மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீர் சட்டசபைக்கு டிசம்பரில் தேர்தல்: தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கிறது
- மகாராஷ்டிரா-அரியானாவில் பா.ஜ.க முதலிடம்: இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது
- மோடி தலைமையிலான நேருவின் 125ஆவது பிறந்த நாள் கமிட்டியில் சோனியா குடும்பத்தினருக்கு இடமில்லை
- கருப்பு பணம் மீட்கும் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்: காங். கோரிக்கை
- பஞ்சாப்பில் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய வங்கி பெண் மேனேஜர்
- புனே அருகே சிவசேனா தொண்டர் சுட்டுக் கொலை
- மேற்கு வங்காளத்தில் சமையல்காரியை கற்பழித்த ஆஸ்திரேலிய ஆசாமி கைது
- ஜெயலலிதா தைரியமானவர்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி
- மராட்டியம், அரியானாவில் ஆட்சி அமைப்பது யார்?: இன்று ஓட்டு எண்ணிக்கை
- பரப்பன அக்ரஹாரா முதல் போயஸ் கார்டன் வரை...
- பட்டவ்டி அரண்மனையில் குடித்துவிட்டு, கூத்தடித்து கும்மாளம்: ஷர்மிளா தாகூர், சைப் அலி கானுக்கு நோட்டீஸ்
- ரூ.10,773 கோடி செலவில் அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்
- தூய்மையான பாரதம் திட்டத்துக்காக பத்ரிநாத் கோயிலுக்கு பெருக்கச் சென்ற டினா அம்பானிக்கு காயம்
- வங்கிகளின் மூலம் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் பெற ஆதார் அட்டை அவசியம் இல்லை
- வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நவம்பர் 10-ம் தேதி அமல்
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்
- சிவசேனா ஆட்சியமைக்க பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும்: ராவத்
- கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ஹசாரே
- பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா
| காஷ்மீர் சட்டசபைக்கு டிசம்பரில் தேர்தல்: தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கிறது Posted: 18 Oct 2014 09:27 PM PDT காஷ்மீர் மாநில சட்ட சபையின் பதவிக் காலம் வருகிற ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் இந்த மாத இறுதிக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 87 சட்டசபை தொகுதிகளில் சுமார் 30 தொகுதிகளில் மழை வெள்ளத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது. |
| மகாராஷ்டிரா-அரியானாவில் பா.ஜ.க முதலிடம்: இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது Posted: 18 Oct 2014 09:25 PM PDT மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. காலை 9:30 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 114 இடங்களிலும், சிவசேனா 59 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் 47 இடங்களிலும் தேசிய. காங் 41 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. தனித்து ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு குறைவாக காணப்படுவதால் அங்கு கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. |
| மோடி தலைமையிலான நேருவின் 125ஆவது பிறந்த நாள் கமிட்டியில் சோனியா குடும்பத்தினருக்கு இடமில்லை Posted: 18 Oct 2014 05:04 PM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழா குழு நேற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட 5 நபர்கள் அடங்கிய குழுவுக்கு டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித் தலைவராகவும், முன்னாள் மத்திய மந்திரி முகுல் வாஸ்னிக் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். |
| கருப்பு பணம் மீட்கும் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்: காங். கோரிக்கை Posted: 18 Oct 2014 03:57 PM PDT கருப்பு பணம் மீட்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த தகவல்களுக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின்போது வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது தொடர்பான பிரச்சினையை எழுப்பிய நரேந்திர மோடி, கருப்பு பணத்தை பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்று குற்றம் சாட்டினார். |
| பஞ்சாப்பில் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய வங்கி பெண் மேனேஜர் Posted: 18 Oct 2014 03:44 PM PDT கத்தி முனையில் காரில் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றும் பெண் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில தலைநகர் அம்ரிஸ்டரில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேனேஜராக பணியாற்றிவரும் மஞ்சு ஷர்மா, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். |
| புனே அருகே சிவசேனா தொண்டர் சுட்டுக் கொலை Posted: 18 Oct 2014 03:15 PM PDT மராட்டிய மாநில சட்டசபைக்கு கடந்த 15-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க.வுடனான 25 ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, இந்த தேர்தலை தனித்தே சந்தித்தது. 15-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், புனே நகரின் அருகில் உள்ள புனாவாலே பகுதியை சேர்ந்த சிவசேனா பிரமுகரான ராஜு தாஷிலே என்பவர் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் தனது அலுவலகத்தில் தனியே இருந்தபோது, |
| மேற்கு வங்காளத்தில் சமையல்காரியை கற்பழித்த ஆஸ்திரேலிய ஆசாமி கைது Posted: 18 Oct 2014 02:54 PM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் சமையல்காரியை கற்பழித்த குற்றத்துக்காக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடியா மாவட்டம், நபாட்விப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஆர்தர் அரேல் ஸ்மித் என்பவர், அங்குள்ள 'இஸ்கான்' எனப்படும் 'ஹரே ராமா-ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் இணைந்து, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தார். |
| ஜெயலலிதா தைரியமானவர்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி Posted: 18 Oct 2014 02:54 PM PDT "ஜெயலலிதா தைரியமான பெண்மணி. அவர் சிறையில் இருந்தபோது யாரையும் சந்திக்கவில்லை" என்று கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா கூறினார். கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- "ஜெயலலிதா தைரியமான பெண்மணி. மன உறுதி படைத்தவர். சிறையில் அவர் அமைதியாக இருந்தார். பெங்களூர் தனிக்கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்யும்படி என்னிடம் வழங்கிய உத்தரவு நகலுடன் |
