மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கோழிக்கோட்டில் 7–ந்தேதி மீண்டும் முத்தப் போராட்டம்
- சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம்
- பத்திரிகையாளர்களிடம் பேசகூடாது: காங். தலைவர்களுக்கு சோனியா திடீர் தடை
- உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க.வை உருவாக்கத் திட்டம்: உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
- அறுவை சிகிச்சையின் போது 13 பெண்கள் பலி: ஆபரேசன் செய்த டாக்டர் கைது
- நடனப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நடனமாட வைத்த போலீஸ்காரர்
- மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு
- திருப்பதியில் பலத்த மழை
- 2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல்
- என் நிலத்தை காணவில்லை: அதிகாரியிடம் மூதாட்டி புகார்
- காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா அழைப்பு
- 5 மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய இந்தியா வற்புறுத்தல்
- பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது
- நேரு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு அனுப்பாதது காங்கிரசின் சின்ன புத்தியை காட்டுகிறது: பா.ஜ.க. காட்டம்
- நுரையீரல் அழற்சி, பேதிக்கு கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் இந்தியக் குழந்தைகள் பலியானதாக தகவல்
- மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேசப் படவிழா: டெல்லியில் 24-ம் தேதி தொடக்கம்
- தீவிரவாத இயக்கத்துக்காக தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய இருவர் கைது
- மகாராஷ்டிராவில் கவர்னரை தாக்கியதாக 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
- திருத்தவே முடியாத குடிகார மகனை கோடரியால் வெட்டிக் கொன்ற தாய்
- கந்த்வா சிறையில் கைதிகள் பயங்கர மோதல்: 6 பேர் காயம்
| கோழிக்கோட்டில் 7–ந்தேதி மீண்டும் முத்தப் போராட்டம் Posted: 12 Nov 2014 09:57 PM PST கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த ஆடல் பாடல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும், இளம்பெண்களும் அத்து மீறிய செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவை சேர்ந்தவர்கள் அந்த ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடினார்கள். |
| சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் பாலில் சோப்பு பவுடர் கலப்படம் Posted: 12 Nov 2014 09:43 PM PST தெலுங்கானா சட்ட சபையில் கலப்பட பால் விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ரவீந்திர ரெட்டி பேசியதாவது:– பால் நிறுவனத்தினர் அதிகம் பால் சுரக்கவும், விரைவாக பால் கிடைக்கவும் கறவை மாடுகளுக்கு விசேஷ ஊசி போடுகிறார்கள். இதனால் பாலில் விஷ தன்மை ஏற்பட்டுள்ளது. |
| பத்திரிகையாளர்களிடம் பேசகூடாது: காங். தலைவர்களுக்கு சோனியா திடீர் தடை Posted: 12 Nov 2014 09:32 PM PST 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது பற்றி தெரியவந்ததும், பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ப.சிதம்பரத்தை கண்டித்து மூத்த தலைவர்கள் பலர் கருத்து வெளியிட்டதால் அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று |
| உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க.வை உருவாக்கத் திட்டம்: உறுப்பினர் சேர்க்கை தீவிரம் Posted: 12 Nov 2014 09:27 PM PST மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜனதா மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக நாடெங்கும் உறுப்பினர்கள் சேர்க்கையை பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். |
| அறுவை சிகிச்சையின் போது 13 பெண்கள் பலி: ஆபரேசன் செய்த டாக்டர் கைது Posted: 12 Nov 2014 09:19 PM PST சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தகத்பூரில் கடந்த சனிக்கிழமை குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அந்த முகாமில் 83 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது. கருத்தடை அறுவை செய்த பெண்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஒருவர் பின் ஒருவராக 13 பெண்கள் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி |
| நடனப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி நடனமாட வைத்த போலீஸ்காரர் Posted: 12 Nov 2014 09:05 PM PST உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நிகோஹ்லி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் சைலேந்திர குமார் சுக்லா என்பவர் துப்பாக்கி முனையில் நடனப்பெண்ணை மிரட்டி நடனமாட வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணை |
| மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் 16–ந்தேதி நடை திறப்பு Posted: 12 Nov 2014 09:01 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றது ஆகும். இந்த பூஜைகளில் இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் சபரிமலையில் திரண்டு அய்யப்பனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை |
| Posted: 12 Nov 2014 08:47 PM PST வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு கடலோர மாநிலங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் கோவில் முன் வாசல் |
| 2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும்: இஸ்ரோ தலைவர் தகவல் Posted: 12 Nov 2014 06:49 PM PST இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட இன்னும் ஒரிரு ஆண்டுகள் ஆயுளுடன் மங்கள்யான் விண்கலம் செயல்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். |
| என் நிலத்தை காணவில்லை: அதிகாரியிடம் மூதாட்டி புகார் Posted: 12 Nov 2014 04:14 PM PST சினிமாப்பட பாணியில் தனது நிலத்தை காணவில்லை என்று மூதாட்டி ஒருவர் நகரசபை அதிகாரியிடம் புகார் கொடுத்த ருசிகர சம்பவம் சிக்மகளூரில் நடந்து உள்ளது. 'கண்ணும், கண்ணும்' என்ற சினிமா படத்தில் ஒரு காட்சியில், 'அய்யோ எனது கிணற்றை காணவில்லை, அய்யோ எனது கிணற்றை காணவில்லை' |
| காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா அழைப்பு Posted: 12 Nov 2014 02:38 PM PST காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி |
| 5 மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய இந்தியா வற்புறுத்தல் Posted: 12 Nov 2014 11:50 AM PST ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மெர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. |
| பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது Posted: 12 Nov 2014 10:19 AM PST சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. கடைசியாக கடந்த 1-ந் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 குறைந்து, ஒரு லிட்டர் ரூ.67.01 ஆனது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43 குறைந்து லிட்டர் ரூ.56.84 ஆனது. |
| நேரு விழாவுக்கு மோடிக்கு அழைப்பு அனுப்பாதது காங்கிரசின் சின்ன புத்தியை காட்டுகிறது: பா.ஜ.க. காட்டம் Posted: 12 Nov 2014 08:57 AM PST இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் 17,18 தேதிகளில் தலைநகர் டெல்லியில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. |
| நுரையீரல் அழற்சி, பேதிக்கு கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் இந்தியக் குழந்தைகள் பலியானதாக தகவல் Posted: 12 Nov 2014 08:03 AM PST சர்வதேச நோய்த்தடுப்பு மருந்து மையம் மற்றும் ஜான் ஹாக்கின்ஸ் ப்ளூம்பர்க் பொது சுகாதாரப் பள்ளி ஆக்ய்வை இணைந்து நடத்திய ஆய்வில் கடந்த (2013) ஒரே ஆண்டில் மட்டும் நுரையீரல் அழற்சி நோய், பேதிக்கு கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்தியக் குழந்தைகள் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. |
| மாற்றுத் திறனாளிகளின் துயரத்தை விளக்கும் சர்வதேசப் படவிழா: டெல்லியில் 24-ம் தேதி தொடக்கம் Posted: 12 Nov 2014 07:45 AM PST மாற்றுத் திறனாளிகளின் தங்களது வாழ்க்கையில் அனுபவிக்கும் துயரத்தை விளக்கும் சர்வதேசப் படவிழா டெல்லியில் வரும் 24-ம் தேதி தொடங்குகின்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சர்வதேச அளவில் |
| தீவிரவாத இயக்கத்துக்காக தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய இருவர் கைது Posted: 12 Nov 2014 07:32 AM PST தீவிரவாத இயக்கத்தின் பெயரைச் சொல்லி தொழிலதிபரிடம் ஒரு லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டிய இருவரை ஜலந்தர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் வசிக்கும் தொழிலதிபரான கோமல் சர்மா என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுர்ஜித் சிங், குர்டிட் சிங் |
| மகாராஷ்டிராவில் கவர்னரை தாக்கியதாக 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் Posted: 12 Nov 2014 07:29 AM PST மகாராஷ்டிராவில் கவர்னரை தாக்கி காயப்படுத்தியதாக 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் இன்று தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. கடும் சர்ச்சைக்கிடையே, குரல் வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். |
| திருத்தவே முடியாத குடிகார மகனை கோடரியால் வெட்டிக் கொன்ற தாய் Posted: 12 Nov 2014 06:58 AM PST ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர்(35). தீவிர குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட இவர், சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து தாயாருடனும், மனைவியுடனும் தகராறு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். |
| கந்த்வா சிறையில் கைதிகள் பயங்கர மோதல்: 6 பேர் காயம் Posted: 12 Nov 2014 06:30 AM PST மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டச் சிறைச்சாலையில் இன்று கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சிறைச்சாலையில் உள்ள 3ம் எண் அறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் இரண்டு பேர் மற்றொரு அறையை நோக்கி சென்றனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |