மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- புற்று நோய் பாதித்த குழந்தைகளை மகிழ்வித்த கோமாளிகள்
- இந்திரா நினைவுநாள்: பிரதமர் மோடி இரங்கல்
- பெங்களூரில் தொடரும் கற்பழிப்பு: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்
- சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம்
- கேரளாவில் ரெயில் பெட்டியில் இளம்பெண்ணை எரித்து கொன்ற தமிழக வாலிபர் கைது
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பலியான குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
- கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது: ஷாருக்கான்
- வன்முறை, தீவிரவாதிகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு நிவாரண நிதி ரூ.5 லட்சமாக உயர்வு: மத்திய அரசு முடிவு
- இரும்பு மனிதர் பட்டேல் பிறந்தநாள்: டெல்லியில் இன்று ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஜனாதிபதி, மோடி பங்கேற்பு
- அரியானாவில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த 3 பேர் கைது
- மத்திய அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கைகள்
- திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
- இலங்கையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம்
- மும்பையில் இன்று நடைபெறும் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவை சிவசேனா புறக்கணிக்க முடிவு
- பேஸ்புக் காதல்: பள்ளி மாணவியை கேரளாவுக்கு அழைத்து சென்ற வாலிபர் கைது
- 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும்-வெளியுறவுத் துறை
- கேரளாவில் மதுபான கடைகளை மூடும் அரசின் முடிவு சரியானது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
- தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி
- துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு
- பெங்களூரில் சாலையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
| புற்று நோய் பாதித்த குழந்தைகளை மகிழ்வித்த கோமாளிகள் Posted: 30 Oct 2014 10:59 PM PDT மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை வளாகத்திற்கு விதவிதமான வண்ண உடைகளில் கோமாளிகள் போல வேடமணிந்து வந்த கலைஞர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குஷிப்படுத்தினர். சர்வதேச கோமாளி விழாவிற்காக இந்தியா வந்துள்ள இவர்கள் |
| இந்திரா நினைவுநாள்: பிரதமர் மோடி இரங்கல் Posted: 30 Oct 2014 10:38 PM PDT முன்னாள் பிரதமர் இந்திராவின் 30–வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் இந்திரா மறைந்த இந்த நாளில் அவரைப் பற்றிய நினைவுகளில் தானும் பங்கெடுத்துக் கொள்வதாக |
| பெங்களூரில் தொடரும் கற்பழிப்பு: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் Posted: 30 Oct 2014 10:31 PM PDT பெங்களூரில் மீண்டும் ஒரு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். |
| சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம் Posted: 30 Oct 2014 10:21 PM PDT மும்பையில் உள்ள கோவண்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்று, கொலை செய்த நபர் அச்சிறுமியின் இறுதிசடங்கிற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது. கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் டெய்லர் கடை நடத்திவரும் நபர் ஒருவர், தனது கடைக்கு வந்திருந்த 12 வயது சிறுமியிடம் தகாத |
| கேரளாவில் ரெயில் பெட்டியில் இளம்பெண்ணை எரித்து கொன்ற தமிழக வாலிபர் கைது Posted: 30 Oct 2014 10:20 PM PDT கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் கடந்த 20–ந்தேதி ஆளில்லாத ரெயில் பெட்டியில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டார். அதிகாலை நேரத்தில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் அந்த பெண் ரெயில் பெட்டியில் ஏறியதும் அவர் |
| சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பலியான குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு Posted: 30 Oct 2014 08:17 PM PDT 1984-ம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலைக்குப்பிறகு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் பலியான 3,325 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது: ஷாருக்கான் Posted: 30 Oct 2014 07:43 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கொல்கத்தாவில் அளித்த ஒரு பேட்டியில், 'இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். அதற்காக ஒரு கால்பந்து அணியை சொந்தமாக வாங்க வேண்டும் |
| வன்முறை, தீவிரவாதிகளால் பாதிக்கப்படுவோர்களுக்கு நிவாரண நிதி ரூ.5 லட்சமாக உயர்வு: மத்திய அரசு முடிவு Posted: 30 Oct 2014 05:17 PM PDT இந்தியாவில் பல இடங்களில் வகுப்பு கலவரம் மற்றும் நக்சலைட்டுகளின் வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இந்த மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோருக்கும், முழுமையாக பாதிக்கப்பட்டோருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் மத்திய அரசு ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கி வருகிறது. |
| இரும்பு மனிதர் பட்டேல் பிறந்தநாள்: டெல்லியில் இன்று ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஜனாதிபதி, மோடி பங்கேற்பு Posted: 30 Oct 2014 04:28 PM PDT பிரிந்து கிடந்த 562 சமஸ்தானங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டின் இரும்பு மனிதர் என்ற பெயரைப் பெற்றவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது பிறந்த நாள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. |
| அரியானாவில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த 3 பேர் கைது Posted: 30 Oct 2014 03:41 PM PDT அரியானா மாநிலம், சோனேபட் மாவட்டம் கோகனா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 3 நாட்களுக்கு முன் சுரங்கம் தோண்டி கொள்ளையடித்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. |
| மத்திய அரசின் அதிரடி சிக்கன நடவடிக்கைகள் Posted: 30 Oct 2014 03:12 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்ற பாரதீய ஜனதா கூட்டணி அரசு, அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இப்போது நாட்டின் நலிவடைந்த நிதி நிலைமையை தூக்கி நிறுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. |
| திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது Posted: 30 Oct 2014 02:42 PM PDT கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டரான சுமாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு அபிஷேக்கும், சுமாவும் |
| இலங்கையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அனுதாபம் Posted: 30 Oct 2014 02:17 PM PDT இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள படுல்லா மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த பல வீடுகள் தரைமட்டமாகின. நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை காணவில்லை. |
| மும்பையில் இன்று நடைபெறும் முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவை சிவசேனா புறக்கணிக்க முடிவு Posted: 30 Oct 2014 01:39 PM PDT மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கிறார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். |
| பேஸ்புக் காதல்: பள்ளி மாணவியை கேரளாவுக்கு அழைத்து சென்ற வாலிபர் கைது Posted: 30 Oct 2014 10:17 AM PDT மங்களூர் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கங்கநாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 16, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அம்பலபுரா பகுதியை சேர்ந்த ஜெர்சி பிரான்சிஸ் (18) என்பவருக்கு 'பேஸ்புக்' மூலமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. ஜெர்சி பிரான்சிஸ் |
| 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை: இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும்-வெளியுறவுத் துறை Posted: 30 Oct 2014 06:45 AM PDT இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் இந்திய தூதரகம் மேல்முறையீடு செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்திய-இலங்கை கடல் எல்லையில் போதை பொருட்கள் கடத்தலில் |
| கேரளாவில் மதுபான கடைகளை மூடும் அரசின் முடிவு சரியானது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி Posted: 30 Oct 2014 05:42 AM PDT கேரளாவில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார். கேரள உயர்நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் தரமில்லாத பார்களை மூடுமாறு உத்தரவிட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன் 418 பார்கள் மூடப்பட்டன |
| தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி Posted: 30 Oct 2014 04:17 AM PDT மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள், பின் வீட்டிலிருந்து வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக |
| துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு Posted: 30 Oct 2014 03:55 AM PDT லக்னோவில் உள்ள சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுக்கும்படி சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| பெங்களூரில் சாலையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள் Posted: 30 Oct 2014 01:51 AM PDT பெங்களூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் "தூய்மையான இந்தியா" அபிவிருத்தி திட்டத்தை பின்பற்றி சாலைகளை சுத்தப்படுத்தினர். விஜயா ஆசிரியர்கள் கல்லூரியை சேர்ந்த 160 மாணவர்கள் ஜெயநகர் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதுநிலை பட்டதாரி மாணவர் ராஜேஷ், 'பிரதமர் மோடி தூய்மையான இந்தியா |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |