Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


விஜய்யை சீண்டி பார்த்த சிம்பு!

Posted: 18 Oct 2014 02:13 AM PDT

vijay

vijayசிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். ஆனால் அப்படி பேசுகிறேன் என்ற பெயரில் ஒரு சிலருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்துகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழக்கு பேட்டியளிக்கையில் நிறைய உதவி செய்கிறீர்கள், ஆனால் வெளியே சொல்லி கொள்வதே இல்லை ஏன்? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் 'எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது.

அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது.' என்று பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முயற்சியில் சமீப காலமாக தீவிரமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிட்கேட் கொண்ட Xolo ஒன் ஸ்மார்ட்போன் ரூ.6,599 விலையில் அறிமுகம்!

Posted: 18 Oct 2014 01:54 AM PDT

Xolo-Q

Xolo-QXolo நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான ஒன் என்றழைக்கப்படும் ஸ்மார்ட்போனை ரூ.6,599 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xolo ஒன் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தப்படுகிறது. புதிய Xolo ஒன் ஸ்மார்ட்போன் பற்றி அதன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது எனினும், அதிகாரப்பூர்வமாக கிடைப்பது பற்றிய விவரங்கள் அறிவிக்கவில்லை. இந்த கைபேசியை நிறுவனம் வரவிருக்கும் நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   Xolo ஒன் ஸ்மார்ட்போன்: Xolo ஒன் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது, மற்றும் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. இதில் 480x854 பிக்சல்கள் தீரமானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 218ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் மாலி 400 MP2 ஜி.பீ.யூ மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6582M) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Xolo ஒன் ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஃபிக்ஸ்டு ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. Xolo ஒன் பின்புற கேமராவில் சீன் டிடெக்ஷன், பனரோமா, ஜியோ டாக்கிங், பெஸ்ட் ஷாட், ஸ்மைல் ஷாட் மற்றும் HDR விருப்பங்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத் 4.0, Wi-Fi, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், மற்றும் 3ஜி ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் 1700mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் Xolo ஒன் ஸ்மார்ட்போனில் அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சர், மற்றும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார் போன்ற சென்சார்களை உள்ளடக்கியுள்ளது. சமீபத்தில் நிறுவனம் ரூ.9,499 விலையில் ஓபஸ் எச்டி ஸ்மார்ட்போனை தொடங்கியது. Xolo ஓபஸ் எச்டி ஸ்மார்ட்போன்: Xolo ஓபஸ் எச்டி ஸ்மார்ட்போன் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) ஆதரவுடன் வருகிறது. இதில் 720x1280 பிக்சல்கள் தீரமானம் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே வருகிறது. ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் பிராட்காம் (BCM23550) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. Xolo ஓபஸ் எச்டி ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் 2500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. Xolo ஒன் ஸ்மார்ட்போன் முக்கிய குறிப்புகள்: இரட்டை சிம், 480x854 பிக்சல்கள் தீரமானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 218ppi பிக்சல் அடர்த்தி, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் (MT6582M) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ப்ளூடூத் 4.0, Wi-Fi, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், 3ஜி, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 1700mAh பேட்டரி. Xolo ஓபஸ் எச்டி ஸ்மார்ட்போன் முக்கிய குறிப்புகள்: இரட்டை சிம், 720x1280 பிக்சல்கள் தீரமானம் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1 .2GHz குவாட் கோர் பிராட்காம் (BCM23550) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளடங்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ-USB, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2500mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் திடீர் விலகல்…

Posted: 18 Oct 2014 01:44 AM PDT

wi-team

wi-teamஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, சம்பள பிரச்னை தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய தொடரை புறக்கணித்து வெளியேறுகிறது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒருநாள், ஒரு டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொச்சியில் முதல் போட்டி நடைபெற இருந்த நிலையில், சம்பள பிரச்னை தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் ஏற்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாட மறுப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் சமரச முயற்சியில் இறங்கியதை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அரை மனதுடன் தொடர்ந்து விளையாட முடிவு செய்தனர். மூன்று போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் 11 என சமநிலை வகிக்க (விசாகப்பட்டினத்தில் நடக்க இருந்த 3வது போட்டி, ஹுட் ஹுட் புயல் காரணமாக ரத்து), 4வது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் (இமாச்சல்) நேற்று நடந்தது. இந்த போட்டி நடந்துகொண்டிருந்த நிலையிலேயே, சம்பள பிரச்னை மீண்டும் பூதாகரமாக வெடித்தது. இந்திய தொடரை பாதியிலேயே நிறுத்திக் கொள்வதாக வெஸ்ட் இண்டீஸ் அணி மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு (பிசிசிஐ) மின்னஞ்சல் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, எஞ்சியுள்ள போட்டிகளை புறக்கணித்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொந்த செலவில் உடனடியாக நாடு திரும்புகின்றனர். இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டி: இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியா இலங்கை அணிகளிடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தூர் ஓபன் டென்னிஸ் : அரை இறுதியில் மைனேனி!

Posted: 18 Oct 2014 01:35 AM PDT

tennis

tennisஇந்தூர் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீரர் சாகேத் மைனேனி தகுதி பெற்றார். கால் இறுதியில் சக இந்திய வீரர் சனம் சிங்குடன் நேற்று மோதிய மைனேனி 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் தைபே வீரர் டிசென்னுடன் மோதிய இந்திய வீரர் ராம்குமார் ராமனாதன் 6-7 (6-8), 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்கில் 3 மணி, 16 நிமிடம் கடுமையாகப் போராடி வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 1-6, 3-6 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் அட்ரியன் மெண்டிஸ் அலெக்சாண்டர் (கஜகஸ்தான்) ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் உயரமான பார்வையாளர் தளம் துபாயில் திறப்பு!

Posted: 18 Oct 2014 01:11 AM PDT

Highest-visitors-room

Highest-visitors-roomசர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான இடத்தில் பார்வையாளர் கூடம் திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் தளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பார்வையாளர் தளம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் 148வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பார்வையாளர்களுக்கான தளம் 124வது மாடியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற‌ கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், உலகின் முண்ணனி நகரங்களில் ஒன்றான துபாயில் ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா கட்டிடம் மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது என்று பாராட்டினார். உலகின் உயரமான கட்டிடம், உலகில் உயரமான பார்வையாளர் தளம், உலகில் நீண்ட தூரம் செல்லகூடிய லிப்ட் வசதி,உலகில் அதிக தளங்கள் கொண்டது என இக்கட்டிடம் பல்வேறு உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளது. உலக நாடுகளிலிருந்து ஏராளாமான சுற்றுலா பயணிகள் இக்கட்டிடத்தை பார்வையிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிரகத்தில் 68 நாட்களுக்கு மேல் மனிதர்கள் உயிர் வாழ முடியாது!

Posted: 18 Oct 2014 01:05 AM PDT

kiragam

kiragamசெந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும். செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம், எண்டேவர் உள்பட சில ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது.இந்தியாவின் 'மங்கல்யான்' விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றது. இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க வைக்க 'நாசா' மையம் திட்டமிட்டு, அதற்கான பயிற்சியை தற்போது மேற்கொண்டு வருகின்றது. இப்பயிற்சி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக ஹவாய்தீவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விசேஷ கூண்டு 'டூம்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டு 36 அடி அகலமும் 2 அடுக்கு மாடிகளையும் கொண்டது. இதில் 3 ஆண்கள், 3 பெண்கள் என 6 பேர் பயிற்சி பெறுகின்றனர்.அவர்களின் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அங்கு அவர்களுக்கு தனித்தனி 6 சிறிய படுக்கை அறைகள் உள்ளன. மேலும் அவர்கள் அங்கு தங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள சைக்கிள், டிரட்மில் எந்திரம் போன்றவை உள்ளன. மேலும் அவர்கள் அங்கிருந்து தங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இ–மெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. ஆனால் அந்த செய்தி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் கிடைக்கும். அதே நேரத்தில் வெளியில் இருந்து அனுப்பும் இ–மெயில் சென்றடைய 40 நிமிட நேரமாகும். செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பும் தகவல்கள் கிடைக்க மேற்கண்ட நேரமாகும் என்பதால் அதேபோன்று இங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், டச்சு நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனமும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை நிரந்தரமாக குடியேற்றும் ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு சென்று மனிதர்களால் வாழ முடியும் என்றாலும், அவர்களால் 68 நாட்களுக்கு மேல் அங்கு தாக்குப் பிடிக்க முடியாது என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் சமர்பித்துள்ள ஒரு ஆய்வு அறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேறச் செல்பவர்கள் 68 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பனிப்போர் இலங்கைக்கு எதிராக முன்னோக்கி நகர்கிறது!- தயான் ஜயதிலக்க

Posted: 18 Oct 2014 12:17 AM PDT

Thayan

Thayanவிடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதை காட்டுகிறது என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்தமையால் அவர் மீதிருந்த கௌரவம் மிக்க அன்பு, அவரது மனைவி அந்தத்த நாடுகளுக்கு சென்று பேசியமை மற்றும் அப்போதைய வெளிவிவகார செயலாளராக இருந்தவரின் திறமை ஆகிய காரணங்களினாலேயே அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டது. மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்தத் தடை காணப்பட்டது. எனினும் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களின் பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டமைக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற ஆனால் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றவர்கள் என நம்பப்படும் மதவாதக்குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் அளுத்கமை, ரதுபஸ்வவ போன்ற சம்பவங்களால் இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்கள் சிதைக்கப்பட்டமையே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சரிசமமாக சகல இனங்களும் வாழும் சூழல் ஏற்பட வேண்டும்! ரணில் விக்கிரமசிங்க

Posted: 18 Oct 2014 12:04 AM PDT

timthumb

timthumbநாட்டில் சகல இனங்களும் சரி சமமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பேருவளை - சபுகொடை விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நாட்டில் அனைத்து வாழும் அனைத்து இனங்கள் மற்றும் அவர்களின் கலாசாரம் பெருமைக்குரிய விடயங்களாகும். மேலும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் சரி சமமாக வாழும் நிலை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். மஹிந்த அரசாங்கம் அதனை முற்றாக அழித்து விட்டது. அதன் காரணமாகவே இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைகள் மீண்டும் தோன்றியுள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூஃபௌன்ட்லான்ட்டை ஞாயிற்றுக்கிழமை கொன்சாலோ சூறாவளி பலமாகத் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

Posted: 17 Oct 2014 11:51 PM PDT

Gonzalo

Gonzaloகனடாவின் நியூஃபௌன்ட்லான்ட்டை ஞாயிற்றுக்கிழமை கொன்சாலோ (Gonzalo) சூறாவளி பலமாகத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தென்கிழக்கு முனையில் நாளைய தினம் கடும் மழை பொழியும் சாத்தியம் உண்டென கனேடிய சூறாவளி நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவலோன் (Avalon) குடாநாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமெனவும், சில இடங்களில் கடும் அலை மேலெழுந்து வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூஃபொன்ட்லான்டின் தென்கிழக்குப் பிரதேசங்களில் தற்பொழுது குளிர்நிலையும் உணரப்படுகிறது. நோவா ஸ்கோஷியாவின் அற்லான்ரிக் கடற்பிரதேசத்திலும் கடல் பொங்கி எழுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டுப்பாட சமரில் 1-மில்லியன் டாலர்களை வென்ற ஆசிரியர்!

