Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாக்தாதில் தொடர் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி
- "செட்' தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படுமா? யுஜிசி துணைத் தலைவர் விளக்கம்
- ஆட்டோ கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
- புதிய மது ஆலைகளுக்கு அனுமதி கூடாது: ராமதாஸ்
- தா. பாண்டியன் மீது ஏஐடியுசி வழக்கு தொடரவில்லை: நிர்வாகிகள் விளக்கம்
- வெளிநாட்டவரால் இந்தியச் சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்களா?
- மாநிலத் தலைவருக்கு மதிப்பும், அதிகாரமும் இல்லை; காங்கிரஸ் மேலிடம் மீது ஞானதேசிகன் குற்றச்சாட்டு
- இந்த நாளில் அன்று (1.11.1985); இந்திரா கொலை வழக்கில் சாட்சியம்; "பியாந்த் சிங் சுட்டு கொல்லப்பட்டதில் சதி எதுவும் இல்லை'
- பெண் குழந்தைகளைப் பேணிக் காப்போம்
- நதிகள் இல்லையேல் நாடு இல்லை
- சதி வலையில் மீனவர்கள்!
- வாசன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக விலகல்
- இலங்கை மீனவர்கள் 12 பேருக்கு நவம்பர் 13 வரை சிறைக் காவல்
- பதவி விலகல் விவகாரம்: ஞானதேசிகன் கருத்துக்கு காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி
- 2,176 அரசு மருத்துவர்கள் விரைவில் நியமனம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
- காஷ்மீர் நிவாரண நிதி வழங்க கனிமொழிக்கு நேரம் ஒதுக்க மறுப்பு: அதிகாரிகளுக்கு பிரதமர் கண்டிப்பு
- படேலின் பிறந்த தினத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி
- அஸ்ஸாமில் "பந்த்': பஜ்ரங் தளம் அமைப்பினர் 70 பேர் கைது
- படேலின் பிறந்த தினத்தைப் பயன்படுத்தி வகுப்புவாதத்தைத் தூண்டுகிறது பாஜக: ஜேடியு தாக்கு
- சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர்
- பெங்களூரு பள்ளியில் 6 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது
- 72 சுங்கச் சாவடிகளை மூட மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி
- வீதியோரங்களில் வசிப்போருக்கு தாற்காலிகக் குடில்: 5 மாநில அரசுகளுக்கு உத்தரவு
- தோல்வியைச் சந்திக்காத டெல்லி, வெற்றியைச் சந்திக்காத கோவா இன்று மோதல்
- களத்துக்கு வெளியே...
- வலுவான நிலையில் பாகிஸ்தான்: யூனிஸ் கான் இரட்டைச் சதம், மிஸ்பா சதம்
- துலீப் டிராபி: மீண்டு வந்தது மத்திய மண்டலம்
- முதல் ஆட்டத்தில் ரித்திமான் சாஹா பங்கேற்பு
- அருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்
- புதுவையில் சாலை மறியல்: 51 மீனவர்கள் கைது
- ராமேசுவரம் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம்
- தங்கச்சிமடத்தில் ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்தியதாக 2000 மீனவர்கள் மீது வழக்கு
- தங்கம் விலை தொடர் சரிவு: பவுன் ரூ.19,704-க்கு விற்பனை
- கொடைக்கானல் சாலை சீரமைப்பு: இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி
- 2013-14-இல் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை ரூ.4 லட்சம் கோடி
- பாக்தாதில் தொடர் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி
- பர்கீனா ஃபாஸோ: ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்
- பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த விவகாரம்: சுவீடனுக்கான தூதரைத் திரும்ப அழைத்தது இஸ்ரேல்
- பிரான்ஸ் அணு உலைகளுக்கு ஆளில்லா விமானங்கள் அச்சுறுத்தல்?
- மியான்மர் தேர்தல்: எதிர்க்கட்சிகள், ராணுவத்துடன் அதிபர் பேச்சு
- வீல்ஸ் இந்தியா அரையாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: மொத்த வருவாய் ரூ.6,440 கோடி
- ஐ.டி.சி. காலாண்டு லாபம் ரூ. 2,425 கோடி
- அலைக்கற்றை ஏலம்: நவ.7-இல் ஆலோசனைக் கூட்டம்
- நிலக்கரித் துறை முன்னாள் செயலர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்
- யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் ஆண்டர்சன் மரணம்
- அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்: தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு
- சீட்டு நிதி மோசடி: பிஜேடி எம்எல்ஏ கைது
- காவல் நிலையங்களை நீதியின் கோவிலாக மாற்ற வேண்டும்: ராஜ்நாத் சிங்
- மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியா கொண்டு வர முடியுமா?
- ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் கைது
- இந்திராவுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்தார் மோடி
- வைகை ஆற்றில் கருவேல மரங்களை 2 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
- மழை வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை ககன்தீப்சிங் பேடி ஆய்வு
- ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 32 பேர் கைது
- ஏடிஎம் பயன்பாட்டிற்கும் இனி கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி
- ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம்
- பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு
- ராஜ்கிரணை அடிக்கடி வம்புக்கு இழுக்கும் கார்த்தி: கொம்பன் படம் குறித்து புதிய தகவல்
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
- ராஜபாளையத்தில் உடைந்த கண்மாயை அமைச்சர் ஆய்வு
- பன்னிரு ஆழ்வார்கள்: ஓர் அறிமுகம்
- பால் விலையைத் தொடர்ந்து மதுபான விலை உயர்வு
- குழந்தைகள் மீதான பாலியல்பலாத்காரம்: பள்ளி நிர்வாகங்களுக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை
- வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
- ஆண்டிபட்டி நீதி மன்றத்தில் அதிமுக எம்எல்ஏ உட்பட 45 பேர் ஆஜர்
- ஆட்டோ கட்டண வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- நெல்லையில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுஷ்டிப்பு
- நெல்லை அம்மா மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு
- தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை: சிங்கள அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ அறிவிப்பு
- தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு
- வாராணசியில் வர்த்தக மையம்: மோடி அடிக்கல் நாட்டுகிறார்
- காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி: ஞானதேசிகனைத் தொடர்ந்து கோவை தங்கம் ராஜினாமா
- தலையணை தண்ணீர் பெறுவதில் சிக்கல்: 9 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும் அபாயம்!
- காங்கிரஸில் இருந்து வாசன் வெளியேறினால் ஆதரிப்பேன்: தமிழருவி மணியன்
- திமுகவுடன் கைகோக்கும் யாரையும் ஏற்க மாட்டேன்: ஸ்டாலின்-வைகோ சந்திப்பு பற்றி தமிழருவி மணியன்!
- போராட்டங்களுக்குப் பிறகு ஹங்கேரியில் இன்டர்நெட் வரி நீக்கம்
- அந்த மீனவர்களை திகாருக்கு மாற்றக் கோரியிருந்தேன்: சுப்பிரமணிய சாமி
- வரவுசெலவு அறிக்கையை தாக்கல் செய்யாத மின்வாரியத்துக்கு அபராதம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
- நெல்லை மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதம்: ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
- உயர்வான நிலையில் வர்த்தகம் நிறைவு
- அரசுடன் வர்த்தகத்தில் மேலும் 12 பினாமி கம்பெனிகள்: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு
- மாயமான விமான விவகாரம்: மலேசிய ஏர்லைன்ஸ், அரசுக்கு எதிராக மாணவர்கள் 2 பேர் வழக்கு
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 36 ஆண்டுகளுக்கு பின் 136 அடியை தாண்டியது
- கோவில்பட்டி அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
- தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்திற்கு கீழ் வந்தது
- அமித் ஷா அழைப்பின் பேரில் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் உத்தவ் தாக்கரே!
- அமெரிக்காவில் ஒபாமா முகமூடி அணிந்து ஓட்டல் கல்லாப்பெட்டியை தூக்கிச் சென்ற கொள்ளையன்
- நற்பெயர்கள்
- பேராசை
- கடி
- முத்து
- இராமு - சீதா
- நன்றி சொல்லப் பழகுவாய்
- சிட்டுக் குருவி
- அறிவு கொண்டு ஆராய்வோம்
- விடுகதைகள்
- முத்துக் கதை
- பொன்மொழிகள்
| பாக்தாதில் தொடர் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி Posted: 31 Oct 2014 02:06 PM PDT இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகிலுள்ள சந்தைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| "செட்' தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படுமா? யுஜிசி துணைத் தலைவர் விளக்கம் Posted: 31 Oct 2014 01:07 PM PDT தமிழக அரசிடமிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடமிருந்தோ "செட்' தேர்வை நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில், அதற்கு அனுமதி அளிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். |
| ஆட்டோ கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 31 Oct 2014 01:03 PM PDT பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ கட்டணத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| புதிய மது ஆலைகளுக்கு அனுமதி கூடாது: ராமதாஸ் Posted: 31 Oct 2014 01:02 PM PDT புதிய மது ஆலைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். |
| தா. பாண்டியன் மீது ஏஐடியுசி வழக்கு தொடரவில்லை: நிர்வாகிகள் விளக்கம் Posted: 31 Oct 2014 01:01 PM PDT இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மீது ஏஐடியுசி எந்த வழக்கும் தொடரவில்லை என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் கே. சுப்பராயன், பொதுச் செயலாளர் டி.எம். மூர்த்தி, தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் வி. ராமச்சந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். |
| வெளிநாட்டவரால் இந்தியச் சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்களா? Posted: 31 Oct 2014 01:00 PM PDT உயர் கல்வி அளிப்பதாகக் கூறி இந்தியச் சிறுவர்களை வெளிநாட்டவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்களா? என்பதற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| மாநிலத் தலைவருக்கு மதிப்பும், அதிகாரமும் இல்லை; காங்கிரஸ் மேலிடம் மீது ஞானதேசிகன் குற்றச்சாட்டு Posted: 31 Oct 2014 12:59 PM PDT மாநிலத் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உரிய மதிப்பும், அதிகாரமும் அளிப்பதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள பி.எஸ். ஞானதேசிகன் குற்றம்சாட்டினார். |
| Posted: 31 Oct 2014 12:51 PM PDT இந்திரா கொலை வழக்கில் சாட்சியம்; "பியாந்த் சிங் சுட்டு கொல்லப்பட்டதில் சதி எதுவும் இல்லை' |
| பெண் குழந்தைகளைப் பேணிக் காப்போம் Posted: 31 Oct 2014 12:46 PM PDT சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர் தெரிவித்த கருத்துகள் மிகுந்த வேதனை அளித்தது. |
| Posted: 31 Oct 2014 12:44 PM PDT ஆட்சிகள் மாறுகின்றபோது காட்சிகளும் மாறுகின்றன. கடந்த ஆட்சியில் கங்கை - காவிரி இணைப்பு என்றும், இந்திய நதிகளின் இணைப்பு என்றும் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, அதற்காகக் குழுக்களும் அமைக்கப்பட்டு, திட்டங்களும் தீட்டப்பட்டன. |
| Posted: 31 Oct 2014 12:43 PM PDT போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக, தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. |
| வாசன் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக விலகல் Posted: 31 Oct 2014 12:34 PM PDT மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் ஆதரவு மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளனர். |
| இலங்கை மீனவர்கள் 12 பேருக்கு நவம்பர் 13 வரை சிறைக் காவல் Posted: 31 Oct 2014 12:33 PM PDT இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 12 பேருக்கு நவம்பர் 13-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டித்து ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| பதவி விலகல் விவகாரம்: ஞானதேசிகன் கருத்துக்கு காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி Posted: 31 Oct 2014 12:31 PM PDT தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு கட்சி மேலிடத்தை குறை கூறி பி.எஸ். ஞானதேசிகன் வெளியிட்ட கருத்துகளுக்கு அந்தக் கட்சி மேலிடம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. |
| 2,176 அரசு மருத்துவர்கள் விரைவில் நியமனம் Posted: 31 Oct 2014 12:29 PM PDT தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,176 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம் Posted: 31 Oct 2014 12:26 PM PDT வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| காஷ்மீர் நிவாரண நிதி வழங்க கனிமொழிக்கு நேரம் ஒதுக்க மறுப்பு: அதிகாரிகளுக்கு பிரதமர் கண்டிப்பு Posted: 31 Oct 2014 12:21 PM PDT ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக திமுக சார்பில் திரட்டப்பட்ட ரூ.25 லட்சம் நிதியை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்காததையடுத்து, அந்தக் காசோலை பிரதமர் அலுவலகத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டது. |
| படேலின் பிறந்த தினத்தில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது துரதிருஷ்டவசமானது: பிரதமர் மோடி Posted: 31 Oct 2014 12:20 PM PDT "இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை நாளாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். |
| அஸ்ஸாமில் "பந்த்': பஜ்ரங் தளம் அமைப்பினர் 70 பேர் கைது Posted: 31 Oct 2014 12:12 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் பஜ்ரங் தளம் அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 12 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| படேலின் பிறந்த தினத்தைப் பயன்படுத்தி வகுப்புவாதத்தைத் தூண்டுகிறது பாஜக: ஜேடியு தாக்கு Posted: 31 Oct 2014 12:11 PM PDT சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தின விழாவைப் பயன்படுத்தி, வகுப்புவாத வன்முறையை பாஜக தூண்டுவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) குற்றம்சாட்டியுள்ளது. |
| சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடு இல்லை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் Posted: 31 Oct 2014 12:11 PM PDT "கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. இருவரும் சகோதரர்களைப் போலவே பழகி வருகிறோம்' என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார். |
| பெங்களூரு பள்ளியில் 6 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் கைது Posted: 31 Oct 2014 12:10 PM PDT பெங்களூருவில் தனியார் பள்ளியில் 6 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஜெய்சங்கர் (38) என்ற ஹிந்தி ஆசிரியர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். |
| 72 சுங்கச் சாவடிகளை மூட மத்திய அரசு முடிவு: நிதின் கட்கரி Posted: 31 Oct 2014 12:07 PM PDT "தேசிய நெடுஞ்சாலையில் ரூ.50 கோடிக்கும் குறைவாக கட்டணங்களை வசூலிக்கும் 72 சுங்கச் சாவடிகளை மூடுவதற்கும், நாடு முழுவதும் 350 சாவடிகளை மின்னணுமயமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| வீதியோரங்களில் வசிப்போருக்கு தாற்காலிகக் குடில்: 5 மாநில அரசுகளுக்கு உத்தரவு Posted: 31 Oct 2014 12:06 PM PDT பனிக் காலம் தொடங்கும் முன்பாக, வீதியோரங்களில் வசிப்போருக்கு தாற்காலிகக் குடில்கள் கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் 5 மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| தோல்வியைச் சந்திக்காத டெல்லி, வெற்றியைச் சந்திக்காத கோவா இன்று மோதல் Posted: 31 Oct 2014 11:58 AM PDT இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில், சனிக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில், இதுவரையிலும் தோல்வியைச் சந்திக்காத டெல்லி அணியும், இதுவரையிலும் வெற்றியைச் சந்திக்காத கோவா அணியும் மோதவுள்ளன. |
| Posted: 31 Oct 2014 11:57 AM PDT பந்துவீச்சாளர்கள் 15 டிகிரி வரை மட்டுமே முழங்கையை மடக்க ஐசிசி தற்போது அனுமதித்துள்ளது. |
| வலுவான நிலையில் பாகிஸ்தான்: யூனிஸ் கான் இரட்டைச் சதம், மிஸ்பா சதம் Posted: 31 Oct 2014 11:54 AM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் சதம் அடிக்க, யூனிஸ் கான் இரட்டைச் சதம் அடித்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 570 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. |
| துலீப் டிராபி: மீண்டு வந்தது மத்திய மண்டலம் Posted: 31 Oct 2014 11:50 AM PDT இரண்டு நாள்கள் மந்தமான ஆட்டத்துக்குப் பின் துலீப் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில், மத்திய மண்டலம் அணி எழுச்சி பெற்றுள்ளது. தெற்கு மண்டலத்துக்கு எதிரான இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மத்திய மண்டலம் அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. |
| முதல் ஆட்டத்தில் ரித்திமான் சாஹா பங்கேற்பு Posted: 31 Oct 2014 11:46 AM PDT இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரித்திமான் சாஹா பங்கேற்பது உறுதியாகி உள்ளது. |
| அருவி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் Posted: 31 Oct 2014 10:56 AM PDT கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். |
| புதுவையில் சாலை மறியல்: 51 மீனவர்கள் கைது Posted: 31 Oct 2014 10:53 AM PDT இலங்கையில் போதை மருந்து கடத்தியதாக ராமேசுவரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுவையில் மறியலில் ஈடுபட்ட 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். |
| ராமேசுவரம் மீனவர்கள் இன்று உண்ணாவிரதம் Posted: 31 Oct 2014 10:48 AM PDT ராமேசுவரம் பகுதி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். |
| தங்கச்சிமடத்தில் ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்தியதாக 2000 மீனவர்கள் மீது வழக்கு Posted: 31 Oct 2014 10:48 AM PDT ராமேசுவரம் பகுதி மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, தங்கச்சிமடம் மீனவர்கள் ரயில் தண்டவாளங்களைச் சேதப்படுத்தி, தீவைத்து கொளுத்தினர். இதனால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. |
| தங்கம் விலை தொடர் சரிவு: பவுன் ரூ.19,704-க்கு விற்பனை Posted: 31 Oct 2014 10:46 AM PDT சர்வதேச பொருளாதாரக் காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இரு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.784 குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. |
| கொடைக்கானல் சாலை சீரமைப்பு: இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி Posted: 31 Oct 2014 10:45 AM PDT கொடைக்கானலில் சேதமடைந்த மலைச் சாலைகள் சீரமைக்கப்பட்டு, சிறிய வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. |
| 2013-14-இல் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை ரூ.4 லட்சம் கோடி Posted: 31 Oct 2014 10:35 AM PDT 2013-2014 நிதி ஆண்டில் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 4.08 லட்சம் கோடி) என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. |
| பாக்தாதில் தொடர் குண்டு வெடிப்பு: 15 பேர் பலி Posted: 31 Oct 2014 10:34 AM PDT இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகிலுள்ள சந்தைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| பர்கீனா ஃபாஸோ: ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம் Posted: 31 Oct 2014 10:33 AM PDT மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கீனா ஃபாஸோவில், அரசுக்கு எதிரான போராட்டம் முற்றி, நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, 27 ஆண்டுகளாக அதிபராக இருந்த பிளேஸ் கோம்போவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. |
| பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த விவகாரம்: சுவீடனுக்கான தூதரைத் திரும்ப அழைத்தது இஸ்ரேல் Posted: 31 Oct 2014 10:32 AM PDT பாலஸ்தீனத்தை தனி நாடாக சுவீடன் அங்கீகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கான இஸ்ரேல் தூதர் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். |
| பிரான்ஸ் அணு உலைகளுக்கு ஆளில்லா விமானங்கள் அச்சுறுத்தல்? Posted: 31 Oct 2014 10:32 AM PDT பிரான்ஸின் இரு அணு மின் நிலையங்களுக்கு மேலே, அடையாளம் தெரியாத ஆளில்லா விமானங்கள் பறந்ததால், பொதுமக்களிடையே பீதி எழுந்துள்ளது. |
| மியான்மர் தேர்தல்: எதிர்க்கட்சிகள், ராணுவத்துடன் அதிபர் பேச்சு Posted: 31 Oct 2014 10:30 AM PDT மியான்மரில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்துவது குறித்து, நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கீ உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களுடனும், அந்த நாட்டு ராணுவத்துடனும் அதிபர் தெய்ன் சீன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். |
| வீல்ஸ் இந்தியா அரையாண்டு நிகர லாபம் ரூ. 17 கோடி Posted: 31 Oct 2014 10:27 AM PDT நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வீல்ஸ் இந்தியா நிறுவனம் ரூ. 17.32 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்தது. |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: மொத்த வருவாய் ரூ.6,440 கோடி Posted: 31 Oct 2014 10:23 AM PDT இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2-ஆவது காலாண்டில் ரூ.6,440.77 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. |
| ஐ.டி.சி. காலாண்டு லாபம் ரூ. 2,425 கோடி Posted: 31 Oct 2014 10:22 AM PDT இரண்டாம் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் 8.72 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 2,425.16 கோடியாக உள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. |
| அலைக்கற்றை ஏலம்: நவ.7-இல் ஆலோசனைக் கூட்டம் Posted: 31 Oct 2014 10:20 AM PDT அலைக்கற்றை ஏலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என்று தொலைத் தொடர்பு ஆணைய வட்டாரங்கள் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. |
| நிலக்கரித் துறை முன்னாள் செயலர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் Posted: 31 Oct 2014 09:56 AM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, அரசு அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 5 பேருக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் ஆண்டர்சன் மரணம் Posted: 31 Oct 2014 09:55 AM PDT மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் 1984ஆம் ஆண்டு விஷவாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் அதிபராக இருந்த வாரன் எம்.ஆண்டர்சன் (92), அமெரிக்காவில் மரணம் அடைந்தார். |
| அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்: தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு Posted: 31 Oct 2014 09:55 AM PDT அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகள், அதில் கையெழுத்திட வகை செய்யும் ஐ.நா. வரைவு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வியாழக்கிழமை வாக்களித்தது. |
| சீட்டு நிதி மோசடி: பிஜேடி எம்எல்ஏ கைது Posted: 31 Oct 2014 09:54 AM PDT ஒடிஸா சீட்டு நிதி நிறுவனமான அர்த்த தத்வா குழுமத்தின் நிதி மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக அரசு முன்னாள் தலைமைக் கொறடாவும் பிஜு ஜனதாதள எம்எல்ஏவுமான பிரவாத் திரிபாதியை சிபிஐ அதிகாரிகள் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர். |
| காவல் நிலையங்களை நீதியின் கோவிலாக மாற்ற வேண்டும்: ராஜ்நாத் சிங் Posted: 31 Oct 2014 09:53 AM PDT காவல் நிலையங்களை நீதியின் கோவிலாக மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை இந்தியா கொண்டு வர முடியுமா? Posted: 31 Oct 2014 09:51 AM PDT "இலங்கையில் போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை இந்தியா கொண்டு வர அவசரம் காட்ட முடியாது; இது படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட, ராஜீய நடவடிக்கை ஆகும்' என்று இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. |
| ஸ்ரீநகரில் 2 பயங்கரவாதிகள் கைது Posted: 31 Oct 2014 09:48 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| இந்திராவுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்தார் மோடி Posted: 31 Oct 2014 09:45 AM PDT முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள சக்தி ஸ்தலம் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்காமல் பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்தார். |
| வைகை ஆற்றில் கருவேல மரங்களை 2 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 31 Oct 2014 08:13 AM PDT வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை 2 வாரங்களில் அகற்றுமாறு பொதுóபபணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற |
| மழை வெள்ள பாதிப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை ககன்தீப்சிங் பேடி ஆய்வு Posted: 31 Oct 2014 07:58 AM PDT கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள் மற்றும் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை தமிழகஅரசு வருவாய்த்துறை செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 32 பேர் கைது Posted: 31 Oct 2014 07:47 AM PDT தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு தூக்க தண்டனை விதித்ததை கண்டித்து சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை எரித்து கண்டன கோஷமிட்டனர். சிதம்பரம் வடக்குவீதி தலைமை த |
| ஏடிஎம் பயன்பாட்டிற்கும் இனி கட்டணம்: பொதுமக்கள் அதிர்ச்சி Posted: 31 Oct 2014 07:36 AM PDT ஓரே வங்கியை தவிர பிற வங்கிகளின் ஏடிஎம்.மில் மாதத்தில் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஏடிஎம்மில் |
| ஆழ்வார்கள் 12 பேர்: ஓர் அறிமுகம் Posted: 31 Oct 2014 07:28 AM PDT ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்! – எப்புவியும் பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார் |
| பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு Posted: 31 Oct 2014 07:26 AM PDT பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.41 காசு குறைக்கப்படுகிறது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டீசல் விலை |
| ராஜ்கிரணை அடிக்கடி வம்புக்கு இழுக்கும் கார்த்தி: கொம்பன் படம் குறித்து புதிய தகவல் Posted: 31 Oct 2014 07:12 AM PDT மெட்ராஸ் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து கார்த்தி கொம்பனாக களம் இறங்கி விட்டார். ராமநாதபுரம் பகுதியில் ஆடு வியாராம் செய்யும் இளைஞனாக மாறியுள்ள |
| திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாணம் Posted: 31 Oct 2014 06:46 AM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. |
| ராஜபாளையத்தில் உடைந்த கண்மாயை அமைச்சர் ஆய்வு Posted: 31 Oct 2014 06:44 AM PDT ராஜபாளையத்தில் மழை வெள்ளத்தில் உடைந்த கண்மாயை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். |
| பன்னிரு ஆழ்வார்கள்: ஓர் அறிமுகம் Posted: 31 Oct 2014 06:34 AM PDT இந்தப் பன்னிரண்டு பேருக்கும் ஆழ்வார்கள் என்று ஏன் பெயர் ஏற்பட்டது என்றால், இவர்கள் பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியைக் கொண்டிருந்தவர்கள் என்பதால் தான். இலக்கணப்படி இது வினையாலணையும் பெயர். இறைவனிடத்தில் ஆழ்ந்த மனம் கொண்டிருந்த காரணத்தால் ஆழ்வார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. |
| பால் விலையைத் தொடர்ந்து மதுபான விலை உயர்வு Posted: 31 Oct 2014 06:34 AM PDT தமிழகத்தில் பால் விலை உயர்வைத் தொடர்ந்து மதுபான விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பீர் விலை ரூ.10, சாதாரண மது ரூ.8, நடுத்தர மது ரூ. 10, உயர்ரக ம |
| குழந்தைகள் மீதான பாலியல்பலாத்காரம்: பள்ளி நிர்வாகங்களுக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை Posted: 31 Oct 2014 06:28 AM PDT குழந்தைகள் மீதான பாலியல் பலாக்தாகர சம்பவங்களை தடுக்க தவறினால் பள்ளி நிர்வாகங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா |
| வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை Posted: 31 Oct 2014 06:22 AM PDT தேனி மாவட்டத்தில் தொடர் மழைக்காரணமாக சிறிய மற்றும் பெரிய அணைகள் நிரம்பிவழிவதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் |
| ஆண்டிபட்டி நீதி மன்றத்தில் அதிமுக எம்எல்ஏ உட்பட 45 பேர் ஆஜர் Posted: 31 Oct 2014 06:19 AM PDT ஆண்டிபட்டி நீதி மன்றத்தில் அதிமுக எம்எல்ஏ தங்கதமிழ்செல்வன் உட்பட 45 பேர் ஆஜராகி பிடிவாரண்டை ரத்துசெய்யகோரி வெள்ளிக்கிழமை மனு அளித்தார். |
| ஆட்டோ கட்டண வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு Posted: 31 Oct 2014 06:07 AM PDT ஆட்டோ கட்டணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நுகர்வோர் குரல் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னைப் போல் |
| நெல்லையில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுஷ்டிப்பு Posted: 31 Oct 2014 06:01 AM PDT திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அலுவலகம் முன் உள்ள இந்திராகாந்தி |
| நெல்லை அம்மா மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 31 Oct 2014 05:56 AM PDT திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. கடந்த 9.10.2014 முதல் செயல்பட்டு வரும் இந்த மருந்தகத்தில், பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் செயல்பாடுகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: |
| தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை: சிங்கள அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ அறிவிப்பு Posted: 31 Oct 2014 05:38 AM PDT தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனைக்குக் காரணமான சிங்கள அரசைக் கண்டித்தும், பால் விலை உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நவ.4ம் தேதி நடத்தப் போவதாக வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். |
| தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு Posted: 31 Oct 2014 05:36 AM PDT மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு இன்று பதவியேற்றுக்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் |
| வாராணசியில் வர்த்தக மையம்: மோடி அடிக்கல் நாட்டுகிறார் Posted: 31 Oct 2014 05:17 AM PDT தனது தொகுதியான வாராணசியில் வர்த்தக மையம் மற்றும் கைவினைப் பொருள் அருங்காட்சியகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர் மோடி. வரும் நவ.7ம் தேதி தனது தொகுதியான வாராணசிக்குச் செல்லும் நரேந்திர |
| காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி: ஞானதேசிகனைத் தொடர்ந்து கோவை தங்கம் ராஜினாமா Posted: 31 Oct 2014 05:06 AM PDT இது தொடர்பாக கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அகில இந்தய காங்கிரஸ் கட்சி பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் |
| தலையணை தண்ணீர் பெறுவதில் சிக்கல்: 9 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும் அபாயம்! Posted: 31 Oct 2014 04:57 AM PDT தலையணையிலிருந்து உள்ளார் முறியபாஞ்சன் வழியாக 13 ஆயக்கட்டுகளுக்கு தண்ணீர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் 9 ஆயிரம் ஏக்கரில் பாசனப்பரப்பு பாழாகும் அபாயத்தில் உள்ளதாகக் கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான விவாசயிகள் வெள்ளிக்கிழமை |
| காங்கிரஸில் இருந்து வாசன் வெளியேறினால் ஆதரிப்பேன்: தமிழருவி மணியன் Posted: 31 Oct 2014 04:53 AM PDT காங்கிரஸ் இருந்து வாசன் வெளியேறினால் அவரை ஆதரிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, தமிழக காங்கிரஸில் இப்போது நடைபெறும் சம்பவங்களை உற்று பார்க்கும்போது தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் இருந்து வாசன் வெளியேறினால் நிச்சயம் அவரை ஆதரிப்பேன். |
| திமுகவுடன் கைகோக்கும் யாரையும் ஏற்க மாட்டேன்: ஸ்டாலின்-வைகோ சந்திப்பு பற்றி தமிழருவி மணியன்! Posted: 31 Oct 2014 04:43 AM PDT ஊழல் மலிந்த அரசியல் அமைப்பு, மதுவினால் ஏற்படும் தீமைகள் ஆகிய இரண்டில் இருந்தும் தமிழகத்தை விடுவிக்க வேண்டும். இதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் கருத்தரங்கு ஈரோட்டில் ... |
| போராட்டங்களுக்குப் பிறகு ஹங்கேரியில் இன்டர்நெட் வரி நீக்கம் Posted: 31 Oct 2014 04:11 AM PDT இன்டர்நெட் டேட்டா பரிமாற்றத்தின் அளவு அடிப்படையில் வரி விதிக்க ஹங்கேரி முடிவு செய்ததற்கு பெரும் அளவில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த நாடு இந்த முடிவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. |
| அந்த மீனவர்களை திகாருக்கு மாற்றக் கோரியிருந்தேன்: சுப்பிரமணிய சாமி Posted: 31 Oct 2014 03:43 AM PDT இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களை திகார் சிறைக்கு மாற்றும் படி கோரியிருந்தேன். 2010ம் ஆ |
| வரவுசெலவு அறிக்கையை தாக்கல் செய்யாத மின்வாரியத்துக்கு அபராதம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு Posted: 31 Oct 2014 03:41 AM PDT வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்யாத மின்வாரியத்துக்கு அபராதம் விதிக்கப்படுவது உறுதி என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் |
| Posted: 31 Oct 2014 03:33 AM PDT திருநெல்வேலியில் பெய்த பலத்த மழையால் பல ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க |
| உயர்வான நிலையில் வர்த்தகம் நிறைவு Posted: 31 Oct 2014 03:28 AM PDT சென்செக்ஸ் 519 புள்ளிகள் உயர்ந்து 27,865 என்ற நிலையிலும், நிப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 8,322 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது. |
| அரசுடன் வர்த்தகத்தில் மேலும் 12 பினாமி கம்பெனிகள்: சுப்பிரமணிய சுவாமி குற்றச்சாட்டு Posted: 31 Oct 2014 03:23 AM PDT தமிழக அரசுடன் மேலும் 12 பினாமி கம்பெனிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இது குறித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேரில் புதிய வழக்கு பதிவு செய்யப் போவதாகவும் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். |
| மாயமான விமான விவகாரம்: மலேசிய ஏர்லைன்ஸ், அரசுக்கு எதிராக மாணவர்கள் 2 பேர் வழக்கு Posted: 31 Oct 2014 03:18 AM PDT மாயமான மலேசிய விமானம் 370ல் பயணித்த தன் தந்தை தொடர்பாக எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதால், மலேசியாவைச் சேர்ந்த இரு சிறார்கள், மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். |
| முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 36 ஆண்டுகளுக்கு பின் 136 அடியை தாண்டியது Posted: 31 Oct 2014 03:06 AM PDT முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழைப்பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்தசில நாட்களாகவே வெகுவாக உயர்ந்து வந்தது. |
| கோவில்பட்டி அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு Posted: 31 Oct 2014 03:05 AM PDT கோவில்பட்டியை அடுத்த முடுக்கலாங்குளம் வடக்குப் பகுதியில் வைத்திய தோட்டத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. எஸ்.பி., துரை தலை |
| தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்திற்கு கீழ் வந்தது Posted: 31 Oct 2014 02:57 AM PDT தங்கம் விலை சவரன் ரூ.20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இன்று விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 472 குறைந்து |
| அமித் ஷா அழைப்பின் பேரில் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் உத்தவ் தாக்கரே! Posted: 31 Oct 2014 02:51 AM PDT சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், முதல்வராகப் பதவியேற்கவுள்ள தேவேந்திர பட்நவிஸும் அழைத்ததன் |
| அமெரிக்காவில் ஒபாமா முகமூடி அணிந்து ஓட்டல் கல்லாப்பெட்டியை தூக்கிச் சென்ற கொள்ளையன் Posted: 31 Oct 2014 02:42 AM PDT அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் அதிபர் ஒபாமாவைப் போல் முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி |
| Posted: 31 Oct 2014 02:39 AM PDT ஞாயிறு கதிரவன் பரிதியென்று சூரியன் பெற்றது பல பெயர்கள் |
| Posted: 31 Oct 2014 02:38 AM PDT கடும் கோடை வெயில். ஒருவன் குடையும், செருப்பும் இல்லாமல் நடந்து போய்க் கொண்டிருந்தான். அந்த வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்துகொண்டு குடையும் பிடித்துக்கொண்டு குதிரை மேல் சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன் ""ஐயா! வணக்கம் |
| Posted: 31 Oct 2014 02:37 AM PDT """மாணவர்களே உங்கள் படிப்பின் மீது யாருக்கு அக்கறை அதிகம்?'' ""கண்டக்டருக்குதான் சார்'' |
| Posted: 31 Oct 2014 02:36 AM PDT ஏழை விவசாயி ஒருவன் சிறிய பறவை ஒன்றைப் பிடித்து வந்தான். அந்தப் பறûவையைப் பார்த்து ""நான் உன்னை சமைத்து சாப்பிடப் போகிறேன்.'' என்று கூறினான். |
| Posted: 31 Oct 2014 02:35 AM PDT ஒரு காட்டின் நதிக்கரையோரத்தில் இராமு - சீதா என்ற இரண்டு குட்டி யானைகள் தங்கள் கூட்டத்தோடு வசித்து வந்தன. |
| Posted: 31 Oct 2014 02:34 AM PDT உன்னால் முடியும் செயலை நீயே செய்தல் நனி நன்று |
| Posted: 31 Oct 2014 02:33 AM PDT கடுகு போல கண்ணு கைவிரலு போல கழுத்து |
| Posted: 31 Oct 2014 02:31 AM PDT சீடர் மிகுந்த ஒரு துறவி சிறப்பாய் வாழ்ந்தார் ஓரூரில் |
| Posted: 31 Oct 2014 02:30 AM PDT பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல, உள்ளே வெளுத்திருக்கும் தேங்காய் அல்ல, உருக்கினால் நெய் வடியும் வெண்ணெய் அல்ல. |
| Posted: 31 Oct 2014 02:29 AM PDT சிவன் கோயில் கோபுரத்தில் புறாக் கூட்டமொன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் கோயில் குடமுழுக்கு, கும்பாபிஷேகம் என்று அமளி துமளி பட்டது. வண்ணங்கள் அடிக்க முஸ்தீபுகளில் இறங்கினர். எனவே, புறாக்கூட்டம் தத்தம் குடும்பத்தோடு அருகில் உள்ள மாதா கோயிலுக்கு பறந்தன. சில மாதங்கள் சென்றதும், கிறிஸ்துமஸ் வந்தது. |
| Posted: 31 Oct 2014 02:29 AM PDT முயற்சி செய்கிறவரை நம் திறமையே தெரியாது -ஆலன் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |