Tamil News | Online Tamil News |
- தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறது?வாசன் வட்டாரம் மும்முரம்
- 'கலைஞர் டிவி'க்கு ரூ.200 கோடி வந்த விவகாரத்தில் விசாரணை: தயாளு, ராஜா, கனிமொழி உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு
- நாட்டின் இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சிய சீக்கியர் படுகொலை: படேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் கண்டனம்
- ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் இன்று முதல் 'பர்ஸ்' காலியாகும்
- மீனவர்கள் 5 பேர் விடுதலை கருணாநிதி வலியுறுத்தல்
- கலெக்டருடன் ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: செய்தித்துறை அதிகாரி உட்பட 3 பேர் இடமாற்றம்
- சகாயத்துக்கு தகவல் அளிக்க புது அமைப்பு
- மின் வாரிய ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க தயங்கும் உயர் அதிகாரிகள்
- சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமங்கள்: '500 உயிர்களை கொடுப்போம்' என சபதம்
- புற்றுநோய் மருந்து விலையை உயர்த்த நெருக்கடி?
| தமிழக காங்கிரஸ் கட்சி உடைகிறது?வாசன் வட்டாரம் மும்முரம் Posted: முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் உத்தரவுப்படி, தமிழக காங்., தலைவர் பதவியில் இருந்து விலகிய ஞானதேசிகன், காங்., தலைமை மீது சுமத்திய பகிரங்க குற்றச்சாட்டு களும், வாசன் ஆதரவு நிர்வாகிகள், வரிசையாக பதவி விலக முன்வந்துள்ள செயலும், தமிழக காங்., கட்சி உடைவதற்கான அறிகுறிகள் என, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.கட்சியை உடைத்து, தன் ஆதரவாளர்களுடன், தனிக் கட்சி துவங்கும் திட்டம் குறித்து, சென்னையில் வாசனும், அவரது ஆதரவு நிர்வாகிகளும், இரவு - பகலாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். வாசன் வட்டாரத்தின் போக்கு தெரிந்து விட்டதால், மீதமுள்ள கோஷ்டிகள் இடையே, தலைவர் பதவியைப் ... |
| Posted: புதுடில்லி : 'கலைஞர் டிவி'க்கு, 200 கோடி ரூபாய் வந்த விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. '2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு வழக்குடன் தொடர்புடைய இந்த வழக்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மனைவி தயாளு, அவர் மகள் கனிமொழி உட்பட, 19 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்த நிலையில், கோர்ட்டில் நேற்று அந்த குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.எனினும், குற்றங்களை மறுத்த, தயாளு, ராஜா, கனிமொழி உட்பட 19 பேரும், விசாரணையை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்ததை அடுத்து, இம்மாதம் 11 முதல், விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.7 ஆண்டு சிறை:விசாரணையின் போது, ... |
| நாட்டின் இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சிய சீக்கியர் படுகொலை: படேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் கண்டனம் Posted: புதுடில்லி: ''தேச ஒற்றுமைக்காக பாடுபட்ட, இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், 30 ஆண்டுகளுக்கு முன், நாட்டின் ஒற்றுமையையே உலுக்கும் விதத்தில், சீக்கியர் படுகொலை சம்பவம் நடைபெற்றது. அது, குறிப்பிட்ட அந்த மதத்தினர் மனதில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை; பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, நம் நாட்டின் இருதயத்தில், ஈட்டியை பாய்ச்சியது போல் ஆகிவிட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.நாட்டின், முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான, அக்., 31ம் தேதியை, பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, தேசிய ... |
| ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் இன்று முதல் 'பர்ஸ்' காலியாகும் Posted: புதுடில்லி : கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்.,மில், மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே இனி, இலவசமாக பணம் எடுக்க முடியும். மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும், இன்று முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.இந்தியா முழுவதும், 1.6 லட்சம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. தற்போது, பெரும்பாலான மக்கள், ஏ.டி.எம்.,கள் மூலமாகத் தான் பண பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ஏ.டி.எம்., பராமரிப்பு பணிகள் அதிகரித்துள்ளதால், அவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்தும்படி, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி, சமீபத்தில் உத்தரவிட்டு ... |
| மீனவர்கள் 5 பேர் விடுதலை கருணாநிதி வலியுறுத்தல் Posted: சென்னை : 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலைக்கு, மத்திய அரசு வழி வகுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பான, அவரது அறிக்கை:தமிழக மீனவர்கள் 5 பேர் போதை பொருள் கடத்தி வந்ததாக, பொய் வழக்கை, இலங்கை கடற்படையினர் தொடுத்தனர்.தமிழக 'கியூ' பிரிவு போலீசாரும், உளவுத் துறை போலீசாரும், இது குறித்து விசாரித்து, இந்த 5 பேர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.இந்த 5 மீனவர்களையும், விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசின் சார்பில், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ... |
| கலெக்டருடன் ஸ்டாலின் சந்திப்பு எதிரொலி: செய்தித்துறை அதிகாரி உட்பட 3 பேர் இடமாற்றம் Posted: திருவாரூர் கலெக்டரை ஸ்டாலின் சந்தித்ததன் எதிரொலியாக, ஏ.பி.ஆர்.ஓ., உட்பட மூன்று அதிகாரிகள், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என்ற முத்திரையுடன், அங்கிருந்து மாற்றப்பட்டனர்.பாதிப்பை பார்வையிட...:திருவாரூர் மாவட்டத்துக்கு, கடந்த, 27ம் தேதி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வருகை தந்தார். மாவட்ட, தி.மு.க., ஆய்வுக் கூட்டம் நடத்திய பின், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், மழையால் பாதித்த பயிர்களை பார்வையிட்டார்.பின், திருவாரூர் எம்.எல்.ஏ.,வான, தி.மு.க., தலைவர் கருணாநிதி சார்பில், திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, உடைந்த நிலையில் இருந்த கமலாலய குள ... |
| சகாயத்துக்கு தகவல் அளிக்க புது அமைப்பு Posted: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கிரானைட் மற்றும் கனிமவளம் கொள்ளை குறித்து விசாரிக்க உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, தேவையான ஆதாரங்களை சேகரித்து வழங்க, சமூக ஆர்வலர்கள் ஒன்று இணைந்து, சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிமவளம் முறைகேடு குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக நியமித்தது. தனக்கு உதவியாளர்களை நியமிக்கும்படி, அரசுக்கு, சகாயம் கடிதம் அனுப்பினார். அரசு கண்டுகொள்ளவில்லை. நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில், மறு ... |
| மின் வாரிய ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க தயங்கும் உயர் அதிகாரிகள் Posted: மின் வாரிய ஊழியர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதால், ஏராளமான பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.தமிழ்நாடு மின் வாரியம், ஒன்பது மண்டலங்கள், 37 மின் பகிர்மான வட்டங்கள், 2,000 பிரிவு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் செயல்படுகிறது.சொந்த வேலை:இவற்றில், தொழில்நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 5,000 பேர், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் உள்ளனர்.பிரிவு அலுவலக வேலை நேரம்: காலை, 8:00 மணி முதல், மாலை, 5:00 மணி; தலைமை அலுவலக வேலை நேரம்: காலை, 10:30 மணி முதல், மாலை, 5:00 மணி. மதியம், 1:00 - 1:30 மணி வரை, உணவு இடைவேளை.மின் ... |
| சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமங்கள்: '500 உயிர்களை கொடுப்போம்' என சபதம் Posted: தங்கச்சிமடம் : ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் மீனவர் ஐவருக்கு இலங்கை அரசு விதித்த தூக்குத் தண்டனையால் மீனவ கிராமங்கள் சோகமயமாகி உள்ளது. பொய் வழக்கில் சிக்கியுள்ள ஐவரின் உயிரை பறிக்க இலங்கை அரசு துடிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். '500 உயிர்களை கொடுத்தாவது 5 பேரை மீட்போம்' என சூளுரைத்தனர்.கடந்த 2011ல் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோரை இலங்கை கடற்படையினர், போதை பொருள் கடத்தியதாக கைது செய்தனர். அவர்களுக்கு இலங்கை கோர்ட் தூக்குத் ... |
| புற்றுநோய் மருந்து விலையை உயர்த்த நெருக்கடி? Posted: வாஷிங்டன்: 'ரத்த புற்றுநோய்க்கான மருந்தின் விலையை உயர்த்தும்படி, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்' என, அமெரிக்காவுக்கு, அங்குள்ள தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த, பி.எம்.எஸ்., என்ற மருந்து நிறுவனம், ரத்த புற்றுநோய்க்கான, 'டசாடினிப்' என்ற மருந்தை தயாரிக்கிறது. அமெரிக்காவில், சமீபத்தில் இந்த மருந்தின் விலையை அந்த நிறுவனம், மூன்று மடங்கு அதிகரித்தது.இதையடுத்து, இந்தியாவிலும் இந்த மருத்தின் விலையை அதிகரிக்க அனுமதிக்கும்படி, அந்த நாட்டின் வர்த்தக பிரதிநிதி குழுவிடம், அந்த நிறுவனம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 01,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |