ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஜோக் ஆறு!
- கணவனே ஆனாலும்....?!
- அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...!
- ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட் !
- இதயப் புகழ் வாய்ந்தவள் - தபூ சங்கர் கவிதைகள் .
- இன்று உலக தபால் தினம் ! - 09.10.14
- 2014 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
- உங்கள் காபியில் சிக்கரி இருக்கா?
- வேலன்:-வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து பைல்களை மீட்டுஎடுக்க
- உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்
- ஆடை அணிவது அவரவர் உரிமை!!!!
- பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள்
- மருத்துவ மெட்டி!
- வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள் - வாசித்ததில் ரசித்தது
- வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு !
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ஜஸ்வர்யா ராயின் கால்கள் அழகு இல்லையாம்!!!
- கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!
- வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்!
- இசையோடு வாழ்பவன்
- சிவாஜியாகத் தோன்றும் எம்.ஜி.ஆர்
- ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க !
- சிதைவு – கவிதை
- அவர்கள் இன்றிருந்தால்…! – கவிதை
- மாயமான கப்பல் மீண்டும் கிடைத்தது
- 'டாம்பன்' உபயோகிக்கலாமா?
- ஓ.பன்னீர்செல்வம்
- எதையும் ஈடுபாட்டுடன்...
- காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை
- மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்!
- ஹன்சிகா, அனுஷ்கா, சமந்தா ஆகியோருக்கு கல்யாணம் ஆகாமல் பார்த்துக்கொள்வோம்
- இந்த வார சிரிப்பு
- அப்பாவின் சைக்கிள் - சிறுகதை
- ரெயில்களில் வசதிகள்!!!! ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!!
- அழகுத் தமிழில் இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசியைப் பயன்படுத்தலாம்!
- அதிமுகவினரின் 'போஸ்டர்' போராட்டம்
- காந்தியம் - கவிஞர் இளசை சுந்தரம்
- பொது அறிவு
- இக்கரைக்கு அக்கரை - ஒரு பக்க கதை
- உங்க மானேஜரின் கம்ப்யூட்டரில் மூணு மவுஸ் இருக்கிறதே?
- எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி
- ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் !
- ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு !
- திரைப்பட இயக்குனர் காலமானார் !
| Posted: 09 Oct 2014 11:21 AM PDT |
| Posted: 09 Oct 2014 11:07 AM PDT செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது. நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது ... |
| அதிகரிக்கும் ஆன்லைன் குற்றங்கள்...! Posted: 09 Oct 2014 11:04 AM PDT Posted Date : 20:33 (08/10/2014)Last updated : 20:33 (08/10/2014) 'காரில்சென்று கொண்டிருந்த ஒருவர் இணைய தள தகவல் திருடர்களால் கொலை', 'ஈமெயில் அக்கவுண்ட் முடக்காமல் இருக்க மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது' என்பது போன்ற செய்திகளை நீங்கள் இனி வரும் காலங்களில் நாளிதழ்களில் படிக்க வாய்ப்புண்டு. ஆமாம். இபோது உள்ள நவீன இணைய யுகத்தில் நாம் எந்த அளவிற்கு இணையக் கருவிகளை நமது அனைத்து விதமான செயல்களுக்கும் எளிதாகப் பயன்படுத்தி வருகிறோமோ, அதே அளவிற்கு அதில் இருந்து வெளிப்படவுள்ள ஆபத்துகளும் அதிகம் ... |
| Posted: 09 Oct 2014 10:38 AM PDT ஒரு ஊசி... ஒரு ஆயின்மென்ட்! டா க்டர் கஜேந்திரன் - டாக்டர்களுக்குள் ஒரு தவறான உதாரணம். எந்த நோயாளியைப் பரிசோதிக்கும்போதும், அவரிடமிருந்து எவ்வளவு கறக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார். சண்முகத்துக்குத் தலையில் லேசான சிராய்ப்புதான். காலையில் பாத்ரூமில் விழுந்தவர், தலையில் அடி என்றதும் பதறிப் போய் வந்திருக்கிறார். கொஞ்சம் மருந்து தடவி, ஒரு இன்ஜெக்ஷன் போட்டால் சரியாகிவிடும். ஆனால், ஸ்கேன் எடுக்கச் சொன்னால் எடுத்துக் கொள்வார். பசையுள்ள ஆசாமிதான். ஸ்கேன் செய்யும் லேபுக்கும் கஜேந்திரனுக்கும் ... |
| இதயப் புகழ் வாய்ந்தவள் - தபூ சங்கர் கவிதைகள் . Posted: 09 Oct 2014 10:37 AM PDT http://www.mediafire.com/download/khu2eslhj2mdvam/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D+by+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%82+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.pdf |
| இன்று உலக தபால் தினம் ! - 09.10.14 Posted: 09 Oct 2014 10:32 AM PDT கல்லூரி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன்; கண்கள் என்னவோ வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன. கடைசி பெஞ்ச்சில் ஒரு வசதி, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டிய பல விஷயங்களை சாதாரணமாக செய்யலாம். மதிய உணவு இடைவேளையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம். ''கிளாஸ் முடிஞ்சதும் ஹாஸ்டல நோக்கி வேகமா ஓடணும். எப்படியும் இன்னைக்கு வந்திருக்கும்... நேத்துத்தான் ஏமாந்துட்டோம்...'' வகுப்பு முடிந்ததும் விடுதியை நோக்கி வேகமாக ஓடிவந்து அறை சாவியை எடுத்து, பூட்டைத் திறந்து உள்ளே ஓடி, கையிலிருந்த நோட்டுகளை மேஜைமேல வச்சிட்டு ... |
| 2014 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! Posted: 09 Oct 2014 10:27 AM PDT ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டிற்கான (2014) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ரிக் மோடியானோ என்னும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புதின ஆசிரியர் இந்த பரிசைப் பெறுகிறார். 69 வயதான பேட்ரிக் மோடியானோ, பிரெஞ்ச், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் பிரான்ஸைச் சேர்ந்த 11வது எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ என்பது குறிப்பிடத்தக்கது. நாஜிப் படையினர் ஆக்கிரமிப்பு காலத்து வாழ்க்கையை தனது படைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார். ... |
| உங்கள் காபியில் சிக்கரி இருக்கா? Posted: 09 Oct 2014 09:49 AM PDT காலையில் எழுந்ததும், 'பெட்காபி' இல்லை என்றால், நம்மில் பலருக்கு வேலையே ஓடாது. அதுவும் சிக்கரி கலக்காத ஃபில்டர் காபி, பியூர் ப்ளண்டட் காபி, இன்ஸ்டன்ட் காபி என்று காபியில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருத்தரும் சுவைக்கேற்ற மாதிரி அருந்தி வருகிறார்கள். போதாக்குறைக்கு இந்த காபி வகைகளையே உயர்வாகவும், கெத்தாகவும் சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால், சிக்கரியில் உள்ள மகத்துவம் புரியாமல்தான் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எளிதாகவும், விலை குறைவாகவும் உள்ள பொருட்களை கேவலமாக எண்ணும் மனோபாவம் நம் நாட்டினரிடம் ... |
| வேலன்:-வைரஸ் பாதித்த பென்டிரைவிலிருந்து பைல்களை மீட்டுஎடுக்க Posted: 09 Oct 2014 09:34 AM PDT ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு வீடியோ,ஆடியோ,டாக்குமெண்ட்.பைல்கள் போன்ற தகவல் பரிமாற்றத்திற்கு முன்பெல்லாம் பிளாப்பி பயன்படுத்திவந்தோம். பின்னர் அதுவே சிடியாக பரிணாமவளர்ச்சி அடைந்தது. பின்னர் சிடியின் பயன்பாடும் குறைந்து பென்டிரைவ் மிகுந்த பயன்பாட்டுக்கு வந்தது. பென்டிரைவ்களை ஒரு கணிணியில் இருந்து மற்றும் ஒரு கணிணிக்கு தகவல்கள் பாரிமாரும்சமயம் இலவசமாக வைரஸ்களும் கணிணியில் இருந்து பென்டிரைவ்விற்கு பரவிவிடுகின்றன. ஒரு பென்டிரைவில் வைரஸால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து தகவல்கள் பெறஇயலாது.அதிலிருந்து ... |
| உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன் Posted: 09 Oct 2014 09:27 AM PDT ஈகரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வணக்கங்கள், நான் இலங்கையில் வசிக்கின்றேன், இங்கு க்ரைம் நாவல்,சூப்பர் நாவல் போன்ற பாக்கெட் நாவல்கள் கிடைப்பதில்லை தமிழ்நாட்டில் எங்கு அவற்றை கொள்வனவு செய்ய முடியும். அதாவது ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தராஐன், சுபா, பாலகுமாரனின் ஊடையார் போன்றவர்களின் எல்லா தலைப்புகளிலும் ஒவ்வொரு புத்தகங்கள் தேவை, எனக்கு தெரிந்தவர்கள் இங்கு இருந்து வரும் போது அங்கு கொள்வனவு செய்வதற்கு வசதியாக இருக்கும்.... உங்கள் உதவியை நாடி நிற்கும் செல்லா பி.கு எனக்கு தமிழ்நேசன் ... |
| Posted: 09 Oct 2014 09:25 AM PDT மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து அவன் மிருகங்களைப்போல காடுகளில் சுற்றித்திரிந்து, கையில் கிடைத்ததை சாப்பிட்டு, கண்ட இடங்களில் படுத்துத்தூங்கி வாழ்ந்த காலத்தில்கூட, தன் மானத்தை மறைக்க இலை தழைகளாலும், மரப்பட்டைகளாலும் ஆடையாக அணிந்து இருக்கிறார்கள். நாகரீகம் வளர, வளர அதன் வெளிப்பாடு ஆடைகளிலும் எதிரொலித்தது. பிற்காலங்களில் சில குறிப்பிட்ட பணிகளுக்கென தனி ஆடைகள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில்தான் ராணுவம், போலீஸ், தீயணைக்கும் படை, வனத்துறை, ரெயில்வே, தபால் துறை, நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் ... |
| பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் Posted: 09 Oct 2014 09:11 AM PDT 1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக உபயோகிக்கிறோம்.. அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்த கேட்டு போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை … 2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம்.. பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த ... |
| Posted: 09 Oct 2014 08:37 AM PDT `மெட்டி' ஒலி சொல்லும் சேதி! காலம் காலமாக இந்து திருமணங்களில், தாலியையும், பெண்கள் கால்களில் அணியும் மெட்டியையும் சம்பிரதாய அடையாளங்களாகத்தான் பலரும் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வந்த இந்தப் பழக்கவழக்கங்களிலும், சம்பிரதாயங்களிலும், அறிவியல் உண்மைகள் ஆழப்பதிந்துள்ளன என்கிறது மருத்துவ உலகம். காலுக்கு மெட்டி அணிவது பியூட்டி மட்டுமல்ல... ஹெல்தி என்பதைச் சொல்கிறது இந்தத் தகவல். பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால் விரல் நரம்புகளுக்கும் ... |
| வைரமுத்துவிடம் சில சந்தேகங்கள் - வாசித்ததில் ரசித்தது Posted: 09 Oct 2014 08:31 AM PDT http://www.mediafire.com/download/6s95n8dl69lynlz/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf |
| வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு ! Posted: 09 Oct 2014 08:12 AM PDT வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு ! ஊட்டி: டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார். தற்போது, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், பள்ளி ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 09 Oct 2014 07:59 AM PDT ![]() |
| ஜஸ்வர்யா ராயின் கால்கள் அழகு இல்லையாம்!!! Posted: 09 Oct 2014 07:50 AM PDT டைம்ஸ் ஆம் இந்தியா நாளிதழ் தற்போது ஐஸ்வர்யா ராயை வம்புக்கு இழுத்துள்ளது. நடிகை தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்நிலையில் அந்த நாளிதழ் அடுத்ததாக வம்புக்கு இழுத்திருப்பது நடிகை ஐஸ்வர்யா ராயை. -- அசிங்கமான கால்களை உடைய அழகிகள் என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.அதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவரது கால்களை மறைத்திருக்கும் போது தான் அழகாக உள்ளது என்று இந்நாளிதழ் தெரிவித்துள்ளது. - நாளிதழ் செய்தி ... |
| கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.! Posted: 09 Oct 2014 07:46 AM PDT கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வென்று விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே பிரச்சினையாகிவிடுகிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும். இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் ... |
| வாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்! Posted: 09 Oct 2014 07:38 AM PDT 'மந்திரங்களுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. இறைவனை மனதில் நிறுத்திச் சொல்லும்போது, அந்த மந்திரச் சொற்களுக்குள் நாம் அமிழ்ந்து போவோம். அப்படி ஒருமித்த நிலையில் இருக்கிறபோது, அந்த மந்திர பலமானது நம் புத்தியிலும் தேகத்திலும் வியாபித்து, தேவதைகளின் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்று, நினைத்த காரியத்தை அடைந்து ஆனந்த வாழ்வு வாழலாம்!'' என்கிறார் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயிலின் நடராஜ சாஸ்திரிகள். ''வாழ்க்கைக்குத் தேவையான பத்து ஸ்லோகங்களை, சக்திவிகடனின் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் தருவதில் எல்லையில்லா ... |
| Posted: 09 Oct 2014 07:23 AM PDT நாளின் புதியபொழுது டி.ஆரின் பழைய பாடல்களோடு விடியத் தொடங்கும் பூபதிக்கு வைகைக் கரை காற்றும் வாசமில்லா மலரும் எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரியும் நினைவு அட்டை சமேத கைப்பேசியில் ஒலிக்க காலைக்கடன் முடித்து குளித்து உணவருந்தி வீட்டை விட்டுப் புறப்படுவான் - வருமானம் தரும் ஊரை வடக்கிலும் வலி தரும் ஊரை தெற்கிலும் கணட்டைந்திருக்கும் அவன் பஸ் நிறுத்தம் போய்ச் சேர்கையில் நூலுமில்லை வாலுமில்லை என உயிரின் ஓலமே போல டி.எம்.எஸ் கதறத் தொடங்குவார் இனி அவன் வடக்கேகுவதும் தெற்கேகுவதும் முதலில் ... |
| சிவாஜியாகத் தோன்றும் எம்.ஜி.ஆர் Posted: 09 Oct 2014 07:14 AM PDT ஏறு நெற்றியை மறைக்கும் எழில்மிகு சுருள்முடி வலது கரத்தில் தலைபெருத்த கடிகாரம் வாய்க்கும் மேலாக வரைந்தாற்போல் மீசையென 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்.ஜி.ராமச்சந்திரனாக ஆடல் பாடல் மேடைகளில் வலம்வரும் திருவாளர் மு.க.முருகேசன் ஒப்பனை அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவாறு தங்கவடிகட்டி வெண்சுருட்டை லயித்து லாவகமாய் புகைக்கும்போது மாத்திரம் உருமாறித் தோன்றுகிறார் 'ஊட்டி வரை உறவு' வி.சி.கணேசனாக - ———————————————- >ஸ்ரீதர்பாரதி நன்றி: ஆனந்த விகடன் |
| ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க ! Posted: 09 Oct 2014 07:13 AM PDT ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க: சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும். சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார் இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை ... |
| Posted: 09 Oct 2014 07:10 AM PDT பூர்வீக வீடு சிதைந்து கொண்டிருந்தது விரைவில் மாற்றி விடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார் பெரியப்பா. - இடித்து விட்டு மனை பிரித்து பாகம் பிரித்துக் கொள்ளலாம் என்பது சித்தப்பாவின் கருத்து. - முன்னோர்கள் வாழ்ந்த வீடு என்றாலும் இப்போது வாழ முடியாது தத்துவம் சொன்னார் மாமா. மனையாகப போட்டால் முன்மனை நமக்குத்தான் பேசிக் கொண்டார்கள் மருமகள்கள். - எப்படியிருந்தோம் தெரியுமா என்றே அழுதழுது நின்றார் அம்மா. போவோர் வருவோர் ஆளுக்கொரு கருத்து சொன்னார். நாலைந்து ஓணான்கள் புணர்ந்து நின்றன நாலைந்து ... |
| அவர்கள் இன்றிருந்தால்…! – கவிதை Posted: 09 Oct 2014 07:07 AM PDT - பசு ஒன்று ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டேயிருந்தது மனுநீதிச் சோழன் வரவேயில்லை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்றிருந்தான் - அடைக்கலம் தேடி வந்த பறவை அடுக்களைக்கு அனுப்பிவிட்டு அரைக்கிலோ ரேஷன் அரிசியை அள்ளி வைத்தான் தராசுத் தட்டில் சிபிச்சக்கரவர்த்தியின் செயலைத் தூற்றி சிறகடித்துப் பறந்தது பருந்து - தேரா மன்னா – என்று அழைத்ததால் அவதூறு வழக்கில் ஆறு மாதமென நெடுஞ்செழியன் தீர்ப்பளித்தான் தீக்கிரைக்கியானாலும் இவன் திருந்தானென வருந்தி – சிந்திய முத்துக்களைச் ... |
| மாயமான கப்பல் மீண்டும் கிடைத்தது Posted: 09 Oct 2014 07:03 AM PDT பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 7- - - காணாமல் போன மலேசிய கடற்படைக்கு சொந்தமான சி.பி204 ரக போர்க்கப்பல் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - இக்கப்பலில் பயணம் செய்த 7 அதிகாரிகள் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமாகிய இந்த கப்பல் எவ்வித பாதிப்பும் இன்றி மீண்டும் கிடைத்ததாக மலேசிய கடற்படை துறையின் தளபதி தான் ஸ்ரீ அப்துல் அஸிஸ் ஜபார் அவரது 'டுவிட்டர்' சமூக வளைத்தளத்தில் தெரிவித்துள்ளார். - கப்பல் காணாமல் போனது முதல் அது மீண்டும் ... |
| Posted: 09 Oct 2014 07:01 AM PDT சகல விஷயங்களிலும் மேற்கத்திய நாகரிகத்தைப் பின்பற்றவிரும்புகிறார்கள் இன்றைய இளம் பெண்கள். அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் டாம்பன் (tampon) உபயோகிப்பது. மாதவிலக்கு நாட்களின் போது உபயோகிக்கிற நாப்கின்களுக்கு மாற்று இது. சானிட்டரி நாப்கினை போல இது தட்டையாக இல்லாமல், உருளை வடிவில், உறுப்பினுள் செருகிக் கொள்ளும்படி இருக்கும். மேலை நாடுகளில் திருமணத்துக்கு முன்பான செக்ஸ் சகஜம் என்பதால் அங்குள்ள பெண்கள் டாம்பன் உபயோகிக்கத் தயங்குவதில்லை. நம்மூரில் சமீப காலம் வரை அதிகம் புழக்கத்தில் இல்லாமலிருந்த ... |
| Posted: 09 Oct 2014 06:56 AM PDT ஓ.பன்னீர்செல்வம் ப.திருமாவேலன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், வீ.சக்தி அருணகிரி C/o நெம்பர் 1, அம்மா இல்லம், பணிவுப் பாதை, விசுவாசபுரம்(அஞ்சல்), நன்றியூர். அக்ரஹாரத்துக்கும் பன்னீருக்கும் ஏதோ பூர்வகால பந்தம் இருக்கிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் அடித்த தீர்ப்புப் புயல், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் குடியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கோபுரத்துக்குக் கொண்டுபோய்விட்டது. ஓ.பன்னீர், இப்போது இரண்டாவது முறையாக 'ஓகோ பன்னீராக' உயர்ந்துவிட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் பேச்சியம்மனையும், பெரியகுளம் ... |
| Posted: 09 Oct 2014 06:48 AM PDT ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடைக்காரன் ஒப்பு கொண்டான். ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..அவனது கதை முழுதும் கேட்ட அவர், " ... |
| Posted: 09 Oct 2014 06:38 AM PDT காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம் ''I feel lousy'' என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்... அட, ஹரி. ''ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?'' அவன் நிமிர்ந்து பார்த்து, ''மஞ்சு மேடம்'' என்றான் பலவீனமாக. ஆட்டோக்காரரைக் கூப்பிடுவதற்குள் ஹரி ஏறத்தாழ மயங்கியிருக்க, ''கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா'' ... |
| மலேசியா, புக்கிட் பிந்தாங் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 14 பேர் படுகாயம்! Posted: 09 Oct 2014 06:21 AM PDT இன்று அதிகாலை நடந்த புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 14 பேரில், ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த தியாங் குவாங் யி (வயது 36) என்ற கார் நிறுத்தும் உதவியாளர் (கார் ஜாக்கி) தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக புலனாய்வுத்துறையின் மூத்த துணை ஆணையர் கான் கோங் மெங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சீன நாட்டவர்கள், இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட ... |
| ஹன்சிகா, அனுஷ்கா, சமந்தா ஆகியோருக்கு கல்யாணம் ஆகாமல் பார்த்துக்கொள்வோம் Posted: 09 Oct 2014 06:19 AM PDT - ராஜா கதை சொல்லு பாட்டி...! - ஒரு ஊர்ல ஒரு பதுங்கு குழி இருந்ததாம்..! - >லெ.நா.சிவக்குமார் - ------------------------------ - தலைவரே கட்சி உங்ககிட்டே நிறைய எதிர்பார்க்குது.! - சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லு..! - ராஜினாமா.! - >வி.சகிதாமுருகள் - ---------------------------------- - தலைவர், இளைஞர்களோட ஓட்டுக்களைக் கவரப் பார்க்கிறார்..! - அதுக்காக நாங்க ஆட்சிக்கு வந்தால், ஹன்சிகா, அனுஷ்கா, சமந்தா ஆகியோருக்கு கல்யாணம் ஆகாமல் பார்த்துக்கொள்வோம்'னு பேசறதா...? - >பர்வின் யூனூஸ் - ------------------------------------ - இந்த ... |
| Posted: 09 Oct 2014 06:19 AM PDT ![]() |
| Posted: 09 Oct 2014 05:37 AM PDT அப்பாவின் சைக்கிள் - சிறுகதை பாவண்ணன், ஓவியங்கள்: ராஜ்குமார் ஸ்தபதி மங்கான் தெரு, மாதா கோயில் தெரு, சாமியார் தோட்டம்... என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள், கூடையில் இருந்த 10 கோழிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காலையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் 7:15 மணிக்கு தமிழ்ச் செய்திகள் வாசிக்கிற நேரத்தில் கிளம்பினார்கள். 8 மணி சங்கு ஊதுகிற நேரத்துக்குள் வியாபாரமே முடிந்துவிட்டது. ''எல்லாம் நீ சைக்கிள் தள்ற ராசிடா'' என்று முத்துசாமியின் முதுகில் தட்டினார் அவன் அப்பா. செபாஸ்டியன் வீட்டில், 30 ரூபாய் ... |
| ரெயில்களில் வசதிகள்!!!! ஆன்–லைனுக்கு 50 சதவீதம்!!! கவுண்டரில் 50 சதவீதம்!!! Posted: 09 Oct 2014 04:25 AM PDT மக்களின் நாகரீகம் வளர... வளர... அவர்களது வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் போக்குவரத்து என்பது இன்றியமையாததாகிவிட்டது. ரெயில் மார்க்கமாகவும், சாலைபோக்குவரத்து மூலமாகவும், வான்வழி மூலமாகவும், கடல்வழி மூலமாகவும் போக்குவரத்தை மனிதன் மேற்கொள்கிறான். இந்தியா ஒரு தீபகற்பம் என்றாலும், கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை இன்னும் பயன்படுத்தவில்லை. தமிழ்நாட்டில்கூட, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் உள்ள கடல்வழி போக்குவரத்திற்கான வாய்ப்புகளை கண்டறிந்து நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை ... |
| அழகுத் தமிழில் இனிமேல் அண்ட்ராய்ட் அலைபேசியைப் பயன்படுத்தலாம்! Posted: 09 Oct 2014 04:15 AM PDT ![]() |
| அதிமுகவினரின் 'போஸ்டர்' போராட்டம் Posted: 09 Oct 2014 03:42 AM PDT நன்றி: தமிழ் தி இந்து ------------------------------------- - - - |
| காந்தியம் - கவிஞர் இளசை சுந்தரம் Posted: 09 Oct 2014 02:36 AM PDT - சத்தியாகிரகமும் அஹிம்சையும் சத்திய சோதைனையின் இரண்டு கண்கள்... - எய்தவனையே காயப்படுத்தும் அதிசயமான அம்புகள் அவை... - ஆத்திரம் கொண்ட எதிரிகளைக் கூட அன்பால் வெல்லும் அதிசய சகதி... - பயங்கரவாதமும் பழி வாங்கும் படலுமும் பரவாமல் தடுக்கும் அற்புத மருந்து - ஒரு கைபிடி உப்பு ஆங்கில சாம்ராஜ்யத்தையே அசைத்த அதிசயம் இங்குதான் நடந்தது... - உண்ணாமல் இருப்பதையே ஒரு ஆயுதமாக்கிய உன்னதம் இந்த மண்ணில்தான் பிறந்து... - அஹிம்சை பூமியில் அணுகுண்டு எதற்கு? என்ற வினாவும் எழத்தான் செய்தது... - எங்கள் ... |
| Posted: 09 Oct 2014 02:11 AM PDT பொது அறிவு. * 1. எகிப்து அமர்னா நகரில் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பெண் 70 சவுரி முடிகளுடன் வித்தியாசமான சிகையலங்காரத்தைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 2. குளிர்பான தயாரிப்பில் முன்னணியில் உள்ள கோக கோலா நிறுவனம் சர்க்கரை இல்லாத குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோக கோலா ஜிரோ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. அக்டோபர் 5-ந்தேதி முதல் இந்தியாவில் 100 நகரங்களில் 1.8 லட்சம் கடைகளில் இது விற்பனைக்க கிடைக்கும் ... |
| இக்கரைக்கு அக்கரை - ஒரு பக்க கதை Posted: 09 Oct 2014 02:10 AM PDT ![]() |
| உங்க மானேஜரின் கம்ப்யூட்டரில் மூணு மவுஸ் இருக்கிறதே? Posted: 09 Oct 2014 01:52 AM PDT "உங்க மானேஜரின் கம்ப்யூட்டரில் மூணு மவுஸ் இருக்கிறதே?" - "ஆபீஸில் அவருக்குத்தான் மவுஸ் அதிகம்னு காட்டத்தான்!" - ------------------------------------ - இந்த டாக்டர் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட்டாமே..! - அதுக்கென்ன இப்போ? - நோயாளிகள் ஃபீஸ் கொடுக்கலேன்னா அழுது அடம் பிடிக்கிறாரே! - ------------------------------------ - ஏன் கண்களை மூடிக்கிட்டு எழுதறே? - நீங்கதான சார், மனப்பாடப் பகுதியைப் பார்க்காம எழுதச் சொன்னீங்க! - ------------------------------------- - புயல்'ங்கற தலைப்பில ... |
| எல்லையில் விரைவில் இந்தியா - பாக்.பிரச்சினை தீரும் : பிரதமர் மோடி Posted: 09 Oct 2014 01:23 AM PDT டெல்லி : விரைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மோதல் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் விமானப்படை தளபதி அரூப் ராஹா அளித்த விருந்து நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். முன்னதாக காஸியாபாத்தில் இந்திய விமானப்படையின் 82-வது ஆண்டு விழா நடைப்பெற்றது இதில் பங்கேற்ற விமானப்படை தளபதி அரூப் ராஹா அண்டை நாடுகள் உடன் இந்தியா நல்லுறவை விரும்புவதாக தெரிவித்தார். எல்லையில் ... |
| ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் ! Posted: 09 Oct 2014 01:21 AM PDT ஒடிசா, ஆந்திராவை மிரட்டும் ஹுட் ஹுட் புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ! ஆந்திரா: ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளை மணிக்கு 150கி.மீ. வேகத்தில் ஹுட் ஹுட் புயல் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபர் அருகே வங்ககடலில் உருவாகியுள்ள புயலுக்கு ஹுட் ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. லாங் தீவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் மேலும் தீவிரமடைந்து வலுவான புயலாக ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மற்றும் ஒடிசா மாநிலம் கோபால்பூர் ... |
| ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு ! Posted: 09 Oct 2014 12:53 AM PDT ''உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணைக்கு வரும்போது, அதில் ஆஜராவது குறித்து யோசித்து வருகிறேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறினார். இது குறித்து, அவர் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில் சட்டப்படி தண்டிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. அவரை எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லாமல், பலர் ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து விடவேண்டும் என துடிக்கின்றனர். அது நடக்காது என்பதை ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். இருந்தாலும், பாவம் ரொம்பவே ... |
| திரைப்பட இயக்குனர் காலமானார் ! Posted: 09 Oct 2014 12:51 AM PDT திருநெல்வேலி: நீ இன்றி நான் இல்லை என்ற திரைப்படத்தை இயக்கியவர் புகழேந்தி 78. திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த இவர், கடந்த 1978 களில், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர். கடந்த சில மாதங்களாக தோஹாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவர் இன்று காலமானார். அவரி்ன் உடல் விமானம் மூலம் இன்று திருவனந்தபுரத்திற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் கடையநல்லூருக்கு கொண்டு வரப்படுகிறது. கடையநல்லூரில் இறுதிச் சடங்குகள் நடக்க உள்ளன. தினமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