Posted: 17 Oct 2014 11:45 PM PDT

Home work

Home workமொன்றியலில் ஆசிரியர் ஒருவர் 1-மில்லியன் டாலர்களை வென்றுள்ளார். இதற்கு காரணம் மாணவர் ஒருவர் வீட்டு பாடத்தை திரும்ப செய்வதை பெற்றோர் பாராட்டததேயாகும். இச்சம்பவத்தால் தனது வாழ்க்கை அழிக்கப்பட்டு விட்டதென ஆசிரியர் வாதாடியதால் அவர் 1-மில்லியன் டொலர்களை வென்றார். 56-வயதுடைய மேரி கனவறொஸ் என்ற இந்த ஆசிரியர் கியுபெக் உச்ச நீதிமன்றத்தில் இந்த பெரிய வெற்றியை பெற்ற பின்னர் ஒரு கொண்டாட்ட மனநிலையில் காணப்படவில்லை. இது ஒரு மிக கடுமையான நிலை. இது எனக்கு ஏற்பட்டிருக்க கூடாது. எனக்கு மட்டுமல்ல வேறு எவருக்கும் ஏற்பட கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மொன்றியல் பகுதியில் வெஸ்ட்மவுன்ட் ஒரு இடைநிலை பள்ளியில் 2004-ல் ஆரம்பமாகியது. கனவறொஸ் ஒரு 9-வயது மாணவனுக்கு கொடுத்த வீட்டுப்பாடத்தை மாணவனது தாயார் செய்துள்ளார் என நம்பியதால் அந்த வேலையை மீண்டும் திரும்ப செய்யும் படி மாணவரை கேட்டுள்ளார். ஆசிரியரின் எதிர்விளைவினால் கொதிப்படைந்த பெற்றோர்களான ஹாகொப் ஆட்டினியன் மற்றும் கத்றைன் றொசென்ரீன் இருவரும் ஆசிரியர், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சபை மீது வழக்கு தொடர்ந்தனர். தங்கள் மகனை அவமானப்படுத்தினார்கள் என கூறி 155,000 டொலர்கள் கேட்டுள்ளனர். 4-வருடங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருப்பதென்ற ஒரு உடன்பாட்டிற்கு பாடசாலையும் பெற்றோரும் வந்தனர். ஆனால் பெற்றோர் உடன்பாட்டை முறித்து ஊடகத்துடன் கதைத்துள்ளனர். இதனால் ஆசிரியரின் நற்பெயர் உடைந்து அதனால் ஆழமான மனஅழத்தத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலை அவரை வேலையை விட்டு விலகும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. தன்னை அவதூறு செய்ததாக கனவறொஸ் பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடுக்க 2010ல் அவருக்கு 234.000 டாலர்கள் வழங்கப்பட்டது. ஆனாலும் கனவறொஸால் வேலை செய்ய முடியவில்லை என கோர்ட் அறிந்து கொண்டது. பாதிக்கப்பட்டு விட்டோம் என்ற அச்சத் தாக்குதலுக்குள்ளாகி ஆற்றல் இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரது நிலைமையையும் இவரால் வேலை செய்ய முடியாதென்பதையும் அறிந்த கியுபெக் உச்ச நீதிமன்றம் ஆசிரியர் 2011-ல் வேலையை விட்டு விலகியதிலிருந்து இளைப்பாறும் வரையும் வேலை செய்து கொண்டிருந்தால் உழைத்திருக்க கூடிய தொகையாக 912,327-டாலர்களையும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக 100,000டொலர்களையும் வழங்குமாறு இந்த வாரம் மாணவனின் பெற்றோர்களிற்கு உத்தரவிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

எபோலா நோயாளிகளிற்கு சிகிச்சை அளிக்க 10-வைத்தியசாலைகள் தேர்வாகியுள்ளன!

Posted: 17 Oct 2014 11:36 PM PDT

EBOLA-VIRUS

EBOLA-VIRUSகனடா- ஒன்ராறியோ எபோலாவிற்கெதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை அதிகப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ரொறொன்ரோ வெஸ்ரேன் வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டில் ஒன்ராறியோ 10-வைத்திய சாலைகளை எபோலா சாத்தியமானவர்களிற்கு சிகிச்ரை அளிக்க தீர்மானிக்கும் என சுகாதார அமைச்சர் எறிக் ஹொஸ்கின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த 10-வைத்தியசாலைகளாவன: ஈஸ்ரேன் ஒன்ராறியோ சிறுவர் வைத்தியசாலை, ஹமில்ரன் சுகாதார அறிவியல் நிலையம், வடக்கு சுகாதார அறிவியல் மையம், நோய்வாயப்பட்ட குழந்தைகள் வைத்தியசாலை ,கிங்ஸ்ரன் பொது வைத்தியசாலை, லண்டன் சுகாதார அறிவியல் மையம், ஒட்டாவா வைத்தியசாலை, சென்.மைக்கல்ஸ் வைத்தியசாலை, சனிபுறூக் வைத்தியசாலை மற்றும் ரொறொன்ரோ வெஸ்ரேன் வைத்தியசாலை என்பனவாகும். ஒன்ராறியோவில் 8 சந்தேகத்திற்கிடமான எபோலா நோயாளிகள் இருந்தனர் என கருதப்பட்டு சோதனை மூலம் எதிர்மறையான முடிவுகள் தெரியவந்தன. மேலும் மாகாணத்தின் விமான அம்புலன்ஸ் சேவைகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழங்குநர்கள் நோயாளிகளை சிகிச்சைக்காக மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளிற்கு கொண்டு செல்வதற்கும் வேண்டிய ஒழுங்களை செய்வதில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அக்டோபர் 20, 2014-ல் இருந்து ரொறொன்ரோவில் உள்ள பொது சுகாதார ஆய்வுகூடம் எபோலா சோதனை நடத்துவதற்கான அதிகாரத்தை பெறும் எனவும் கூறப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™