Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பானாசோனிக் T40 ஸ்மார்ட்போன் ரூ.5,990 விலையில் அறிமுகம்!

Posted: 21 Oct 2014 03:50 AM PDT

panasonic

panasonicபானாசோனிக் நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய பட்ஜெட் T40 ஸ்மார்ட்போனை ரூ.5,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வியாழக்கிழமை தொடங்கி விற்பனைக்கு வந்தது என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிய பானாசோனிக் T40 ஸ்மார்ட்போன் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் ரேம் 1GB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. T40 ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. பானாசோனிக் T40 ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த T40 ஸ்மார்ட்போனில் 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. பானாசோனிக் T40 ஸ்மார்ட்போனில் 1500mAh நீக்கக்கூடிய பேட்டரி கொண்டுள்ளது. இதில் 126x62.5x9mm அளவிடுகிறது மற்றும் 117 கிராம் எடையுடையது. ஸ்மார்ட்போனில் ப்ரைட் ரெட், டார்க் க்ரே மற்றும் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கிறது. இது போன்று அம்பிஎண்ட் லைட் சென்சார், அச்செலேரோமீட்டர், மற்றும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார் போன்ற சென்சார்கள் அடங்கும். பானாசோனிக் T40 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: இரட்டை சிம், 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 8 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, 5 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, 802.11 b/g/n, மைக்ரோ-USB, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1500mAh பேட்டரி, 117 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

இரட்டையர் டென்னிஸ் : 6ம் இடத்துக்கு முன்னேறினார் சானியா மிர்சா!

Posted: 21 Oct 2014 03:13 AM PDT

sania-mirza

sania-mirzaஉலக மகளிர் டென்னிஸ் தர வரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா 6ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மகளிர் டென்னிஸ் தர வரிசை பட்டியலை மகளிர் உலக அமைப்பான 'டபிள்யூ.டி.ஏ.' இன்று வெளியிட்டது. ஒற்றையர் பிரிவு தர வரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7146 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா 2ம் இடத்திலும், செக் குடியரசின் பெட்ரா குவித்தோவா மூன்றாமிடத்திலும் உள்ளனர். சிமோனா ஹாலேப் நான்காமிடத்திலும், கனடாவின் இகுயீன் புச்சார்டு 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மகளிர் இரட்டையர் தர வரிசையில் இத்தாலியின் ராபர்டா வின்சி முதலிடத்தில் உள்ளார். இதுவரை 8ம் இடத்தில் இருந்த இந்தியாவின் சானியா மிர்சா 2 இடம் முன்னேறி 6ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விராத் கோஹ்லி கேப்டன்: இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி

Posted: 21 Oct 2014 03:10 AM PDT

Virat-Kohli

Virat-Kohliஇலங்கைக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கு விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணிகளுடனான போட்டி, வீரர்களின் ஊதியப் பிரச்சனையால் கைவிடப்பட்டதால் இலங்கையும் வரும் நவம்பரில் ஒரு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. இதனையடுத்து முதல் 3 ஒரு நாள் போட்டியில் தோணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக முதல் 3 ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக 5 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. வீரர்கள் விவரம்: விராட் கோலி, ஷிக்கர் தவான், அஜிங்க்யா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரித்திமான் சாஹா, ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முரளி விஜய், வருண் ஆரோன், அக்ஷர் படேல்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிதி திரட்ட 975 அடி உயரத்தில் தொங்கிய பேட்மேன்!

Posted: 21 Oct 2014 02:50 AM PDT

sagasam

sagasamதொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, 975 அடி உயரத்தில் தொங்கி தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டினார்.

ஆஸ்திரேலியாவில், பிறக்கும் போதே, பல குழந்தைகள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பிறப்பதாகவும், அவர்களில் ஒரு சிலர், ஒரு வயதிற்குள் இறந்து போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய குழந்தைகளின் மருத்துவச் செலவு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, 'ஹார்ட் கிட்ஸ்' என்னும் தொண்டு நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, 'பேட் மேன்' தோற்றத்தில், ஸ்டன்ட் நடிகர் கிறிஸ் மற்றும் 'கேட்வுமன்' தோற்றத் தில், ரோவினாவும் தோன்றினர்.

குழந்தைகள் தங்கள் மனங்கவர் கதாபாத்திரங் களில் தோன்றியவர்களைக் கண்டு ஆரவாரித்தில் தடடிய பலத்த கைதட்டலில் அப்பகுதியே அதிர்ந்தது.

ஆஸ்திரேலியாவில் மிகவும் உயரமான, 'யுரேகா டவர்' மெல்பர் னில் அமைந்துள்ளது. இதில், தங்கள் உயிருக்கும், மரணத்திற்கும் இடையில், 975 அடி உயரத்தில், கயிற்றை கட்டிக் கொண்டு தொங்கினர்.

இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகை, இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவிற்கும், அவர்களது குடும்பத்திற்கும் வழங்கப் படுவதாக, தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விடுமுறை தீபாவளி தினத்தன்று அளிக்க பாகிஸ்தானிய இந்துக்கள் பிரதமரிடம் கோரிக்கை!

Posted: 21 Oct 2014 02:45 AM PDT

children-bursting-cracker

children-bursting-crackerதீபாவளி தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் வசிக்கும் இந்துக்கள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு விடுமுறை அளித்தும், தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தானின் இந்து கவுன்சில் தலைவரும், ஆளும் கட்சி எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார் வான்கவ்னி கூறும்போது, தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பது சிறுபான்மையின மக்களின் கையறு நிலையை குறைக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களான எங்களின் விழாவுக்கு பொது விடுமுறை அளிக்க அரசியலைமைப்பில் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தை தேசிய சட்டமன்றத்தில் எழுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகளில் தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை இல்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் எபோலா வைரஸ்: நெருக்கடிக்குள் அதிபர் ஒபாமா!!!

Posted: 20 Oct 2014 11:49 PM PDT

obama

obamaமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 4,500 பேரை பலிகொண்டுள்ள எபோலா வைரஸ் நோய், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதால் அங்கு பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் சுமார் 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தனியறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த எபோலா வைரஸ் நோயை ஒபாமா அரசு கையாண்டு வரும் விதம் குறித்து அமெரிக்காவில் சில விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் குரல் ஒபாமாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் ஒபாமா "மேற்கு ஆப்பிரிக்க மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை விதிக்கும் யோசனையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அமெரிக்க அரசு தற்போது இல்லை. இப்படி உலகின் ஒரு மொத்த பகுதிக்கே சீல் வைக்க முயற்சி செய்வது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். வைரஸ் நோய் கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. அச்சம் அடையவும் வேண்டாம்", இந்த நோயுக்குரிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமெரிக்க அரசு எடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பால் கியுபெக், ஒன்ராறியோ மற்றும் நோவ ஸ்கோசிய மாகாணங்களில் மீள அழைக்கப்படுகின்றது!

Posted: 20 Oct 2014 11:43 PM PDT

milk

milkகனடா- கனடிய உணவு பரிசோதனை நிறுவனம் Natrel பால் பொருட்கள் கெட்டுப்போகின்றன என்ற காரணத்தால் அவற்றை மீள அழைக்க அறிவித்துள்ளது. skim milk, 1% partly skimmed, 2% partly skimmed, homogenized milk பல வகைப்பட்ட நன்றாக-வடிகட்டப்பட்ட organic milk, and 3.8% whole milk.. என்பன மீள அழைக்கப்பட்டுள்ளன. இவை கியுபெக், ஒன்ராறியோ மற்றும் நோவ ஸ்கோசியா ஆகிய இடங்களில் விற்கப்பட்டுள்ளன. இவற்றின் காலாவதி தேதிகள் அக்டோபர் 23 தொடக்கம் ஒக்டோபர் 31-ந் தேதி வரையிலுமானவை. காலாவதி திகதிக்கு முன்னதாகவே இவை பழுதடைந்து விடுகின்றன என பாவனையாளர்கள் புகார் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கியுபெக் நகர ஆலையில் உள்ள தவறான உபகரணங்கள் காரணமாக இருப்பதாக கருதப்படுகின்றது. பழுதடைந்த பாலை உள்ஊர் மளிகை கடைகளில் திரும்ப கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கியுபெக்கில் 2-போர்வீரர்களை தாக்கிய நபர் ‘தீவிரமயமானவராக்கப்பட்டார்’ ?

Posted: 20 Oct 2014 11:30 PM PDT

accident

accidentகனடா- 25-வயதுடைய ஒருவர் இரண்டு கனடிய ஆயதப்படை வீரர்களை கியுபெக் இராணுவ தளத்திற்கு அண்மையில் தனது காரினால் தாக்கியதால் போலிசாரால் துரத்தப்பட்டு கொல்லப்பட்டார்.   இதனால் இந்நபர் தீவிரமடைந்தவராக மாறிவிட்டார் என பிரதம மந்திரியின் காரியாலயத்தில் இருந்து வெளியான அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக அறியப்படுகின்றது. தனது காரினால் அதிகாரிகளை தாக்கிய இத்தனிநபர் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கத்தின் குழு உட்பட்ட மத்திய அதிகாரிகளிற்கு தெரிந்த நபர் என கூறப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மத்திய அதிகாரிகள் இந்நபர் தீவிரமயமானவராகிவிட்டார் என கவலை கொண்டுள்ளதாக ஆர்சிஎம்பி திங்கள்கிழமை மாலை தனி அறிக்கை ஒன்றில் தெரியப்படுத்தி உள்ளதாக அறியப்படுகின்றது. ஒரு மனிதன் காரை செலுத்திக் கொண்டிருந்ததாகவும் அந்த கார் ஒரு சேவிஸ் கனடா காரியாலயத்திற்கு அருகில் இரண்டு கனடிய ஆயதப்படை வீரர்கள் மீது மோதியதாகவும் கியுபெக் போலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு வீரர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் மற்றவர் சாதாரண காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்தேக நபர் தனது காரில் தப்பிச்செல்ல முயன்றபோது போலிசாரால் துரத்தப்பட பிரதான சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 4-கிலோ மீற்றர்கள் தொலைவில் கட்டுப்பாட்டை இழந்ததால் அவரது கார் பல தடவைகள் உருண்டுள்ளது. போலிசாரால் 7-தடவைகள் சுடப்பட்டார். திங்கள்கிழமை பிற்பகல் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. சஸ்கற்சுவான் எம்பி றன்டி ஹொபாக் இது St-Jean-Sur-Richelieu.இராணுவத்திற்கெதிரான பயங்கரவாத தாக்குதலாக இருக்குமா என உறுதிப்படுத்தும் படி பிரதம மந்திரி Stephen Harper இடம் கேட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™