| மராட்டியம், அரியானாவில் ஆட்சி அமைப்பது யார்?: இன்று ஓட்டு எண்ணிக்கை Posted: 18 Oct 2014 01:47 PM PDT மராட்டியம், அரியானா இரு மாநில சட்டசபை தேர்தலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு ஆட்சி அமைப்பது யார்? என்பது மதியத்திற்குள் தெரிந்துவிடும். 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த 15-ந் தேதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா ஆகிய இரு பெரிய கூட்டணிகள் முறிந்ததால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா, சிவசேனா, மராட்டிய நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் தனித்து |
| பரப்பன அக்ரஹாரா முதல் போயஸ் கார்டன் வரை... Posted: 18 Oct 2014 12:57 PM PDT சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். அதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:- * காலை 10.10 மணி: சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவதையொட்டி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்புகளுடன் காத்து இருந்தனர். * 10.15 மணி: சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை |
| Posted: 18 Oct 2014 12:18 PM PDT அரியானா மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் இன்று (19-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வரும் 22-ம் தேதி வரை இங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். இந்நிலையில், அரியானாவின் முன்னாள் நவாப் பட்டவ்டியின் வம்சத்தை சேர்ந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டவ்டியின் மனைவியும் முன்னாள் பாலிவுட் கதாநாயகியுமான நடிகை ஷ்ர்மிளா தாகூர், தனது மகன் சைப் அலி கான் பட்டவ்டியுடன் சேர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள பட்டவ்டி தொகுதியில் |
| ரூ.10,773 கோடி செலவில் அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 18 Oct 2014 11:52 AM PDT பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமீபத்தில் பொறுப்பேற்றதையடுத்து, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் மெட்ரோ ரெயில்களை அறிமுகம் செய்யும் திட்டமும் ஒன்றாகும். மொத்தம் 35.96 கிலோமீட்டர் தூரத்தை மெட்ரோ ரெயில் பாதையின் மூலம் இணைக்கும் இந்த திட்டத்துக்கு ரூ.10,773 கோடி செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. |
| ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் Posted: 18 Oct 2014 11:33 AM PDT அரசிதழ் பதிவு பெறாத, தகுதி உள்ள அனைத்து ரெயில்வே ஊழியர்களுக்கும் 78 நாள் ஊதியத்தை உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. ரூ.3 ஆயிரத்து 500–ஐ சம்பள உச்சவரம்பாக கொண்டு, போனஸ் கணக்கிடப்படும். இதனால் மத்திய அரசுக்கு ரூ.ஆயிரத்து 63 கோடியே 38 லட்சம் செலவாகும். இதன்மூலம், 12 லட்சத்து 60 ஆயிரம் அரசிதழ் பதிவு பெறாத |
| தூய்மையான பாரதம் திட்டத்துக்காக பத்ரிநாத் கோயிலுக்கு பெருக்கச் சென்ற டினா அம்பானிக்கு காயம் Posted: 18 Oct 2014 10:27 AM PDT இந்தியாவை சுத்தப்படுத்த 'கிளீன் இந்தியா' என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். காந்தி ஜெயந்தியையொட்டி கடந்த 2-ம் டெல்லியில் துடைப்பம் பிடித்து குப்பையை அகற்றி, இத்திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி உள்பட 9 பிரபலங்களுக்கு அவர் அழைப்பும் விடுத்தார். |
| வங்கிகளின் மூலம் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் பெற ஆதார் அட்டை அவசியம் இல்லை Posted: 18 Oct 2014 10:07 AM PDT மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தை மேலும் பயனுள்ள முறையில் திருத்தம் செய்து மறுஅறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன்படி, எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையானது, இனி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த புதிய திட்டம், வரும் நவம்பர் மாதம் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் 54 மாவட்டங்களிலும், பின்னர், படிப்படியாக வரும் ஜனவரி மாதத்துக்குள் நாடு முழுவதிலுமாக நிறைவேற்றப்படவுள்ளது. |
| வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நவம்பர் 10-ம் தேதி அமல் Posted: 18 Oct 2014 08:04 AM PDT டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தை மேலும் பயனுள்ள முறையில் திருத்தம் செய்து மறு அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு |
| டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல் Posted: 18 Oct 2014 07:51 AM PDT டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில் மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு, தற்போது இழப்பு இல்லாத நிலை |
| சிவசேனா ஆட்சியமைக்க பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும்: ராவத் Posted: 18 Oct 2014 06:48 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 15-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. 25 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பா.ஜனதாவும், சிவசேனாவும் இந்த முறை தனித்தனியே களமிறங்கின. பா.ஜனதா கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், சிவசேனா கட்சியோ, தங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. |
| கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது: ஹசாரே Posted: 18 Oct 2014 03:59 AM PDT கறுப்பு பண விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் கூறியது. மத்திய அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அன்னா |
| பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஜெயலலிதா Posted: 18 Oct 2014 03:17 AM PDT சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.100 கோடி அபராதத்தை கடந்த மாதம் 27–ந்தேதி விதித்தது. இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய கர்நாடகா ஐகோர்ட்டு மறுத்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |