Tamil Star |
- ஆளும் கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் வீழ்ச்சி!
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்காது!- ஆங்கில நாளிதழ்
- கனடா டொரண்டோ அருகே பல கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து!
- பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் கனடா வருகைதரவுள்ளார்! தீபக் ஒப்ராய்
- 3-வயது குழந்தையை அடித்து கொன்ற தாயின் காதலன்?
- எங்கு திரும்பினாலும் படையினர் மயமாகவே இருக்கின்றது!- முதலமைச்சர் சீ.வி.
| ஆளும் கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் வீழ்ச்சி! Posted: 19 Oct 2014 11:10 PM PDT
ஆளும் கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரத்தில் பிரதி அமைச்சர் ஒருவர் நடத்திய சந்திப்பில் பங்கேற்ற ஆளும் கட்சி அரசிலய்வாதிகளே, அமைச்சருக்கு கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அனுராதபுரத்தில் பிரதி சுகாதார அமைச்சர் நலின் திஸாநாயக்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. எனினும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். சகல பிரச்சினைகளையும் மறந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென பிரதி அமைச்சர் கோரியுள்ளார். இந்தக் கோரிக்கையை பிரதேச அரசியல்வாதிகள் நிராகரித்துள்ளனர். மக்களுக்கு தங்களினால் சேவையாற்ற முடியவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே இந்த அரசாங்கத்தின் ஊடாக நன்மை பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற அமைச்சருக்கும் பிரதேச அரசியல்வாதிகளுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரதேச அரசியல்வாதிகளும் கட்சியின் கீழ்நிலைத் தொண்டர்களும் அமைச்சருக்கு எதிராக கூக்குரல் எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்காது!- ஆங்கில நாளிதழ் Posted: 19 Oct 2014 10:37 PM PDT
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவை வெளியிடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்த எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்துப்படி தமது கட்சி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர தமது கட்சி ஆதரவளிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமது நிலைப்பாட்டை வெளியிடுவதே பொருத்தமானது என்று கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கா விட்டாலும் தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது ஆதரவை வெளிப்படுத்துவர் என்று செய்தித்தாள் எதிர்வுகூறியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா டொரண்டோ அருகே பல கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து! Posted: 19 Oct 2014 10:12 PM PDT
கனடா தலைநகர் டொரண்டோவில் சற்று முன்னர் தேசிய நெடுஞ்சாலை 401 சாலையில் பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளை துரிதமாக செய்து வருகின்றனர். இந்த விபத்து highway 401 and leslie avenue, என்ற இடத்தில் இன்று நடந்துள்ளது. இந்த விபத்து குறித்த காரணங்களை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது போன்ற விபரங்கள் இன்னும் தெரியவில்லை. விபத்து நடந்த இடத்தில் போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் கனடா வருகைதரவுள்ளார்! தீபக் ஒப்ராய் Posted: 19 Oct 2014 10:04 PM PDT
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் கனடா வரவுள்ளார் என கனடிய வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். பிராம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றின் போது கல்கரி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றச் செயலாளருமான தீபக் ஒப்ராய் (Deepak Obhrai) இதனை அறிவித்தார். இந்திய கனடியர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இந்த நிகழ்சியில் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் உரையாற்றினார். கனடிய பிரதமர் விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டார் எனவும் ஒப்;ராய் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 3-வயது குழந்தையை அடித்து கொன்ற தாயின் காதலன்? Posted: 19 Oct 2014 10:01 PM PDT
நகரத்தின் வீடற்றவர் குடியிருப்பு ஒன்றில் வைத்து 20-வயதுடைய நபர் அவரது காதலியின் 3-வயது பெண் குழந்தையை அடித்து கொன்றுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது. Jeida Torres என்ற 3-வயது குழந்தை அடித்து கொல்லப்பட்டதுடன் அவளின் 5-வயது சகோதரனும் அடித்து துன்புறுத்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குழந்தைகளின் தாயான கிம்பெளி ரோறெஸ் தனது காதலனுடன் பிள்ளைகளை விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டார். அரைமணித்தியாலத்தின் பின்னர் அவசர மருத்துவ சேவையினரால் இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Jeida அடிக்கப்பட்டும் நெரிக்கப்பட்டும் தாக்கப்பட்டுள்ளார். 5-வயது அன்ட்றூ காயங்களுடன் கிடந்துள்ளான். இவர்களை துன்புறுத்திய காதலன் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார். ஆனால் பின்னர் போலிசார் கைது செய்து விட்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எங்கு திரும்பினாலும் படையினர் மயமாகவே இருக்கின்றது!- முதலமைச்சர் சீ.வி. Posted: 19 Oct 2014 09:53 PM PDT
வடமாகாணம் முழுவதும் படையினர் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், எங்கு திரும்பினாலும் படையினர் மயமாகவே இருக்கின்றது. என சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், படையினரின் அபகரிப்பினால் தமிழ் மக்கள் பல அவலங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குடிநீர் தட்டுப்பாடு, எங்கள் சுற்றாடல் அசுத்தமாக்கப்படுதல் போன்றனவும் கூட படையினரின் இருப்பினால் உண்டாக்கப்படுகின்றன. என அமைச்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மன்னார் முள்ளிக்குளம் மக்களுக்கான அரை நிரந்த வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் கூறியுள்ளார். இன்றைய தினம் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றும் போது தெரிவித்ததாவது. தொடர்ந்து வடகிழக்கு மாகாணங்களில் படையினர் பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது. முள்ளிக்குளம் பகுதியில் இருந்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த எம்மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியேற முடியாத ஒரு நிலையை படையினர் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் பலகால வாழ்விடங்களை விட்டு வெளியேற படையினர் மறுக்கின்றனர். எங்கு சென்றாலும் இப்பொழுது இராணுவ பிரசன்னத்தையும் அவர்கள் முகாம்களையுந்தான் பார்க்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் அரசாங்கத்தினர். நேற்று இரணைமடுக் குளத்தைப் பார்வையிடச் சென்றேன். அங்கும் இராணுவம். சென்ற கிழமை ஈச்சிலவக்கை சென்றேன். அங்கும் இராணுவம். எங்கும் இராணுவம். இவர்கள் எம் மண்ணில் நீடித்து நிற்பதால் பல அவலங்களை நாம் எதிர்நோக்கி வருகின்றோம். நீர் பற்றாக்குறை, நீரில் அசுத்தம் கலத்தல் போன்றவை கூட படையினரின் பிரசன்னத்தால் ஏற்பட்டு வரும் விளைவுகளே என்று சென்ற சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கப் பட்டது. இங்கு 82 குடும்பங்களுக்கு ஒரு நடுத்தர வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் படையினர் இம்மக்களின் சொந்த இடங்களில் தொடர்ந்து குடிகொண்டிருப்பதால் மழை வந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் என்ன செய்வது என்று நாங்கள் கலந்தாலோசித்து அவர்கள் வெளியே போகும் வரை எம் மக்களின் பாடு என்னவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருவதையும் பார்த்துத்தான் அவர்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உத்தேசித்து ஒரு தற்காலிக வீட்டுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம். இவர்களுக்குத் தற்போது அமைக்கப் படுகின்ற இந்த நடுத்தர வகையான வீடுகளானது சீமெந்தினால் அமைக்கப்பட்ட தளத்தின் மீது இரண்டு வரிக்கற்களுடன் சுவர்கள் அமைத்து அதன் மேல் கிடுகு கூரை, தகரம் என 15 அடி தர 12 அடி அளவுப் பிரமாணத்தில் இரண்டு அறைகள் விறாந்தை என்ற அடிப்படையில் அமைக்கப் படுகின்றன. மூன்று வாரங்களுக்குள் இந்தத் திட்டத்தைப் பூர்த்தியடையச் செய்யவிருக்கின்றோம். ஒவ்வொரு வீட்டுக்கும் 50,000 ரூபா செலவிடப்படும். 82 குடும்பங்களுக்கும் 82 வீடுகள் கட்டப்படுவன. இவ்வாறு செய்யாது விட்டிருந்தால் இராணுவமும் வெளியேறியிருக்காது எம் மக்களும் மழையில் நனைந்து பரிதவித்திருப்பார்கள். இன்று எம்மால் நேரடியாகவும் எம்பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம்மக்களுக்குக் கிடைத்து வருகின்றன. இன்று நடைபெறுவது எமது நேரடி உதவிகள். சென்ற கிழமை எம் நிமித்தம் மறைமுக உதவிகளை எமது மக்கள் பெற்றார்கள். நாம் பதவியில் இருப்பதால் நாங்கள் எதுவும் செய்யவில்லை தாங்களே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்கள் என்பதை எடுத்துக் காட்ட எமது மக்கள் 20,000 பேர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்ட்டன. மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. புகையிரதப் பாதை திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல காரியங்கள் நடந்தேறியுள்ளன. வீரசிங்கம் மண்டபம் குறுகிய கால கட்டத்தினுள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. இவை யாவையும் எம் நிமித்தம் செய்யப்பட்ட அரசாங்கக் கைங்கரியங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இரண்டு வருடங்களாக எம் மக்களுக்கு வழங்காது இடை நிறுத்தி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் 20,000 மும் திடீரென்று எம் மக்களுக்குப் போய்ச் சேர்கின்றது என்றால் அதற்குக் காரணம் 3என்ன? மக்களின் ஆபரணங்கள் 5 வருடங்களின் பின்னர் திடீரென்று வெளிக்கொண்டு வந்த தார்ப்பரீயம் என்ன? வடமாகாணத்தைத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் வசம் வைத்திருக்கின்றது. ஆனால் வடமாகாண மக்களின் வாக்குகளைப் புறக்கணித்து என்னால் ஜனாதிபதி பதவியை மூன்றாம் முறை எட்ட முடியாது. ஆகவே வடமாகாண மக்களை எப்படியாவது என் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் எமது மாண்புமிகு ஜனாதிபதி தாராள சிந்தையுடைய கொடையாளியாக மாறி உள்ளார். ஆனால் எம் மக்களுக்கு நன்றாகத் தெரியும் புகையிரதப் பாதையை நிர்மாணித்துத் தந்தது இந்திய அரசாங்கம் என்று. வன்னியின் வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தவர்கள் பசுபிக் பிராந்திய அமெரிக்கக் கடற்படையினர் என்று. இவ்வாறு சுயநலங்கருதியே சும்மா இருந்த ஜனாதிபதி சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார் என்பது சுற்று வட்டத்தார் யாவருக்குந் தெரியும். நாம் பதவியில் இருப்பது எந்தளவுக்கு அரசாங்கத்தை நிலைகுலைய வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் வெறுமனே பதவியில் இருந்தாலே போதும் அரசாங்கம் உங்களுக்கு வாரித் தருவார்கள். படையினர் எதற்காக மக்களை வசீகரிக்கச் செயற்திட்டங்கள் வகுத்துச் செயலாற்றுகின்றார்கள். அவர்களை வெளியேறுமாறு வடமாகாணசபை கேட்டுள்ளது. தாம் தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும் என்றால் எம் மக்களின் மனத்தைக் குளிர வைக்க வேண்டும். பலதைக் கொடுத்தும் பயம் காட்டியுந் தேர்தலில் தமது பங்காளர்களை நிறுத்தியும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காத படியினால் எப்படியாவது எம் மக்கள் மனதை மாற்ற வேண்டும் என்று மானியங்களை வழங்கி வருகின்றார்கள் படையினர். நாங்கள் பதவியில் இருக்கும் வரை அவர்கள் தொடர்ந்து பலதை உங்கள் நன்மைக்காகச் செய்து வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எமது வாக்குகள் வேண்டும். ஏன் அவர்கள் பதவியில் இருந்தால் அவற்றைச் செய்ய மாட்டார்களா என்று கேட்பீர்கள். செய்வார்கள் ஆனால் முழுமையாக வடமாகாணத்தைச் சிங்கள நாடாக மாற்றிச் செயல்ப்படுவார்கள். நாம் இருப்பதால்த்தான் அவர்கள் சென்ற ஐந்து வருடங்கள் தான்தோன்றித்தனமாய்ச் செய்து வந்தவற்றைச் சற்றுத் தளர்த்தி தவிர்த்து வருகின்றார்கள். நாம் இருப்பதால் இங்கு பலர் செய்த ஊழல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் பணத்தை எவ்வாறு கொள்ளை அடித்தார்கள் என்பது வெளிவந்து கொண்டிருக்கின்றது. நாமிருந்தால் ஊழலின்றிச் செயற்பட வேண்டிய ஒரு கடப்பாடு எல்லோருக்கும் எழுந்துள்ளது. நாம் விதங்களில் எமக்கு வேண்டியவற்றைப் பெறலாம். ஒன்று வன்முறை. ஆனால் வன்முறை மேலும் வன்முறைக்கே வித்திடும். இரண்டு வலியச் சென்று சரணடைந்து எமது வாழ்வை விருத்தி செய்வது. என்றென்றும் இவ்வாறு நலன் பெறுபவர்கள் அடிமைகள் என்றே கணிக்கப்படுவார்கள். மூன்றாவது அப்பழுக்கற்ற கொள்கைகளை முன்வைத்து எமது தேவைகளைக் கூறிப் பெற எத்தனிப்பது. இது காலம் போகும். ஆனால் காலக் கிரமத்தில் நன்மை பயக்கும். நாம் இதைத்தான் செய்து வருகின்றோம். வன்முறையைக் கண்டித்துள்ளோம். வருந்தி அழைத்தாலும் எமது வலுவான கொள்கைகளில் இருந்து வழுவாது எமது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே வடமாகாணம் எந்த விதத்திலும் நன்மை பெறப்போவது நிச்சயமே. எமது வருங்காலம் நல்ல காலமாக அமையப் போவது நிச்சயமே.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







