Tamil News | Online Tamil News |
- சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமின் மனு...தாக்கல்
- வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?
- ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி
- சீன நிறுவனத்தை வீழ்த்திய பெல் நிறுவனம் : எண்ணுார் அனல் மின் நிலைய கட்டுமான பணி ஒப்படைப்பு
- பா.ஜ.,வுக்கு ரூ.41 கோடி; காங்கிரசுக்கு ரூ.36 கோடி கடந்த ஆண்டில் நன்கொடையாக கிடைத்துள்ளது
- எதிர்விளைவு பாக்.,கால் தாங்க...முடியாது:ஜெட்லி ஆவேசம்
- ரூ.6 லட்சம் கோடி முதலீடு: மோடி பெருமிதம்
- கூடுதல் சாட்சிகளை சேர்க்க கனிமொழி எதிர்ப்பு
- ஜாமின் நிபந்தனைகளை மீறி சவுதாலா தேர்தல் பிரசாரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக டில்லி ஐகோர்ட் அதிரடி
- எதிர்நீச்சல்:ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு
| சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமின் மனு...தாக்கல் Posted: சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட, நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை, வயதை, காரணம் காட்டி, ஜாமின் வழங்க வேண்டும் என, கோரப்பட்டு உள்ளது. எனினும், தீபாவளிக்கு முன், இந்த மனு மீது விசாரணை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரு தனி ... |
| வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை? Posted: புதுடில்லி: வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.இந்த திட்டத்தை அமல்படுத்த முற்படும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கும்படியும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, உணவு பாதுகாப்பு ... |
| ஊதுபத்தி உருட்டும் வேலை ஒதுக்கீடு தண்டனை கைதி என்பதால் ஜெ.,க்கு புது பணி Posted: பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு, 13வது நாளான நேற்று, முன்னாள் அமைச்சர்களின் வருகையே, அதிகமாக இருந்தது. தற்போதைய அமைச்சர்கள், தொண்டர்கள் யாரும் வரவில்லை.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்., 27ம் தேதி மாலை, பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன், 13 நாட்கள் முடிந்து விட்டன. உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்வதற்காக, வழக்கறிஞர்கள் டில்லி சென்றனர்.கர்நாடகாவில், தொடர் விடுமுறை முடிந்ததால், நேற்று பெங்களூரு மத்திய சிறைக்கு, மற்ற கைதிகளை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை ... |
| சீன நிறுவனத்தை வீழ்த்திய பெல் நிறுவனம் : எண்ணுார் அனல் மின் நிலைய கட்டுமான பணி ஒப்படைப்பு Posted: தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் அமைக்கப்பட உள்ள, எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய கட்டுமான பணி, சீன நிறுவனத்திற்கு பதிலாக, பொதுத்துறையை சேர்ந்த, 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, திருவள்ளூர் மாவட்டம், வாயலுார் கிராமத்தில், 500 ஏக்கர் நிலம் உள்ளது.நான்கு நிறுவனங்கள்இங்கு, 'எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம்' என்ற பெயரில், தலா, 660 மெகாவாட் திறன் உற்பத்தி கொண்ட, இரண்டு அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது; இதற்கு, தமிழக அரசு, ஜனவரி 31, 2011ல், ஒப்புதல் வழங்கியது.இதற்கான கட்டுமான ... |
| பா.ஜ.,வுக்கு ரூ.41 கோடி; காங்கிரசுக்கு ரூ.36 கோடி கடந்த ஆண்டில் நன்கொடையாக கிடைத்துள்ளது Posted: புதுடில்லி:கடந்த நிதியாண்டில், பா.ஜ.,வுக்கு, 41 கோடி ரூபாயும், காங்கிரசுக்கு, 36 கோடி ரூபாயும் நன்கொடை கிடைத்து உள்ளது.கடந்த 2013 - 14ம் நிதியாண்டில், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த நன்கொடைகள் தொடர்பாக, தேர்தல் கமிஷனிடம், முதன் முறையாக, 'சத்யா தேர்தல் அறக்கட்டளை' என்ற அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற, அந்த அமைப்பு கூறிஉள்ளதாவது:வரி விலக்கு:தேர்தல் கமிஷன் தேர்தல் தொடர்பான ஏழு அறக்கட்டளை களை கண்டறிந்து உள்ளது. அவற்றில் ஒன்று, பார்தி குரூப்புக்கு சொந்தமான, எங்களது சத்யா தேர்தல் அறக்கட்டளை. வரி விலக்கு பெறுவதற்காக, ... |
| எதிர்விளைவு பாக்.,கால் தாங்க...முடியாது:ஜெட்லி ஆவேசம் Posted: புதுடில்லி:''எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அடாவடிகள் தொடர்கின்றன. இந்த நிலை நீடித்தால், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை பாகிஸ்தான் அரசால் தாங்க முடியாது. ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர் நடத்தி வரும், அடாவடி தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. எல்லை பாதுகாப்புப் படையினரின், 60 நிலைகள் மற்றும் 90 கிராமங்களை குறி வைத்து, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை, பாக்., படையினர் நடத்திய தாக்குதலில், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் உட்பட, ... |
| ரூ.6 லட்சம் கோடி முதலீடு: மோடி பெருமிதம் Posted: இந்துார்:''ஆறு லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு, இந்தியாவின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. அதில், தங்களுக்கு தேவையானவற்றை பெற வேண்டியது, மாநில அரசுகளின் பொறுப்பு,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைத்த மோடி பேசியதாவது:எதிர்பார்ப்பு: ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து, 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், நம் நாட்டின் கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அதனால், மாநில அரசுகள் இந்த வாய்ப்பை ... |
| கூடுதல் சாட்சிகளை சேர்க்க கனிமொழி எதிர்ப்பு Posted: புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், கூடுதலாக சில சாட்சிகளை சேர்க்க அனுமதி வேண்டி, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.கூடுதல் ஆவணங்கள்:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சார்பில், சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'வழக்கில் கூடுதல் சாட்சிகளாக, அமலாக்கத் துறை இயக்குனரகத்தின் துணை ... |
| ஜாமின் நிபந்தனைகளை மீறி சவுதாலா தேர்தல் பிரசாரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக டில்லி ஐகோர்ட் அதிரடி Posted: புதுடில்லி: 'அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கப்பட்ட, இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., நேற்று மனுத் தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 'அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டனர்.3,000 ஆசிரியர்கள் நியமனம் அரியானாவில், தற்போது முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்கிரஸ் அரசு உள்ளது. இதற்கு முன், இந்திய தேசிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த, ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஆட்சி நடைபெற்றது. அப்போது, 3,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.இந்த நியமனங்களில், ... |
| எதிர்நீச்சல்:ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு Posted: விசாரணைக்கு உட்பட்ட காலகட்டத்தில், ஜெ., உள்ளிட்டோர் 12 கோடி ரூபாய் செலவிட்டனர் என்பது அரசு தரப்பின் வாதம். இதில், சில ஆண்டுகளுக்கு ஜெ.,யின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின், திருமண செலவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.இந்த திருமண நிகழ்ச்சி மிக பிரமாண்டமான அளவில், செப்டம்பர் 7, 1995ல், சென்னை, எம்.ஆர்.சி., நகர் பகுதியில் நடந்தது. இதற்கு, மொத்தம் 4.81 லட்சம் சதுரடி (11 ஏக்கர்) பரப்பளவில் பந்தல்களும், பிற கட்டுமானங்களும் எழுப்பப்பட்டன. 56 ஆயிரம் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. ஏறத்தாழ 50 ஆயிரம் பேருக்கு விருந்துஅளிக்கப்பட்டது.தமிழக மக்களை பிரமிக்கச் செய்த இந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 10,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |