Tamil Star |
- 3 வயதில் 70 கிலோ எடையுடன் வலம்வரும் கொளு கொளு சிறுவன்!
- கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படியொரு கண்கொள்ளாக்காட்சியை பார்க்க முடியுமா?
- வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!!
- வெண்கல பதக்கத்தை ஏற்க மறுத்த குத்து சண்டை வீராங்கனை மன்னிப்பு கேட்டார்!
- பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!
- சென்னை விஞ்ஞானிக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு?
- பேஸ்புக்கில் ஒபாமாவுக்கு வெளிநாட்டு ஃபேன்ஸ் தான் அதிகம்!!!
- ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதில் பயனில்லை! ஆளும் கட்சி எம்.பி
- ரணில் விக்கிரமசிங்கவை உளவு பார்த்த மத்திய வங்கி ஆளுனர்!
- கனேடிய அரசின் கடந்த நிதியாண்டுக்கான பற்றாக்குறை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருக்கும் – ஸ்டீபன் ஹாப்பர்
- கனடாவில் மாயமாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த விமான பணிப்பெண்கள்!
- ஐஎஸ் ஐஎஸ்-ற்கு எதிரான போர் நடவடிக்கை குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு: பிரதம மந்திரி ஸ்டெபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்!
| 3 வயதில் 70 கிலோ எடையுடன் வலம்வரும் கொளு கொளு சிறுவன்! Posted: 03 Oct 2014 04:58 AM PDT |
| கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படியொரு கண்கொள்ளாக்காட்சியை பார்க்க முடியுமா? Posted: 03 Oct 2014 04:53 AM PDT |
| வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! Posted: 03 Oct 2014 04:13 AM PDT
நாம் தண்ணீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் நிறையத் தண்ணீர் குடிப்பது இன்னும் நல்லது. ஆனால், சுடுநீரைக் குடிப்பதால் அதைவிட அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வாருங்கள். அது ஏற்படும் மாற்றத்தை நீங்களே கண்கூடாகக் காண்பீர்கள். இப்போது வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம். கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும் முகமும் பொலிவடையும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும். இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அதிக உடல் எடை என்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். இந்தக் காலத்தில் சிலருக்கு வேகமாகவே வயதாகி விடும். உடலிலும் சருமத்திலும் தேவையில்லாமல் இருக்கும் நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருள்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெண்கல பதக்கத்தை ஏற்க மறுத்த குத்து சண்டை வீராங்கனை மன்னிப்பு கேட்டார்! Posted: 03 Oct 2014 04:07 AM PDT
ஆசிய கோப்பையில் கிடைத்த வெண்கல பதக்கத்தை ஏற்க மறுத்த குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி நடந்த சம்பவத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். ஆசிய கோப்பை குத்துச்சண்டையில் மகளிருக்கான 57-60 கிலோ எடைப்பிரிவு அரை இறுதியில், தென் கொரியாவின் ஜினா பார்க் வெற்றிபெற்று, இந்தியாவின் சரிதா தேவி தோல்வியடைந்தார். ஆனால், சரிதா தேவியோ தான் தோல்வியடையவில்லை என்றும், நடுவர் தவறாக தீர்ப்பளித்தார் என்றும் குற்றம்சாட்டி, வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், இந்த விவகாரத்தில் விளையாட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி சரிதா மீது கோபத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து சரிதா தேவியை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட தடை விதிக்கவும் அந்த அமைப்பு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் சிங் கு வு-விற்கு சரிதா தேவி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சரிதா தேவிக்கு மீண்டும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது! Posted: 03 Oct 2014 04:03 AM PDT
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 67 ரன்களையும், பிளெஸ்ஸிஸ் 46 ரன்களும், ஜடேஜா 27 ரன்களையும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பி்ற்கு 182 ரன்கள் எடுத்து 183 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. பஞ்சாப் அணியில் அதிபட்சமாக அவானா 4 விக்கெட்டுகளையும், ஏ.ஆல். படேல் 2 விக்கெட்டுகளையும், பெரீரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பிறகு, களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக படேல் 31 ரன்களும், மில்லர் 22 ரன்களும் சேர்த்தனர். ஆனால், ஷேவாக், மேக்ஸ்வெல் ஆகியோர் எந்த ரன்னும் எடுக்காமல் அவுட்டாகி விட்டனர். 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பஞ்சாப் அணி. இதைத்தொடர்ந்து சென்னை அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள இருக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சென்னை விஞ்ஞானிக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு? Posted: 03 Oct 2014 03:56 AM PDT
அமெரிக்கா வாழ் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானியான ராமமூர்த்தி ரமேஷுக்கு நடப்பாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவதற்கு 27 பேர் அடங்கியுள்ள பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இயற்பியலுக்கான பிரிவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் யோஷினோரி டோகுரா ஆகியோருடன் இணைந்து ரமேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ராமமூர்த்தி ரமேஷ், சென்னையை சேர்ந்தவர். சென்னையில் பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.,சில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) படித்தவர். 1987ம் ஆண்டுகலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பி.எச்டி., படிப்பை மேற்கொண்டார். 1995 முதல் 2003 வரை வாஷிங்டனில் உள்ள மேரிலேண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 2004 முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக்கில் ஒபாமாவுக்கு வெளிநாட்டு ஃபேன்ஸ் தான் அதிகம்!!! Posted: 03 Oct 2014 03:52 AM PDT
பல அமெரிக்க அரசியல் தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். ஃபேஸ்புக்கில் அதிக அளவில் வெளிநாட்டு ஃபேன்ஸ் உள்ள தலைவர்களில் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். தனது நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த சோஷியல்பேகர்ஸ் என்ற நிறுவனம் அளித்த தகவலின்படி தி நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. புதன்கிழமை வரை மோடிக்கு ஃபேஸ்புக்கில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 529 ஃபேன்ஸ் உள்ளனர். பெரும்பாலான அமெரிக்க அரசியல் தலைவர்களை விட மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிகமான அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தியதால் அவருக்கு ஃபேஸ்புக்கில் ஏராளமான ஃபேன்கள் கிடைக்க காரணம். நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பல அமெரிக்க தலைவர்களும் கலந்து கொண்டனர். என்ன தான் மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் இருந்தாலும் ஏராளமான இந்தியர்கள் தான் அவரது ஃபேஸ்புக் ஃபேன்ஸாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஃபேஸ்புக் ஃபேன்களில் 1 கோடியே 50 லட்சம் பேர் அமரிக்கர்கள், மீதமுள்ள 3 கோடியே 70 லட்சம் பேர் அமெரிக்கா அல்லாத நாட்டவர்கள். ஃபேஸ்புக்கில் அதிக வெளிநாட்டு ஃபேன்கள் வைத்திருக்கும் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஒபாமா தான்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதில் பயனில்லை! ஆளும் கட்சி எம்.பி Posted: 03 Oct 2014 03:44 AM PDT
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை வழங்கினாலும் அது பயனில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நானும் ஆலோசனை வழங்குவேன். எவரும் கணக்கில் எடுப்பதில்லை. இறுதியில் ஓரிரு ஆலோசனை நடக்கும். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு கொள்கை என்று ஒன்றில்லை. பதவியை காப்பற்ற வேண்டும் என்ற நிலையில் அவர் செயற்பட்டு வருகிறார் எனவும் ரஜீவ விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரணில் விக்கிரமசிங்கவை உளவு பார்த்த மத்திய வங்கி ஆளுனர்! Posted: 03 Oct 2014 03:40 AM PDT
மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரால் லண்டனில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை உளவு பார்த்ததாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது லண்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அங்குள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திப்பது, கலந்துரையாடல்களில் பங்கேற்பது என்று அரசியல் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். அண்மையில் அவர் கன்சர்வேட்டிவ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கெடுத்திருந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான விபரங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் கப்ராலை ஈடுபடுத்தியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் கூட்டங்களில் அழைப்பின்றி ஆஜராகும் இவர் பின்வரிசையில் உட்கார்ந்து கொண்டு அங்கு பேசப்படும் விடயங்கள் குறித்து இமெயில், வாட்ஸ் அப்பினூடாக அரசாங்கத்துக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்கியுள்ளார். லண்டனில் கன்சர்வேட்டிவ் கட்சி மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தபோது, அஜித் கப்ரால் உள் நுழைய எத்தனித்த போது வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் கப்ராலின் உளவு பார்க்கும் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் அறிந்து கொண்டுள்ளனர். அரச அதிகாரிகள் இவ்வாறு உளவுபார்க்கும் செயல்களில் ஈடுபடுவது முறையற்றது என்று லண்டன் அதிகாரிகள் சுட்டிக்காட்டியபோது தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருப்பதாக அஜித் கப்ரால் சமாளிக்க முயன்றுள்ளார். அரச அதிகாரிகள் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அனுமதி மறுக்கப்பட்டபோது, தான் அரசியல் ரீதியாக பதவியமர்த்தப்பட்டவன் என்று கூறி கெஞ்சாத குறையாக மாநாட்டு மண்டபத்தினுள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 03 Oct 2014 03:36 AM PDT
கனேடிய அரசின் கடந்த நிதியாண்டுக்கான பற்றாக்குறை முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகக் குறைவாக இருக்குமென பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்தார். பற்றாக்குறை 16.6 பில்லியன் டொலராக இருக்குமென கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசு எதிர்வுகூறியது. பற்றாக்குறை 5.2 பில்லியன் டொலராக இருக்குமென எதிர்பார்ப்பதாக பிறம்ரனில் வணிக சங்கங்களின் உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரை நிகழ்த்தியபோது பிரதம மந்திரி கூறினார். மாகாணங்களுக்கு வழங்கும் பணத்தில் குறைப்பைச் செய்யாது, சமஷ்டி அரச திணைக்களங்களின் செலவினங்களைக் குறைத்ததன் மூலம் பற்றாக்குறை குறைக்கப்பட்டதென அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆந் திகதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் சிறிய அளவு பற்றாக்குறை இருக்குமெனவும், அடுத்த ஆண்டில் இருந்து பற்றாக்குறை அகன்று, மேலதிக வருமானம் கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவில் மாயமாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த விமான பணிப்பெண்கள்! Posted: 03 Oct 2014 03:31 AM PDT
பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற 4 விமானப் பணிப்பெணகள் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமாகியுள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 5 மாதங்களில் 16-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பி.ஐ.ஏ.-யும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் மீது சர்வதேச விமான போக்குவரத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர் 17,000 ஊழியர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 36 விமான போக்குவரத்து சேவை மட்டும் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 03 Oct 2014 03:24 AM PDT
வெள்ளிக்கிழமை பிரேரனை சபையில் வைக்கப்பட்டு திங்கள்கிழமை வாக்கெடுப்பிற்கு விடப்படும். ஏனைய நாடுகளுடன் சேர்ந்து கனடாவும் எவ்வாறு இந்த பயங்கரவாதிகளிற்கு எதிராக போரிட தனது பங்களிப்பை தொடரும் என தெளிவாக பிரதம மந்திரியின் அறிக்கை வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















