ளார். சூரத் அருகேயுள்ள மோடா வார்ச்சா பகுதியில், விவசாய பண்ணை ஒன்றில் இந்த கோலாகல திருமண வைபவம் நடைபெற்றது. இந்த 111 பேரில் |
| சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 14 நாட்களில் ரூ.44 கோடி வருமானம் Posted: 30 Nov 2014 08:36 PM PST பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டு உள்ளதால் இருமுடி |
| Posted: 30 Nov 2014 08:32 PM PST மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க. அம்மாநிலத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்று நடத்திவருகிறது. எனினும் அக்கட்சிக்கு அறுதிப்பெரும்பாண்மைக்கான எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால், தேசியவாத காங்கிரஸ் தங்களை ஆதரிக்கும் என்று கருதியது. |
| கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு Posted: 30 Nov 2014 08:16 PM PST கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவை பண்ணைகளில் வாத்துகள் இறந்தன. இவற்றின் மாமிசங்களை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்5 என்1 வைரஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த வகை பறவை காய்ச்சல் |
| வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பஸ்சை பிளந்துகொண்டு உள்ளே சென்றது: 2 மாணவர்கள் பலி Posted: 30 Nov 2014 08:15 PM PST கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டூர் கனக்கன்பரம்பை சேர்ந்த ரவியின் மகன் விவின் (வயது 19), மணிகண்டன் மகன் அஜித் (19). இவர்கள் ஒலவக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் தங்களது நண்பர்கள் ரஞ்சித், விஜித், சஜித், மணி, ரிசாத், வில்சாத் ஆகியோருடன் முண்டூரில் இருந்து பாலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். விவினும், அஜித்தும் ஒரே மோட்டார் சைக்கிளில் செ |
| பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து 40 இந்திய கைதிகள் விடுவிப்பு Posted: 30 Nov 2014 06:20 PM PST சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறார். அப்போது, கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என தெரிகிறது. |
| சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாடு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை பயணம் Posted: 30 Nov 2014 04:11 PM PST சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறார். அப்போது, கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என தெரிகிறது. |
| காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் நாளை 2-வது கட்ட வாக்குப்பதிவு Posted: 30 Nov 2014 03:50 PM PST காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதி நடந்தது. அப்போது காஷ்மீர் மாநிலத்தின் 87 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தில் |
| காஷ்மீர் எல்லையில் பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர்கள் பதிலடி Posted: 30 Nov 2014 03:25 PM PST போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு வசதியாகவும் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுக்கிறார்கள். |
| ஊடுருவலை தடுக்க வங்காள தேசத்துடன் நிலமாற்ற ஒப்பந்தம்: பிரதமர் மோடி தகவல் Posted: 30 Nov 2014 03:02 PM PST அசாம் எல்லை வழியாக ஏராளமான வங்கதேசத்தவர்கள் அடிக்கடி இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்த பிரச்சினை மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. நேற்று அங்கு நடந்த பா.ஜனதா கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, இது குறித்து கூறும்போது, 'வங்கதேசத்தவர்களின் ஊடுருவலை |
| பிரதமர் மோடி இன்று திரிபுரா செல்கிறார்: இடதுசாரி அரசு உற்சாக வரவேற்பு அளிக்கிறது Posted: 30 Nov 2014 02:11 PM PST பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாகாலாந்து தலைநகர் கொகிமா அருகேயுள்ள கிசாமா கிராமத்தில் இன்று காலை நடைபெறும் மாநிலத்தின் பாரம்பரிய ஹார்ன்பில் திருவிழா, நாகாலாந்து மாநில அந்தஸ்தை பெற்ற 51-வது ஆண்டு தின கொண்டாட்டம் ஆகியவற்றில் மோடி கலந்து கொள்கிறார். |
| சரக்கு ரெயில் சேவையில் ரூ.314 கோடி இழப்பு Posted: 30 Nov 2014 12:56 PM PST உதிரிகளாக பார்சல்களை அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் பார்சல் சரக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் திட்டத்தை (பி.சி.இ.டி.), கடந்த 2007-ம் ஆண்டு ரெயில்வே நிர்வாகம் செயல்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தை, தனிப்பாதை மற்றும் கால அட்டவணைப்படி செயல்படுத்துவதில் தெற்கு ரெயில்வே தவறிவிட்டதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி கூறியுள்ளார். |
| பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனிடம் புகார் Posted: 30 Nov 2014 12:07 PM PST காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தேசிய மாநாடு கட்சி செய்தி தொடர்பாளர் ஜூனைத் அசிம் மாத்து, அகில இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு நேற்று அனுப்பியுள்ள புகாரில், 'காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி தங்கள் கட்சி தலைவர்கள் |
| பறவை காய்ச்சலை தொடர்ந்து குரங்கு காய்ச்சல் பாதித்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 30 Nov 2014 11:33 AM PST கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான வாத்துகள் செத்து மடிந்தன. இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஆதிவாசி காலனியில் சிலர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது. |
| டயரில் காற்று இல்லாததால் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட டெல்லி விமானம்: பயணிகள் தவிப்பு Posted: 30 Nov 2014 08:02 AM PST மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், வழியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் இன்று பிற்பகல் தரையிறங்கியது. அங்கிருந்து டெல்லிக்கு புறப்படும் வேளையில் அந்த விமானத்தின் ஒரு டயரில் காற்று இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, டெல்லியில் இருந்து வந்த இன்னொரு விமானத்தின் மூலம் கொண்டு |
| பர்த்வான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காப்பாற்ற மம்தா துடிக்கிறார்: அமித் ஷா Posted: 30 Nov 2014 06:08 AM PST பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற அக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தின் முன்னே போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சாரதா நிதி நிறுவன மோசடியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூற |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |