மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அக்னி-2 ஏவுகணை சோதனை
- திருப்பதியில் கள்ள மார்க்கெட்டில் லட்டு விற்ற 2 பேர் கைது
- டெல்லியில் மாணவ–மாணவிகள் முத்தமிடும் போராட்டம்: ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பால் மோதல்
- முத்த போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி கட்டிப்பிடி போராட்டம் நடத்திய மாணவ–மாணவிகள்
- தீவிரவாதிகள் என நினைத்து மேகாலயா போலீசார் மீது அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
- காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கி சூடு: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
- டாக்டர் வீட்டில் கொள்ளை: கொள்ளையர்கள் கொல்கத்தாவில், துப்பாக்கிமுனையில் கைது
- மம்தா தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: பா.ஜ.க. அறிவிப்பு
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் தலைமறைவு
- மார்ச் மாதத்துக்குள் 10 கோடி புதிய உறுப்பினர்கள்: பா.ஜ.க. அதிரடி திட்டம்
- 1984-ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைக்கு நீதி கேட்டு ஐ.நா.சபை வாசலில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஜார்க்கண்ட் சட்டசபை முதல் கட்ட தேர்தல்: 13 தொகுதிகளில் 212 பேர் மனுக்கள் ஏற்பு
- வெற்றிகரமான பூட்டான் பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பினார் பிரணாப் முகர்ஜி
- பர்த்வான் குண்டுவெடிப்பு: தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி சிக்கினான்
- நாளை பதவியேற்பு விழா: மோடி மந்திரிசபையில் மேலும் ஒரு தெலுங்கு தேசம், சிவசேனா எம்.பி.க்கு வாய்ப்பு
- ஜம்மு- காஷ்மீர் மக்கள் மாற்று கட்சியாக பா.ஜனதாவை விரும்புகிறார்கள்- அவினாஸ் ராய் கன்னா
- காஷ்மீர் எல்லைப்பகுதி அருகே பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரம்
- திருமணத்திற்கு மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர் நண்பருடன் கைது
- சொத்து தகராறில் டாக்டரை சுட்டுக் கொன்ற மகன் தலைமறைவு
- 87-வது பிறந்த நாள்: அத்வானிக்கு மோடி நேரில் வாழ்த்து
| Posted: 08 Nov 2014 10:35 PM PST அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கக் கூடிய 'அக்னி–2' ஏவுகணை சோதனை இன்று நடந்தது. ஒடிசா கடற்கரையில் இந்த சோதனை இன்று நடைபெற்றது. இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இலக்கை நோக்கி சென்று தாக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. |
| திருப்பதியில் கள்ள மார்க்கெட்டில் லட்டு விற்ற 2 பேர் கைது Posted: 08 Nov 2014 10:05 PM PST திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு, பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. உலக புகழ் பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு, பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி, சிலர் லட்டு பிரசாதத்தை கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். திருமலை– திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சிலரும், இந்த கள்ளமார்க்கெட் வியாபாரத்திற்கு |
| டெல்லியில் மாணவ–மாணவிகள் முத்தமிடும் போராட்டம்: ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பால் மோதல் Posted: 08 Nov 2014 10:04 PM PST கேரள மாநிலம் கொச்சியில் நட்சத்திர ஓட்டல்களில் நடைபெற்ற நிகழ்ச்சியை கண்டித்து இடதுசாரி மாணவ–மாணவிகள் பொது இடத்தில் முத்தமிடும் போராட்டம் நடத்தினார்கள். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அந்த போராட்டத்தை முறியடிக்க முயற்சித்த போதும் |
| முத்த போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி கட்டிப்பிடி போராட்டம் நடத்திய மாணவ–மாணவிகள் Posted: 08 Nov 2014 08:46 PM PST கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதீய ஜனதா இளைஞர் அணியினர் அந்த |
| தீவிரவாதிகள் என நினைத்து மேகாலயா போலீசார் மீது அசாம் போலீசார் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம் Posted: 08 Nov 2014 07:22 PM PST அசாமின் கார்பி ஆங்லாங் மற்றும் மேகாலயாவின் மேற்கு ஜைனிடா ல்ஸ் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் மூல்பர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்பி தீவிரவாதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அங்குள்ள மக்களை மிரட்டி வரி வசூலிப்பதாகவும், அசாம் மற்றும் மேகாலயா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் |
| காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கி சூடு: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி Posted: 08 Nov 2014 06:28 PM PST காஷ்மீரில் உள்ள இந்திய நிலைகள் மீது நேற்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும், ஒரு பெண்ணும் குண்டுபாய்ந்து பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். |
| டாக்டர் வீட்டில் கொள்ளை: கொள்ளையர்கள் கொல்கத்தாவில், துப்பாக்கிமுனையில் கைது Posted: 08 Nov 2014 02:55 PM PST சென்னை அண்ணாநகர் டாக்டர் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கொல்கத்தாவில் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டனர். கொள்ளை கும்பல் ரெயில் மூலம் நாளை(திங்கட்கிழமை) சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். |
| மம்தா தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: பா.ஜ.க. அறிவிப்பு Posted: 08 Nov 2014 08:27 AM PST திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்காளம் |
| கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் தலைமறைவு Posted: 08 Nov 2014 08:12 AM PST உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நாக்லா கிராமத்தை சேர்ந்தவர், பிரிஜேஷ் சிங்(26). சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் ஆனது. இவரது மனைவி |
| மார்ச் மாதத்துக்குள் 10 கோடி புதிய உறுப்பினர்கள்: பா.ஜ.க. அதிரடி திட்டம் Posted: 08 Nov 2014 07:49 AM PST கட்சியை பலப்படுத்தும் விதமாக வரும் மார்ச் மாதத்துக்குள் 10 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை அனைத்து மாநிலங்களிலும் வலுப்படுத்த அக்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இப்போது இருக்கும் |
| 1984-ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைக்கு நீதி கேட்டு ஐ.நா.சபை வாசலில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Nov 2014 07:44 AM PST இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் |
| ஜார்க்கண்ட் சட்டசபை முதல் கட்ட தேர்தல்: 13 தொகுதிகளில் 212 பேர் மனுக்கள் ஏற்பு Posted: 08 Nov 2014 07:06 AM PST ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 13 தொதிகளுக்கு முதல் கட்டமாக வரும் 25-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடைபெற்றது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 234 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 22 பேர் மனு நிராகரிக்கப்பட்டது. 212 பேர் மனுக்கள் |
| வெற்றிகரமான பூட்டான் பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பினார் பிரணாப் முகர்ஜி Posted: 08 Nov 2014 06:55 AM PST இரண்டு நாள் அரசு முறை பயணமாக பூட்டானுக்குச் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். முன்னதாக, 26 ஆண்டுகளுக்கு பிறகு பூட்டானுக்கு வந்த முதல் ஜனாதிபதி என்ற முறையில் பிரணாப் முகர்ஜிக்கு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| பர்த்வான் குண்டுவெடிப்பு: தலைக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி சிக்கினான் Posted: 08 Nov 2014 06:31 AM PST மேற்கு வங்காளம் மாநிலம், பர்த்வான் மாவட்டம், கராகார்க் நகரில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் கடந்த மாதம் 2-ம் தேதி குண்டுவெடித்தது. இதில் இருவர் பலியாகினர். பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வங்காளதேசத்தைச் சேர்ந்த |
| நாளை பதவியேற்பு விழா: மோடி மந்திரிசபையில் மேலும் ஒரு தெலுங்கு தேசம், சிவசேனா எம்.பி.க்கு வாய்ப்பு Posted: 08 Nov 2014 05:18 AM PST மத்திய மந்திரிசபை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்தில் சுமார் 15 புதிய மந்திரிகள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதானந்த கவுடாவிடம் இருக்கும் ரெயில்வே இலாகா பறிக்கப்படுவதும், |
| ஜம்மு- காஷ்மீர் மக்கள் மாற்று கட்சியாக பா.ஜனதாவை விரும்புகிறார்கள்- அவினாஸ் ராய் கன்னா Posted: 08 Nov 2014 04:50 AM PST காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பி.டி.பி. கட்சிகள் மீது குற்றம்சாட்டிய பா.ஜனதா, அந்த மாநில மக்கள் மாற்றுக்கட்சியான பா.ஜனதாவை விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜம்மு தொகுதியின் பா.ஜனதா எம்.பி.யும் ஜம்மு- காஷ்மீர் சட்டசபை தேர்தல் பொறுப்பாளருமான அவினாஸ் ராய் கன்னா கூறியதாவது:- மக்களின் நம்பிக்கையை சிதைத்த காங்கிரஸ், |
| காஷ்மீர் எல்லைப்பகுதி அருகே பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணி தீவிரம் Posted: 08 Nov 2014 04:46 AM PST காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வழக்கத்தைவிட மிக கடுமையான பனி பெய்து வருகின்றது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள நஸ்தச்சுன் மலைப்பகுதியில் இன்று ராணுவ ரோந்து வாகனம் ஒன்று, வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. |
| திருமணத்திற்கு மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர் நண்பருடன் கைது Posted: 08 Nov 2014 04:10 AM PST மேற்கு வங்காளம் பெஹ்ராம்பூரில் திருமணத்திற்கு மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர் தன் நண்பருடன் கைது செய்யப்பட்டார். முர்ஷிதாபாத் மாவட்டம் ஜலாங்கி பகுதியைச் சேர்ந்தவன் ரிபான் ஷேக். இவருடைய நண்பன் சித்து ஷேக். ரிபான் ஷேக் அந்த வழியாக தினமும் பள்ளிக்கு சென்ற ஒரு மாணவியை காதலித்துள்ளான். அத்துடன் திருமணம் செய்துகொள்ள அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளான். ஆனால், அந்த மாணவி திருமணத்திற்கு மறுத்துவிட்டாள். |
| சொத்து தகராறில் டாக்டரை சுட்டுக் கொன்ற மகன் தலைமறைவு Posted: 08 Nov 2014 03:07 AM PST சொத்து தகராறில் பெற்ற தந்தையையே சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாக உள்ள மகனை போலீசார் தேடிவருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், கசேர்வா கிராமத்தைச் சேர்ந்தவர், இக்ரமுதீன்(50). டாக்டரான இவர், தனது வீட்டின் அருகே 'கிளினிக்' வைத்து நடத்தி வருகிறார். |
| 87-வது பிறந்த நாள்: அத்வானிக்கு மோடி நேரில் வாழ்த்து Posted: 08 Nov 2014 02:09 AM PST பா.ஜ.க.வின் மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி இன்று தனது 87-வது பிறந்த நாளை தலைநகர் டெல்லியில் கொண்டாடினார். நேற்று, வதோதரா தொகுதியில் கங்கையை தூயமைப்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தனது எம்.பி., தொகுதியான வாரணாசிக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரை நேரில் சந்தித்து, வாழ்த்துவதற்காகவே இன்று காலை டெல்லி திரும்பினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |