மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 2ஜி ஊழல் பற்றி தெரிந்ததும் மன்மோகன்சிங் பதவி விலகியிருக்க வேண்டும்: ப.சிதம்பரம்
- வாரணாசியில் கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி
- மத்திய மந்திரி சபை நாளை மாற்றம்: 10 புதுமுகங்கள் மந்திரியாக வாய்ப்பு
- திருப்பதி கோவில் மாட வீதியில் ஷு அணிந்து நடந்த இலங்கை பிரதமர்: தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி
- மால்டா மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 25 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
- ஜம்மு காஷ்மீர்: ராணுவம் சுட்டதால் பலியான வாலிபரின் தந்தை இழப்பீடு தொகையை வாங்க மறுப்பு
- மந்திரிக்கு ரூ.1 கோடி கொடுத்த விவகாரம்: கேரள பார் உரிமையாளர் சங்க தலைவரிடம் 3 மணி நேரம் விசாரணை
- புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்துக்கு வந்த ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு: 3 பேர் கைது
- ஆண்கள் பேண்ட், டி-சர்ட் அணிவது இந்திய கலாச்சாரம் அல்ல: நிர்மலா சீதாராமன்
- பாதுகாப்பை உறுதி செய்ய மாணவிகளை கண்காணிக்கும் கல்லூரிகள்
- பத்மநாபசுவாமி கோவிலை ஏற்று நடத்த தயார்: சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுதாக்கல்
- மோடி பாதையில் குறுக்கிட வேண்டாம்: தலிபான் தீவிரவாதிகளுக்கு சிவசேனா எச்சரிக்கை
- கங்கை நதியில் படகு கவிழ்ந்து சிறுவர்-சிறுமிகள் பலி: சோனியா காந்தி நேரில் சென்று ஆறுதல்
- டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்றக்குழு கூட்டம்
- காஷ்மீர் தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
- காஷ்மீரில் 2 பேரை பலிகொண்ட துப்பாக்கி சூட்டுக்கு ராணுவம் பொறுப்பு ஏற்றது
- பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது
- சூரத் விமான நிலையத்தில் எருமை மீது மோதிய விமானம்: விசாரணைக்கு உத்தரவு
- பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து தாய்-மகள் பலி
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பூட்டான் வருகை: விமான நிலையத்தில் மன்னர் வரவேற்றார்
| 2ஜி ஊழல் பற்றி தெரிந்ததும் மன்மோகன்சிங் பதவி விலகியிருக்க வேண்டும்: ப.சிதம்பரம் Posted: 07 Nov 2014 11:28 PM PST முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வித்தியாசமான முறையில் கையாளப்பட்டு விட்டது. 2ஜி ஊழல் வெளியானதும் மன்மோகன்சிங் பதவி விலகி மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். |
| வாரணாசியில் கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி Posted: 07 Nov 2014 11:23 PM PST பிரதமர் மோடி மண்வெட்டி பிடித்து வாரணாசியில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். |
| மத்திய மந்திரி சபை நாளை மாற்றம்: 10 புதுமுகங்கள் மந்திரியாக வாய்ப்பு Posted: 07 Nov 2014 10:58 PM PST மத்திய மந்திரி சபை நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாற்றி அமைக்கப்பட உள்ளது. காபினெட் மந்திரிகள் 10 பேர், ராஜாங்க மந்திரிகள் 10 பேர் என 20 புதிய மந்திரிகள் நாளை அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதானந்த கவுடாவிடம் இருந்து ரெயில்வே இலாகா பறிக்கப்படுவது உறுதியாகி விட்டது. அதுபோல மனோகர் பாரிக்கர் புதிய ராணுவ மந்திரி ஆவதும் உறுதியாகி விட்டது. |
| திருப்பதி கோவில் மாட வீதியில் ஷு அணிந்து நடந்த இலங்கை பிரதமர்: தேவஸ்தான அதிகாரிகள் அதிர்ச்சி Posted: 07 Nov 2014 10:57 PM PST இலங்கை பிரதமர் ஜெயரத்னா தாரங்கா நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பத்மாவதி நகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஓய்வு விடுதிக்கு வந்து இறங்கிய அவரை கோவில் துணை நிர்வாக ஸ்ரீனிவாச ராஜு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். |
| மால்டா மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 25 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு Posted: 07 Nov 2014 10:22 PM PST மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 25 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மால்டா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இம்மாதம் 2 ஆம் தேதி 6 |
| ஜம்மு காஷ்மீர்: ராணுவம் சுட்டதால் பலியான வாலிபரின் தந்தை இழப்பீடு தொகையை வாங்க மறுப்பு Posted: 07 Nov 2014 10:15 PM PST ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் கடந்த 3–ந்தேதி ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. அப்போது காரில் சென்று கொண்டிருந்த முகமது யூசுப்பட் என்பவரின் மகன் பைசல் யூசுப் (16), மற்றொரு இளைஞர் மிரஜுதீன் ஆகியோர் குண்டு பாய்ந்து பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இதற்கு அந்த பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தவறுதலாக இந்த சம்பவம் நடந்து விட்டதாக ராணுவம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் உடனடியாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ராணுவ ரீதியான விசாரணை நடந்து வருகிறது. |
| மந்திரிக்கு ரூ.1 கோடி கொடுத்த விவகாரம்: கேரள பார் உரிமையாளர் சங்க தலைவரிடம் 3 மணி நேரம் விசாரணை Posted: 07 Nov 2014 10:13 PM PST கேரளாவில் மது விலக்கை அமல்படுத்த அரசு முடிவு எடுத்தது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான பார்களை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பார்களை மூட அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அது தள்ளுபடி ஆனதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து |
| புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்துக்கு வந்த ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு: 3 பேர் கைது Posted: 07 Nov 2014 10:09 PM PST ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி டோனி ஆன்னி லட்கேத் (வயது 75). புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தையான இவர் ஆண்டு தோறும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள புட்டபர்த்தி ஆசிரமத்துக்கு வருவது உண்டு. |
| ஆண்கள் பேண்ட், டி-சர்ட் அணிவது இந்திய கலாச்சாரம் அல்ல: நிர்மலா சீதாராமன் Posted: 07 Nov 2014 09:36 PM PST மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று விஜயவாடா வந்தார். அங்கு நடந்த அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்று மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது பெண்கள் ஜீன்ஸ் அணிவதில் எந்த தவறும் இல்லை என்றார். மாணவிகள் மத்தியில் அவர் பேசியதாவது:– |
| பாதுகாப்பை உறுதி செய்ய மாணவிகளை கண்காணிக்கும் கல்லூரிகள் Posted: 07 Nov 2014 09:36 PM PST பெங்களூரில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களை கண்காணிக்க சில வழிகாட்டுதல்களை ப்ரீ யூனிவர்சிட்டி (பி.யூ.) கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் |
| பத்மநாபசுவாமி கோவிலை ஏற்று நடத்த தயார்: சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுதாக்கல் Posted: 07 Nov 2014 08:56 PM PST திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இக்கோவிலில் 6 ரகசிய அறைகள் இருப்பதாகவும், அதில் இருக்கும் பல கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டுப் போவதாகவும், அதை கண்டுபிடித்து |
| மோடி பாதையில் குறுக்கிட வேண்டாம்: தலிபான் தீவிரவாதிகளுக்கு சிவசேனா எச்சரிக்கை Posted: 07 Nov 2014 07:20 PM PST இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள வாகா எல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித வெடிகுண்டு தாக்குதலில், 61 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் ஜமாத் அரார் இயக்கம் பொறுப்பு ஏற்றது. |
| கங்கை நதியில் படகு கவிழ்ந்து சிறுவர்-சிறுமிகள் பலி: சோனியா காந்தி நேரில் சென்று ஆறுதல் Posted: 07 Nov 2014 06:40 PM PST உத்தரபிரதேசத்தின் ரேபரேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கசாஸ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று நேற்று காலை கங்கை நதியில் சென்று கொண்டிருந்தது. படகில் இருந்தவர்களில் பெரும்பாலும் சிறுவர் - சிறுமிகள் ஆவர். |
| டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்றக்குழு கூட்டம் Posted: 07 Nov 2014 06:28 PM PST பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறலாம் என கூறப்படும் நிலையில், பா.ஜனதாவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. |
| காஷ்மீர் தேர்தலை ஒத்தி வைக்கக்கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் Posted: 07 Nov 2014 02:55 PM PST வரலாறு காணாத அளவில் சமீபத்தில் மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் அடைந்த காஷ்மீரில், வரும் 25-ந் தேதி தொடங்கி 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை, வெள்ள சேதத்தை காரணம் காட்டி தேர்தலை ஒத்தி போட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் ஜம்மு-காஷ்மீர் அவாமி தேசிய |
| காஷ்மீரில் 2 பேரை பலிகொண்ட துப்பாக்கி சூட்டுக்கு ராணுவம் பொறுப்பு ஏற்றது Posted: 07 Nov 2014 02:39 PM PST காஷ்மீரில் பத்கம் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி ராணுவத்தினர் ஒரு கார் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இளைஞர்கள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெரும் சர்ச்சையை எழுப்பிய இந்த விவகாரம் பற்றி ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் |
| பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது Posted: 07 Nov 2014 02:05 PM PST சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. |
| சூரத் விமான நிலையத்தில் எருமை மீது மோதிய விமானம்: விசாரணைக்கு உத்தரவு Posted: 07 Nov 2014 08:56 AM PST குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஓடுதளத்தில் எருமை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சூரத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 140 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் விமானம், மெலெழும்புவதற்கு சில வினாடிகளுக்கு முன்னதாக ஓடுபாதையில் வந்த எருமை மாடு மீது மோதி விபத்துக்குள்ளானது. |
| பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து தாய்-மகள் பலி Posted: 07 Nov 2014 07:53 AM PST மத்திய பிரதேச மாநிலத்தில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தாய்-மகள் பலியாகினர். சியோனி மாவட்டம் விஜயபானி கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பலூன் வியாபாரி ஒருவர் சிலிண்டரில் இருந்து பலூன்களுக்கு வாயுவை நிரப்பிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அதிக சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. |
| ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பூட்டான் வருகை: விமான நிலையத்தில் மன்னர் வரவேற்றார் Posted: 07 Nov 2014 07:01 AM PST ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பூட்டான் தலைநகர் திம்புவை வந்தடைந்தார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அவரை, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசார் நம்கியேல் வாங்சக் தன் மனைவியுடன் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். மேலும், பள்ளிக் குழந்தைகள் இந்தியா மற்றும் பூட்டான் தேசியக்கொடிகளுடன் அணிவகுத்து நின்று வரவேற்பு அளித்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |