Tamil News | Online Tamil News |
- ஐ.எஸ்.ஐ.எஸ்.,சுக்கு பண பலம் எப்படி?அமெரிக்கா கவலை
- தாமிரபரணியில் வீணாகிய 5 டி.எம்.சி., மழைநீர் : பிசான நெல்சாகுபடிக்கு தவிக்கும் விவசாயிகள்
- உர உற்பத்தி நிறுத்தம்: 700 தொழிலாளர்கள் வேலை இழப்பு
- எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு
- பா.ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் நான் தான்
- ஐந்து நாட்களுக்கு பின் முதல்வரை சந்தித்தார் ஜெ.,
- நவ., 15 முதல் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
- இந்திய விமானங்களில் தற்கொலை படை தாக்குதல்?புலனாய்வுதுறை எச்சரிக்கை
- தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: காந்தி, படேலுக்கு மட்டுமே அரசு சார்பில் விழா
- சுவிஸ் வங்கியில் பணம் போட்ட தமிழக புள்ளிகள் கலக்கம்: மத்திய அரசு பட்டியலில் சிக்கிய 4 பேர் யார்?
- என்.எல்.சி., தொழிலாளர் போராட்டம் வாபஸ்: இரவோடு இரவாக பணிக்கு திரும்பினர்
| ஐ.எஸ்.ஐ.எஸ்.,சுக்கு பண பலம் எப்படி?அமெரிக்கா கவலை Posted: வாஷிங்டன் : 'உலகிலேயே, பண பலம் அதிகம் உள்ள பயங்கரவாத அமைப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு உருவெடுத்துள்ளது' என, அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.பயங்கரவாத அமைப்புகளின் நிதி விவகாரங்களை அறிந்து கொள்வதற்காக, அமெரிக்க அரசு, தனி புலனாய்வு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் செயலர் டேவிட் கோச்சன் கூறியதாவது: உலகில், தற்போது செயல்படும் பயங்கரவாத அமைப்புகளிலேயே, மிகவும் செல்வாக்கான, பண பலம் அதிகம் உள்ள அமைப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு உருவாகியுள்ளது. அல் - குவைதா போன்ற அமைப்புகள், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட, பல்வேறு நாடுகளில் உள்ள செல்வந்தர்களிடம் இருந்து ... |
| தாமிரபரணியில் வீணாகிய 5 டி.எம்.சி., மழைநீர் : பிசான நெல்சாகுபடிக்கு தவிக்கும் விவசாயிகள் Posted: திருநெல்வேலி : நெல்லையில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழை நீர் வீணாக தாமிரபரணியில் செல்கிறது. பிசான சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.திருநெல்வேலியில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது.மாவட்டத்தில் அனேக இடங்களில் குளங்கள் நிரம்பி வருகின்றன. தண்ணீரையே பார்த்திராத மானூர் குளத்திற்கு கூட மானாவாரியாக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வறட்சியாக 15 ஆண்டுகளாக நிரம்பாத ஊத்துமலை பெரியகுளம் நிரம்பியது. தீபாவளிக்கு முன்தினமே குளம் உடையப் போகிறது.. அதிகாரிகளே வந்து மீட்டுத்தாருங்கள். என விவசாயிகள் ... |
| உர உற்பத்தி நிறுத்தம்: 700 தொழிலாளர்கள் வேலை இழப்பு Posted: உற்பத்தி செலவையும், மானியத்தையும் குறைப்பதற்காக, மத்திய அரசு எடுத்த முடிவை, முழுமையாக அமல் செய்யாததால், சென்னை உர ஆலையில் (எம்.எப்.எல்.,) உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.சென்னை உர ஆலை போல, ஸ்பிக் மற்றும் மங்களூர் கெமிக்கல்ஸ் உர உற்பத்தி ஆலைகளும், இதே காரணங்களுக்காக, உற்பத்தியை நிறுத்தி உள்ளன.புதிய தொழில்நுட்பம்தமிழகத்தில், சென்னை உர ஆலை, ஸ்பிக் ஆகியவை, உர உற்பத்தியை மேற்கொண்டு உள்ளன. இதில், சென்னை உர ஆலை, பொதுத் துறை நிறுவனம். ஸ்பிக், தமிழக அரசுடன் இணைந்து, உர உற்பத்தியை ... |
| எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு Posted: இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், கட்டாய தேர்ச்சியின் அவசியம் குறித்து, மாநில அரசுகள், கருத்து தெரிவிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுள்ளது.ஆர்.டி.இ., சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, கட்டாயம் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. இதை அப்படியே வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அனைத்து மாணவர்களையும், ... |
| பா.ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளர் நான் தான் Posted: லோக்சபா தேர்தலுக்கு பின், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறைந்து விட்டது. பல நிர்வாகி கள், கட்சியில் இருக்கின்றனரா, இல்லையா என்பதே தெரியவில்லை. பதவியை மட்டும் வைத்துக் கொண்டு, கட்சி பணியாற்றாமல் இருக்கின்றனர். இதனால், கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, கட்சி பொறுப்புகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், நான்கு மாவட்ட துணை செயலர்கள் உள்ளனர். இனி, இரண்டு மாவட்ட துணை செயலர்கள் மட்டுமே, நியமிக்கப்படவுள்ளனர். ஒவ்வொரு அணியிலும், நான்கு துணை செயலர்கள் உள்ளனர். இந்த துணை செயலர்கள் பதவி ... |
| ஐந்து நாட்களுக்கு பின் முதல்வரை சந்தித்தார் ஜெ., Posted: ஜாமினில் வெளி வந்து, ஐந்து நாட்களுக்கு பின், முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்தார், ஜெயலலிதா. போயஸ் தோட்டத்தில் நடந்த, இந்த ஒரு மணி நேர ஆலோசனையில், கட்சிப் பணிகள் குறித்து அவர் பேசியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, கடந்த, 17ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 18ம் தேதி அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்டார்.அன்று இரவு சென்னை திரும்பிய ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் யாரும் சொந்த ஊருக்கு போகாமல், ... |
| நவ., 15 முதல் மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது: கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு Posted: தமிழகத்தில், நவ., 15ம் தேதி முதல், மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில், சென்னையில், நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், மின் கட்டண உயர்விற்கு, பொதுமக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, 1.72 கோடி; விவசாயம், 20.47 லட்சம்; வணிகம், 32.87 லட்சம்; தொழிற்சாலை, 5.98 லட்சம்; குடிசை, 11.82 லட்சம்; இதர பிரிவு, 8.95 லட்சம் என, மொத்தம், 2.52 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.ஒழுங்கு முறை ஆணையம்:தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக, மின் கட்டணம் உயர்த்தப்படாததால், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ... |
| இந்திய விமானங்களில் தற்கொலை படை தாக்குதல்?புலனாய்வுதுறை எச்சரிக்கை Posted: ஆமதாபாத் : ஆமதாபாத்திலிருந்து, மும்பைக்கும், மும்பையிலிருந்து கொச்சிக்கும் இன்று அதிகாலை செல்லும் விமானங்களில், தற்கொலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக, புலனாய்வு அமைப்பு, பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதைஅடுத்து, இந்த மூன்று விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மத்திய புலனாய்வு அமைப்பிடமிருந்து, விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு, ஒரு எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது.அதில், குறிப்பிடப்பட்டுஉள்ளதாவது:இன்று அதிகாலை, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து, மும்பைக்கு செல்லும் ஏர் - இந்தியா ... |
| தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: காந்தி, படேலுக்கு மட்டுமே அரசு சார்பில் விழா Posted: புதுடில்லி : மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அதிரடி முடிவு எடுத்துள்ளது. முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், இறந்த நாள் அனுசரிப்பு போன்றவற்றிற்கு, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தேசத் தந்தை காந்தியடிகள் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின், பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்கள் மட்டுமே, இனிமேல் மத்திய அரசு சார்பில் அனுசரிக்கப்படும்.இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நேரு, இந்திரா, ராஜிவ் குடும்பத்தினர் மற்றும் பிற அரசியல் தலைவர்களின், பிறந்த, இறந்த தினங்களுக்கு, இனிமேல் ... |
| சுவிஸ் வங்கியில் பணம் போட்ட தமிழக புள்ளிகள் கலக்கம்: மத்திய அரசு பட்டியலில் சிக்கிய 4 பேர் யார்? Posted: சுவிட்சர்லாந்து உட்பட பல வெளிநாடுகளில், கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் பட்டியலை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், தமிழகத்தை சேர்ந்த அரசியல் புள்ளிகள் சிலர், கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ள தகவல், இவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.பதிலடி: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், 'வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க, நூறு நாட்களில் நடவடிக்கை எடுப்போம்' என, அறிவித்தனர். ... |
| என்.எல்.சி., தொழிலாளர் போராட்டம் வாபஸ்: இரவோடு இரவாக பணிக்கு திரும்பினர் Posted: நெய்வேலி: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்று, நேற்று இரவே பணிக்கு திரும்பினர்.என்.எல்.சி., நிறுவனத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர், 3ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதுதொடர்பாக, சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நல துணை முதன்மை ஆணையர் கந்தசாமி முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.என்.எல்.சி., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 25,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |