Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


5,000 அரசு பணிக்கு இதுவரை விண்ணப்பித்தோர் 3 லட்சம்: 12 லட்சம் பேர் போட்டி போடுவர் என எதிர்பார்ப்பு

Posted:

சென்னை: தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள, 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு, கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இறுதியாக, 12 லட்சம் பேர், மனு தாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் உட்பட, 4,963 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை, கடந்த 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அன்றைய தேதியில் இருந்தே, www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் வழியாக, போட்டி போட்டுக்கொண்டு, ...

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

Posted:

பழநி: ஒட்டன்சத்திரம் அருகே காளிப்பட்டி, கொங்குபட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 25 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.பழநி, ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்றுஇரவு பெய்த கனமழையால் நல்லதங்காள் ஓடை, கஞ்சநாயக்கன்பட்டி குளத்து கால்வாய் ஓடையில் இன்று அதிகாலை 5:00 மணியளவில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வௌ்ளம் புகுந்ததால் காளிபட்டியிலுள்ள தோட்டத்து சாலை வீடுகளில் வசித்த கருப்புசாமி, சேனாபதி, பழனிச்சாமி, முருகாத்தாள் உட்பட 15 பேரும், கொங்கு பட்டியில் வசித்த பழனிச்சாமி, நாச்சம்மாள், கருப்புசாமி, காளியம்மாள், முருகேசன், சூரியகுமார் ...

தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம்: மின்வாரிய ஊழியர்கள் 'அலர்ட்'

Posted:

'தீபாவளிக்கு, தடையில்லா மின்சாரம் வழங்க, ஊழியர்கள், தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, மின் வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.தமிழகத்தில், மின் தேவை, உற்பத்தியை விட அதிகமாக உள்ளதால், நிலவும், பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை செய்யப்படுகிறது.கடந்த ஏப்ரல் முதல், செப்டம்பர் வரை, காற்றாலைகள் மூலம், நாள்தோறும், 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்ததால், குடியிருப்புகளுக்கு, மின் தடை செய்யவில்லை.தற்போது, காற்றாலை சீசன் முடிவடைந்ததால், காற்றாலைகளில் இருந்து, ஒற்றை இலக்கத்தில், மின்சாரம் கிடைக்கிறது.மத்திய மின் நிலையங்களில் இருந்தும், தமிழகத்திற்கு, ...

இரு மாநில தேர்தல் வெற்றியால் டில்லிக்கு விமோசனம்: ஜம்மு காஷ்மீரோடு சேர்ந்து தேர்தல் அறிவிப்பு?

Posted:

மகாராஷ்டிராவிலும், அரியானாவிலும் பெற்ற இரட்டை வெற்றி மற்றும் 'டில்லியில் தேர்தலை நடத்த தைரியம் உள்ளதா' என, அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள சவால் போன்றவை காரணமாக, டில்லி மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, டில்லியில், தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பின், சில மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில், பா.ஜ., பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால், டில்லியில், சட்டசபை தேர்தலை நடத்தினால், அங்கு, பா.ஜ.,வுக்கு இறங்குமுகம் ஆகிவிடுமோ என்ற யோசனை இருந்தது.தற்போது, ...

தீபாவளியை ஸ்ரீநகரில் கொண்டாடுகிறார் மோடி

Posted:

புதுடில்லி : தீபாவளி பண்டிகை நாள் மற்றும் அதற்கு அடுத்த நாளை, பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் செலவழிக்க உள்ளார்.தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த முதல்வர், ஒமர் அப்துல்லா தலைமையிலான, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த மாதம் பெய்த பேய் மழையால், பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது; லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இன்னமும் அங்கு முழு அளவில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களான இன்றும், நாளையும், அந்த மாநில மக்களுடன் செலவிட, பிரதமர் மோடி முடிவு ...

பணம் கொடுத்து செய்தி வெளியிடுவதும் தேர்தல் நடத்தை விதி மீறலே: வி.எஸ்.சம்பத்

Posted:

புதுடில்லி : அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதை, தேர்தல் நடத்தை விதிமீறலில் சேர்க்க, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.செலவுத் தொகை:இதுகுறித்து, தலைமை தேர்தல் கமிஷனர், வி.எஸ்.சம்பத் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பணம் கொடுத்து, ஊடகங்களில் செய்தி வெளியிடு வது அதிகரித்துள்ளது. இது தவறான நடைமுறை. வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலவழிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.ஆனால், அரசியல் கட்சிகளின் செலவுத் தொகை குறித்து ...

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜ.,நிதானம்: அரியானா முதல்வராக கட்டார் 26ம் தேதி பதவி ஏற்பு

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிராவில், யார் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்பதில், அவசரப்பட்டு முடிவு எடுக்காமல், நிதானம் காட்ட பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. உதிரி கட்சிகளின் ஆதரவைப் பெறுவது உட்பட, அனைத்து வாய்ப்புகளையும் கலந்து ஆலோசித்த பின், இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளது.அதேநேரத்தில், அரியானாவின் முதல் பா.ஜ., முதல்வராக, வரும், 26ம் தேதி மனோகர் லால் கட்டார் பதவியேற்கிறார்.தனிப்பெரும் கட்சி:மகாராஷ்டிராவில், கடந்த, 15ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 288 இடங்களில், 122 தொகுதிகளைப் பிடித்துள்ள, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™