மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் சாவு: அதிர்ச்சியில் பாட்டி மரணம்
- போலீஸ் துறையில் பெண் போலீசுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்
- அரியானாவில் பா.ஜனதா ஆட்சி: கேப்டன் அபிமன்யூ முதல்-மந்திரி ஆகிறார்
- ஆந்திராவில் புயல் சேத பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்
- லோக்சபா தேர்தலில் வரலாற்று வெற்றி: கோபிநாத் முண்டே மகள் சாதனை
- கொள்ளை போன ரூ.3 லட்சம் நகைகளை துப்பறியும் நாய் கண்டு பிடித்தது
- கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
- சபரிமலையை தேசிய புனித யாத்திரை தலமாக்கலாம்: கேரள கவர்னர் சதாசிவம்
- இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
- நோக்கியா தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
- 1990–க்கு பின்னர் மராட்டியத்தில் சதம் அடித்த முதல் கட்சி, பா.ஜனதா
- பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து
- பா.ஜ.க.வுக்கு வாக்குகளை அள்ளிக்குவித்த விதர்பா மக்கள்: அதிக தொகுதிகளில் வெற்றி
- அருணாச்சல், குஜராத், உ.பி. இடைத்தேர்தலில் காங்., பாஜக, சமாஜ்வாடி வெற்றி
- அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்
- அரியானா முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா வெற்றி
- மராட்டிய முன்னாள் முதல்–மந்திரி நாராயண ரானே தோல்வி
- மராட்டியத்தில் பங்கஜா முண்டே புதிய முதல்–மந்திரி?: மேலும் 2 பேர் முயற்சி
- அரியானாவில் முதல்-மந்திரி பதவிக்கு 5 பேர் கடும் போட்டி
- ஒடிசா எம்.பி. இடைத்தேர்தல்: பிஜூஜனதாதளம் வெற்றி
| கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் சாவு: அதிர்ச்சியில் பாட்டி மரணம் Posted: 19 Oct 2014 10:58 PM PDT ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் ராமாபுரம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஆஞ்சநேயலு, மங்கம்மா. இவரது குழந்தைகள் அஞ்சம்மா (12), ராமுடு (8), சுஜாதா (5). ஆஞ்சநேயலு சகோதரர் ஸ்ரீனு–நாகமணி தம்பதி மகள் நாகராஜ் (10). குழந்தைகளின் பெற்றோர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரில் கூலி வேலைக்கு சென்று விட்டனர். குழந்தைகளை பாட்டி நாகம்மா கவனித்து |
| போலீஸ் துறையில் பெண் போலீசுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல் Posted: 19 Oct 2014 10:49 PM PDT இந்திய பெண் பத்திரிகையாளர் அமைப்பின் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:– இந்தியாவில் அனைத்துத்துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு சிறப்பாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் துணை ராணுவ படைகளில் 1.99 சதவீதம் பெண்கள் பணியாற்றுகிறார்கள். இந்த அளவினை 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்க செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| அரியானாவில் பா.ஜனதா ஆட்சி: கேப்டன் அபிமன்யூ முதல்-மந்திரி ஆகிறார் Posted: 19 Oct 2014 10:29 PM PDT அரியானாவில் கேப்டன் அபிமன்யூ முதல்–மந்திரி ஆகிறார். மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்–மந்திரியாகும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடந்த அரியானா, மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது. அரியானாவில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் பா.ஜனதா 47 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் முழு மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. |
| ஆந்திராவில் புயல் சேத பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார் Posted: 19 Oct 2014 10:21 PM PDT ஆந்திராவை கடந்த 12–ந்தேதி ஹூட்ஹூட் புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. குறிப்பாக அழகிய நகரமாக விளங்கிய விசாகப்பட்டினம் புயலின் கோர பிடியில் சிக்கி உருக்குலைந்து போனது. |
| லோக்சபா தேர்தலில் வரலாற்று வெற்றி: கோபிநாத் முண்டே மகள் சாதனை Posted: 19 Oct 2014 10:07 PM PDT முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவுக்கு பின் அவர் போட்டியிட்ட பீட் லோக்சபா தொகுதிக்கு கடந்த 15-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக கோபிநாத் முண்டேவின் மகள் ப்ரீத்தம் முண்டே அறிவிக்கப்பட்டார். |
| கொள்ளை போன ரூ.3 லட்சம் நகைகளை துப்பறியும் நாய் கண்டு பிடித்தது Posted: 19 Oct 2014 09:49 PM PDT சித்தூர் மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் எம்.டி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலரெட்டி. இவர், தனது சொந்த வேலை காரணமாக மைசூர் சென்று விட்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த அவரின் மனைவி அம்மனிஅம்மாள் தனது உறவினர்கள் 2 பேருடன் வீட்டின் தனி அறையில் படுத்து உறங்கினார். சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தனர். |
| கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை Posted: 19 Oct 2014 09:42 PM PDT கேரள மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. 7 செ.மீ. முதல் 13 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆற்றங்கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும் |
| சபரிமலையை தேசிய புனித யாத்திரை தலமாக்கலாம்: கேரள கவர்னர் சதாசிவம் Posted: 19 Oct 2014 09:29 PM PDT கேரள கவர்னர் சதாசிவம் தனது மனைவி சரஸ்வதி, மகன் சீனிவாசன் ஆகியோருடன் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். சபரிமலையில் கொட்டும் மழையில் பம்பையில் இருந்து நடந்து சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு உள்ள கன்னிமூலை கணபதி, நாகராஜா |
| இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 19 Oct 2014 03:48 PM PDT இந்தியா முழுவதும் 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,780 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நிலையில் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், டெல்லி, ஆமதாபாத், கவுகாத்தி, நாக்பூர், மும்பை, |
| நோக்கியா தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை Posted: 19 Oct 2014 02:21 PM PDT நோக்கியா தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் டெல்லியில் நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து வலியுறுத்தினார்கள். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு வழக்குகளில் இந்த ஆலை சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ந் தேதி முதல் அந்த ஆலையை மூடப்போவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்தது. |
| 1990–க்கு பின்னர் மராட்டியத்தில் சதம் அடித்த முதல் கட்சி, பா.ஜனதா Posted: 19 Oct 2014 10:50 AM PDT மராட்டிய சட்டசபை தேர்தல் வரலாற்றில், 1990–ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 இடங்களை கைப்பற்றியது. அதன் பின்னர் நடந்த சட்டசபை தேர்தல்களில் எந்தவொரு தேசிய கட்சியோ அல்லது மாநில கட்சியோ 100 இடங்களை கைப்பற்றி சதம் கண்டதில்லை. 24 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது மராட்டியத்தில் பாரதீய ஜனதா கட்சி, 100 இடங்களை கடந்து சதம் அடித்து சாதனை படைத்துள்ளது. |
| பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து Posted: 19 Oct 2014 08:47 AM PDT இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- மக்கள் மாற்றத்திற்காக வாக்கு அளித்துள்ளனர். நான் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக |
| பா.ஜ.க.வுக்கு வாக்குகளை அள்ளிக்குவித்த விதர்பா மக்கள்: அதிக தொகுதிகளில் வெற்றி Posted: 19 Oct 2014 05:16 AM PDT விவசாய பூமியான விதர்பா பகுதி பருத்தி விளைச்சலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். வறட்சியால் அங்குள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், தற்போது மக்கள் மோடியை நம்பி பா.ஜ.க.விற்கு தங்கள் வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர். |
| அருணாச்சல், குஜராத், உ.பி. இடைத்தேர்தலில் காங்., பாஜக, சமாஜ்வாடி வெற்றி Posted: 19 Oct 2014 04:45 AM PDT அருணாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 15-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் அருணாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும், குஜராத்தில் வழக்கம் |
| அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் Posted: 19 Oct 2014 04:19 AM PDT அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. அதில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. 49 தொகுதிகளையும், இந்திய தேசிய லோக் தளம் 20 தொகுதிகளையும் கைப்பற்றியது. அங்குள்ள குர்கோன் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் உமேஷ் அகர்வால் மாநிலத்திலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற |
| அரியானா முதல்-மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா வெற்றி Posted: 19 Oct 2014 03:47 AM PDT அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆனால் அம்மாநில முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா வெற்றி பெற்றுள்ளார். ரோத்தக் மாவட்டம் கார்ஹி சம்ப்லா கிலாய் தொகுதியில் போட்டியிட்ட அவர் இந்திய தேசிய லோக்தளம் வேட்பாளரை தோற்கடித்தார். அரியானா மாநில பா.ஜனதா சட்டமன்ற தலைவர் அனில் விஜ் அம்பாலா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சிங்கை 15,462 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். |
| மராட்டிய முன்னாள் முதல்–மந்திரி நாராயண ரானே தோல்வி Posted: 19 Oct 2014 03:42 AM PDT மராட்டிய முன்னாள் முதல்–மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான நாராயண ரானே குடால் தொகுதியில் போட்டியிட்டார். இதில் நாராயண ரானே அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். சிவசேனா வேட்பாளர் வைபவ் நாயக் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரானேயை தோற்கடித்தார். மாநிலத்தில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் மந்திரிகள் பின்தங்கி |
| மராட்டியத்தில் பங்கஜா முண்டே புதிய முதல்–மந்திரி?: மேலும் 2 பேர் முயற்சி Posted: 19 Oct 2014 03:23 AM PDT மராட்டிய மாநில சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. சிவசேனாவுடன் சேர்ந்து பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் முதல்–மந்திரி பதவியை பா.ஜ.க. தக்க வைத்துக் கொள்ளும். இதனால் மராட்டிய மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் முதல்–மந்திரி பதவியை பெற இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| அரியானாவில் முதல்-மந்திரி பதவிக்கு 5 பேர் கடும் போட்டி Posted: 19 Oct 2014 03:17 AM PDT அரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க 46 இடங்கள் வேண்டும். இந்த மேஜிக் நம்பரை அரியானா பா.ஜ.க. பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரியாக போகும் பா.ஜ.க. தலைவர் யார் என்ற |
| ஒடிசா எம்.பி. இடைத்தேர்தல்: பிஜூஜனதாதளம் வெற்றி Posted: 19 Oct 2014 03:14 AM PDT மராட்டியம், அரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலும் கடந்த 15–ந்தேதி நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் ஆளும் பிஜூ ஜனதாதள வேட்பாளர் பிரதியூசா ராஜேஸ்வரி சிங் வெற்றி பெற்றார். அவர் பா.ஜனதா வேட்பாளர் ருத்ரமாதவ்ராயை விட 2,98,868 ஓட்டுகள் கூடுதல் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |