Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஈரான் அணுசக்தி நிலையங்களை கைப்பற்ற சதி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம் அம்பலம்

Posted:

வாஷிங்டன் :ஈராக்கின் அண்டை நாடான ஈரானின் அணு சக்தி அமைப்புகளை கைப்பற்ற, தன் குழுவினருக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன், அபுபக்கர் அல் - பாக்தாதி உத்தரவிட்டுள்ளான். ஈரான் அணு சக்தி அமைப்புகளை கைப்பற்றி, பேரழிவு ஆயுதங்களை தயாரித்து, அவற்றின் மூலம், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தாக்க, பயங்கரவாதிகள் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.கடந்த 2011ல், அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனால் துவக்கப்பட்ட, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பில், சில காலம் இருந்த, அபுபக்கர் அல் - பாக்தாதி என்பவன், ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பை ...

பிரீமியம் சிறப்பு ரயில்களில் அதீத கட்டணம்: பயணிகள் அதிர்ச்சி

Posted:

தீபாவளி பண்டிகைக்கான, பிரீமியம் சிறப்பு ரயில்களில், கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளதால், முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

'தனியார் பள்ளிகள் நாளை மூடப்படும்'

Posted:

சென்னை: ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, சுயநிதி தனியார் பள்ளி நிர்வாகிகள், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம், நாளை, சென்னையில் உள்ள, கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது.இதையொட்டி, 'அன்று ஒரு நாள், சுயநிதி தனியார் பள்ளிகள் அனைத்தும் செயல்படாது' என, தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் தெரிவித்தார்.சங்க நிர்வாகிகளின், அவசர ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், சங்க உறுப்பினர்களாக உள்ள, பள்ளி நிர்வாகிகள், அதிகளவில் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, ...

மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, கலப்பட பால் விவகாரம்: கையில் எடுத்து களமிறங்குகிறார் விஜயகாந்த்

Posted:

மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, பால் விலை, ஆவின் பால் கலப்பட விவகாரம் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தி, மாவட்ட வாரியாக போராட்டம் நடத்த, தே.மு.தி.க., தலைமை தயாராகி வருகிறது.லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின், அரசியல் பணிகளில் தீவிரம் காட்டாமல், அமைதியாக இருந்தார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.அவரின் உடல்நிலையிலும், சற்று பாதிப்பு ஏற்பட, சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பி ஓய்வில் இருந்தார். தற்போது, அறிக்கை அரசியலில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார்.சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, சிறைத் தண்டனை ...

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் அழகிரி: சந்திப்பு நடந்ததா என தி.மு.க.,வில் பரபரப்பு

Posted:

'எந்த நேரமும் தி.மு.க.,வில் மீண்டும் சேர்க்கப்படலாம்' என, பல தரப்பினரும் எதிர்பார்க்கும் நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கு, நேற்று காலை மு.க.அழகிரி வந்தார். அதனால், கருணாநிதியை சந்தித்து, அவர் பேசினாரா என்ற பரபரப்பு, தி.மு.க.,வில் உருவானது.'அழகிரி, என் பிள்ளை என்பதை மறந்து, வெகு நாட்களாகி விட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, லோக்சபா தேர்தலுக்கு முன் கூறியிருந்தார்.இதனால், கருணாநிதி மீது அதிருப்தி அடைந்த அழகிரி, 'இப்படியெல்லாம் சொன்ன கருணாநிதியை சந்திக்க மாட்டேன்' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.இந்நிலையில், சமீபத்தில், கருணாநிதி ...

தப்பியது போயஸ்; சிக்கியது கோடநாடு

Posted:

'ஜெ., அரசு ஊழியர்'-கருணாநிதி வழக்கு மேற்கோள் :சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., அரசு ஊழியராக கருதப்பட்டு உள்ளார். 'ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர, கவர்னர் அனுமதியளித்தது, சட்டப்படியானது தானா' என்று, அவரது தரப்பு வழக்கறிஞர்கள், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு, நீதிபதி குன்ஹா, தனது உத்தரவில் அளித்த பதில்:ஊழல் தடுப்பு சட்டத்தின்படி முதல்வராக பதவி வகிப்பவர் ஒரு அரசு ஊழியர். கருணாநிதி எதிர் இந்திய அரசு வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், 'முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு ...

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் எப்போது?

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது; எம்.எல்.ஏ., பதவியும் பறிபோனது. இதனால், அவர் வெற்றி பெற்ற, ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருக்கிறது.அதனால், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளதாக, சபாநாயகர் அறிவித்த, ஆறு மாதங்களுக்குள், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, இதுவரை முறையான தகவல் எதுவும் சென்று சேரவில்லை என, தெரிகிறது.ஆனாலும், ஸ்ரீரங்கம் ...

ஒரே அறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி: கர்நாடக சிறை துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா தகவல்

Posted:

பெங்களூரு:சிறையில் உடல்நிலை நன்றாக உள்ளதாக, ஜெயலலிதா கூறினார்,'' என, கர்நாடகா சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்றுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை குறித்து, கர்நாடக சிறைத் துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறியதாவது:ஜெயலலிதா உடல்நிலை நன்றாக உள்ளது. டாக்டர்கள், அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்ததை விட, பெங்களூருவில், உடல்நிலை நன்றாக இருப்பதாக, ஜெயலலிதாவே கூறினார்.சாதாரண அறையிலேயே அவர் உள்ளார். ...

காங்., தேசியவாத காங்., கூட்டணி மகாராஷ்டிராவை சூறையாடி விட்டது: பிரதமர் மோடி ஆவேசம்

Posted:

மும்பை:கடந்த, 15 ஆண்டுகளாக மகாராஷ்டிராவை ஆட்சி செய்து வந்த, காங்., தேசியவாத காங்., கூட்டணி, மாநிலத்தை சூறையாடி விட்டது. ஊழல் மூலம், தங்கள் பாக்கெட்டுகளை நிரப்புவது தான், அந்த கட்சிகளின் கொள்கை,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல், வரும், 15ல், நடக்கவுள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான நரேந்திர மோடி, கடந்த இரண்டு நாட்களாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று, சாங்கிலி, கோண்டியா ஆகிய இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் பிரசாரம் செய்தார்.அங்கு, அவர் பேசியதாவது:தேசியவாத ...

அ.தி.மு.க.,வினர் நடத்தும் போராட்டங்களால் பொதுமக்கள் அதிருப்தி: விசுவாசத்தை காட்டுவதற்காக தொந்தரவு செய்வதா என ஆவேசம்

Posted:

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.ஜெயலலிதாவிற்கு விசுவாசத்தை காட்டுவதற்காக, இப்படி தொடர் போராட்டங்கள் நடத்தி தொந்தரவு செய்வதாக, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த செப்., 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதன்பின் அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™