Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சர்ச்சை நாயகன் ஸ்னோடனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

Posted:

நியூயார்க்: இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்டு ஸ்னோடனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுவதால், நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் வெளியாகும் போது, உலகமே அதை ஆவலுடன் எதிர்பார்க்கும். இந்நிலையில், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த எட்வர்டு ஸ்னோடனின் பெயரும் இடம் ...

காங்கிரஸ் அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்: சிவசேனா உத்தவ் தாக்கரே ஆவேசம்

Posted:

மும்பை: ''மகாராஷ்டிராவில், சிவசேனா ஆட்சிக்கு வந்தால், பிரித்விராஜ் சவான் தலைமையிலான, காங்கிரஸ் அரசின் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம். ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்,'' என, அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.15ம் தேதி: மகாராஷ்டிராவில், வரும், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மும்பை போரிவேலி பகுதியில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற, பொதுக்கூட்டத்தில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது: ஒரு காலகட்டத்தில், காங்கிரஸ் ...

கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்

Posted:

பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.கல்வித்துறை: இதேபோல், ...

பண்டிகை காலத்தில் கடையடைப்பு, ஸ்டிரைக்: அதிகரிப்பது அதிருப்தியா? ஆதரவா?

Posted:

கோவை: பண்டிகைக் காலத்தில், அடுத்தடுத்து கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் நடந்து வருவது, அனைத்துத் தரப்பு பொது மக்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.சொத்துக்குவிப்பு வழக்கில், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டு சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, கடந்த செப்.27லிருந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பின் சார்பிலும், தனித்தனியாக கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீர்ப்பு வந்த நாளில் நடந்த வன்முறை மற்றும் ஆளும்கட்சியினரின் போராட்டம் காரணமாக, கோவை மாவட்டத்தில், 245 ...

விஜயகாந்தின் முதல்வர் நாற்காலி ஆசை: கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குஷி

Posted:

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு, முதல்வர் நாற்காலியை கைப்பற்றும் ஆசை, மீண்டும் ஏற்பட்டுள்ளதால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சந்தோஷம் அடைந்துள்ளனர்.கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட தே.மு.தி.க., கடந்த செப்., மாதம் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. அ.தி.மு.க., - -தி.மு.க.,வுக்கு மாற்று சக்தியாக தே.மு.தி.க., இருக்கும் என விஜயகாந்த் கூறி வந்தார். அதற்காக, எல்லா தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வந்தார். தோல்வியே பரிசாகக் கிடைத்து வர, கடந்த 2011ம்ஆண்டு, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்று, ...

அழுது புலம்பிய அமைச்சர்கள்: ஜெ., கோபத்தால் அதிரடிக்கு வாய்ப்பு

Posted:

பதவி ஏற்பு விழாவில், தைரியத்தை இழந்து அழுது புலம்பிய அமைச்சர்கள் மீது, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. ஜாமின் பெற்ற பிறகு, கட்சியிலும், ஆட்சியிலும், அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என, தகவல் வெளியாகியுள்ளது.ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதை அடுத்து, புதிய முதல்வராக, ஓ. பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பு விழாவில், முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர்களும், தேம்பி அழுதபடியே பதவி ஏற்றனர். ஜெயலலிதா மீதான கைது நடவடிக்கையால், அவர்கள் சோகத்தில் இருப்பதை, இச்சம்பவம் வெளிக்காட்டியது. ஆனால், ...

மோடிக்காக தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டா? ஜெட்டா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

Posted:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது, அவருக்காக தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாற்று விமானத்தில், கையெறி குண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக, நேற்று தகவல் வெளியானது. அதனால், பெரும் பரபரப்பு உருவானது.போயிங் 747- 400: ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பது உட்பட, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் 25ம் தேதி, அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், சிறப்பு விமானத்தில் பயணித்தார். அந்த சிறப்பு விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், உடனே ...

24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்திற்கு நம்பிக்கை: மத்திய அரசிடம் உலக வங்கி அறிக்கை அளிப்பு

Posted:

புதுடில்லி: நாடு முழுவதும், 24 மணி நேரமும், தட்டுப்பாடு இல்லாத மின்சார வினியோகத்திற்காக, உலக வங்கி விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மின் பகிர்மானத்தின் போது ஏற்படும் பெரும் இழப்பை சரி செய்வது, பெரிய அளவிலான சூரிய மின் சக்தி திட்டங்களை செயல்படுத்துவது, வீடுகளின் கூரைகள் மீது சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவுவதற்கான செயல்திட்டங்கள் அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன. அந்த பரிந்துரை திட்டங்களை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில், 24 மணி நேர, தடையற்ற மின்சாரம் நாட்டின் அனைத்து பகுதிக்கும் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் ...

இந்திய விமான படை தளபதி அரூப் ராகா கவலை: நவீனமயமாக்கும் பணிகள் தாமதமாவதாக புகார்

Posted:

புதுடில்லி: ''இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் திட்டங்கள் மிகவும் தாமதமாக நடக்கின்றன. விமானப் படைக்கு என்ன தேவையோ, அதை குறிப்பிட்ட காலத்திற்குள் தர வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. இந்திய விமானப் படை, அரசுக்கு சொந்தமானது; எனக்கு சொந்தமானதல்ல,'' என, விமானப் படை தளபதி அரூப் ராகா, கவலை தெரிவித்துள்ளார்.இந்திய விமானப் படையின், 82வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த விழாவில், விமானப் படை தளபதி அரூப் ராகா பேசியதாவது: உலக நாடுகள், தங்களின் ராணுவத்தை போட்டி போட்டு பலப்படுத்துகின்றன. அதற்கு ஏற்ப, நாமும் தயாராக வேண்டும். இந்திய விமானப் படையை ...

60 ஆண்டாக எதையும் செய்யாதவர்கள் என்னை கேள்வி கேட்பதா? அரியானாவில் பிரதமர் மோடி பாய்ச்சல்

Posted:

கர்நால்: ''அரியானா மாநிலத்தின் பின்தங்கிய நிலைமைக்கு, காங்கிரசே காரணம். அதனால், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., பெரும்பான்மை பெறும் அளவுக்கு, மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பலமான அரசு : அரியானா மாநிலத்தில், வரும், 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பல முனைப்போட்டி நிலவும், இம்மாநிலத்தில், நேற்று முதல் முறையாக, தேர்தல் பிரசாரம் செய்த, பிரதமர் மோடி பேசியதாவது: ஒட்டுமொத்த உலகமே இன்று, இந்தியாவை ஒரு மரியாதையுடன் பார்க்கிறது. அதற்கு காரணம் நான் அல்ல. மத்தியில் நிலையான மற்றும் பலமான அரசு அமைய ...

ஜெ., விடுதலைக்காக போராட்டம் நடத்துவதில் அ.தி.மு.க.,வினர் திணறல்: ஒருங்கிணைப்பு இல்லாததால் கட்சிக்குள் குழப்பம்

Posted:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் மனதை குளிர்விப்பதற்காக, அமைச்சர்கள் முதல் கட்சியின் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் வரை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை. இதனால் அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை பொதுச்செயலர் ஜெயலலிதா மட்டுமே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவராக இருந்து வருகிறார். பதினெட்டு ஆண்டுகள் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதையோ ஜாமின் பெற விசாரணை நடந்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™