Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கடு‌கி‌ன் மரு‌த்துவ‌த் த‌ன்மை!

Posted: 30 Oct 2014 04:06 AM PDT

large

largeகடுகு ‌சிறு‌த்தாலு‌ம் கார‌ம் குறையாது எ‌ன்பது பழமொ‌ழி. இ‌த்தகைய ‌சிற‌ப்பு ‌மி‌க்க கடு‌கி‌‌ற்கு ஏராளமான மரு‌த்துவ குண‌ங்க‌ள் உ‌ள்ளன. பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌‌தி‌ற்கு உதவு‌கிறது. ‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம். ‌விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம். தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம். கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம். கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம். கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம். கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம். கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ!!

Posted: 30 Oct 2014 03:41 AM PDT

maartrit

maartritஸ்பெயின் நாட்டில் நடைபெறும் பிரபல கால்பந்து போட்டித் தொடரான 'லா லிகா' சாம்பியன்ஷிப்பின் சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2008-09ல் இந்த விருது முதல் முறையாக அறிமுகமானதில் இருந்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்த பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்ஸியை (அர்ஜென்டினா) இந்த ஆண்டு முதல் முறையாக ரொனால்டோ முந்தியுள்ளார். லா லிகா தொடரின் சிறந்த தாக்குதல் வீரர் (ஸ்டிரைக்கர்) மற்றும் சிறந்த கோல் அடித்த வீரர் என மேலும் 2 விருதுகளை பெற்ற ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளதுடன், உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுக்கும் மெஸ்ஸி - ரொனால்டோ இடையே கடும் போட்டி நிலவுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக பில்லியர்ட்ஸ் பைனலில் அத்வானி!

Posted: 30 Oct 2014 03:35 AM PDT

pankaj adhvaani

pankaj adhvaaniஉலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் (நேர அடிப்படையிலானது) விளையாட, இந்தியாவின் பங்கஜ் அத்வானி தகுதி பெற்றுள்ளார். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், உள்ளூர் வீரர் டேவிட் காஸியருடன் நேற்று மோதிய அத்வானி 1180-1175 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். ஒரு கட்டத்தில் 400 புள்ளிகள் முன்னிலை வகித்த அவர், டேவிட் காஸியர் கடும் நெருக்கடி கொடுத்த நிலையில் வெறும் 5 புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார். மற்றொரு அரை இறுதியில் இந்தியாவின் பாலச்சந்திர பாஸ்கர் 824-978 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலிடம் தோற்றார். இறுதிப் போட்டியில் பங்கஜ் அத்வானி - ராபர்ட் ஹால் மோதுகின்றனர். ஒரே ஆண்டில் புள்ளி மற்றும் நேர அடிப்படையிலான இரு வகை போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்லும் சாதனையை ஏற்கனவே 2 முறை நிகழ்த்தியுள்ள அத்வானி, 3வது முறையாக அந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுமி மலாலாவுக்கு குழந்தைகளுக்கான நோபல் விருது!

Posted: 30 Oct 2014 02:59 AM PDT

malala

malalaஉலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா போராடி வருகிறார். அவருக்கு ஸ்வீடனில் 2014 ம் ஆண்டுக்கான குழந்தைகள் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்விக்காக மலாலா யூசுப்சாய் என்ற சிறுமி போராடினார். மலாலா மீது ஆத்திரம் கொண்ட அல்கய்தா தீவிரவாதிகள், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காயமடைந்த மலாலாவுக்கு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டனில் இருந்தபடி பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் பெண் கல்வி மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடி வருகிறார். அவரது தைரியமான போராட்டத்துக்கு கவுரவம் அளிக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் வழங்கப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒரு விருது அவருக்கு கிடைத்துள்ளது. ஸ்வீடனில் வருடந்தோறும் வழங்கப்படும் குழந்தைகளுக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோம் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் ஸ்வீடன் ராணி சில்வியா கலந்து கொண்டு, மலாலாவுக்கு விருதை வழங்கினார். விருதுடன் ரூ.30 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அத்துடன், குழந்தைகள் கல்விக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் முன்னாள் அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ஜான் வுட்டுக்கும் கவுரவ விருது வழங்கப்பட்டது. மேலும், நேபாளத்தில் சிறையில் வாடும் குழந்தைகளுக்கு கல்வி பணியை மேற்கொண்டு வரும் சமூக சேவகர் இந்திரா ரானாமகருக்கும் கவுரவ விருது வழங்கப்பட்டது. இவர்கள் 2 பேருக்கும் ரூ.15 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மலாலா தனக்கு அளிக்கப்பட்ட ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை, காசாவில் போரில் சேதமடைந்த பள்ளிகளுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் பயங்கரம்: தாயை குத்தி கொன்ற மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

Posted: 30 Oct 2014 02:42 AM PDT

murder

murderஅமெரிக்காவில் தாயை கத்தியால் குத்திக் கொன்று விட்டு ரயிலின் முன் பாய்ந்து மகன் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் நியூயார்க்கின் புறநகர் பகுதி லாங் ஐலாண்ட். இங்கு பாட்ரிசியா வார்டு (65) என்ற பெண்மணி வசிக்கிறார். இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது மகன் டெர்ரிக் வார்டு (35). லாங் ஐலாண்ட் பகுதியில் பார்மிங்டேல் அபார்ட்மெண்ட்டுக்கு வெளியே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. உடலின் அருகே கத்தி இருந்தது. இதுகுறித்து நாஸ்சாவ் கவுன்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதேபோல், 35 வயதான வாலிபர் ஒருவரின் உடல் அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் துண்டு துண்டாக கிடந்தது. இறந்து கிடந்த இருவரும் பாட்ரிசியா, டெர்ரிக் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த போலீஸ் விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவந்தது. மகன் டெர்ரிக் வார்டு சட்ட விரோதமாக துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஊர் சுற்றியும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததையும் பாட்ரிசியா கண்டித்துள்ளார். தாய் கண்டித்ததைப் பிடிக்காமல், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டுக்குள் தாயைக் கத்தியால் குத்தி கொன்றான் டெர்ரிக். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தாயை குத்திக் கொன்ற வருத்தத்தில் டெர்ரிக் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு ஜனாதிபதி பரிவாரங்களுடன் விஜயம்!

Posted: 30 Oct 2014 02:33 AM PDT

koskantha_mahinda

koskantha_mahindaமண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான், விமல் வீரவன்ச உள்பட முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். தற்போது ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களின் வருகையை எதிர்பார்த்து காலி முகத்திடலுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு அமைச்சின் புற்தரையில் இரண்டு வான்படை ஹெலிகெப்டர்கள் வந்து காத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் கொஸ்லாந்தை விஜயத்தின்போது மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ஜனசெவண வீடமைப்புத்திட்டம் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஜனாதிபதி விஜயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹெலிகெப்டர் மூலம் நிலச்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பதுளை கொஸ்லந்த ஹல்துமுல்ல –மீரியபெத்த பிரதேசத்தை சென்றடைந்துள்ளார். நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து தேடிப்பார்த்து அவர்களுக்கு தேவையான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும். மீரியபெத்த பிரதேசத்தில் உள்ள 120 தோட்ட லயன் வீடுகள் நிலச்சரிவில் சிக்கியுள்ளன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேரினவாதத்தின் நாடாளுமன்றில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது: கூட்டமைப்பு

Posted: 30 Oct 2014 02:29 AM PDT

TNA

TNAவடகிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமையினை வழங்குவதில் அரசாங்கம் அக்கறையற்றிருப்பதுடன், தமிழ் மக்களின் பொருளாதார மூல வளங்களை சிதைப்பதிலும், இருப்பை அழிப்பதிலும் அக்கறை காட்டிவருகின்றது. ஆனால் நாடாளுமன்ற தெரிவுக்குழு போன்ற போலிகளை காண்பித்து தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை வழங்கப்போவதான நாடகமும் நடக்கின்றது. சிங்கள பேரினவாத சக்திகள் நிறைந்திருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எமக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை. அதனால் அதனை நாங்கள் விரும்பவில்லை என அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய மதிப்பீட்டாளர் மைக்கல் ஹில்மன் தலமையிலான குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவைசேனாதிராசா சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றய தினம் யாழ். மாவட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இடமொன்றில் நடைபெற்ற மேற்படி சந்திபின் போதே கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேற்படி சந்திப்பு தொடர்பாக மாவைசேனாதிராசா மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, தமிழ் மக்கள் இந்தியாவில் மட்டும் 1லட்சத்து 70ஆயிரம் பேர் உள்ளார்கள், யாழ்.மாவட்டத்தில் மட்டும் 35வரையிலான குடும்பங்கள் மீள்குடியேற முடியாமல் இருக்கின்றார்கள். ஆனால் இந்த மக்களுடைய நிலங்களை படையினர் ஆக்கிரமித்திருக்கின்றார்கள். நிலத்திற்குச் சொந்தமான மக்கள் விவசாயம் செய்யவும், கடற்றொழில் செய்யவும் அனுமதியில்லை, ஆனால் படையினரும், அவர்களின் உதவியுடன் சிங்கள மீனவர்கள் மற்றும் சிங்கள விவசாயிகள் தமிழர் நிலங்களில் தொழில் செய்கின்றார்கள். இது தமிழ் மக்களின் அடிப்படை பொருளாதார மூலவளத்தை சிதைக்கும் நோக்கமாகவும், தமிழ் மக்களின் இருப்பை சிதைக்கும் நோக்கமாகவுமே நாங்கள் பார்க்கின்றோம். இதனை விட வடக்கில் 70 தொடக்கம் 80வீதமான மக்களின் ஏகோபித்த தீர்மானத்தின் படி வடமாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை முடக்கும் வகையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளும், படையினரின் செயற்பாடுகளும், ஆளுநரின் செயற்பாடுகளும் அமைகின்றன. எனவே இங்கே மக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்கப்படவில்லை. இதனை விட 30வருடங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணத்திற்கு எவ்விதமான விசேட நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படுவதில்லை. இதேபோன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் அக்கறையற்றிருப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம். 2011ம் ஆண்டு நாம் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை 2012 ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கத்தினாலேயே கிழித்தெறியப்பட்டது. இங்கே நீதித் துறை, தேர்தல் ஆணையகம் சுதந்திரமானதாக இல்லை. இந்நிலையில் நாங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை வழங்குவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினை அமைத்திருக்கின்றோம் அவர்கள் வரவில்லை என அரசாங்கம் ஒரு போலியான அமைப்பை உருவாக்கி நாடகமாடிக் கொண்டிருக்கின்றது. அவ்வாறெனில் அரசாங்கம் எம்மோடு பேசி ஒரு தீர்வு திட்டத்தை, முன்மொழியட்டும், அதன் பின்னர் அது தொடர்பில் நாங்கள் பேசுவோம். சிங்கள பேரினவாத சக்திகள் நிறைந்திருக்கும் ஒரு இடத்தில் எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் தமிழ் மக்களை முழுமையாக முடக்கவே பார்க்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம் என்றார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண் எத்தனை முறை வதைக்கப்படுகிறார்: அமெரிக்க பிரபல நடிகை வெளிக்காட்டினார்!

Posted: 30 Oct 2014 02:13 AM PDT

10-Hours-of-Walking-in-NYC-as-a-Woman

10-Hours-of-Walking-in-NYC-as-a-Womanபெண்கள் மத்தியில் இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு நாளின் பத்து மணி நேரத்தில் ஒரு பெண் எத்தனை முறை தொல்லைக்கு ஆளாகிறாள் தெரியாமா? என்ற கேள்வியோடு ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார்கள் பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்கவே இந்த இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகஸ்ட் மாதாம் ரோப் பிளிஸ் என்பவர் பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைக்கு எதிராக எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் கூடவே இவரது தோழியும் அடிக்கடி அதைப்பற்றி சொல்ல தீவிரமடைந்து இந்த காணொளி தயாரித்துவிட்டார். இதற்கு, தாமாகவே நடிப்பதாக சொல்லி முன்வந்திருக்கிறார் அமெரிக்கவைச் சேர்ந்த நடிகையும் அதெலட்டுமான ஷோசனா பி ராபர்ட். கிட்டத்தட்ட பத்து மணி நேரம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கையில் இரண்டு மைக்குளை மறைத்துக் கொண்டு நடக்க அவருக்கு முன்னால் ரோப் காமிராவை மறைத்து கொண்டு சென்று எல்லாவற்றையும் படம் பிடித்திருக்கிறார். இதில், ஷோசனா தெருவில் நடந்து செல்லும்போது இளைஞர்கள் பலர் அடிக்கும் கமென்ட்டுகள் தெளிவாய் விழுந்திருக்கின்றன. எல்லாவிதாமான பாலின வன்முறைகளில் இந்த தெருக்களில் நடக்கும் வன்முறை தான் ஆரம்பமாக இருந்திருக்கிறது. பெரும்பாலும், ஆண்கள் நிறத்தினால் தான் குற்றம் செய்ய தூண்டப்படுகிறார்கள் என்றும் இவர்களது பத்து மணி நேர உலாவின்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பெரும்பாலானோர் இதில் பெண்களை பெரும்பாலும் தரக்குறைவாக பேசியிருக்கிறார்களாம். நான் அவர்களை கண்டு கொண்டாலும் இல்லையென்றாலும் எனக்கு தொல்லை வந்து கொண்டு தான் இருந்தது என்று சொல்லி இருக்கிறார் ஷோசனா. இந்த தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை பின் தொடர்வது, அவர்களை தாக்குவது போல் வருவது, தரக்குறைவான வார்த்தைகளை உபயோகிப்பது எல்லாம் பெண்களை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் பெரும்பாலும் இருக்கிறது. பயந்தோமானால், இன்னும் நம் மேல் அதிகமாக தங்களின் சக்தியை ப்ரோயோகிக்க ஆரம்பிப்பர். வயது வரம்பின்றி எல்லா வயதினப் பெண்களும் இதில் பாதிப்படைகின்றனர். இவர்களின் ஒரே நோக்கம் பொதுஇடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை குறைக்கவும் இவற்றைப் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான். இதுவரை 26 நாடுகளிலிருந்து நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும் இந்த இயக்கம், இதுபோல் பொது இடத்தில் நீங்கள் சந்தித்த வன்முறைகளை ஸ்மார்ட் போன் மூலமாக படமோ, வீடியோவோ எடுத்துக் அனுப்பவும் சொல்கின்றனர். நாம் யாரென்று காட்டும் உரிமை நமக்கு இருக்கிறது, மற்றவர்களின் கூற்றுப்படி இருக்க வேண்டும் என்றில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் யாருடைய தொலைக்கும் நான் செவிசாய்க்கமாட்டேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாகவே இருக்க முழு உரிமையிருக்கிறது என்று சொல்கிறார்கள் இவர்கள். வன்முறை நடக்கும்போது அமைதியாய் இருந்து விடுகிறோம். யாரும் கவனிக்கவில்லை என்ற தைரியம் அவர்களை இன்னும் இன்னும் சீண்ட ஆர்வத்தை தூண்டுகிறது. அதனை முதலில் தகர்த்தெரிய வேண்டும். உங்களின் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் விழிப்புணர்வு அடையவும், அவர்களுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வழி வகுக்கும். யாரும் இதற்கு பயப்பட தேவையில்லை என்று சொல்லியிருக்கும் இவர்களது ப்ளாக்கில் ஏராளமான பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்களாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

13வது குழந்தைக்காக ஆவலுடன் காத்திருக்கும் அமெரிக்க தம்பதி!

Posted: 30 Oct 2014 02:00 AM PDT

Baby

Babyஅமெரிக்காவில் மிச்சிகனில் வாழும் தம்பதி, 12 மகன்களுக்கு பின் தங்களின் 13 வது குழந்தை ஆணா, பெண்ணா என ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஜே மற்றும் கடெரி தம்பதிக்கு ஏற்கனவே 12 மகன்கள் உள்ளனர். இத்தம்பதியினரின் மூத்த மகனுக்கு 22 வயது ஆகியுள்ள நிலையில், இவர்கள் தங்களின் 13 வது குழந்தை ஆணா, பெண்ணா என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு மே மாதம் பிறக்கவிருக்கும் இக்குழந்தையின் வருகைக்கு காத்திருக்கும் தாய் கடெரி, 'எனக்கு பெண் குழந்தை பிறந்தால் என்னால் அதனை நம்பமுடியாது. எனது குடும்பத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் நான் மட்டுமே பெண்ணாக இருக்கிறேன். வீட்டிற்கு ஒரு பெண் குழந்தை வந்தால் நன்றாக தான் இருக்கும், ஆனால் அதுவே ஆணாக இருந்தால் எனக்கு சிறிது அழுத்தம் குறைந்த மாதிரி தோன்றும். எங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியும், ஏன் அதை மாற்ற நினைக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். 12 குழந்தைகளை பெற்றுள்ள இத்தம்பதி ஒருமுறை கூட கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய முயன்றதில்லையாம். இதுகுறித்து கடெரியின் கணவர் ஜே தெரிவிக்கையில், 'எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். எங்கள் வீட்டில் எப்போதும் ஆண்கள் சார்ந்த விஷயங்களையே அதிகம் பார்க்க முடியும். 12 மகன்கள் இருக்கும் ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தையை சேர்த்தால் எப்படி இருக்குமென உணர ஆவலாக உள்ளது. ஆனால், குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆரோக்கியமான குழந்தையையே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார். தான் 12 குழந்தைகளை பெற்றெடுத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கடெரி, 'எனக்கு கர்ப்பமாக இருப்பது மிகவும் பிடிக்கும், எனது வாழ்கையின் பாதி நாட்கள் நான் கர்ப்பமாக இருந்திருக்கிறேன். அது ஒரு சிறப்பான அனுபவம்' எனக் கூறி இருக்கிறார்.  

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™