Tamil Star |
- 81 பில்லியன் சொத்து: நூற்றாண்டின் கோடீஸ்வரரான பில்கேட்ஸ்
- கோலாகலமாய் அரங்கேறிய உருளைகிழங்கு திருவிழா: ருசிக்க ருசிக்க சாப்பிட்ட மக்கள்
- லேட்டாக வந்ததால் பணம்! இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தம்பதியினர்
- கொகா கோலாவை விடவும் ஆபத்தான பழ ரசங்கள்
- கல்லூரி என்பது காதல்…..அலுவலகம் என்பது திருமணம்
- விக்னேஸ்வரன் மற்றும் ஹக்கீமுக்கு மல்வத்து பீடம் எச்சரிக்கை\
- இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் போக்கில் மாற்றம்!- ஜனாதிபதி
- ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி
- உ.பி. ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் அறிவிப்பு
- மீண்டும் நடிக்க வரும் ஐஸ்வர்யா ராய்
- நயன்தாராவுடன் கருத்து வேறுபாடா?: சிம்பு விளக்கம்
- அதிக நேரம் தூங்குவது நல்லதா?
- நோய் வருவதை தவிர்க்க தண்ணீர் குடிங்க
- ஓட்டப் பந்தயத்தில் டிண்டு லுகாவுக்கு வெள்ளிப் பதக்கம்
- ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கல பதக்கம் வென்றார்
- இந்தியாவில் 3 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கி மேம்படுத்த அமெரிக்கா உதவி
- ஈராக்கில் விளையும் தானியங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் ஐ.எஸ். இயக்கம்
| 81 பில்லியன் சொத்து: நூற்றாண்டின் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் Posted: 01 Oct 2014 07:06 AM PDT
உலகின் பிரபல தொழிலதிபர்களில் பரவலாக பேசப்படும் அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் 21ம் நூற்றாண்டின் கோடீஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இந்த நூற்றாண்டில் உலகளவில் யார் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதை அறிய 400 உலக பணக்காரர்கள் குறித்து அமெரிக்காவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் வெளியிடப்பட்ட பட்டியில் முதலாம் இடத்தை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் தலைவர் பில்கோட்ஸ் பிடித்துள்ளார். இவரது சொத்தின் மதிப்பு கடந்த 2013ம் ஆண்டில் 9 பில்லியன் டொலர்களிலிருந்து தற்போது 81 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இவரை தொடர்ந்து 67 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் வாரன் பப்பெட்டும் (Warren Bufefett), 50 பில்லியன் டொலர்களுடன் 3வதுஇடத்தில் லாரி எல்லிஸ்சனும் (Lary Ellison), 12 பில்லியன் டொலர்களுடன் 4வது இடத்தில் சார்லஸ் கோச் மற்றும் டேவிட் கோச்சும் (Charles and David Koch) இடம்பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இவரே 21ம் நூற்றாண்டின் கோடீஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றுள்ளதாக பிரபல அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கோலாகலமாய் அரங்கேறிய உருளைகிழங்கு திருவிழா: ருசிக்க ருசிக்க சாப்பிட்ட மக்கள் Posted: 01 Oct 2014 07:05 AM PDT
அமெரிக்காவில் நடைபெற்ற உருளைகிழங்கு சாலட் திருவிழா அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ (Ohio) மாகாணத்தில் சாக் பிரெளன் (Zack Brow) என்ற நபர் அமைதியையும் அன்பையும் வலியுறுத்தி உருளைகிழங்கு சாலட் திருவிழா (Potato Salad Festval) என்ற வினோதமான திருவிழா ஒன்றை நடத்தியுள்ளார். இந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் உருளைகிழங்கு சாலட்டை சாப்பிட்டு விட்டு தங்களால் இயன்ற நீதியை அளித்துள்ளனர். இந்நிலையில் மக்களிடையே பலத்த ஆதரவை பெற்ற இத்திருவிழாவினால், மொத்தம் 55,000 டொலர்கள் நிதி கிடைத்ததுள்ளது. இந்த நிதி முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இவரது திட்டத்தை கேட்ட நிறுவனம் ஒன்று உருளைகிழங்குகளை தானமாகவே வழங்கியுள்ளது. மேலும் இந்தத் திருவிழாவுக்காக 1350 கிலோ உருளைக்கிழங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லேட்டாக வந்ததால் பணம்! இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தம்பதியினர் Posted: 01 Oct 2014 07:04 AM PDT
அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் ஹொட்டலில் தாமதமாக வழங்கப்பட்ட உணவிற்காக அதிக டிப்ஸ் கொடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லோவா (Lowa) மாநிலத்தை சேர்ந்த மெக்சைன்-ஸ்டீவன் (Makenzie-Steven) என்ற தம்பிதியினர் ஹொட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார். இவர்கள் வந்து அமர்ந்து 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரும், 40 நிமிடங்கள் கழித்து உணவையும் அங்கு பணிபுரிமும் உணவு பரிமாறும் நபர் வழங்கியுள்ளார். ஆனால் இதை பார்த்து ஆத்திரமடையாத அத்தம்பதியினர் இதற்கு மாற்றாக ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்ய வேண்டும் என சிந்தித்துள்ளனர். எனவே உணவுக்கான பில் 66 டொலரோடு அதற்கு மேலாக 100 டொலரை டிப்ஸாக வழங்கி உணவு பரிமாறும் நபரை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இதுகுறித்து மெக்சைன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது, தாமதத்திற்கு காரணம் உணவு பரிமாறியவர் அல்ல உணவகத்தில் பணியாளர் பற்றாக்குறைதான். மொத்தம் 12 இருக்கைகளுக்கும் அவர் ஒருவர் மட்டுமே கவனிப்பது என்பது கடினமான ஓர் விடயமாகும். ஆதலால் நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரின் பேஸ்புக் பக்கத்தில் லட்சக்கணக்கானோரின் ஆதரவும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொகா கோலாவை விடவும் ஆபத்தான பழ ரசங்கள் Posted: 01 Oct 2014 06:54 AM PDT
அதிகளவாக செயற்கை பழ ரசங்களை உள்ளெடுப்பதால் குழந்தைகளில் பற்சிதைவு ஏற்படுவதாக இங்கிலாந்திலுள்ள சுகாதார மையம் ஒன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. இப்பழ ரசங்கள் குழந்தைகளை மட்டுமல்லாது வயது வந்தவர்களையும் அதிகமாக பாதிக்கக்கூடியது. அதாவது சில வகையான பழ ரசங்களில் கொகா கோலா குளிர்பானத்தை விடவும் அதிகளவில் சர்க்கரை காணப்படுகின்றது. இவ்வாறான பழ ரசங்கள் சர்க்கரை வியாதிக்கு வழிவகுக்கன்றது. அவ்வாறு ஆபத்து மிக்க சில செயற்கை பழ ரசங்களும் அவற்றில் காணப்படும் சர்க்கரையின் அளவும் இங்கே தரப்பட்டுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்லூரி என்பது காதல்…..அலுவலகம் என்பது திருமணம் Posted: 01 Oct 2014 06:53 AM PDT
அரசியல் என்பது தற்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. எங்கும் அரசியல், எதிலும் அரசியல். வீட்டில் ஆரம்பித்து அலுவலகம் வரை அரசியல். சில பேர் கல்லூரி வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு வேலைக்கு சேர்ந்தவுடன் அங்கு நடக்கும் அரசியலை சமாளிக்க முடியாமல் திணறிவிடுவார்கள். புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் அலுவலக அரசியல் பற்றி அறிதல் வேண்டும். படிக்கும்போது பணமும் பதவியும் மட்டும் கண்ணுக்குத் தெரியும். வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் உங்களுடன் பணியாற்றுபவர்கள் உங்கள் பணி வாழ்க்கையைப் பாதிப்பதை உணர்வீர்கள். ஆனால் அந்தத் தீவிரம் புரிவதற்குள் நிறைய தவறான முடிவுகள் எடுத்திருப்பீர்கள். " உன் படிப்புக்கு இன்னும் நல்ல கம்பெனியா சேந்திருக்கலாமே?" என்று தூண்டில் போடுபவரைக் கண்டு கொள்ளத்தெரியாது. நேரில் ஒன்றைச் சொல்லிவிட்டு அதே சங்கதியை மின்னஞ்சலில் வேறு மாதிரி எழுதுபவரின் உள் நோக்கம் தெரியாது. "என்ன உதவி வேண்டுமானாலும் கேள்" என்று சொல்லும் வேறு துறை ஆசாமியிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்று தெரியாது. "மனசில் இருப்பதைத் தைரியமா சொல்லுங்க... என்ன நினைக்கிறீங்க?" என்று மீட்டிங்கில் மேலதிகாரி சொன்னால் நம்புவதா இல்லையா என்று தெரியாது. அதிகாரக் குவிப்பு உள்ள எல்லா அமைப்புகளிலும் அரசியல் இருக்கும். கட்சிகள், மடங்கள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், குடும்பங்கள், அரசாங்கங்கள் என எல்லா மனிதக் கூட்டங்களிலும் அரசியல் உண்டு. இதை அறிந்து கொள்வது சாலை விதிகளை அறிவது போல அவசியம். எல்லா மனித மனமும் விருப்பு வெறுப்பு சார்ந்துதான் முதலில் யோசிக்கும். எந்த நிகழ்வும் முழுக்கத் முழுக்க தர்க்கரீதியாக நடப்பதில்லை. அப்படி நடந்தால் உலகில் இன்று நாம் காணும் பிரச்சினைகளில் 99% இல்லாமல் போய்விடும். உணர்வு சார்ந்த நிலையில் உறவுகளில் ஏற்படும் மாற்றங்களும் முடிவுகளும் அமைப்பு விதிகள் சார்ந்து இருக்க அவசியமில்லை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விக்னேஸ்வரன் மற்றும் ஹக்கீமுக்கு மல்வத்து பீடம் எச்சரிக்கை\ Posted: 01 Oct 2014 06:45 AM PDT
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு நாட்டைத் துண்டாட முயற்சிக்க வேண்டாம் என்று மல்வத்து பீடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரான மிசெல் ஜே. சீசன், நேற்று மல்வத்து பீடத்தின் பிரதி சங்க நாயக்க நியாங்கொட விஜித தேரரை சந்தித்த போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டை துண்டாடும் எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாமென வடமாகாண முதலமைச்சரான சீ.வி.விக்னேஸ்வரனிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக் கூறுங்கள் என நியாங்கொட விஜித தேரர் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட நியாங்கொட தேரர், பௌத்த மத குருமாரே இந்நாட்டின் கலாசாரத்தில் முதன்மையானவர்கள். தேரர்களைச் சுற்றியே கலாசாரமும், சமூக கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் பெரும்பான்மையினர் சிங்களவர்களே. அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் சலுகைகளையும் விட தங்களுக்கு அதிகளவில் வேண்டுமென இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தினர் எதிர்பார்க்கக் கூடாது,எதிர்பார்க்கவும் முடியாது. இந்நாட்டின் அனைத்து மக்களும் பரஸ்பர நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் போக்கில் மாற்றம்!- ஜனாதிபதி Posted: 01 Oct 2014 06:40 AM PDT
இலங்கை சம்பந்தமாக அமெரிக்க அரசாங்கத்தின் கடும் போக்கு கொள்கையில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை தான் உணர்ந்து கொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். முக்கியமாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இதனை தான் உணர்ந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையில், ஜோன் கெரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் அவை வெற்றிகரமாக அமைந்தது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர்கள் தனக்கு அறிவித்தனர் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி Posted: 01 Oct 2014 06:37 AM PDT
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது 6 அல்லது 7-ந்தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இன்று ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது பற்றி மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி கூறியதாவது:– வழக்கை விசாரிக்காமலேயே ஒத்தி வைத்த நீதிபதி ரத்னகலாவின் செயல் அதிர்ச்சி தருகிறது. இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உ.பி. ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் அறிவிப்பு Posted: 01 Oct 2014 06:36 AM PDT
உ.பி. ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு கிரிஷக் எக்ஸ்பிரஸ்-பராவுனி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதிய விபத்தில் 12 பேர் பலியானார்கள். 45 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். ரெயில்வே நிர்வாகமும் நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீண்டும் நடிக்க வரும் ஐஸ்வர்யா ராய் Posted: 01 Oct 2014 06:34 AM PDT
தமிழில் 'ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா ராய், கர்ப்பம், பிரசவம் குழந்தை வளர்ப்பு என குடும்ப வேலைகளில் மூழ்கி இருந்ததால் சினிமாவுக்கு தற்காலிக முழுக்க போட்டு இருந்தார். உடம்பும் வெளுத்தது. தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். சஞ்சய் குப்தா இயக்கும் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இதற்காக கடும் உடற்பயிற்சிகள் எடுத்து எடையை குறைத்துக் கொண்டு இருக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நயன்தாராவுடன் கருத்து வேறுபாடா?: சிம்பு விளக்கம் Posted: 01 Oct 2014 06:31 AM PDT
சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் நிறைவு பெறாமல் தாமதமாவதாகவும் செய்திகள் பரவின. இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இது நம்ம ஆளு படத்தின் வசன காட்சிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் துவங்கும். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார். 'இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 01 Oct 2014 06:28 AM PDT
அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும். இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது. சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும். அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நோய் வருவதை தவிர்க்க தண்ணீர் குடிங்க Posted: 01 Oct 2014 06:27 AM PDT
சிறுவயதில் இருந்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் அவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 தம்ளர் தண்ணீர் குடித்தால் பலநோய்கள் வராமல் தவிர்க்க வாய்ப்பு உள்ளது. சிறுநீரகம் நன்றாக வேலை செய்யவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மூட்டு வலி, முதுகு வலி பாதிப்பை தவிர்க்கவும், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல் வலியினை நன்கு குறைக்கும். கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால் `லிம்பாடிக் குழாய்களின்' மூலம் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது. நன்கு தண்ணீர் குடிப்போருக்கு சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் குடிப் பதே மூட்டுகளில் வழுவழுப்பு தன்மைக்கு உதவுகின்றது. தசை பிடிப்பு, சோர்வு போன்றவை உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படுவதன் காரணம் போதிய தண்ணீர் குடிக்காமையே. புரதம் உடலில் சரிவர இருந்தாலே நல்ல சதை உருவாகும். இந்த புரதம் உடலில் சரியான முறையில் உருவாக்க தண்ணீரே காரணம். இல்லையெனில் அதிக கொழுப்பு உடைய உடலாகி விடும். உங்கள் தண்டுவடம் நன்கு தண்ணீர் எடுத்துக் கொண்டால் முதுகு வலி குறையும். உடலில் கொழுப்பு அதிகம் சோர்ந்து உடல் பெருத்து விட்டதாப நன்கு தண்ணீர் குடிப்பதனையும் ஒரு பழக்கமாக்கி கொள்ளுங்கள். அநேகர் படுக்கை பக்கத்தில் பிஸ்கட், பன் என்று வைத்திருப்பார்கள். இவர்கள் பாதி ராத்திரியில் பசி என்று எழுந்து சாப்பிடுவர். இவர்கள் ஒரு தம்ளர் தண்ணீர் அருந்த இந்த முறையற்ற உணவு பழக்கம் நீங்கும். அநேகர் தாகத்தினை பசியென்று தவறாக நினைத்து அடிக்கடி உண்பர். இவர்கள் முதலில் தண்ணீர் அருந்த முறையற்று உணவு அருந்தும் வழக்கம் நீங்கி விடும். நீங்கள் `டயட்' செய்து இளைக்க வேண்டுமா? உணவு அருந்துவதற்கு 10 நிமிடம் முன்னால் ஓரிரு தம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு குறைவாகவே உண்ண முடியும். எடை தன்னால் குறைந்து விடும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓட்டப் பந்தயத்தில் டிண்டு லுகாவுக்கு வெள்ளிப் பதக்கம் Posted: 01 Oct 2014 06:23 AM PDT
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய தடகள வீராங்கனை டிண்டு லுகா வெள்ளிப் பதக்கம் வென்றார். பி.டி. உஷாவிடம் பயிற்சி பெற்ற டிண்டு லுகா இன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். துவக்கத்தில் அதிவேகமாக முன்னேறிய டிண்டு லுகா கடைசி 50 மீட்டரில் பின்தங்கியதால் தங்கப் பதக்க வாய்ப்பை இழந்தார். இவர், பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 59.19 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஒரு நிமிடம் 59.02 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்த கஜகஸ்தான் வீராங்கனை மார்கரிட்டா முகாஷேவா தங்கம் வென்றார். சீன வீராங்கனை ஜிங் ஜாவோ வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை சுஷ்மா தேவி 4-வது இடத்தைப் பிடித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி வெண்கல பதக்கம் வென்றார் Posted: 01 Oct 2014 06:21 AM PDT
தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தடகள போட்டியில் பெண்களுக்கு ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இவருடன் மேலும் 7 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். இதில் சீன வீராங்கனை ஷாங் லி, லிங்வெய் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர். லி 65.47 மீட்டர் தூரமும், லிங்வெய் 61.43 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தனர். இந்திய வீராங்கனை அன்னு ராணி 59.53 மீட்டர் ஈட்டி எறிந்து வெண்கல பதக்கம் வென்றார். இன்றைய போட்டியில் இந்தியா, பெண்கள் ஹாக்கியில் வெண்கலம், 800 மீட்டர் பெண்கள் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி, குத்துச்சண்டையில் மெரிகோம் தங்கம் போன்ற பதக்கங்களையும் பெற்றுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் 3 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கி மேம்படுத்த அமெரிக்கா உதவி Posted: 01 Oct 2014 06:20 AM PDT
இந்தியாவில் உலகத்தரத்துக்கு ஒப்பாக 100 பெருநகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்ட பிரதமர் மோடி, ஜப்பானின் 'ஸ்மார்ட் சிட்டி' என்றழைக்கப்படும் கியோட்டோ நகரை கடந்த மாத ஜப்பான் பயணத்தின்போது சுற்றிப்பார்த்து, சில விபரங்களை அறிந்து வந்தார். அதே வகையில் இந்தியாவில் உள்ள 100 மத்தியதர நகரங்களை ஸ்மார்ட் சிட்டிகளாக வடிவமைக்க தேவையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்காக, 7 ஆயிரத்து 60 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது. பிரதமரின் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்த அமெரிக்க அரசு, முதல்கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத், ஆக்ரா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஆகிய 3 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டி'களாக உருவாக்க்கி, மேம்படுத்துவதில் உதவி செய்ய முன்வந்துள்ளது. மேலும், இந்தியாவின் 500 பெருநகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான பணிகளிலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக்கில் விளையும் தானியங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் ஐ.எஸ். இயக்கம் Posted: 01 Oct 2014 06:19 AM PDT
ஈராக்கிலும், சிரியாவிலும் கைப்பற்றும் பகுதிகளை இணைத்து ஒரு தீவிரவாத இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் திட்டத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் அங்கு போரில் ஈடுபட்டு வருகின்றது. அல்கொய்தா இயக்கத்திலிருந்தே இந்த தீவிரவாதக் குழுவும் வளர்ச்சி பெற்றபோதும் இரு இயக்களின் செயல்பாடுகளிலும் வித்தியாசம் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அல்கொய்தா இயக்கத்தினர் வெடிகுண்டுத் தாக்குதல்களையும், தாக்கிவிட்டு பின்னர் தப்பிப்பதையுமே தங்களுடைய செயல்முறையாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஐஎஸ் இயக்கமோ தாங்கள் கைப்பற்றும் பகுதிகளில் தங்களின் அதிகாரத்தையும் செலுத்தி அரசு நடத்துவது போன்ற ஒரு அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஈராக்கின் விவசாயப் பயிர்களில் பார்லி, அரிசியுடன் கோதுமை பெரும்பான்மையான இடத்தைப் பெறுகின்றது. கோதுமை விளையும் இடங்களில் பெரும்பாலானவற்றைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த இயக்கம் வயல்களை விட்டுவிட்டு தப்பி ஓடியவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களைத் திரும்பவந்து விவசாயத்தில் ஈடுபட அழைக்கின்றது. ஆனால் இதற்கு முன்னர் அவர்கள் முஸ்லீமாக மதமாற்றம் செய்துகொண்டு 500 டாலர் தொகையை ஐஎஸ் இயக்கத்திடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இதற்கு மறுக்கும் பிற சமூகத்தினரின் வயல்களில் உள்ள தானியங்கள் இந்த இயக்கத்தினரால் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுமட்டுமின்றி, உள்ளூர் தொழிலதிபர்களிடம் வரி வசூலிப்பது, சூறையாடுதல், மேற்கத்தியவர்களைக் கடத்துவதன் மூலம் பிணைத்தொகை பெறுதல், உள்ளூர் வியாபாரிகளிடம் எண்ணெய் விற்பனையில் ஈடுபடுதல் போன்ற பல நடவடிக்கைகளாலும் தங்களுக்குத் தேவையான வருமானத்தை இந்த இயக்கத்தினர் பெறுகின்றனர் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக எண்ணெய் விற்பனையானது மாதந்தோறும் மில்லியன் கணக்கான வருமானத்தை அளித்து வருகின்றது. இதனைத்தொடர்ந்தே சிரியாவில் இவர்கள் பிடியில் உள்ள எண்ணெய் வயல்களை அமெரிக்கா குறிவைத்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய தங்களின் நடவடிக்கைகளினாலேயே ஐஎஸ் இயக்கத்தினர் உலக நாடுகளிடையே அல்கொய்தாவைவிட மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |































