Tamil Star |
- சமையலுக்கு பயன்படுத்துற காய் என்னமா ஜொலிக்குதுனு நீங்க பாருங்க…
- நாம் பயன்படுத்தும் பேனா எவ்வாறு தயாராகிறதுனு தெரியுமா?
- சார் உங்க திறமையை அடிச்சிக்க ஆளே இல்லை!!!
- Andi 4F வேவ்ஸ், Andi 4h டைகர்+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
- ஒருநாள் போட்டி : 88 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி
- ஹாட்ரிக் சதம் : யூனிஸ்கான் அபாரம்!!
- பணக்கார பெண் உலகின் வால்மார்ட்டின் கிறிஸ்டி வால்டன்!
- ஆப்ரிக்க நாட்டில் அதிபருக்கு எதிராக கலவரம்: 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்!
- மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராகிறது!
- இலங்கை கத்தோலிக்க திருச்சபையை அச்சுறுத்திய கோத்தபாய!
- ஒபாமா முகமூடியுடன் துப்பாக்கி முனையில் ஓட்டலில் கொள்ளையடித்த வாலிபர்!
- மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற ஜஸ்ரின் போர்க் தமது செயலுக்கு நீதிமன்றில் மன்னிப்புக் கோரினர்!
| சமையலுக்கு பயன்படுத்துற காய் என்னமா ஜொலிக்குதுனு நீங்க பாருங்க… Posted: 31 Oct 2014 06:43 AM PDT |
| நாம் பயன்படுத்தும் பேனா எவ்வாறு தயாராகிறதுனு தெரியுமா? Posted: 31 Oct 2014 06:36 AM PDT |
| சார் உங்க திறமையை அடிச்சிக்க ஆளே இல்லை!!! Posted: 31 Oct 2014 06:31 AM PDT |
| Andi 4F வேவ்ஸ், Andi 4h டைகர்+ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் Posted: 31 Oct 2014 04:37 AM PDT
iBall நிறுவனம் 3 புதிய Andi தொடர் ஸ்மார்ட்போன்களான Andi 3.5F Grabit, Andi 4F வேவ்ஸ், மற்றும் Andi 4h டைகர்+ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் இப்போது விலை விவரங்களுடன் நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. IBall Andi 3.5F Grabit ரூ. 3,499 விலையிலும், Andi 4F வேவ்ஸ் ரூ.4,699 விலையிலும் மற்றும் Andi 4h டைகர்+ ரூ.6,499 விலையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய iBall ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் விவரங்கள் பற்றி உத்தியோகபூர்வமாக தகவல்கள் இல்லை, எனினும் வரும் நாளில் நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து புதிய iBall Andi தொடர் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது மற்றும் இரட்டை காத்திருப்பு உடன் இரட்டை சிம் ஆதரிக்கின்றது. iBall Andi 3.5F Grabit: நிறுவனம் பட்டியல் படி, iBall Andi 3.5F Grabit ஸ்மார்ட்போனில் 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA டிஸ்ப்ளே வருகிறது. இதில் ரேம் 256MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 2GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. iBall Andi 3.5F Grabit ஸ்மார்ட்போனில் 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் 1250mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை அடங்கும். துரதிருஷ்டவசமாக, Andi 3.5F Grabit ஸ்மார்ட்போனில் 3G ஆதரவுடன் வரவில்லை. IBall Andi 4F வேவ்ஸ்: IBall Andi 4F வேவ்ஸ் ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. கைபேசியில் மற்ற குறிப்புகள், ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. IBall Andi 4F வேவ்ஸ் ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் 1400mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் 3G, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். IBall Andi 4h டைகர்+ : Andi 4F வேவ்ஸ் போன்று IBall Andi 4h டைகர்+ கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக குறிப்புகள் அடிப்படையில் உள்ளது. எனினும், சில வேறுபாடுகள் உள்ளன. ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ரேம் 1GB கொண்ட இரு மடங்கு கணினி நினைவகம் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் 3G, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். iBall Andi 3.5F Grabit முக்கிய குறிப்புகள்: இரட்டை சிம், 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA டிஸ்ப்ளே, ரேம் 256MB, 1.3GHz டூயல் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 2GB உள்ளடிக்கிய சேமிப்பு, 3.2-மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், மைக்ரோ-யூஎஸ்பி, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1250mAh பேட்டரி. IBall Andi 4F வேவ்ஸ் முக்கிய குறிப்புகள்: இரட்டை சிம், 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 512MB, 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3G, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1400mAh பேட்டரி. IBall Andi 4h டைகர்+ முக்கிய குறிப்புகள்: இரட்டை சிம், 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A7 (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3G, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1400mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருநாள் போட்டி : 88 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி Posted: 31 Oct 2014 03:57 AM PDT
இலங்கை அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 88 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கு பயிற்சி பெறும் வகையில், இலங்கை - இந்தியா ஏ அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் மும்பை, பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்தியா ஏ தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, உன்முக்த் சந்த் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 96 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. உன்முக்த் 54 ரன் எடுத்து (43 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, ரோகித்துடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி இலங்கை பந்துவீச்சை சிதறடித்தனர். ரோகித் - பாண்டே ஜோடி 2வது விக்கெட்டுக்கு 214 ரன் சேர்த்தது. ரோகித் ஷர்மா 142 ரன் விளாசி (111 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட் ஆனார். கேப்டன் மனோஜ் திவாரி 36 ரன், கேதார் ஜாதவ் 0, சஞ்சு சாம்சன் 1, ஸ்டூவர்ட் பின்னி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்தியா ஏ அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 382 ரன் குவித்தது. மணிஷ் பாண்டே 135 ரன் விளாசி (113 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் தம்மிகா பிரசாத் 3, லாகிரு கமகே 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 383 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து 88 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உபுல் தரங்கா அதிகபட்சமாக 76 ரன் (75 பந்து, 13 பவுண்டரி) எடுத்தார். சங்கக்கரா 34, ஜெயவர்தனே 33, டிக்வெல்லா 29, பிரியஞ்சன் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பிரசன்னா 21, சதுரங்க டி சில்வா 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் கரண் ஷர்மா 4, தவால் குல்கர்னி, பர்வேஸ் ரசூல் தலா 2, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியா - இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி, கட்டாக்கில் நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹாட்ரிக் சதம் : யூனிஸ்கான் அபாரம்!! Posted: 31 Oct 2014 03:53 AM PDT
ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்தது. அசார் அலி, யூனிஸ் கான் இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் அபுதாபி ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் அகமது ஷெஷாத் 35, முகமது ஹபீஸ் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அசார் அலி - யூனிஸ் கான் ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி ரன் குவித்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர். முதல் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் அடித்திருந்த யூனிஸ் கான், தொடர்ச்சியாக 3வது சதம் அடித்து அசத்தினார். கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சதம் அடிக்கும் முதல் வீரர் யூனிஸ் கான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1924-25ல் ஹெர்பர்ட் ஸட்கிளிப் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்துள்ளது. அசார் அலி 101 ரன் (223 பந்து, 6 பவுண்டரி), யூனிஸ் கான் 111 ரன்னுடன் (155 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பணக்கார பெண் உலகின் வால்மார்ட்டின் கிறிஸ்டி வால்டன்! Posted: 31 Oct 2014 03:28 AM PDT
தனது கணவர் இறந்த பிறகு வால்மார்ட்டின் ஒரு பங்கு சொத்து கிடைத்த கிறிஸ்டி வால்டன் தான் உலகின் பணக்கார பெண் ஆவார். வெல்த் எக்ஸ் உலகின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, பசிபிக், லத்தீன் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய 7 பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வால்மார்ட் நிறுவனத்தை துவங்கிய சாம் வால்டனின் மகன் ஜான் டி. வால்டனின் மனைவி கிறிஸ்டி தான் உலகின் பணக்கார பெண் ஆவார். ஜான் இறந்த பிறகு அவருக்கு வால்மார்ட் நிறுவன பங்குகள் கிடைத்தன. அவரின் சொத்து மதிப்பு 37.9 பில்லியன் டாலர் ஆகும். வட அமெரிக்காவின் பணக்கார பெண்ணும் கிறிஸ்டி தான் என்று அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆப்ரிக்க நாட்டில் அதிபருக்கு எதிராக கலவரம்: 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்! Posted: 31 Oct 2014 03:22 AM PDT
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பாசோ நாட்டில் 27 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் அதிபருக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறை கலவரமாக உருமாறியது. இதில் 30 பேர் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பாசோவில் கடந்த 27 ஆண்டுகளாக அதிபர் பிளாசி காம்போரே ஆட்சி நடத்தி வருகிறார். இவர் ஆட்சிக்கு வந்தபின் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தவில்லை. அத்துடன் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அந்நாட்டு அதிபருக்கு எதிராக இதுவரை எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தன. அதிபருக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்தார். இந்நிலையில் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். தலைநகர் அவுகாடவுகுவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் பெனிவான்டே சங்கராவும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது போலீசாரும் ராணுவத்தினரும் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர். இந்த கலவரத்தில் 30 பேர் பலியானார்கள். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து பர்கினா பாசோ நாட்டில் உடனடியாக 12 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதிபர் பிளாசி காம்போரே தலைமையிலான அரசு உடனடியாக நீக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பர்கினா பாசோ நாட்டில் அவசரநிலை பிரகடனம் தொடர்பான ஒப்பந்தத்தில் ராணுவ தலைவர் நபாரே ஹனோரி தரோரி கையெழுத்திட்டார். அவரது தலைமையில் நிர்வாக செயல்பாடுகள் நடைபெறும் என்று ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் பிளாசி காம்போரே தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பர்கினா பாசோ நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஒரு சிறப்பு தூதரை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அனுப்பிவைத்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராகிறது! Posted: 31 Oct 2014 03:05 AM PDT
ஹல்தமுல்லை, கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ உதவிக் கோரிக்கை கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று அமெரிக்கா உதவியளிக்க தயார் என்ற போதும் இலங்கை அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை. இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கோரிக்கையை அடுத்து யுஎஸ் எய்ட் நிறுவனம் ஊடக நிவாரணங்களுக்கான தயாரிப்புக்கள் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜேன் பெஸ்கி தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை கத்தோலிக்க திருச்சபையை அச்சுறுத்திய கோத்தபாய! Posted: 31 Oct 2014 02:59 AM PDT
பாப்பரசர் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை நேற்று அறிவித்தததாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அச்சுறுத்தல் காரணமாகவே பாப்பரசின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காரணமாக பாப்பரசரின் விஜயத்தை கத்தோலிக்க திருச்சபை இடைநிறுத்தினால், அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதனால், திட்டமிட்டப்படி பாப்பரசரின் விஜயம் நடைபெற வேண்டும் என கோத்தபாய ராஜபக்ஷ, ஆயர்களை அழைத்து கூறியுள்ளார். இதனால், பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும் கத்தோலிக்க திருச்சபை, பாப்பரசரின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறும் என நேற்று தீர்மானித்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதித் தேர்தலுக்கு தடையாக இருந்து விடக் கூடாது எனவும் பாப்பரசரின் விஜயத்திற்கு தடைகள் ஏற்படாதபடி பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் இதன் போது உறுதியளித்துள்ளதாக தெரிய வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒபாமா முகமூடியுடன் துப்பாக்கி முனையில் ஓட்டலில் கொள்ளையடித்த வாலிபர்! Posted: 31 Oct 2014 01:43 AM PDT
அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த நபர் ஓட்டலில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற ஜஸ்ரின் போர்க் தமது செயலுக்கு நீதிமன்றில் மன்னிப்புக் கோரினர்! Posted: 31 Oct 2014 01:38 AM PDT
கனடா மொங்ரனில் ஆர்சீஎம்பியினர் மூன்று பேரைச் சுட்டுக் கொன்ற ஜஸ்ரின் போர்க் தமது செயலுக்கு நீதிமன்றில் மன்னிப்புக் கோரினர். அவருக்குரிய தண்டனையைத் தீர்மானிப்பது குறித்து இடம்பெற்ற நீதிமன்ற அமர்வில் அவர் கருத்து வெளியிட்டார். கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பின்னர், காவல்துறையினர் அவரை விசாரணை செய்தபோது, தமது செயலை அவர் நியாயப்படுத்தியதைக் காட்டும் வீடியோ பதிவு நீதிமன்றத்தில் முன்னர் காண்பிக்கப்பட்டது. ஆணவத்துடன் அந்தவேளை அந்தக் கருத்தை வெளியிட்டதாகவும், மன்னிப்புப் கோருவது அர்த்தமற்றதென்றபோதிலும், தமது செயலுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் அவர் இன்று கூறினார். அவருக்குரிய தண்டனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
















