Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீர் சட்டசபை தேர்தல்: உமர் அப்துல்லா 2 தொகுதியில் போட்டி

Posted: 31 Oct 2014 10:51 PM PDT

காஷ்மீர் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. வருகிற 25–ந்தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. தொடர்ந்து டிசம்பர் 2, 9, 14, 25 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. டிசம்பர் 23–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போது அங்கு தேசிய மாநாட்டு கட்சி–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் முன்னாள் மத்திய

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: ராஜபக்சேயுடன் மோடி பேசுவார்

Posted: 31 Oct 2014 10:38 PM PDT

தமிழக மீனவர்கள் 5 பேர் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தூக்கில் போட கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 5 பேரை உடனே மீட்க வேண்டும் என்று தமிழக அரசியல்

சோனியாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு காங். தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும்: திக்விஜய்சிங்

Posted: 31 Oct 2014 10:33 PM PDT

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான தேர்தல்களை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2015–ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் உடனே ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி

காஷ்மீர், ஜார்க்கண்டில் பாஜக தனித்துப் போட்டி

Posted: 31 Oct 2014 10:14 PM PDT

காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வரும் 25–ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5–ந் தேதி தொடங்க உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

பண்டிகை நாட்களில் டூப்ளிகேட் ரெயில்: ரெயில்வே அமைச்சகம் புதிய திட்டம்

Posted: 31 Oct 2014 09:56 PM PDT

பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக ரெயில்வே அமைச்சகம் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. சமீபத்தில் பிரீமியம் வகை ரெயில்களையும் ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் பற்றி சாதாரண மக்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான சிறப்பு ரெயில்களில்

பெங்களூர் பெயர் இனி பெங்களூரு: 12 நகரங்களின் பெயர்கள் மாற்றம்

Posted: 31 Oct 2014 09:55 PM PDT

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் நமது ஊர் பெயர்களை அவர்கள் வசதிக்கு ஏற்ப மாற்றினார்கள். அந்த பெயர்கள் நமது மண்ணின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படுகின்றன. சுமார் 40 ஆண்டுகள் கடும் போராட்டத்துக்கு பிறகு பம்பாய் பெயர் மும்பை

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 31 Oct 2014 05:00 PM PDT

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 'ஸ்லீப்பர் செல்' பிரிவினரின் நடவடிக்கைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நவ்காம்-சன்போரா பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு 2 தீவிரவாதிகளை கைது செய்தனர்.

இன்று முதல் மானியம் அல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு

Posted: 31 Oct 2014 04:24 PM PDT

மத்திய அரசின் மானியச் சலுகை அல்லாத வர்த்தக கியாஸ் சிலிண்டர் ஒன்று (14.2 கிலோ எடை கொண்டது), சென்னையில் ரூ.883-க்கு விற்கப்பட்டது. தற்போது இதன் விலை 19 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி இனிமேல் ஒரு சிலிண்டரின் விலை ரூ.863.50 ஆகும். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததால், இந்த

கருப்பு பண விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆலோசகர் நியமனம்

Posted: 31 Oct 2014 03:38 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்கீழ், நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும் 11 உறுப்பினர்களையும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது.

ஞானதேசிகனின் ராஜினாமா குறித்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பேட்டி

Posted: 31 Oct 2014 03:02 PM PDT

ஞானதேசிகனின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரது குற்றச்சாட்டுகள் ஊகங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை என்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார். முகுல் வாஸ்னிக் டெல்லியில் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முறிந்தது

Posted: 31 Oct 2014 02:16 PM PDT

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு வருகிற 25-ந்தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், கடந்த 16 மாதங்களாக ஜார்கண்டில் கூட்டணி ஆட்சி நடத்திவரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் இடையே தேர்தலை சந்திப்பதற்கு கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

தமிழக மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு சுப்பிரமணியசாமி கடிதம்

Posted: 31 Oct 2014 11:05 AM PDT

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு ஐகோர்ட்டு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கடிதம் எழுதி உள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக இந்தியா, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது

Posted: 31 Oct 2014 10:29 AM PDT

ஐதராபாத்தில் போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கி பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியரை சைபராபாத் போலீசார் கைது செய்தனர். ஐதராபாத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வாலிபர் டேட்டாபேஸ் புரோகிராமராக பணியாற்றி வந்துள்ளார்.

மோட்சப் பதவியை அடைய 56 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஜைன மூதாட்டி மரணம்

Posted: 31 Oct 2014 09:36 AM PDT

மோட்ச கதியை அடையும் நோக்கில் கடந்த 56 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஜைன மதத்தைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி நேற்றிரவு காலமானார். ஒடிசா மாநிலம், கட்டாக் பகுதியைச் சேர்ந்த விக்கி தேவி சேத்தியா என்ற அந்த மூதாட்டி, தனது உடலை துறக்கும் 'சந்தாரா' என்னும் பழங்கால பக்தி நெறியின்படி, கடந்த 56 நாட்களாக அன்ன ஆகாரம் பருகாமல், மருந்து ஏதும் உட்கொள்ளாமல் தன்னை மறந்த நிலையில் படுத்த படுக்கையாக கிடந்தார்.

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் நாளை முதல் ரூ.20 கட்டணம்

Posted: 31 Oct 2014 07:17 AM PDT

வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. மற்ற வங்கிகளில் ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு ஐந்து முறை வரை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என்று இதுவரை சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

தேர்தலை சீர்குலைக்க சதி: காஷ்மீரில் 5 கிலோ சிலிண்டர் வெடி குண்டு கண்டுபிடிப்பு

Posted: 31 Oct 2014 06:40 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2, 9, 14, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சீர்குலைக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாத சக்திகள் முயற்சிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு

Posted: 31 Oct 2014 05:22 AM PDT

நாட்டில் உள்ள போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் உயரதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை முடித்துவிட்டு, ஐ.பி.எஸ். பட்டத்துடன் வெளியேறும் அதிகாரிகளுக்கு இன்று வழியனுப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

சுரேந்தர் கோலியின் மரண தண்டனை 25-ம் தேதி வரை நிறுத்தி வைப்பு

Posted: 31 Oct 2014 04:45 AM PDT

டெல்லி புறநகரான நொய்டா அருகே உள்ள நிதாரி கிராமத்தில் கடந்த 2005 மற்றும் 2006–ம் ஆண்டுகளில் சிறுமிகள் மாயமானார்கள். இதில் 16 சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற சுரேந்தர் கோலி, கடந்த செப்டம்பர் 8-ந் தேதி தூக்கு தண்டனைக்கு எதிராக மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், அவனது தூக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்

Posted: 31 Oct 2014 04:20 AM PDT

மராட்டிய மாநிலத்தின் 27-வது முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பதவியேற்றார். அவருக்கும் அவரது தலைமையிலான இதர மந்திரிகளுக்கும் மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புறுதி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி,

முத்தத் திருவிழாவில் தலையிட கேரள ஐகோர்ட் மறுப்பு

Posted: 31 Oct 2014 04:05 AM PDT

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™